Friday, November 04, 2011

ஈரோட்டில் தங்கக்கார் - கின்னஸ் சாதனைக்காக!!!!!!!!!!!!

சில வருடங்களுக்கு முன் எஸ் தாணுவின் தயாரிப்பில் கேப்டன் கூலிக்காரன் என ஒரு டப்பா படத்தில் நடித்தார் , நினைவிருக்கிறதா? அந்தப்படத்தில் க்ளைமாக்ஸில் ஒரு தங்கக்கார் காண்பிப்பாங்க.. வில்லன் தன் சொத்து முழுவதையும் தங்கமாக சேர்த்து கார் ஆக்கி இருப்பார். அது உருக்கப்பட்டு அழியும்.. அதை பார்த்தவங்க எல்லாம் உச் கொட்டிட்டே பார்த்தாங்க.. அது போல் நிஜமாகவே ஒரு தங்கக்கார் இப்போ வந்திருக்கு.. 

கின்னஸ் சாதனைக்காகவும் , கோல்டு பிளஸ் ஜுவல்லரியின் விளம்பரத்திற்காகவும் மக்களை கவர்வதற்ககவும் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.. 

80 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி , மேலும் 10,000 ரத்தின கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.. இது விற்பனைக்கல்லவாம் ( நல்ல வேளை.. தப்பிச்சோம்.. )

ரூ 1 லட்சம் மதிப்புள்ள நானோ கார் வாங்கி  பின் பொற்கொல்லர்கள் உதவியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.. 

ஈரோடு  நகரில் பெருந்துறை சாலையில்  பழைய பாளையம் பஸ் ஸ்ட்ட்ப் அருகே  ஈஸ்வர மூர்த்தி மஹால் ,  திருமண மண்டபத்தில் இது பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.. 

அனுமதி இலவசம்.. காரை மட்டும் பார்க்க நினைக்கறவங்க மதியம் 12 டூ 3 மணிக்கு போகவும்.. 

ஈரோடு மாநகர் ஃபிகர்களையும் பார்க்கனும் என ஆவலாக உள்ளவர்கள் மாலை 5 டூ 7 போகவும்.. 

எனக்கு ஃபிகர் பார்க்கும் ஆர்வம் இல்லாததாலும், அடிப்படையில் நான் நல்லவன் என்பதாலும் நான் 12 மணிக்குத்தான் போனேன்.. ( நம்புங்கப்பா)டிஸ்கி -1 இந்தப்படம் என் சொந்தக்கேமராவில் படம் பிடிக்கப்பட்டது.. எனவே இனி நன்றி கூகுள் என ஏன் போடலை என யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க .. ( ஐ ஜாலி)

டிஸ்கி 2  - கேமரா ஏது? புதுசு!!! என கேட்பவர்களுக்கு.. அது தனி பதிவாக பின்னர் போடப்படும்..

டிஸ்கி 3 -   திருமணம் ஆன அபாக்கிய ஆண்கள் தனியாக போய் பார்த்து வரவும் என்னை மாதிரி.. மனைவியை அழைத்து வந்தால் அவர் அங்கலாய்ப்புகள் கேட்டுக்கொண்டிருக்கவே நேரம் சரியாக இருக்கும், காரை ரசிக்க முடியாது ..

35 comments:

ராஜி said...

Mudhal parvai

ராஜி said...

80 kg thangama? Avv

Astrologer sathishkumar Erode said...

என்ன பாஸ்..சின்னபுல்ளயாட்டம் பதிவு போட்டுகிட்டு..? சரி சரி திருப்பி தாக்க வேண்டாம்..என்ன கேமரா எல்லாம்..?அதுக்கு தனி பதிவு வேறயா.இந்த கார் எந்தெந்த ஊர் சுத்தி வந்திருக்கு கூக்ளில கோல்டு கார்னு தேடி பாருங்க..ஏராளமா ஃபோட்டோ கிடைக்கும்...ஆனா அருமையான படங்கள் வெல்டன்..கீப் இட் அப் ;-))

Unknown said...

இப்ப தம்ரேவுக்கு எதிர்ல உங்களை பார்த்தேன்...ஈஸ்வரமூர்த்தி மஹால்க்கு பக்கத்திலே
ஓ...இரண்டாவது ரவுண்டா 5 TO 7 டைம்க்கா நல்லவராம்மா....
நடத்துங்க... நடத்துங்க...

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு..

காட்டான் said...

வணக்கம் மாப்பிள
சந்தனம் மிஞ்சினா தடவடா....!!!?? அப்பிடிதான் போகுது கத  ஹி ஹி

RAMA RAVI (RAMVI) said...

டிஸ்கி 3 படித்தவுடன்,நீங்க 12 மணிக்கு போன காரணம் புரிந்து விட்டது.

கார் படங்கள் அருமை.

MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோவ இப்பிடி வேற ஆரம்பிச்சிட்டாங்களா...???

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா நீ அண்ணிகிட்டே செமையா வாங்க கட்டினது புரியுது ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

கார் படம் கிளாரிட்டி சூப்பரா இருக்குலேய் அண்ணா...!!!

SURYAJEEVA said...

