Thursday, November 17, 2011

பவர் ஸ்டார் ஜோக்ஸ்


1.டீச்சர் - யார் கிட்டே கேள்வி கேட்டேனோ அவங்க மட்டும் பதில் சொன்னா போதும்

, மக்கு ஸ்டூடண்ட் - டீச்சர், இது ஸ்கூலா? சட்டசபையா?

----------------------------------------

2. கெஞ்சல் என்பது ஆண் பால், கொஞ்சல்  என்பது பொது பால், மிஞ்சல் மட்டுமே பெண்பால், எல்லோரையும் ஈர்த்திருப்போம் அன்பால் # டெடிகேட்டட் டூ அமலா பால்

-------------------------------------

3. இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன் - நடிகை ஸ்ரேயா # மேடம், நாங்க தான் அதுக்கு வெக்கப்படனும் , நீங்க ஏன்?

------------------------------------

4. மாப்ளை சாஃப்ட்வேர் கம்பெனில ஒர்க் பண்றாருன்னு சொல்றீங்களே? பெங்களூரா? சென்னையா?

ஹி ஹி திருப்பூர்ல பனியன் கம்பெனில சூப்பர்வைசர்

----------------------------------

5. நீங்க பார்ட் டைம் ஜாப்பா (JOB) கதைஎழுதறீங்களே, ஃபுல் டைம் ஜாப் என்ன?

எழுதுன கதையை ஒவ்வொரு  பத்திரிக்கை ஆஃபீஸ்க்கா அனுப்புவேன்

-----------------------------------6. நான் சன் டி வி பிக்சர்சில் நடிக்கும் நாள் வரப்போகிறது - பவர் ஸ்டார் சீனிவாசன் #ஹா ஹா நான் சொல்லலை? சன் டி வி க்க்கு நேரம் சரி இல்லைன்னு?

------------------------------------

7. தமிழ்நாட்டிலேயே பாரம்பரிய முறையில் சமைக்கப்பட்டு தயார் ஆகும் கம்மங்கூழ் நாமக்கல்லில் நடை பாதை கடைகளில் கிடைக்கிறது செம டேஸ்ட்பா

--------------------------------

8. ஜோசியரே, நான் தொட்டது எதுவும் துலங்கறது இல்ல.எனக்கு நல்ல நேரம் எப்போ பிறக்கும்.

எங்கே உங்க கையை குடுங்க.ஆ  ( ஆள்அவுட் பை ஹார்ட் அட்டாக்)

-------------------------

9. கூடங்குளம் அணு எதிர்ப்பாளர்கள் மீது 66 வழக்குகள் : தேசிய பாதுகாப்பு சட்டம் தயாராகிறது # மீண்டும் ஒரு எமர்ஜென்சியா? வெளங்கிடும்யா நாடு

----------------------------

10.மழலை நம் முதுகில் ஏறி உப்பு மூட்டை விளையாடுகையில் நமது மன பாரங்கள் இறங்குகின்றன

------------------------------11. காணிக்கையை ஏற்றுக்கொள்ளாத, அதை விரும்பாத கடவுள் - நம்மைப்பெற்ற அம்மா மட்டுமே

------------------------------

12. கண்ணகியிடம் இல்லாத ஏதோ ஒன்று மாதவிகளிடம் இருப்பதாக கோவலன்கள் நினைக்கிறார்கள், ஆனால்  கண்ணகிகள் அதற்குப்பழி வாங்க படி தாண்டுவது இல்லை

-------------------------------

13. சாம்பார், ரசம் இவற்றை ருசிக்காமல் வாசம் நுகர்ந்தே உப்பு , உரைப்பு சரியாக இருக்கிறது என்பவர்களே சமையல் கலையில் கை தேர்ந்தவர்கள்

--------------------------

14. பலரின் ஏக்கத்துக்கு கன்னி ஒரு காரணம் , சிலரின் தூக்கமின்மைக்கு கணினி ஒரு காரணம் # ரீ மிக்ஸ் ட்வீட்

--------------------------

15. நான் அப்படிதான், சமைக்கும்போது ருசி பார்க்க மாட்டேன்.


..H/O THIS LADY - அடப்பாவி, அப்போ நீயே டேஸ்ட் பார்க்காததை நாங்க ஏன் சாப்பிடனும்?

----------------------------16.  நீங்க சமையல்ல எக்ஸ்பர்ட்டா?

