Tuesday, November 22, 2011

சைக்கோ கணவனை கொலை செய்த ஒரு தேவதையின் டைரியிலிருந்து..

image0042


1993 செப்டம்பர் 16: இன்று 16 பிறந்த நாள். ஸ்கூல் விட்டு சீக்கிரம் வந்துடு. ஈவினிங்க் மலைக்கோவிலுக்கு போலாம்னு அம்மா சொன்னாங்க. சரின்னு நானும் வந்துட்டு, குடும்பத்துடன் கிளம்பினோம். போகும்போது, எதிர்வீட்டு பாட்டி, நல்ல மாப்பிள்ளையா கிடைக்கனும்ன்னு சாமியை  நல்லா வேண்டிக்கோடினு சொல்லிச்ச்சு. போ பாட்டி! இப்ப என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்னு சொன்னாலும், சாமி கும்பிடும்போது...,சாமி! நல்லா சிவப்பா, என்னைவிட உயரமா, கரு கருன்னு மீசையோட காதல் கடலில் என்னை மூழ்கடிக்குற, அந்தஸ்துல எப்படி இருந்தாலும் பசி, வறுமையைக்கூட மறக்கடிக்கற காதலுடன் என்னை மட்டுமே உலகமா நினைக்குற புருசன் எனக்கு வரனும்,  வேணும்னு வேண்டிக்கிட்டேன்.

1993 நவம்பர் 6: இன்றுதான்  அவனை பார்த்தேன். கூட வரும் சுஜிக்கு தெரிஞ்சவனாம். சுஜி அவன்கிட்ட பேசிட்டு வந்தாள்.. . திரும்பி திரும்பி மீண்டும், மீண்டும் பார்த்தேன். ஏற்கனவே, டைப்பிங் இன்ஸ்டிடியூட்ல போகும்போதும், வரும்போதும் ஏற்கனவே பார்த்திருந்தாலும் இன்று புதிதாய், அழகாய் தெரிந்தான். ஏன்?? அவன் பேர் என்னனு தெரிஞ்சுக்க ஆசையா இருந்துச்சு.  இந்த சுஜி பிசாசுக்கிட்ட கேட்கலாம்னு பார்த்தால். அப்புறம் எல்லா பிசாசுங்ககிட்டயும் சொல்லி மானத்தை வாங்குமே? அதான் சைலண்ட்டா இருந்துட்டேன்.

1993 நவம்பர் 16: இன்னிக்காவது அவன் பேர் என்னனு தெரிஞ்சுக்க முடியுமா? படிக்குற பாடத்தில் இருந்தாலாவது  ஃப்ரெண்ட்ஸ்கிட்டயும், டீச்சர்கிட்டயும் கேட்டு தீர்த்துக்கலாம். அவன் பேர் என்னனு யார்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குறது. அட ஆண்டவா ஹெல்ப் மீ.

1993 நவம்பர் 23: அப்பாடா! ஒரு வழியா இன்னிக்குதான் அவன் பேர் குமரவேல்ன்னு  தெரிஞ்சுது. பேர் கொஞ்ச கர்நாடகமா இருந்தாலும் நல்லா உயரமாய், சிவப்பாய், கருகருன்னு மீசையோட நான் எதிர்பார்த்த மாதிரியே அழகாத்தான் இருக்கான். எங்க டைப்பிங் இன்ஸ்டிடியூட்ட்லயே கோச்சரா சேர்ந்திருக்கான். 

1993 நவம்பர் 28:அவனுக்கு பிறந்த நாளாம். எல்லாருக்கும் சாக்லேட் குடுத்தான். எனக்கும் குடுத்தான். பர்த் டே விஷ் பண்ண அவன் கையை பிடிச்சு விஷ் பண்ணேன். அப்ப்ப்பா !!!!!அவன் கை என்னமா சில்லுன்னு ஷாக்கடிச்ச மாதிரி இருந்துச்சு. அவன்  பிறந்த நாளில், என்னுள் காதலும் பிறந்ததா? 

1993 டிசம்பர் 12: ரொம்ப நாள் தவிச்ச தவிப்புக்கு இன்றுதான் விடுதலை. இன்னிக்குதான் தைரியம் வந்து அவன்கிட்ட ஐ லவ் யூன்னு சொல்லிட்டேன். என்ன பதில் சொல்வானோ?! தெரியலையே.

1994 ஜனவரி 1: தைரியமா காதலை சொல்லிட்டேனே தவிர ஒத்துக்குவானா? இல்லை மறுப்பானா? அப்பாக்கிட்ட சொல்லிடுவானோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். ஆனால், இன்ஸ்டிடியூட் படிக்கட்டில் வைத்து தானும் காதலிப்பதாக சொல்லி, ஒரு லிப் கிஸ்ஸடிச்சானே! ஒரு கிஸ்ஸுல சொர்க்கமே என் காலடியில்...,

1994 ஜனவர் 28: வெளியேலாம் கூப்பிடுறானே. அவன் ரொம்ப நல்லவனாத்தான் இருக்கான். எல்லை மீற மாட்டான்னு நம்பிக்கை இருக்கு ஆனால்,அப்பாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான் கொன்னே போட்டுடுவார்.

