Friday, November 11, 2011

தொபுக்கடீர்னு காதல்ல விழுந்த லூசுப்பையனின் திடு திப் திடீர் ஜோக்ஸ்


1.சிம்பு மாதிரி ஒரு ஆளை நான் பார்த்ததில்லை - மல்லிகா ஷெராவ்த் # அட போம்மா, தசாவதாரம் விழாவுல இதே டயலாக்கை ஜாக்கிசானை பார்த்து சொன்ன ஆளுதானே நீங்க?

--------------------------------

2. காதலிக்கும்போது பெண்கள் அழகாக தெரிகிறார்கள், கல்யாணம் என்று வரும்போது மாப்ளையை மாற்றும்போதுதான் அவர்கள் உண்மை சொரூபம் வெளிப்படுகிறது

------------------------------------

3.ஒஸ்தி-ல் சிம்பு பாடும் வாடி வாடி பொண்டாட்டி  பாடல் யாருக்கோ விடப்படும் மறைமுக அழைப்போ? என பிரபுதேவா யோசிக்கறாராம் # கொளுத்தி போட்டிங்க்

----------------------------------

4. உடல் வலிமையில் ஆண் பெண்ணை விட பல மீட்டர் தூரம் முன்னால் இருக்கிறான், மன வலிமையில் பல கிமீ தூரம் பெண் ஆணை விட முன்னே இருக்கிறாள்

-----------------------------------

5. பெண்கள் ஹீரோயினாக நினைத்துக்கொள்வதில் தவறில்லை, ஆனால் ஏன் வில்லியாக நடந்து கொள்கிறார்கள்?

-----------------------------------6. மனிதனின் ஆத்ம சுத்தியை அவனது தனிமைப்பொழுதுகள் தீர்மானிக்கின்றன

--------------------------------

7. கேப்டன் சார், இந்தப்படத்துல கால்ல ஃபைட்டிங்க், காலாலயே செஸ் விளையாடறீங்க, எல்லாம் காலாலதான்,..

ஓக்கே டைட்டில்?

காலாயுதம் #  ரீமேக் ஆஃப் வேலாயுதம்

----------------------------------------

8. நேசிப்பவர்கள் எல்லோரும் நம்முடனே இருந்து விட்டால் நினைவின் மொழியும், பிரிவின் வலியும் நமக்கு தெரியாமலேயே போய் இருக்கும் # SMS

-----------------------------------

9. USA  ஃபாரீன் ஸ்கூல் இண்ட்டர்வ்யூவில் -

தம்பி.. உங்கப்பா யாரு?

ஃபாரீன் லேடி - டீச்சர், அவன் கிட்டே வேற ஏதாவது சிம்ப்பிள் கேள்வி கேளுங்க

---------------------------------------

10. அப்பாவின் மீது அதீத அன்பு கொண்டவர்கள் கூட காயப்படும்போது அம்மா என அரற்றுவது போல மன வலியின் போது என் உதடுகள் உன் பெயரை உச்சரிக்கின்றன

-----------------------------------
11. வருடத்தில் 350 நாட்கள் அயோக்கியர்களாய் இருப்பவர்கள் மாலை போட்டதும் சாமி ஆகி விடுகிறார்கள் # மார்கழி மாத உடனடி சாமிகள்

----------------------------------

12. பார்க் வாட்ச்மேன் - ஏம்மா, போர்டுல “குழந்தைகளுக்கு மட்டும்”னு போர்டு இருக்கே? படிக்கலை? எந்திரிம்மா.. .

பர்ச்சேஸ் மாலா  ( பிரபல பெண் ட்வீட்டர் )- . சாரி, எனக்கு படிக்கத்தெரியாது

----------------------------------

13.கடவுள் - பக்தா, சொன்னா நம்பு, கூடங்குளம் அணு உலையால் எந்த பாதிப்பும் இல்லை 

பக்தன் - சாமி, பாதிப்பு உனக்கு இல்லை, எங்களுக்கு இருக்கே?

