Wednesday, November 02, 2011

சேலம் டாக்டர்-ன் மோசடிகள் - உண்மை சம்பவம்


Anti-smoking ads
Anti-smoking ads

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிராமத்துல டாக்டர் சண்முகம் மிக ஃபேமஸ்.. அவருக்கு 2 பொண்ணுங்க , முத பெண்ணின் பெயர் லதா.. 2வது பெண்ணின் பெயர் உமா பாரதி..

2வது பெண்ணை டாக்டருக்கு படிக்க வைத்தார்..அவருக்கு மாப்பிள்ளையும் டாக்டராவே பார்த்து மேரேஜ் பண்ணி வெச்சாரு.. சேலத்துல  மாப்ளைக்கு சொந்தமா க்ளினிக் இருக்கு..

அப்துல்கலாம் கிட்டே அவார்டு வாங்கற மாதிரி உமாபாரதி  ஒரு ஃபோட்டோவை ரெடி பண்ணி அதை தன் க்ளினிக் விளம்பரமா வெச்சு  காசு பார்த்தாங்க.. அது யாரோ கண்டு பிடிச்சு கேஸ் ஃபைல் பண்ணி பல முறை நடையா நடந்து கோர்ட்டின் கண்டனத்தையும் , அபராதம் கட்டச்சொல்லி ஆணையும் பெற்று எப்படியோ மீண்டு வந்தார்..


இப்போ மோசடி உமாபாரதியின் கணவர் டர்ன்..

டெஸ்ட் டியூப் பேபி ட்ரீட்மெண்ட்ல அவர் ஸ்பெஷலிஸ்ட்.. ஆனா அவர் ஒரு எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் தான்.. அப்புறம் எப்படி இவர் டெஸ்ட் டியூப் பேபி ஸ்பெஷலிஸ்ட் ஆனார் என்பது இப்போ தான் வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கு..

ஒரு தம்பதி குழந்தை இல்லைன்னு ட்ரீட்மெண்ட்க்காக வந்திருக்காங்க.. பல டாக்டர்ட்ட போயாச்சு, பல கோயில் குளம் அலைஞ்சாச்சு.. ஆனா மழலை பாக்கியம் இல்லை..

டெஸ்ட்ல மனைவி சைடுல எந்த குறைபாடும் இல்லைன்னு தெரிய வந்தது.. கணவனிடம் உயிர் அணுக்கள் கவுண்ட்டிங்க் கம்மி .. டெஸ்ட் டியூப் பேபிக்காக வந்திருக்காங்க..

வழக்கம் போல் செய்யும் பில்டப்பாக ரொம்ப சிரமம் சார் என சொல்லி ஏதோ டெஸ்ட் எடுப்பது போல் பாவ்லா காட்டி ஒரு வாரம் கழிச்சு வாங்க, ரிசல்ட் சொல்றேன் என அனுப்பி விட்டார்.. ஒரு வாரம் கழிச்சு அவங்க வந்ததும் 10 லட்சம் ரூபா செலவு ஆகும்.. என்று கூறி இருக்கிறார்..

ரொம்ப அதிகம் என அந்த தம்பதி தயங்கியதும் பேரம் (!!) ஒரு வழியாக படிந்து ரூ 8 லட்சத்துக்கு வந்தது..

கணவனிடம் இருந்து ஸ்பெர்ம் எடுத்துக்கொண்டார்.. அடுத்த நாள் ட்ரீட்மெண்ட்க்கு மனைவியை வரச்சொல்லி இருந்தார்..

பொதுவாக ஒரு மனைவி என்பவர் கணவன் தன்னைத்தவிர வேற யாராவது ஒரு பெண்ணை பார்த்தாலோ, பழகினாலோ மனைவிக்கு பிடிக்காது , பொஸஸிவ்நெஸ்தான் காரணம்.. ஆனால் உமாபாரதி செய்த மேட்டர் தமிழ்க்காலாச்சாரத்துக்கு முற்றிலும் புதியது, புதிரானது.. பணம் என்னவெல்லாம் செய்யத்தூண்டுகிறது என்பதற்கு ஒரு உதாரணமாக , மோசமான முன்னுதாரணமாக உமா பாரதி விளங்கினார்அந்த பேஷண்ட்டிடம் பிரெயின் வாஷ் செய்ய ஆரம்பித்தார்..

 ”இங்கே பாரம்மா, டெஸ்ட் டியூப் பேபி ட்ரீட்மெண்ட் என்பது ரொம்ப ரிஸ்க்.. 40% சான்ஸ் தான் இருக்கு.. சப்போஸ் 4 மாச கருவுல கலையவும் வாய்ப்பு இருக்கு, அதே கரு 6 மாசத்தில் கலைந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து தான்.. “

“ இப்போ என்னம்மா பண்றது?”