1994ஃபிப்ரவரி 4: பாசாகி இஞ்சினியராகிட்டானாம்.அதை கொண்டாட வெளியே கூப்பிட்டான். போனேன். அப்பாவுக்கு தெரிஞ்சவங்க பார்த்துட்டு வந்து சொல்லிட்டாங்க. அப்பா அடி பின்னிட்டார். ஒரே ஜாதியில்லையாம், அந்தஸ்துலயும் தாழ்ந்தவங்களாம். மறந்துட சொல்றாரு. அவனை, மறக்க என்னால முடியாதே.., ஸ்கூலுக்கும், டியூசனுக்கும், டைப்பிங்க் கிளாசுக்கும் போகக்கூடாதுன்னு அப்பா சொல்ல, பாதியிலேயே நிறுத்திட்டால் எல்லாரும் சந்தேகம் வரும். அதனால, நீங்களே இந்த கழுதையை கூட்டிட்டு போய் கூட்டு வாங்கன்னு அம்மா சொல்லிட்டாங்க. அதானல அப்பா எப்பவும் பாடிகார்டு போல கூடவே வர்றாரு. அவன்கிட்ட பேசவே முடியலையே. ஆண்டவா எங்கள எப்படியாவது ஒண்ணா சேர்த்துடு..


1994 ஃபிஃப்ரவரி 15: டைப்பிங் கிளாஸுல வந்து மீட் பண்ணான், தனக்கு டெல்லில வேலை கிடைச்சிருக்கிறதாகவும், என்னையும் அவன் கூடவே வந்துட சொன்னான். அங்க போய் கல்யாணம் பண்ணிக்கலாம், கொஞ்ச நாள் கழிச்சு வரலாம்.  அதுக்குள்ள நம்ம வீட்டுங்கள்ல கோவம் போயிடும்னு சொன்னான். நாந்தான் அப்பா அம்மா பேர் கெட்டு போயிடும். உன்கூட நான் வரமாட்டேன்னு சொல்லிட்டேன். அப்போ என்னை பிரியனும்டின்னு சொன்னான். பரவாயில்லை. ஒரே பொண்ணான என்னை என் அப்பா அம்மா எப்படி எப்படியெல்லாமோ வளர்த்தாங்க. நோயிலிருந்து காப்பாத்தினாங்க. என் மேல உயிராய் இருக்காங்க. அவங்களுக்காக உன்னை பிரிய சம்மதம்னு சொல்லிட்டேன்.

அப்போ என்னை மறந்துட்டு இருப்பியாடின்னு கோவமா கேட்டான். ஒக்கே, என் அப்பா அம்மா கவுரவுத்துக்காக, உன்னை மறக்கவும் செய்வேன். “போடி, இதுக்காக நீ வருத்தப்பட போறே பாருன்னு சொல்லிட்டு போய்ட்டான். கண்டிப்பா, மாட்டேன், என் அப்பா அம்மா, எனக்கு நல்லதுதான் செய்வாங்க. அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் ரொம்ப நல்லா இருப்பேன்னு சொல்லிட்டேன்.

1994 மார்ச் 28: வீட்டுல எனக்கு கல்யாண ஏற்பாடு செய்றாங்க. நான் இப்பதான் பிளஸ் டூ படிக்குறேன். நல்ல மார்க் எடுப்பேன். என்னை படிக்க வைங்க. காதல், அது இதுன்னு சுத்த மாட்டேன். நல்ல பிள்ளையா உங்க பேச்சை கேட்டு நடக்குறேன்னு கெஞ்சி கேட்டும், ஐந்து நாள் உண்ணாவிரதம் இருந்தும் நோ யூஸ். குமரவேல் டெல்லில ஒரு கம்பனியில் போய் வேலைக்கு சேர்ந்துட்டான். இனி என் முகத்துலயே முழிக்க மாட்டேன்னு  சுஜிக்கிட்ட சொன்னானாம்.

199 ஏப்ரல் 4:அம்மாவோட தூரத்து சொந்தமான சுந்தரம் இன்னிக்கு என்னை பொண்ணு பார்க்க வந்தார். என்னைவிட, குள்ளமா, கறுப்பா இருந்தாலும் முகம் களையாவே இருந்துச்சு. ஆனாலும், என் சம்மத்ததை கேட்கவே இல்லை..  ஜூன் 10 கல்யாணம்னு முடிவு பண்ணிட்டு போய்ட்டாங்க. 