மனைவி கூட இருந்ததால் பிகர்களை பார்க்க போகவில்லை என்று எங்களுக்கு தெரிஞ்சு போச்சே

rajamelaiyur said...

//80 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி , மேலும் 10,000 ரத்தின கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.. இது விற்பனைக்கல்லவாம் ( நல்ல வேளை.. தப்பிச்சோம்.. )
//

correct

rajamelaiyur said...

இது போல ஒன்னு வாங்கலாம் னு ஆசை # r . ராசா

rajamelaiyur said...

இன்று என் வலையில்

கடுப்பேத்துரார் மை லார்ட் -பகுதி 2

சுதா SJ said...

வாவ்...... கார் சூப்பர்..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

மனைவியோட போனாலும் கூலிங் க்ளாஸ் மாட்டி போய் இருக்கலாமே , உங்களுக்கு தெரியாததா?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ரொம்ப வருஷம் முன்னாடி ஒரு பெரிய்ய்ய்யா தங்கள் வளையல் கின்னசுக்காக செய்து பார்வைக்கு எங்கள் ஊரில் வைத்திருந்தார்கள். அது பக்கத்தில நான் நின்னு போட்டோ கூட எடுத்திருக்கிறேன், தேடித் பார்க்கணும்

K.s.s.Rajh said...

அட சூப்பரா இருக்கு

ராஜி said...

பழைய பாளையம் பஸ் ஸ்ட்ட்ப் அருகே ஈஸ்வர மூர்த்தி மஹால் , திருமண மண்டபத்தில் இது பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது..
>>>>
பஸ் ஸ்ட்ட்ப் இல்ல சிபி சார் பஸ் ஸ்டாப். எங்கே சொல்லுங்க பஸ் ஸ்டாப்

ராஜி said...

எனக்கு ஃபிகர் பார்க்கும் ஆர்வம் இல்லாததாலும், அடிப்படையில் நான் நல்லவன் என்பதாலும் நான் 12 மணிக்குத்தான் போனேன்.. ( நம்புங்கப்பா)
>>>>
எல்லோரும் நம்பிட்டோமாக்கும்

bandhu said...

அவங்களும் என்னென்னமோ பண்றாங்க.. கார் தான் விக்க மாட்டேங்குது!

சென்னை பித்தன் said...

மொத்த மதிப்பு என்ன?

தமிழ்வாசி பிரகாஷ் said...

உங்கள் கை வண்ணத்தில் தங்க காரின் ஜொலிப்பு இன்னும் அதிகமாக தெரிகிறது...

மழை காலத்தில் யாருப்பா சிபி யை ஐஸ் வைக்கிறது?


நம்ம தளத்தில்:

இந்த அதிசியத்தை நம்ப முடியுதா? படங்கள் பார்க்க...

settaikkaran said...

இதை வாங்கி என்ன பண்ணுவாங்களாம்? :-))))))))))

Yoga.S. said...

நல்லா போட்டோ புடிக்கிறீங்க!சரி *அவங்கள*கூட்டிப் போய்ப் பாத்தும் தகவலெல்லாம் சரியாவே சொல்லியிருக்கீங்களே *ஆணாதிக்க* வாதி?

KANA VARO said...

கமரா பத்தி தனிப்பதிவா????
ஒரு மாதம் நான் ப்ளாக்கிற்கு லீவு.. வாரன் நண்பர்களே!

ராஜி said...

திருமணம் ஆன அபாக்கிய ஆண்கள் தனியாக போய் பார்த்து வரவும் என்னை மாதிரி..
>>
அபாக்கிய ஆண்கள் இல்லை சிபி சார் அபாக்கியவதி ஆண்கள்ன்னு வந்திருக்கனும்

ராஜி said...

மனைவியை அழைத்து வந்தால் அவர் அங்கலாய்ப்புகள் கேட்டுக்கொண்டிருக்கவே நேரம் சரியாக இருக்கும், காரை ரசிக்க முடியாது ..
>>>
அவர் அங்கலாய்ப்புகள் ன்னு இருக்க கூடாது. அவர்களின் அங்கலாய்ப்புகளை ன்னு இருந்தால் தானே சரி . கரெக்‌ஷன் ஃபீசை அக்கவுண்டில போட்டுடுங்க.

Anonymous said...

நிக்குது..ஓடுமா..?

ஹேமா said...

இதெல்லாம் அளவுக்கு மீறின செயல் !

உலக சினிமா ரசிகன் said...

அவ்வளவும் தங்கமா!
தகரத்துல இருக்கறதையே நம்மால வாங்க முடியல...ஹூம்...

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்..

நெசமாவே ஈரோட்டிற்கு வர வேண்டும் போல இருக்கே...
புதுமையான + ஆச்சரியமான தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.


நாங்க நம்பனுமாக்கு?
நீங்க 12 மணிக்குத் தான் போனீங்க என்று....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

GANESH said...

Good car and gold marketing idea.....
-Erode Ganesh

Lingesh said...

நீங்கள் பதிவதைப்போலவே புகைப்படமும் நல்லா எடுக்கறீங்க...

Tamil Baby Names said...

உங்களின் வலைப்பூ நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்.

Tamil Boy baby Names