Saturday, February 16, 2013

கிளாமர் படம் நல்லா தெரியனும்னா என்ன பண்ணனும்?

1. டியர்.3 டி எபக்ட் சவுன்ட்னா என்ன தெரியுமா?ஆபீஸ்ல இருந்து 10 நிமிசம் நான் லேட்டா வந்தா அன்பா சவுன்ட் குடுக்கறியே அதான் ;-)

2. பிகர் பின்னாடி போகும்போது திரும்பி என்னானு கேட்டுட்டா பயந்து ஓடிடக்கூடாது ஆண்கள் பயந்து ஒதுங்கதெனாவெட்டு அதிகமாகும்.
3. இவளிடம் எதைக் குறித்தும் பேசிடக்கூடாது என்ற பயத்தை ஆணிடம் உருவாக்கும் பெண் தான் அவன் மனைவி ஆவாள்
4. ஒற்றை ரோஜா வை மட்டும் கூந்தலில் சூடி இருக்கும் பிகர்கள் உயரமாகத்தான் இருக்கும்!
5. என்னிடம் மலையாளத்தில் சிரிக்கும் கேரளத்துப்பைங்கிளிகளிடம்  என்னையறியாமலே நானும் சிரித்துவிடுகிறேன்.
6. திமுக அளவுக்குவேறு எந்த இயக்கத்திற்கும் தமிழுணர்வு இல்லை-கலைஞர்# தலைவா ! ஸ்டாலின் என்பது தூய தமிழ்ப்பெயரா?
7. இனி தமிழகத்தில் மாவட்டந்தோறும் சுழற்சி முறையில் மின்வெட்டு..# ஸ்பின் பவுலர்களுக்கு மின் வாரியத்தில் முன்னுரிமை ?
8. காதலிக்கும்போது அதிரசமாய் இனிப்பவள் தாலி கட்டியதும் அதிகாரமாய் ,அதிகாரத்தின் வர்க்கமாய் மாறுவாள் # எச்சரிக்கை
9. தூக்கிலிடப்பட்டு 2 நாட்களுக்குப் பின் அப்சல் குருவின் மனைவிக்கு மத்திய அரசு கடிதம் வந்தது #போஸ்ட்மார்ட்டம் பண்ண பின் போஸ்ட்டட்?
10. இன்னைக்கு hug day- வாம்.இதுதான் சாக்குன்னு கூட்டத்துல டவுன் பஸ்ல உரசுன பொண்ணுங்களை கட்டிப்பிடிச்சு மாட்டிக்காதீங்க மக்களே!11. உன் அலப்பரைகளை இரசிக்கும் கூட்டத்தில் ஒருவராக விருப்பமில்லை.. உன் அலப்பரைகள் அரங்கேறும் கலாட்டாக்கூடமாகவே ஆசை.
12. 26 வயதில் 26 படங்களில் நடித்த காஜல் அகர்வால்...# ஆனா நல்லாஆஆஆ நடிச்சது 4 படங்கள்ல தான் ;-))))13. காதலர் தினத்தை முன்னிட்டு பழைய ஜோடியை கழட்டி விட்டு புதுசுக்கு ரூட் விடுபவர் பாலிசி- பழையன கழித்து விடுதலும் புதியன கரெக்ட் டிங்கும்

14. தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடக்கிறது - சரத் # பொற்காலம் படத்துல வர்ற மாதிரி எல்லாரும் மண்பாண்டம் , சட்டி தான் தூக்கனும்னு சொல்றாரா?
15. விஜய் ன் தலைவா டைட்டிலுக்கு தடை. ( புரட்சித்) தலைவி என வைத்தால் வரி விலக்கு # வாய்ல புரளி தலைல அரளி
16. நித்யானந்தா மேலும் வளர வேண்டும்-ஜெயேந்திரர்#ரஞ்ஜிதா 6 அடி .நித்தி 5 3/4 அடிதான் .ஆனா இனிமே ஹைஹீல்ஸ் தான் போட்டு சமாளிக்கனும்

17. நித்யானந்தா மேலும் வளர வேண்டும்-ஜெயேந்திரர்# maleம் வளரனுமா?
18. பஸ் தினம் கொண்டாடினா 'அரஸ்ட்' தான்: சென்னை போலீசார் அறிவிப்பு # பஸ் டே கூடாது ஓக்கே பஸ் நைட்?
19. காதலர் தினத்தன்று காதலர்கள் கள்ளக்காதலர்கள் க்கு தலா 143 ரூபா அன்பளிப்பு-ஜெ அறிவிப்பு .அதிமுக மகிழ்ச்சி # சும்மா

20. தலைவா டைட்டிலுக்கு தடை வருமா? இன்று ஜெ முக்கிய முடிவு # பத்த வைடா பரட்டை
21. கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை - விக்ரம்! # அய்யய்யோ நான் மாட்டேன் - கமல்
22 விஜய் ஒரு படத்துக்கு ஒரு பஞ்ச் டயலாக் பேசுறாரு.பொறுத்துக்கலாம்,விஜய் ரசிகர்கள் டெயிலி 10 பஞ்ச் டயலாக் பேசறாங்க .முடியல ;-)
23. பவர்ஸ்டாருடன் குத்தாட்டம் போட்ட லட்சுமிராய் # உங்க செல் ரிங் "டோனி"ல் அதை வெச்சுக்குங்க மேடம்
24. காத்திருந்து காத்திருந்து கோலங்கள் சீரியல் போனதடி
25. கிளாமர் படம் நல்லா தெரியனும்னா பால்கனி டிக்கெட் எடுக்கக்கூடாது.பெஞ்ச் டிக்கெட் தான் எடுக்கனும் # தரை டிக்கெட் தர்ம லிங்கம்

1 comments:

Unknown said...

3வது கமெண்ட் ஓகே!
!என்'தினசிரிஜோக் 'கில் உண்மை கூறும் தைரியமானஆண் எதில் சேர்த்தி !படித்துப் பார்த்து சொல்லுங்கள்
http://jokkaali.blogspot.in/2013/02/blog-post_15.html