1994 ஏப்ரல் 15: இன்று நிச்சயதார்த்தம். எல்லாரும் வந்தாங்களே. ஆனால், அவர் ஏன் வரலை? அவங்க அம்மா, அப்பா, அண்ணா, தம்பிலாம் நல்லா பழகுறாங்க. ஆனால், அவங்க அண்ணி டாமினேஷன் தான் ஓவரா இருக்கு. இதுதான் எனக்கு விதிக்கப்பட்டது போலும். காதலில் துரோகம் சரியோ, தவறோ தெரியாது. ஆனல், இதை முழு மனதுடன் ஏத்துக்கிட நான் முடிவு பண்ணிட்டேன். கல்யாணத்துக்குள் குமரவேலை முழுசா மறந்துடனும். இறைவா! அருள் புரி.

1994 மே 12: நாட்கள் வேகமா நகர்ந்துக்கிட்டு இருக்கு. கல்யாண நாள் கிட்ட வருது. கல்யாண மண்டபம், டிரெஸ், நகைன்னு பார்த்து பார்த்து எனக்கு பிடிச்சதா வாங்குறார் அப்பா. ஆனால், மாப்பிள்ளை? ம்ம்ம்ம்ம்

1994 ஜூன் 9: இன்னிக்கு மாப்பிள்ளை அழைப்பு. அவங்க வீட்டுக்கு நல்ல மருமகளா அவருக்கு நல்ல மனைவியா நடந்துக்கனும்னு இறைவனை வேண்டிக்கிட்டு மண்டபத்துக்கு செல்கிறேன். இந்த வீட்டுக்கும், எனக்குமான பந்தம் இன்றோடு முடியப்போகுது. நாளை முதல் நான் வேறொரு வீட்டு பெண். அப்பா, அம்மா தான் பாவம் இனி தனியா இருக்கனும், இதுவரை, அண்ணனோ, தம்பியோ இல்லாத குறை தெரிந்ததில்ல. முதன் முறையாக இன்றுதான் தெரியுது. ஆண்டவா எல்லாரையும் நல்லா வச்சுக்கோ. 

1995 ஜூன் 10: இதுவரை பூங்கொடியா இருந்த நான் இன்றிலிருந்து பூங்கொடிசுந்தரம். ஆயிரம்தான் இருந்தாலும் திருமணம்னாலே மகிழ்ச்சிதான் போல. உடம்பெல்லாம் இனம் புரியாத சிலிர்ப்பு.  ஓரக்கண்ணால் அடிக்கடி அவரை பார்க்கிறேன். யாருக்கும் தெரியாமல் மார்பினில் தவழும் தாலிக்கயிற்றை தொட்டு பார்க்கிறேன். உடலெங்கும் மின்சாரம் பாய்கிறது. எனக்கு இருக்கும் சிலிர்ப்பு அவங்களுக்கு இல்லை போல.

யாரும் கவனிக்காத போது, ஒரு கலாய்ப்பு, லேசா கையப்பிடிச்சு ஒரு கிள்ளு, போட்டோவுக்கு நிக்கும்போது ஒரு உரசல்னு ஏதுமில்லாமல்!? ஓ வீட்டுக்கு பயந்த பிள்ளைன்னு அப்பா சொன்னாரே. தனியா இருக்கும்போது பேசுவாரோ.

வீட்டுக்கு காரில் போகும்போது கூட பெரியவங்க யாருமில்லை.  அவங்க அண்ணன் பிள்ளைங்க மட்டும்தானே இருந்துச்சு. அப்பவும் எந்த பேச்சும் இல்லாம, எந்த சில்மிஷமும் இல்லாம தூங்கிட்டு வந்தாரே ஏன்?இன்னிக்கு நாள் நல்லா இல்லியாம். அதனால், மத்த சடங்குகளெல்லாம் ஒரு மாசம் கழிச்சுதானாம். மாமியார் வந்து சொன்னாங்க. 

1994 ஜூன் 25: கூட்டு குடும்பம் என்பதால் தனியா பேசும் சந்தர்ப்பம் அதிகம் வாய்ப்பதில்லை. எப்போதாவது சின்ன சில்மிஷத்தோடு சரி. அவங்க ரொம்ப பயப்படுறாங்க. நான் தான் அவரை முதல்ல கிஸ் பண்ணேன். 

1994 ஜூலை 4: இன்று என் வாழ்வில் மிக மோசமான நாள் போல. இந்த நாள் விடியாமலே போயிருக்கலாம். ஆனால் விடிந்து என் வாழ்க்கையை இருட்டாக்கியது. அவங்க சித்தப்பா வீட்டு கிரகப்பிரவேசம்ன்னு எல்லாரும் போயிட்டோம். அவங்க கடைக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. கொஞ்ச நேரத்துல எனக்கு தலைவலி வரவே வீட்டுக்கு போயிட்டேன். வீட்டுக்குள்ள ஏதோ சத்தம் வரவே போய் பார்த்தால், அங்கே அவரும், அவங்க அண்ணியும் ஒண்ணா.....,