ஹூம்.. அப்படி இல்லைன்னா என் மனைவி என்னை டைவர்ஸ் பண்றேன்னு மிரட்றாளே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

-------------------------------

17. அப்பா! அம்மா உன்னை கூப்பிடுது வாப்பா.

வேலையா இருக்கேன்னு சொல்லு..

மனைவி - அந்த வேலையை கிடப்புல போடு.. இதைக்கொண்டு போய் குப்பைல போடு

-----------------------------------

18. பல் வலி , தொண்டை வலியால உன் மனைவி அவஸ்தைப்படறாளே, DR ட்ட காட்டலை?

H/O மாலா - யார் கிட்டயும் அவ  பல்லை காட்றது எனக்குப்பிடிக்காது

-------------------------------------

19. மழலைகளின் பெருமை பாடாதவர்கள் மானிடராய்பிறந்து என்ன பயன்?

--------------------------------

20. அத்தான், உங்க பேருக்குப்பின்னால இனிஷியல் போடுங்க, முன்னால வேணாம்.

ஏன்?

எல்லாரும் N ராசா  என கூப்பிடும்போது எனக்கு என் ராசா-னு கேக்குது

-----------------------------------
டிஸ்கி -1   டைட்டிலுக்கான விளக்கம். பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அவைகளால் நிராகரிக்கப்பட்ட ட்வீட்ஸ் மற்றும் ஜோக்ஸ் இவை எல்லாம். அதனால் டைட்டிலாக கேவலமான ஜோக்ஸ் என போடலாம்னு இருந்தேன்..கேவலம் வேறு , பவர் ஸ்டார் வேறு இல்லை என பலர் கருதுவதால் அவர் பெயரையே போஸ்ட்டுக்கும் வெச்சுட்டேன்,...


டிஸ்கி 2 - சில வருடங்களுக்கு முன்பு நான் எட்டாங்கிளாஸ் படிச்சப்ப என் கிளாஸ்ல 65 பேர், நான் எடுத்த ரேங்க் - 3 .. இப்போ சவால் சிறுகதைப்போட்டில கலந்துக்கிட கதைகள் 67. இதுலயும் நான் 3வது ப்ளேஸ்.. ஆண்டவா!! நான் முன்னேற சான்ஸ் நஹி?

24 comments:

'பரிவை' சே.குமார் said...

jokes POWER... Super.
SAVAL vetrikku vazhththukkal.

சசிகுமார் said...

///சில வருடங்களுக்கு முன்பு நான் எட்டாங்கிளாஸ் படிச்சப்ப///

யோவ் மாப்ள பல வருடங்கள்ன்னு போடு இப்படியே எத்தனை நாள் சொல்லிக்கிட்டு இருப்ப

Unknown said...

அண்ணே எட்டாங்க்லாஸ் வரைக்கும் படிசிருக்கரு டோய்!...எல்லாம் ஒரு தரம் கைத்தட்டுங்க டோய்!

K.s.s.Rajh said...

///கெஞ்சல் என்பது ஆண் பால், கொஞ்சல் என்பது பொது பால், மிஞ்சல் மட்டுமே பெண்பால், எல்லோரையும் ஈர்த்திருப்போம் அன்பால் # டெடிகேட்டட் டூ அமலா பால்////

இது செம பால்..ஹி.ஹி.ஹி.ஹி...அதான் அமலா பால்

K.s.s.Rajh said...

////டைட்டிலுக்கான விளக்கம். பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அவைகளால் நிராகரிக்கப்பட்ட ட்வீட்ஸ் மற்றும் ஜோக்ஸ் இவை எல்லாம். அதனால் டைட்டிலாக கேவலமான ஜோக்ஸ் என போடலாம்னு இருந்தேன்..கேவலம் வேறு , பவர் ஸ்டார் வேறு இல்லை என பலர் கருதுவதால் அவர் பெயரையே போஸ்ட்டுக்கும் வெச்சுட்டேன்,...
////

ஹா.ஹா.ஹா.ஹா.............

K.s.s.Rajh said...

சிறுகதை போட்டியில் பரிசு பெற்றதுக்கு வாழ்த்துக்கள் பாஸ்

rajamelaiyur said...

//1.டீச்சர் - யார் கிட்டே கேள்வி கேட்டேனோ அவங்க மட்டும் பதில் சொன்னா போதும்

, மக்கு ஸ்டூடண்ட் - டீச்சர், இது ஸ்கூலா? சட்டசபையா?