“ ரொம்ப ஈஸியான,100% ரிசல்ட் கரெக்ட் ஆக , இந்த பிரச்சனைக்கு ஒரு வழி இருக்கு.. ஆனா அதுக்கு நீ சம்மதிக்கனும்..”

“என்னம்மா? என்னென்னவோ சொல்றீங்க?”

“ இதெல்லாம் சகஜம் டவுன்ல.. நிறைய பேர் இப்படி ஓக்கே சொல்லி இருக்காங்க.. அதாவது நீங்க கண்ணை மூடி 5 நிமிஷம் அட்ஜஸ் பண்ணிக்குங்க ...என் கணவர் உங்களுக்கு குழந்தை வரத்தை இயற்கை முறைப்படி தருவார்.. விஷயம் யாருக்கும் தெரியாது...”

அந்தப்பெண் மிரண்டு போய் வேக வேகமாக வீட்டுக்கு வந்து விட்டார்,.. அட்வான்ஸ் ஆக ரூ 5 லட்சம் பணம் கட்டி இருக்கிறார்கள்.. அவள் தன் கணவனிடம் அழுது கொண்டே இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார்..

அவர் சில ஆட்களை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் போய்  நியாயம் கேட்டிருக்கிறார்.. பணத்தை ரிட்டர்ன் கேட்டார்.. டாக்டர் தர மறுத்து விட்டார்.. அட்வான்ஸ் கொடுத்தா கொடுத்ததுதான்.. நான் அப்படி எல்லாம் உங்க மனைவி கிட்டே கேட்கவே இல்லை.. அவங்க தான் ஏதோ சதி செய்யறாங்க  அப்டினு பிளேட்டை திருப்பி போட்டிருக்கிறார்.. 

இப்போது கேஸ் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

பிள்ளை வேண்டி ட்ரீட்மெண்ட் எடுக்கும் நபர்களுக்கு சில ஆலோசனைகள்


1. மனைவியுடன் அவரது அம்மா, அல்லது உங்கள் அம்மா துணையாக எப்போதும் விட்டு வாருங்கள்
 
2. சில டாக்டர்கள் வேண்டும் என்றே உங்களை டைவர்ட் பண்ணவும் , பெண்ணை தனிமைப்படுத்தவும் ஏதாவது வாங்கி வர சொல்லலாம். அதனால் வெளிவேலைகள் பார்க்க இருவர்.. மனைவியுடன் ஒரு பெண் துணை அவசியம்.. 3. நல்ல டாக்டர் தானா? என வெளி உலகில் விசாரிக்கவும், ஆல்ரெடி அவரிடம் ட்ரீட்மெண்ட் எடுத்தவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் அனுபவம் கேட்டறியவும். 

4. எல்லாவற்றையும் விட சிறந்தது. அநாதை இல்லங்களில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது.


டிஸ்கி - இந்த சம்பவம் நடந்து 4 வருடங்கள் ஆகிறது. வழக்கு இன்னும் நடந்து வருகிறது, ஹாஸ்பிடல் சீல் வெச்சுட்டாங்க. சேலத்துலதான் சீல். அவங்க 2 பேரும் இப்போ தலை மறைவு. எந்த ஊர்ல ஹாஸ்பிடல் திறந்து வெச்சாங்களோ? சமீபத்தில் வெளியான கருங்காலி என்ற படம் இந்த சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்.

24 comments:

VANJOOR said...

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////


.

RAMA RAVI (RAMVI) said...

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.
எவ்வளவு மோசடிகள் நடக்குது நாட்டுல?

rajamelaiyur said...

//ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிராமத்துல டாக்டர் சண்முகம் மிக ஃபேமஸ்.. அவருக்கு 2 பொண்ணுங்க , முத பெண்ணின் பெயர் லதா.. 2வது பெண்ணின் பெயர் உமா பாரதி..
//
உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை

Yoga.S. said...

அட கருமாந்திரமே?பணமுன்னா,டாக்டர் பொண்டாட்டியே கணவனைக் கூட்டிக் கொடுப்பாங்களா?நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.

SURYAJEEVA said...

இதை தான் சித்த வைத்தியர்கள் செஞ்சு கிட்டு இருககாங்களோன்னு ஒரு டவுட் இருந்துச்சு, ஆனா அல்லோபதி டாக்டர் செஞ்சிருக்காங்க அப்படின்ன உடனே டவுட் கிளியர் ஆயிடுச்சு.. நன்றி

Unknown said...