சத்தம் போடக்கூட திராணியின்றி, அந்த இடத்தை விட்டு வெளியில் வந்து தனிமையில் யோசிக்குறேன். இதை யார்கிட்ட சொல்லலாம். என்ன செய்யலாம்ன்னு யோசிச்சேன். போடான்னு சொல்லிட்டு போயிடலாம்ன்னு அறிவு சொல்லுது. ஆனால், மனசோ..,

பொண்ணை நல்ல இடத்துல, கவர்ன்மெண்ட் வேலை செய்ற மாப்பிள்ளைக்கு கட்டிகுடுத்துட்டோம்ன்னு பெருமிதமா இருக்குற அப்பா அம்மா நிலைமை என்ன ஆகும்ன்னு யோசிச்சு பார்த்தியா? ஏற்கனவே, அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு இதை கேள்விப்பட்டால்..., 

பொண்ணோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு அப்பா உயிரையே விட்டுடுவார். இதெல்லாம் தேவையா? உனக்கு கிடைச்ச அதிர்ச்சியை துக்கத்தை முழுங்கு. மனசு வச்சால், எப்பேர்ப்பட்டவனையும் திருத்திடலாம். உனக்கு பிடிச்ச முருகர்சாமி துணைக்கு இருப்பார்ன்னு சொல்லவே மனசை தேத்திக்கிட்டு, நார்மல் லைஃபுக்கு வர முயற்சி செய்கிறேன்.

1994 ஜூலை 12: இன்று ஃபர்ஸ்ட் நைட். மனசு என்னவோ அவங்க கிட்டே ஒட்டவே இல்லை. கண்ணை மூடினால், அவங்க அண்ணியுடன் இருந்த கோலம்தான் மனசுக்கு வருது.

1994 செப்டம்பர் 10: இன்று டாக்டர்கிட்ட கூட்டி போகனும்னு அவங்கம்மாவும் பிள்ளையும் பேசிக்கிட்டாங்க. இன்னும் நான் பிள்ளை உண்டாகலைன்னு அவங்கம்மாக்கு பெரிய குறை. மாமியார் சொல்றாங்க.., என்னோட அம்மாவுக்கு ஒரே பொண்ணு. வேற குழந்தைங்க இல்லை. இதுக்கு அதாவது உண்டா இல்லையான்னு தெரிஞ்சுக்கனும் டாக்டர்கிட்ட போய் வாடான்னு சொன்னாங்க.

டாக்டர்கிட்ட போய் வந்ததுல எனக்கு எந்த குறையும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அப்படின்னா, உங்ககிட்டதான் எதோ குறை இருக்கு, “நீங்க சரியா தாம்பத்யம் செய்யலையோன்னு கோவத்துல கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டேன்.  நானா சரியா இல்லைன்னு சொல்லி, அவங்க அண்ணியை கூட்டி வந்து  பெட்ரூம் கதவை தாழ் போட்டு என் முன்னாடியே ஒண்ணா இருந்தாங்க. 


அப்புறம் அவர் சொன்னாரு -அதுமட்டுமில்லாம, என் கூட வேலை செய்ற காஞ்சனாவுக்கும், எனக்கும் தொடர்பு இருக்கு. அவ இப்போ 6 மாசம் முழுகாம இருக்கா சந்தேகம் இருந்தால் போய் கேட்டுக்கோன்னு சொல்லிட்டார். ஆடி போயிட்டேன். நான் என்ன பாவம் செய்தேன். இதையெல்லாம் தாங்க? என் அப்பா அம்மா என்னை பூப்போல வளர்த்தாங்களே!  இதுப்போல லோல்படவா? முருகான்னு அழத்தான் முடிஞ்சுது.

1994 அக்டோபர் 15: என் பெரியம்மா பையனை கூப்பிட்டுகிட்டு அந்த காஞ்சனாவை போய் பார்த்தேன், அவங்க மேடிட்ட வயிறே எல்லா கதையும் சொல்லிடுச்சு. அவங்க சொன்னாங்க -நான் ஒரு விதவை. அவர்கூடதான் வேலை செய்யறேன். எங்க ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்கு. நான் இப்போ முழுகாமத்தான் இருக்கேன். என்னை மன்னிச்சுடுங்க, என்னை இந்த ஊர்க்காரங்க முன் அசிங்கபடுத்தாதீங்கன்னு சொல்லி கெஞ்சினாங்க. அந்த பொண்ணை அசிங்கப்படுத்தி என்ன ஆகப்போகுதுன்னு என் விதியை நொந்தவாறே வீட்டுக்கு வந்துட்டேன்..

