Friday, December 09, 2011

Beauty and the Beast - ஹாலிவுட் பட விமர்சனம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQekfaJ_7DEHqbRWqKsUGN3QfoRAr3a-kaAKzSpLP2dQkt0FGY5X50QXwR_tVD-MzuOkhWFScI_URUGbsTIFVjWPLSDaqO3Rjc3uzpMlzSYwiU4A1rTJtxBgBc3qPwGVDEokLGRhEyQEzD/s400/beauty-and-the-beast-2009.jpg

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல வேன்ஹெல்சிங்க் -4 -னு  ஒரு பட போஸ்டரை பார்த்தேன்.. ஆச்சரியம், விக்கி பீடியாவுல தேடுனா அதுல 2 பாகம் தான் வந்திருக்கு, ஆஹா யாருக்கும் தெரியாம எடுத்துட்டாங்களா? இவனுங்களே டைட்டில் குடுத்துட்டானுங்களா?ன்னு கண்டு பிடிக்க  படத்துக்கு போனேன், மற்ற படி படத்துல ஸ்விம்மிங்க் வீராங்கனையும் , மாடலும் ஆன ஹீரோயின் Estella Warrenக்காக போனேன்னு யாரும் தயவு செஞ்சு நினைச்சுடாதீங்க, மீ நல்லவன் அப்பாவி ஹி ஹி 


படத்தோட கதையை எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லறேன், வருத்தப்படாதீங்க.. 1000 வருடங்களுக்கு முன்னால நடந்த கதை ..  ஒரு ஊர்ல ஒரு ராஜா .. வயசானவரு .. நம்ம கலைஞர் மாதிரி.. அவருக்கு 2 பசங்க.. அழகிரி, ஸ்டாலின் மாதிரி...பதவி ஆசைல அந்த நாட்டின் தளபதி அண்ணனை போட்டுத்தள்ளிடறார்.. 

அப்படி சாகடிக்கப்பட்ட அண்ணனோட உடம்புல ஒரு சூனியக்காரி ஒரு துர் ஆவியை செலுத்தி நடமாடும் ஆவியா தன் கட்டுப்பாட்டுல வெச்சிருக்கு.தம்பி வாரிசு ஏதோ ஒரு காட்டுல துரத்தி அடிக்கப்பட்டு முகம் எல்லாம் ஓநாய் மாதிரி ஆக்கி விட்டுடறாங்க.


 இப்போ சூனியக்காரி தளபதி கிட்டே பேரம் பேசறா..  என்னை உன் கூட கூட்டணி சேத்துக்கோ ( அதாவதி என்னை கீப்பா வெச்சுக்கோ..) எனக்கு எல்லா பவரும் இருக்கு.. நீ தான் நாட்டுக்கு ராஜா. நான் தான் ராணீ , எப்பூடி? அப்படினு கேக்கறா.. ( மனசுக்குள்ள பவர் ஸ்டார்னு நினப்பு)

http://ladybomb.com/wp-content/uploads/2011/05/estella-warren.jpg


நிற்க... ( யாரும் எழுந்து எல்லாம் நிக்கவேணாம்.. படிக்கறதை நிப்பாட்டுங்க.. )சூனியக்காரின்னு சொல்றானே அவ அம்புலி மாமா கதைல வர்ற மாதிரி பல் எல்லாம் கோரமா, தலை முடி எல்லாம் சடை முடியோட தோல் எல்லாம் சுருக்கமா இருக்குமோன்னு நினைக்க வேணாம்.. பார்ட்டி செம ஃபிகர்.. அதிலும் அபாயகரமான லோ கட் ஜாக்கெட் போட்ட பார்ட்டி ஹி ஹி 

இப்போ தான் ஹீரோயின் Estella Warren அறிமுகம்.. ஃபிகரை பற்றி 4 லைன் வர்ணிக்கலைன்னா என்னை எந்த ஃபிகரும் மதிக்காது என்பதால் ஒரு பேரா  (paragh) அதுக்கு ஒதுக்கிடறேன்.. ( இல்லைன்னா மட்டும் எல்லாரும் உன்னை மதிச்சுட்டுத்தான் மறு வேலை.. )

ஃபிகரு டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லேட்டுக்கு சித்தி பொண்ணு மாதிரி முக வெட்டு , ரோஸ்னா ரோஸ் அப்படி ஒரு ரோஸ் கலர் ஸ்கின் அடடா.. அதை விட பாப்பா போட்டிருக்கற ஜாக்கெட் செம கிளாமர்.. பிரம்மாண்டமான யூ நெக் ஜாக்கெட் ஹி ஹி வாழ்க டெய்லர்.. 


அந்த ஓநாய் மனிதன் தான் காட்டுக்குள்ள வர்ற ஆளுங்களை எல்லாம் கொலை செய்யறதா மக்கள் நினைக்கறாங்க.. ஆனா  அந்த வேலையை செய்யறது சூனியக்காரி கை வண்ணத்துல உருவாகும் விநோத ஜந்து.. 