//
சட்டசபைல யாரு இப்ப பேசுறா?

rajamelaiyur said...

வாழ்த்துகள்

வவ்வால் said...

சிபி,

//கேவலம் வேறு , பவர் ஸ்டார் வேறு இல்லை என பலர் கருதுவதால் அவர் பெயரையே போஸ்ட்டுக்கும் வெச்சுட்டேன்,...//

பவர் ஸ்டார் பேர தலைப்பில வச்சா பின்னூட்டம் அல்லும், சூடான இடுகைக்கு வரலாம்னு தெரிஞ்சே வச்சுட்டு இப்படி சமாளிப்பதை அகில உலக நாயகன் பவர்ஸ்டார் பேரவை சார்பாக கண்டிக்கிறேன்! :-))

//டிஸ்கி 2 - சில வருடங்களுக்கு முன்பு நான் எட்டாங்கிளாஸ் படிச்சப்ப என் கிளாஸ்ல 65 பேர், நான் எடுத்த ரேங்க் - 3 ..//

இப்போ வரைக்கும் 8 ஆம் கிளாஸ் தானே னு உங்க ஏரியா பக்கம் சொல்றாங்களே :-))

அப்புறம் எட்டுக்கு அப்புறம் ரேங்க்ல வரவே இல்லையா அவ்வ்வ்!(எட்டு எட்டா உலக வாழ்க்கைய பிரிச்சாச்சா)

தமிழ்வாசி பிரகாஷ் said...

எட்டாங்கிளாஸ் படிச்சும் இப்பிடி எழுதறாரே. இன்னும் படிச்சிருந்தா? அட பாவமே....

நம்ம தளத்தில்:
நமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது எப்படி?

தமிழ்வாசி பிரகாஷ் said...

யுடான்ஸ் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

Sen22 said...

சிறுகதை போட்டியில் வெற்றி பெற்றதற்க்கு வாழ்த்துக்கள் பாஸ்..

அப்புறம் அந்த அமலா பால் ஜோக்கு சூப்பரப்பு... ;)

வெளங்காதவன்™ said...

:-)

ராஜி said...

கெஞ்சல் என்பது ஆண் பால், கொஞ்சல் என்பது பொது பால், மிஞ்சல் மட்டுமே பெண்பால், எல்லோரையும் ஈர்த்திருப்போம் அன்பால் # டெடிகேட்டட் டூ அமலா பால்
>>>>
மீண்டும் அமலா பால் ஜீக்கா? நடிகை அமலா பால் வந்த பின் கார்த்திகா, ஸ்ருதின்னு புதுபுது நடிகைகள் வந்துட்டாங்க. நீங்க மட்டுமின்னும் அமலா பால் காலத்துலயே இருந்தால் எப்புடி சிபி சார். புது டிரெண்டுக்கு மாறுங்க சார்.

ராஜி said...

இன்று படங்களெல்லாம் வெகு அருமை.

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது தேசியபாதுகாப்பு சட்டமா, டேய் அண்ணா இது என்ன சர்வாதிகார நாடா அந்த இத்தாலி போக்கிரியை நாடு கடத்துங்கப்போய்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

///கெஞ்சல் என்பது ஆண் பால், கொஞ்சல் என்பது பொது பால், மிஞ்சல் மட்டுமே பெண்பால், எல்லோரையும் ஈர்த்திருப்போம் அன்பால் # டெடிகேட்டட் டூ அமலா பால்////

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா கொல்லுறியேடா ராஸ்கல்....

MANO நாஞ்சில் மனோ said...

///சில வருடங்களுக்கு முன்பு நான் எட்டாங்கிளாஸ் படிச்சப்ப///

இப்பிடித்தான் பலவருடமா சொல்லிக்கிட்டு அலையுறியாக்கும் ஹி ஹி டுபுக்கு அண்ணன் ஹி ஹி...

ஸ்ரீராம். said...

முதல் படம் டாப். கடைசி படமும் பரவாயில்லை. மூன்றாவது ப்ளேசுக்கு வாழ்த்துகள்.

ஷைலஜா said...

சவால் வெற்றிக்கு வாழ்த்துகள்! எப்போ ட்ரீட்?

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சென்னை பித்தன் said...

65 இல் 3 ஐ விட,67 இல் 3 முன்னேற்றம்தானே!

RAMA RAVI (RAMVI) said...

செந்தில்குமார், தங்கள் பதிவுகளைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.