1994 அக்யோபர் 16: அப்பா அம்மாகிட்ட சொல்லாதேடான்னு நான் சொல்லியும் கேட்காம் என் பெரியம்மா பையன்  அப்பா அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லி, பஞ்சாயத்துக்கு வந்துட்டாங்க. என் மாமனார் தலை குனிஞ்சு நின்னார். ஆனால், என் மாமியாரோ பிள்ளைக்கு வக்காலத்து வாங்கினாங்க. உங்க பொண்ணு மட்டும் யோக்கியமா? கல்யாணத்துக்கு முன்னாடியே லவ் பண்ணவதானே? என்ன பண்ணாளோ? ஏது பண்ணாளோன்னு ன்னு வாய் கூசாம என் மேல் சேறை வாறி இறைச்சங்க.  அப்பா அம்மா என்னம்மா பண்ண போறேன்னு கேட்டாங்க. என்னப்பா செய்றது. அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போறேன்பான்னு சொல்லி அனுப்பிட்டேன்.

1994 நவம்பர் 24 - அப்பா அம்மா வந்து பேசப்போறதா சொல்லி இருக்காங்க. அவங்கிட்ட சொன்னேன்.எனக்கு இதுலாம் புதுசு, இதுபோல கேவலங்களை சந்திச்சு பழக்கமில்லை. இனி உன்னோடு மனசு ஒத்து வாழ முடியும்ன்னு எனக்கு தோணலை. அதனால, நான் எங்கப்பாக்கூடவே நாளைக்கு போயிடப்போறேன்னு சொன்னேன். அதுக்கு அவங்க, போடி இப்பதான் தெரியுது நீ ஏன் என்னோடு மனசு ஒத்து  வாழ மாட்டேங்குறேன்னு.  உனக்கும்  உங்கப்பாவுக்கும் இருக்குற கள்ளதொடர்பாலதானே  நீ உங்கப்பா கூட போறேன்னு சொல்றே. ரெண்டு பேராலயும் பிரிஞ்சு இருக்க முடியலையோன்னு  தலையில நெருப்பை வாரி கொட்டுன மாதிரி பேசினாங்க.

ஒருவேளை என்னை பிரிஞ்சு நீ போயிட்டால்.., உங்க ரெண்டுபேருக்கும்
உறவிருக்குறதா  நான் ஊருல சொல்லி உங்க மானத்தை வாங்குவேன்னு சொல்றாங்க. அடிச்சாலோ இல்லை சூடு போட்டாலோ இல்லை வேறு எதாவது கொடுமை படுத்தினாக்கூட தாங்கிக்கலாம். ஆனால், இப்படி வார்த்தையால தேள் கொட்டுற மாதிரி கொட்டுனா?எப்படி தாங்கிக்கறது. அப்பா கூட போனால்,   அவங்க சொல்ற  மாதிரி ஊருக்குள்ள சொல்லி அசிங்க படுத்தி.., அதை அப்பா அமா கேட்டால் தூக்குல தொங்கிடுவாங்களே. என்ன நடந்தாலும் இனி வீட்டை விட்டு போகக்கூடாது. அதற்குண்டான மன பலத்தை எனக்கு குடு இறைவா!


1994 டிசம்பர் 1: மனசு  ஒட்டாமலே குடும்பம் நடத்துறேன். அப்படி இருக்கனும், இப்படி இருக்கனும்ன்னு நினைச்சு வளர்த்த என் கனவுலாம் கருகி போச்சே. ஒரு குழந்தை பிறந்தாலாவது  எனக்கு ஆறுதலா இருக்கும்ன்னு பார்த்தால் எனக்கு அதுக்கு கூட குடுப்பினை இல்லை.

1995 பிப்ரவர் 5: காஞ்சனாவுக்கு பெண்குழந்தை பிறந்துச்சு. அதை போய் பார்த்துட்டு வந்தேன். குழந்தை அவ்வளவு அழகு. விட்டு பிரிஞ்சு வரவே மனமில்லை.

1995 மார்ச் 7: அவர் வேலை செய்யும் இடத்துக்கே தனிக்குடித்தனம் வச்சுட்டாங்க. காஞ்சனா வீடு என் வீட்டுக்கு பக்கத்து தெருதான். கல்பனாவும், என் வீட்டுக்காரரும் அப்படி இப்படி இருக்குறது எனக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் அமைதியா இருக்க பழகிக்கிட்டேன். 

முதல் முறை அடிபடும்போதுதான் வலிக்கும். மீண்டும், மீண்டும் அடிபட்டால், ஒரு கட்டத்திற்கு மேல்..., மரத்து போகும். அதுபோல்தான் என் நிலை
அவங்க நல்ல தோழியா நடந்துக்குறாங்க. அவங்க பெண்ணோ என்னுடன் முழுநேரமும் இருக்கும் அவளால்தான், என் துக்கங்களை மறந்துட்டு இருக்கேன்.  அவள் பெயர் இந்து  படுச்சுட்டி. கொள்ளை அழகு. அம்மான்னுதான் என்னை கூப்பிடுறா. 

1996 ஜனவர் 15: காஞ்சனா மீண்டும் முழுகாம இருக்காங்களாம்.