----------------------------------


14. ரஷிய நாட்டின் ஆர்டர் ஆஃப் ஃபிரன்ட்ஷிப் விருது ஏன் ஜெ - சசிகலாவுக்கு வழங்கப்படவில்லை? டவுட்டு டேவிட்டு

---------------------------------


15. திருமண மண்டபத்தில்  பந்தி பரிமாறுவதால் கிடைக்கும் நன்மைகள் 1. நல்ல உடல் பயிற்சி 2. எல்லா ஃபிகர்ஸுக்கும் ஒரு அட்டெண்டென்ஸ் போட்டுக்கலாம். 3. நல்லவன் இமேஜ்

----------------------------------16. அதிகம் படிக்காதவர்கள் கூட உள்ளுணர்வின் எச்சரிக்கையை மெத்தப்படித்தவர்களை விட அதிகமாகவே அறிந்திருப்பார்கள்

-------------------------

17. மழலையிடம் ஏற்படும் சின்னச்சின்ன மாற்றங்களைக்கூட உடனடியாக உணர அம்மாவால் மட்டுமே  முடிகிறது

--------------------------------

18. விளம்பர வாசக மிஸ்டேக்கால ஒரே நாள்ல ஐடியா செல்ஃபோன் சிம் பல லட்சம் வித்துடுச்சாம் - அந்த விளம்பரம் - AN IDEA CAN CHANGE YOUR WIFE @கற்பனை

------------------------------------

19. உன் கிட்டே பேண்டேஜ் இருக்கா?

ம், எதுக்கு? 

உன்னிடம் அன்பு வெச்சப்போ தொபுக்கடீர்னு காதல்ல விழுந்தேனா? அப்போ அடிபட்டுது # காதல் கடலை

-------------------------------------

20. மனிதன் இறந்ததும் பிணம் என அருவெறுப்புக்கொள்பவர்கள் விலங்குகள், பறவைகள் இறந்தால் மட்டன், சிக்கன் என கொண்டாடுகிறார்கள் # சைவம் ராக்ஸ்

----------------------------------------

டிஸ்கி- இன்னைக்கு தம்பி வெட்டோட்டி சுந்தரம், நான் சிவனாகிறேன்,  கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் மழை போன்ற தமிழ் படங்களும், இம்மார்ஷல், டின் டின் போன்ற 2 இங்கிலீஷ் படங்களும் ரிலீஸ் ஆகுது.. 5 படம் , ஐ ஜாலி .. பொழுது போகிடும்

24 comments:

ராஜி said...

4th tweet romba correct cp sir

Egos Eno said...

Watch Sourashtra First Movie egos eno Trailer
Thank You
http://www.youtube.com/watch?v=x60jdgLve70

Unknown said...

அண்ணே வணக்கம்...

8. நச்

9. ஹிஹி

10.பார்ரா

13. சாமியேய்!

15. நிறைய கிடைச்சிருக்கு எனக்கு ஹிஹி!

20. மவனே பிச்சி புடுவேன்...

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

K.s.s.Rajh said...

3,7,14,19 அருமை

இன்னைக்கு அஞ்சலி படம் ரிலீஸ் ஆகுதா அட எங்க ஊரில் பாக்க முடியாதே.....

வவ்வால் said...

சிபி,

12 அஹ் பார்த்தா நிறைய அனுபவம் போல தெரியுதே :-)) முதலில் அவன எழுத்திருக்க சொன்னா தானே அவள் எழுதுந்திருப்பா? எப்படி லாஜிக்!

சாரி எனக்கு தமிழ் தெரியாதுனு சொல்லி இருக்கணும்!(அப்படித்தானே எல்லாம் உதாருவது)

//6. மனிதனின் ஆத்ம சுத்தியை அவனது தனிமைப்பொழுதுகள் தீர்மானிக்கின்றன//

ஆத்ம சுத்தியை வச்சு ஆணி அடிக்க முடியுமா?