இதுல செம காமெடி என்னான்னா அந்த ஜந்து கிட்டே சூனியக்காரி ஒரு டைம் சொல்லுறா. “ நான் சொன்ன வேலையை நீ செஞ்சுட்டா  ஹீரோயின் உனக்குத்தான். நீ அனுபவிச்சுக்கோ..” அப்டினு சொல்றதுதான். அந்த ஜந்து பார்க்க ஓநாய் மாதிரி இருக்கு. அது எப்படி அனுபவிக்கும்? ஹய்யோ அய்யோ.. 

ஹீரோயின் காட்டுக்குள்ள உலாவற ஓநாய் மனிதனை இளவரசர்னு கண்டு பிடிச்சிடறா.. எப்படி?ன்னு எல்லாம் கேட்கக்கூடாது.. ஏன்னா அது டைரக்டருக்கே தெரியாது.. அந்த ஓநாயின் கேவலமான உதட்ல அவ கிஸ் அடிக்கறா.. ஓநாய் கேக்குது.. ஏன்? அதுக்கு பாப்பா சொல்லுது.. இல்ல சாப விமோசனம் கிடைக்குமா?ன்னு ட்ரை செஞ்சு பார்த்தேன்.. அப்போ தியேட்டர்ல ஒருத்தன் சொல்றான்.. இப்போ கில்மா சீன் கண்டிப்பா இருக்கும்னு.. ஹய்யோ அய்யோ  அப்படி எதும் இல்லை.. 

http://www.celebrity-wallpapers.org/bulkupload/13/estella-warren/estella-warren_17.jpg

படத்தில் வரும் நல்ல வசனங்கள்

1.  பேராசை  ஒரு நல்ல மனிதனைக்கூட கெட்ட மனிதன் ஆக்கி விடுகிறது ( ப சிதம்பரம் சார், உங்களுக்குத்தான்.. )

2. ஒருத்தன் ஜெயிக்கனும்னா அதுக்கு குறுக்கு புத்தி அவசியம்.. ( இது கேப்டனுக்கு)

3. நீ வயசானவ-ங்கறதை மறந்துடாதே.. 

வயசைப்பார்க்காதேய்யா..  அனுபவிச்சுப்பாரு.. 

4. ஹீரோயின் - என்னை எதுக்கு குதிரைல உனக்கு முன்னால உக்கார வெச்சுக்கறே.?. விடு பின்னால நான் உக்காந்துக்கறேன்.. 

வில்லன் - எனக்கு இதுதான் சவுகர்யமாவும் இருக்கு.. கில்மாவாவும் இருக்கு ( 1000 வருஷங்களுக்கு முன்னாலயே இந்த கில்மாவை கண்டு பிடிச்சுட்டாங்களா? அவ்வ் )

5. காதல் சுத்தம் பார்க்காது, அப்படி பார்த்தா அது சுத்தமான காதலா இருக்காது..  ( என்ன எழவு வசனம்யா இது..?)

6.  அவர் உருவத்துலதான் அப்படி இருக்காரு.. ஆனா உள்ளத்தால ரொம்ப நல்லவர்..

ஓஹோ.. அவர் இளவரசர்ங்கற மேட்டர் அவருக்கு தெரியுமா?

ம்ஹூம்.. 

7.  எதுக்காக எனக்கு லிப் டு லிப் கிஸ் குடுத்தே?

உன் உருவம் மாறுமா?ன்னு பார்த்தேன் மாறலை.. 

8. இதைச்சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு... ஆனாலும் அந்த சூனியக்காரியை நினைச்சா பயமாவும் இருக்கு.. 

http://image.qpicture.com/image/v/artist-vanessa-gray/vanessa-gray-197627.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. காலைல  11 மணிக்கு படம் போட்டு 12.30 மணீக்கு விட்டாச்சு, அந்தளவு சின்ன மொக்கை படம் தந்ததற்கு வாழ்த்து

2. ஹீரோயின், வில்லி 2 பேரும் நல்ல ஃபிகர்ஸ் தான் Estella Warren, Vanessa Gray.. அவங்களை படம் பூரா கண்ணியமா “ காட்டியதற்கு” நன்றிகள்


இயக்குநரிடம் சில கேள்விகள், சந்தேகங்கள் 

 ஹாலிவுட் படம் விமர்சனம் எழுதும்போது மட்டும் இந்த பகுதி வந்தா எனக்கு செம ஜாலி.. ஏன்னா அவருக்கு தமிழ் தெரியாது, எனக்கு இங்கிலீஷ் தெரியாது ஹே ஹே ஹேய்

1. பயங்கர சக்தி படைச்ச சூனியக்காரி டைரக்ட்டா ராணி ஆகலாமே..? அவங்க ஏன் இன்டைரக்டா சசிகலா மாதிரி சுத்தி வளைக்கறாங்க?