1996 நவம்பர் 24: இன்று மற்றொரு தேவதையால் என் உலகம் ஆசிர்வதிக்கப்பட்ட்து.காஞ்சனாவுக்கு இன்று மீண்டும் பெண்குழந்தை பிறந்தது. இரண்டாவது பெண்குழந்தை என்பதால், என் வீட்டுக்காரர் ஆஸ்பிட்டல் போய் ரெண்டு பேரையும் பார்க்கல. நான் போய் பார்த்துட்டு இந்துவுக்கு அவ தங்கச்சியை காட்டிட்டு வந்தேன்.  காஞ்சனாவுக்கு குளிர் ஜுரம் வந்திருக்கு. பாவம் அவங்க.

1996 நவம்பர் 25: குளிர்ஜுரம் அதிகமாகி ஜன்னி கண்டு இறந்துட்டாங்க.ன்னு ஹாஸ்பிடல்ல சொன்னாலும் அவளை என் கணவர் தான் கொலை செஞ்சிருக்கனும்னு ஒரு உள்ளுணர்வு எனக்கு. இவர் எந்தவித சடங்கும் செய்யலை. காஞ்சனாவோட அண்ணனை எப்படியோ சரிக்கட்டிட்டார் போல.  பிள்ளைங்களை காஞ்சனாவோட அண்ணன் எடுத்து போய்  வளர்ப்பதாய் முடிவானது. 

1996 டிசம்பர் 23: இவ்வளவு நாள் கழிச்சு கடவுள் எனக்கு அருள் கிடைச்சது. நான் முழுகாம இருக்கேனாம். டாக்டர் கன்ஃபார்ம் பண்ணிட்டார். தாயாகப்போகும் சேதி தெரிஞ்சதும் இந்து முகம்,மனசுல நிழலாடியது. போய் பார்த்துட்டு வரனும்.

1997 ஜனவரி 1: குழந்தைளை பார்த்துட்டு வரலாம்ன்னு காஞ்சனாவோட அண்ணன் வீட்டுக்கு போனேன். அங்கே , ஐயோ என் இந்துவின் கோலம் ஐயோ ஆண்டவா நீ இருக்கியா இல்லியா? குழந்தை அழுக்கு பிடிச்ச டிரெஸும், உடலெங்கும் அழுக்கும் பிசுக்கு பிடிச்ச தலையுமா பார்க்கவே கண்றாவியான் கோலத்தில், சின்னஞ்சிறிய குழந்தை வீட்டை பெருக்கிகிட்டு இருக்கு அவ மாமி தூங்குறா. சின்னதுக்கு உடம்பு சரியில்லை. ஜுரத்துல இருக்கு. என்னை கண்ட்து இந்து அம்மான்னு ஓடி வந்து என் காலை கட்டிக்கிச்ச்சு. இதுக்கொரு முடிவு கட்டாம விடுறதில்லைன்னு மனசுல நினைச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்தேன். 

1997 ஜனவர் 2: அப்பா அம்மா மாமியார், மாமனார் எல்லாரையும் கூப்பிடு பஞ்சாயத்து வச்சேன். இனி இவர் கூட வாழ மாட்டேன்னு சொன்னேன். டைவர்ஸுக்கு அப்ளைக்கு பண்ண போறேன். ஐயோ கவுரவம் போயிடும்ன்னு சொல்லி கெஞ்சுனாங்க. ஆனால், அவங்க நினைப்புலாம் என் மீது இருக்கும் ஐம்பது லட்சம் சொத்து மேலதான் இருக்குன்னு எனக்கு தெரியும். 

சரி நான் டைவர்ஸ் பண்ணலை. ஆனால் அந்த ரெண்டு குழந்தைகளை நான் தான் வளர்ப்பேன்.  இல்லாட்டி என் வயத்துல வளர்ற உங்க பையனோட கருவை கலைச்சுடுவ்வேன்னு மிரட்டினேன். வழிக்கு வந்து ஒத்துக்கிட்டாங்க. நாளைக்கே போய் பாப்பாக்களை கூட்டிக்கிட்டு வந்துடுறோம்ன்னு சொல்லிட்டாங்க. 

1997 ஜனவரி 4: அப்பா அம்மா முதல்ல முரண்டு பிடிச்சங்க. யார் பெத்த பிள்ளையையோ நீ ஏன் வளர்க்கனும்? உனக்கென்ன தலையெழுத்து?  பெத்தவனே சும்மா இருக்கான்னு திட்டினாங்க. இதுலாம் வேண்டாத வேலைன்னு திட்டினாங்க. இருந்தாலும் என் பிடிவாதம் கண்டு குழந்தைகளை கூட்டி வந்துட்டாங்க. 

1997 மார்ச் 6: இந்துவும் சின்னது சரஸ்வதியும் இப்போ என் அப்பா அம்மாகிட்ட நல்லா ஒட்டிக்கிட்டதுங்க. அப்பாவும், அம்மாவும் அதுங்க, அழகுலயும், சுட்டித்தனத்துலயும் ஈர்க்கப்பட்டு ரெண்டுத்தையும் பேத்திங்களாக ஏத்துக்கிட்டார்.