//1.சிம்பு மாதிரி ஒரு ஆளை நான் பார்த்ததில்லை - மல்லிகா ஷெராவ்த் # அட போம்மா, தசாவதாரம் விழாவுல இதே டயலாக்கை ஜாக்கிசானை பார்த்து சொன்ன ஆளுதானே நீங்க?//

அத சொல்ற மாடுலேஷன்ல இருக்கு மேட்டர்! அது வேறு,இது வேறு ,அது உயர்வு,இது உயர்வுநவிழ்ச்சி அணி!

மூ.ராஜா said...

நன்று

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காலாயுதம்..
சூட்டிங் எப்ப ஆரம்பிக்கிறது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

திடீர் ஜோக்ஸ்...

உம் ஆட்டத்தில் இது புதுவிதமா இருக்கு...


சரி...
சினிமாவுக்கு கிளம்பியாச்சா...


தம்பி வெட்டாத்தி சுந்தரம்..
அல்லது
நான் சிவனாகிறேன்...

வெளங்காதவன்™ said...

:)

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் அருமை அண்ணே...

ஆண் பெண் மனசு...

படிக்கத் தெரியாது

ஜெ-சசி விருது என எல்லாம் கலக்கல்...


அப்போ இன்னைக்கு மாலை நம்ம அஞ்சலி நடித்த வெட்டோத்தி சுந்தரம் பட விமர்சனத்தை எதிர்பாக்கலாமா?

ராஜி said...

பெண்கள் ஹீரோயினாக நினைத்துக்கொள்வதில் தவறில்லை, ஆனால் ஏன் வில்லியாக நடந்து கொள்கிறார்கள்?
>>
அடி பலமா?

rajamelaiyur said...

//கேப்டன் சார், இந்தப்படத்துல கால்ல ஃபைட்டிங்க், காலாலயே செஸ் விளையாடறீங்க, எல்லாம் காலாலதான்,..

ஓக்கே டைட்டில்?

காலாயுதம் # ரீமேக் ஆஃப் வேலாயுதம்
//
கலக்கல் ..கலக்கல் ..கலக்கல் ..

சக்தி கல்வி மையம் said...

அந்த எட்டாவது செம.. மாப்ள..

சசிகுமார் said...

பொழுது போகிடுமா இல்ல பதிவு போகிடுமா....

கும்மாச்சி said...

செந்தில் வரிசையாக பட விமர்சனம் எதிர்பார்க்கலாம்.

பாஸ் அப்படியே படத்துக்கு லிங்க் அனுப்புங்க.

Yoga.S. said...

காலை வணக்கம்!பதினொன்று!பதி னொன்று!பதினொன்று வாழ்த்துக்கள்,அஞ்சு படத்தையும் ஒரே நால்ல பாத்துட்டு கலந்துகட்டி கமெண்டு போட்டு கலந்துடாதிங்க!ஹி!ஹி!ஹி!!!!

குரங்குபெடல் said...

"ரஷிய நாட்டின் ஆர்டர் ஆஃப் ஃபிரன்ட்ஷிப் விருது ஏன் ஜெ - சசிகலாவுக்கு வழங்கப்படவில்லை? டவுட்டு டேவிட்ட "


Auto Attack . . .

MANO நாஞ்சில் மனோ said...

அந்த பதிமூணு, சிரிப்பும் வேதனையும் முடியலடா சாமீ...

MANO நாஞ்சில் மனோ said...

ஆமாம்ய்யா அம்மானா அம்மாதான், குழந்தை வளர்ச்சியை சரியாக கவனிப்பது தாயை விட்டால் வேற யார் இருக்கா...?

MANO நாஞ்சில் மனோ said...

பந்தி பரிமாறி ஜொள்ளு விட்டுட்டு எப்பிடி போட்டுவிடுது பாருங்க கழுதை ஹி ஹி...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

! ல் க க் ல க

செல்ல நாய்க்குட்டி மனசு said...

மனோ சொல்வதை நான் வழிமொழிகிறேன், ஆனா சிபி ரொம்ப நல்ல பையன் தான் செய்யிற வம்பை எல்லாம் தானாவே சொல்லிடுவார். நம்ம அவரை கும்மினா மட்டும் போதும்

துரைடேனியல் said...

Kathamba Saatham...
m....m...
Rusiyaathaan irukku.

Vote potachu.