2. ஹீரோயினை குதிரைல கூட்டிட்டு வர்ற வில்லன் ஏன் அவரை போக விட்டுடறான்? ( இல்ல, அநியாயமா ஒரு சீன் போச்சே அந்த ஆதங்கம்)

3. ஹீரோயினுக்கு பயங்கர சம்பளம் குடுத்திருக்கீங்க.. வில்லிக்கும் செம சம்பளம்.. ஏன் படத்துல அவங்களை நல்லா யூஸ் பண்ணிக்கலை? ஹி ஹி 

4. இந்த கேவலமான கதையை எப்படி நம்பி  தயாரிப்பாளர் சான்ஸ் குடுத்தாரு? ஒரு வேளை அந்த ஓநாய் மனிதன் தான் தயாரிப்பாளரா?

இந்தபடத்தை வேலை வெட்டி இல்லாத மொக்க பசங்க கூட பார்க்க முடியாது ஹி ஹி 

 http://day19.com/blog/1009/aussie2/_MG_3056.jpg

டிஸ்கி - 1.

டப்பா படமான ஒஸ்தியில் சந்தானம் பேசும் டாப்பான காமெடி வசனங்கள்

 

டிஸ்கி -2 

ஒஸ்தி - நாஸ்தி - காமெடி கும்மி கலாட்டா விமர்சனம்

 

 

http://ecx.images-amazon.com/images/I/510LwYH1ggL.jpg

13 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோச்சு ம்ஹும் வடை மிஸ்ஸிங்...

MANO நாஞ்சில் மனோ said...

டேய் டேய் நாங்க மனுஷனா இல்லை நீ மனுஷனா, இப்பிடி பதிவா போட்டு கொளுத்திகிட்டு இருக்கே...???

சீனுவாசன்.கு said...

தமிழாவது தெரிஞ்சி வச்சிருக்கியே!
சந்தோசப்படு ராசா!!...

ராஜி said...

எத்தனையோ வருசமா படம் பார்க்குற எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு உங்களுக்கு. அதை வைச்சு போஸ்டரை பார்த்ததும் அது மொக்கை படமா? இல்லை நல்ல படமான்னு உங்களால கண்டுபிடிக்க முடியலையா?

சென்னை பித்தன் said...

பாத்துட்டு விமரிசனம் வேறா!

Unknown said...

அய்யோ...அய்யோ...நானும் பார்த்திட்டு வந்து பாக்குறன்...கொஞ்சம் முன்னாடி பதிவு போட்டிருக்ககூடாதா...இனி சிபி பதிவை படிக்காம படத்துக்கு போவியா!போவியா! போவியா!
இந்தப்படமே 1000 வருசத்துக்கு முன்னாடி எடுத்திருப்பானுக போல வேன்ஹெல்சன் 4 ஆம் கொய்யால சரியான போர்...........

K.s.s.Rajh said...

ஏண்ணே கதை யாருக்கு வேனும் சூனியக்காரிவேற செம பிகருனு சொல்லுரீங்க(கண்ணா லட்டு திங்க ஆசையா?)

அதைவிட ஹீரோயின் செம பிகர் என்று சொல்லுறீங்க(கண்ணா இரண்டாவது லட்டு திங்க ஆசையா?)

அப்பறம் என்ன அவங்களுக்காக ஒருக்கா படத்தை பார்ப்போம் எங்க ஊர்பக்கம் இப்பவராது வரும் போது பார்ப்போம்

நிரூபன் said...

வணக்கம் பாஸ்..
பேய்ப் படமாக இருந்தாலும் A படம் போல எடுத்திருக்காங்களே...

விமர்சனம் அருமை பாஸ்..
இந்தப் படத்தை இன்னமும் பார்க்கவில்லை! டைம் கிடைக்கும் போது பார்க்க ட்ரை பண்றேன்.

PUTHIYATHENRAL said...

உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம்! தமிழர் சிந்தனை களத்தில் நீங்களும் இணைந்து எழுதலாமே!

* யார்? யாரோடு? இன்றைய பத்திரிகை செய்திகளை படித்ததில் உறுத்தலான சில விடயங்களை குறித்து

* ரஜினி, கமல், ஜெய் ஆகாஷ்! ஆயுதப்போராட்டம்! நடிகர் ரஜினி, கமல் முதல் ஜெய் ஆகாஷ் போன்ற நடிகர்கள் வரை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும்

* இந்தியாவின் ஜென்டில்மேன் முதல்வர்! இவர் இந்தியாவின் பிரதமராவாரா?

* பாபர் மசூதி உடைப்பும் அது தரும் படிப்பினையும்! ஹிந்து பாசிஸ்டுகள் பாபர் மசூதியோடு மட்டும் தங்கள் திட்டத்தை நிறுத்திக்கொள்ளவில்லை!

அம்பாளடியாள் said...

கார்த்திகைத் தீபத்திருநாள் வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே!....

Ravikumar Tirupur said...

சிபி சார் வெண்மணி னு ஒரு படம் வந்திருக்கு அதோட உங்க விமர்சனம் எதிர்பாக்கறேன்

Anonymous said...

கலைஞர் குடும்பத்தோட ஒப்பிட்டு எழுதியிருக்கீங்களே உங்களுக்கு தைரியம் ஜாஸ்திண்ணே. எல்லா ஒட்டும் ம்.ம்.ம்...