1997 நவம்பர் 1 - ரொம்ப நாள் வேண்டிய வரம் இன்று கிடைத்தது. ஆண் பிள்ளையால் ஆசிர்வதிக்கப்பட்டேன். ஆம், எனக்கு ஆண் பிள்ளை பிறண்ட்து. அவன் அப்படியே அவங்கப்பா ஜாடையில கறுப்பா, சுருட்டை முடியோட பிறந்தான். கறுப்பா இருக்குறது மனசுக்கு சங்கடமா இருந்தாலும்..., ஒருவேளை சிவப்பா அழகா இருந்திருந்தால் என்னை சந்தேகபட்டிருப்பாங்களோ!? அதனாலதான் ஆண்டவன் எனக்கு இப்படி அருளினானோ!

2007 பிப்ரவரி 12 - பல கஷ்டங்கள் இருந்தாலும் பிள்ளைகள் முகம் பார்த்து ஆறுதல் அடைகிறேன். பிள்ளைகள் எனக்கு அமைந்து விட்டார்கள். இனி என் வாழ்வில் பொற்காலமே. இன்று காலை தூங்கி விழிக்கும்போதே இந்துக்குட்டி வாயோரமும் கசிந்து தலையணை முழுக்க ரத்தம் காய்ந்து போயிருந்தது. இன்று ஆஸ்பிட்டலுக்கு கூட்டி போனேன். டெஸ்ட்லாம் போர்க்கால அவசரத்துல எடுக்கப்பட்டது.இதயத்தில் பிரச்சனை என்றார்கள். இது ஜெனிட்டிக் சம்பந்தப்பட்டது என்று
டாக்டர் கூறினார். உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் மருந்தை தவறாமல்
எடுத்துக்கனும். அதுக்கு 20,000க்கு மேல் சொன்னாங்க. என் கணவர் - அதான்
உயிருக்கு ஆபத்தில்லைன்னு சொல்லிட்டாங்களே.  நான் பைசா தரமாட்டேன் னு சொல்லிட்டாங்க. அப்படின்னாலும் பரவாயில்லை. எனக்கு கடனா தாங்க. நான் திருப்பி தந்துடறேன்னு  வட்டிக்கு கடன் வாங்கி பாப்பாக்கு மருந்து வாங்கி குடுக்குறேன். அவ நல்லா இருந்தால், எனக்கு அதுவே போதும்.

2009 ஜனவரி 17 - என் கணவர்க்கு உடல் நிலை சுகம் இல்லை.. படுத்த படுக்கை ஆகிட்டார்.. பக்க வாதம்.. டாக்டர் வந்து பார்த்துட்டு ட்ரீட்மெண்ட் கொடுத்தும் நோ யூஸ்.. அது போக பல பெண்களிடம் போனதால் மற்ற வியாதிகளும்.... 

2011 மார்ச் 8 - இன்னைக்கு பெண்கள் தினம்.  குமரவேல் என் பள்ளி பருவ காதலனை பார்க்கனும்னு தோணுச்சு.. அங்கே இங்கே அலைஞ்சு அட்ரஸ் கண்டு பிடிச்சேன்.. அவன்  நெம்பருக்கு ஃபோன் பண்ணி என் அட்ரஸ் சொன்னேன்.. வரச்சொன்னேன்.. 


2011 மே 12 - நான் செய்யறது தப்பா? ரைட்டா?ன்னு தெரியல.. ஆனா என் மனசாட்சியை திருப்திப்படுத்த முடிவு செஞ்சேன்.. குமரவேல் வந்தான்.. படுத்த படுக்கையா கிடந்த என் கணவன் முன்னால நான் குமரவேல் கூட.... என் கண் முன்னால என் கணவர் தன் அண்ணி கூட என்ன செஞ்சாரோ அதை நான் செஞ்சேன்.. அப்போ அவர் கண்கள்ல தெரிஞ்ச இயலாமை , கோபம் எனக்கு குரூர திருப்தியை குடுத்துது.. 


2011 ஜூன் 10- என் கணவர் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார்.. ஆனா போலீஸ் அதை கொலை கேஸா பதிவு செஞ்சிருக்காங்க.. அவருக்கு ஹார்ட் அட்டாக் வர நான் தான் காரணமாம்.. கோர்ட்ல கேஸ் நடந்திட்டிருக்கு

 டிஸ்கி - திருச்சியில் நடந்த உண்மை சம்பவம் இது.. கணவனின் சில சைக்கோ செயல்கள் கண்ணியம் கருதியும் , பெண்கள் படிக்க சங்கடங்கள் கூடாது எனவும் சென்சார் செய்யப்பட்டு உள்ளது.. 

25 comments:

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

உண்மைக்கதை திகிலா இருக்கு!!ம்ம்

கேரளாக்காரன் said...