அனைத்து துறைகளிலும் இது போல தில்லாலங்கடி பார்ட்டிகள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்! பதிவில் குறிப்பிட்டுள்ளபடி, முன்விசாரணை இன்றி எந்த வேலைகளிலும் இறங்கக்கூடாது!

ராஜி said...

Adachee. Ippadiyelam koodava nadakum.

சக்தி கல்வி மையம் said...

என்ன மாப்ள ஒரே டாகுடறு பதிவா இருக்கு?

விழிப்புணர்வு பதிவு..

Anonymous said...

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு...

அமர பாரதி said...

ஹாஸ்பிட்டல் சீல் வைக்கப்படவில்லை. அவர்கள் தலை மறைவாகவும் இல்லை. நான்கு வருடத்துக்கு முன்பு நடந்ததை தற்போது வெளியிடும் காரணம் என்ன?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உயிர் அணுவின் விலை எட்டு லட்சம் //
கருங்காலி படம் நினைவூட்டி இருக்கும் அமர பாரதி

ஸ்ரீராம். said...

இன்னுமா இவங்களை உலகம் நம்புது....!

தமிழ்வாசி பிரகாஷ் said...

இப்படியும் இருக்கிறார்கள் வக்கிர புத்தியினர்.

இரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்களின் விமர்சனம்

மகேந்திரன் said...

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

இப்போதாம்லேய் நீ பார்ம்'ல வந்துருக்கே விடாதே பிடி பிடி, இன்னும் எத்தனை நாதாரிங்க டுபாகூருங்க எல்லாரையும் போட்டு தாக்கு...

ப.கந்தசாமி said...

அநியாயம், அக்கிரமம், சுண்ணாம்புக் காளவாயில் வைக்கவேண்டியவர்கள்.

Unknown said...

CP..ஆணோ, பெண்ணோ
அந்த மலட்டுத்தனம் இருக்கும் வரை இந்த திருட்டுத்தனம் இருக்கும்...

பதிவுலக மக்களே, CP ஏன், எப்டி தமிழ்மணம் ரேங்கிங்ல No1ன்னு..... இப்போ தெரிஞ்சுக்கோங்க
கருங்காலி படம் பார்க்காம விட்டுடமேன்னு யாரும் வருத்தப் படத் தேவையில்லை !

CP க்கு ஒரு அறிவுரை:
விந்துவங்கி'ன்னு ஒன்னு இருக்கு...இதுக்கு அரசாங்கமே ஒப்புதல் அளித்திருக்கு...
அதைப்பத்தி படிச்சிட்டு இன்னும் கொஞ்சம் விரிவா ஒரு பதிவு எழுதுங்க...
அதைபற்றிய விழிப்புணர்வு வந்திட்டா... வருங்காலத்தில் இந்தப் பிரச்சனை குறைய வாய்பிருக்கு !

K.s.s.Rajh said...

அண்ணே மு.களஞ்சியம் இயக்கி நடித்தஅணமையில் வெளிவந்த கருங்காலி படதிலும் கிட்டதட்ட இப்படி காட்சி இருக்கு.....ஓரு வேளை அந்த டாக்டர் கருங்காலி படம் பார்த்திருப்பாரோ......

நிரூபன் said...

நேற்று நைட்டே இந்தப் பதிவினை மொபைலில் படித்தேன்.
இப்படியும் மனித ஜென்மங்களா என்றே எண்ணத் தோன்றுகின்றது.

தொடர்ச்சியாக விழிப்புணர்வுப் பதிவுகளைத் தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பாஸ்.

கடம்பவன குயில் said...

பிரச்சினையான சம்பவங்களை மட்டும் குறிப்பிடாமல் விழிப்புணர்வுடன் ஆலோசனைகளும் தீர்வுகளும் சேர்த்து பதிவிடுவதே தங்களின் தனிச்சிறப்பு. வாழ்த்துக்கள்.


உண்மை சம்பவம் போடும்போது பெயரை மாற்றி எழுதலாமே. உங்களுக்குத் தெரியாததல்ல...

சத்ரியன் said...

சமூக விழிப்புணர்வு மிக்க பதிவுங்க சிபி.

அதோட ஆலோசனையும் சிறப்பாக இருக்கிறது.

sankar said...

Nanba CPS namma oora pathy evvalavo nalla seithi irukku atha konjam sollu
Sankar

KAYALVIZHI said...

that doctor is still practising.
Recently he had bought 9000 sq.ft land near his hospital in an auction [ making others inactive by giving some huge amount ],and had bought the land at cheap price. This is what i heard. How far it's true i do not know.But he is amassing wealth by cheating such people.