Unmayaa kaadhalichavangala yemaathunavangalukku ithu oru paadam - thotrupona kaadhalan

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே மனதை பதற வைக்கும் உண்மை கதை.....!!!

MANO நாஞ்சில் மனோ said...

மனதை கலங்கடித்த உண்மை சம்பவம் அதனால் கும்மாம போறேன்....

சசிகுமார் said...

எவ்ளோ பெருசுப்பா... நான் போயிட்டு வேலைய முடிச்சுட்டு வரேன்...

Yoga.S. said...

பகல் வணக்கம்.காலங் காத்தால(இங்க)இதப் படிச்சு..................முடியல சார்,விட்டிடுங்க!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இவ்வளவு தகவல்களா...

ஒரு டிடென்டிவ் மாதிரி அத்தனை தகவல்களையும் தொகுத்து தந்துள்ளீர்..

சுவாரஸ்யம்

சென்னை பித்தன் said...

படிக்கும் போதே மனதைக் கலங்கடிக்கும் உண்மைகதையை ஒரு குறுநாவல் போல் தந்திருக்கிறீர்கள்,சிபி.

saidaiazeez.blogspot.in said...

முதலில், போட்ட படமே ஆயிரம் கதைகளை சொல்கிறது.
பனிமூட்டத்திற்கு உள்ளே சென்றால் தான் பல விஷயங்களை பார்க்கவே முடியும்.
1993-ல் எப்படி கண்ணாடி போல சுத்தமாக இருந்த அவளின் மனதை, 2011-ல் எப்படியெல்லாம் சுக்குநூறாக உடைத்து எரிந்துள்ளார்கள்?
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் உண்டு என்பது எவ்வளவு உண்மையோ அதற்கு சற்றும் குறை இல்லாமல் கூறலாம்....
ஒவ்வொரு பெண்ணின் தவறுக்குப் பின்னும் நிச்சயம் ஓர் ஆண் இருப்பான்

RAMA RAVI (RAMVI) said...

ரொம்ப கொடுமை.பாவம் அந்தப்பெண்.

K.s.s.Rajh said...

மனதை பதறவைக்கும் சம்பவம்

அந்த கணவருக்கு தன் மனைவி இன்னும் ஒருவர் கூட இருக்கும் நிலையை கண்ணால் பார்த்தது மிகப்பெரிய தண்டனைதான்....ஆனால் அந்தப்பெண்ணின் மன நிலையும் சைக்கோ கலந்ததுதான்......

Mathuran said...

படு பயங்கரமா இருக்கே

Mathuran said...

படு பயங்கரமா இருக்கே

கும்மாச்சி said...

செந்தில் மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

இப்படியும் ஒரு உண்மை கதையா...மனது பதைக்கிறது.....

Unknown said...

பகிர்வுக்கு நன்றி அண்ணே...அந்தப்பெண் செய்தது தவறில்லை என்பதே என் கருத்து!

குரங்குபெடல் said...

என்னய்யா இப்படி கிளம்பிட்ட . . .

குறையொன்றுமில்லை. said...

இது உண்மைக்கதையா இப்படில்லாம் கூட நடக்குமா. நம்பத்தான் முடியல்லே.

ரைட்டர் நட்சத்திரா said...

நெகிழ வைக்கும் உண்மை கதை

SaRaVaNaN.N said...

SARIYAANA BADHIL ADI.

VINAI VIDHAITHAVAN VINAI ARUPPAN

Anonymous said...

மனதைக் கலங்கடிக்கும் உண்மைகதை...

கடம்பவன குயில் said...

Ennathaan unmai kathai endraalum antha pen seithathai niyaayapaduththa mudiyaathu. Kadaisiyil avalukkum alukkupiditha aval kanavanukkum vithyaasam illaamal poivittathey. Punithamaana pasu kazhivu thinnum pantriyaai palivaanguvathai ninaithu thhaanum setril vilunthu malam thinrathuthaan michchaam.

Mohammed Arafath @ AAA said...

payagaramana unmai nigalvu.naan antha pennin thariyamana mudivai paaratukiren...

enna than kettavana iruthalum than purusan thankuthan sontham nu oru pondati ninaipa.. anna ipadi ava munnadiye aduthava koooda.. anni kooda... che...

konjam naama ava nilaila iruthu ninachu partha ava phycho logicala evlo pathika patu irupanu puriyum...

enna than ava senchathu thapu nalum ava ranamaana manasuku itha vida vera valiye illa.. paavam antha penn...

REALLY FEELING SAD FOR HER :(

செல்ல நாய்க்குட்டி மனசு said...

யதார்த்தமாய் கொடுமைகளை அனுபவிக்கும் ஒரு பெண் என்ன மனநிலையில் இருப்பாளோ அதே மன நிலையில் தான் கதை நாயகி இருக்கிறாள். வேக வேகமாக ஓடியதால் பாதிப்பை அழுத்தமாக பதிய முடியவில்லை. ரெண்டு பதிவா பிரிச்சு போட்டு இருக்கலாம்