Tuesday, November 01, 2011

பிரபல பெண் பதிவர் மணல் கயிறு ரீமேக்கில் நடித்தால்..ஒரு ஜாலி கற்பனை


விசுவுக்கும் சரி, எஸ் வி சேகருக்கும் சரி மணல் கயிறு ஒரு மறக்க முடியாத காமெடி எண்ட்டர்டெயினர் படம் தான்..  அந்தப்படத்துல ஹீரோ பென் பார்க்கப்போறப்ப சில கண்டிஷன்ஸ் போட்டு அலப்பறை செய்வாரு.. .. கடைசில எந்த கண்டிஷனுக்குமே ஒத்து வரத ஃபிகரை மேரேஜ் பண்ணி  அவஸ்தைப்படுவாரு...அந்தப்படத்தை இப்போ நாம ரீ மேக் பண்ணப்போறோம்.. பொதுவா ஒரு படத்தை உல்டா பண்றப்ப அறிவில்லாதவன் அப்படியே ஜெராக்ஸ் எடுப்பான்,கொஞ்சம் மூளைக்காரன்  சில சீன்கள் எக்ஸ்ட்ரா சேர்த்துவான்.. அதாவது 5 டூயட், 6 ஃபைட், கொஞ்சம் மொக்கை காமெடி இப்டி.. இன்னும் கொஞ்சம் டெவலப் ஆனவன் ஹீரோவை ஹீரோயின் ஆக்குவான்.. வில்லனை வில்லி ஆக்குவான்.. கேட்டா மூலக்கதை ஜஸ்ட் ஒரு இன்ஸ்பிரேஷன்தான் அப்டினு ஒரு சாக்கு சொல்வான்.. நாம இந்த மணல் கயிறு ரீமேக்ல ஒரு பெண் மாப்ளை தேடும் படலமா மாத்தப்போறோம்..


ஹீரோயின் பற்றி சில குறிப்புகள்

1. இவர் ஒரு பிரபல பெண் ட்வீட்டர்.. (எதிர்காலப்பதிவரும் கூட) சொந்த (நொந்த!!?) ஊர் கோவை (கோவக்காரரா? கோவைக்காரரா? ) இரண்டு எழுத்துக்காரர்.. .(அதாவது ட்விட்டர்ல)

2. யார் வம்புக்கும் போகாதவர், தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர்.. 

3.  ஆண்களுக்கு சாதகமாக பேசுவார்.. பி காம் படிச்சிருக்காருன்னு நினைக்கறேன் அதனால ரொம்ப காம் (CALM TYPE) டைப்

ஹீரோயின் இண்ட்ரொடக்‌ஷன் போதும்,,, கதை..” அப்பா, எதுக்கு என்னை வரச்சொன்னீங்க?”


” இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்கம்மா”


” அப்பா, நீங்க எந்தக்காலத்துல இருக்கீங்க? அது எல்லாம் 1998 உடன் முடிஞ்ச விஷயம், இப்போ நடக்கறது 2011.. மாப்ளை பார்க்க பொண்ணு வீட்டுக்காரங்க போறதுதானே வழக்கம்.. “” அய்யய்யோ.. இதென்னம்மா? புது வெடி குண்டா இருக்கு?”

“ இல்லப்பா.. நாமதான் மாப்ளை வீட்டுக்குப்போறோம்..அதுக்கு முன்னால எனக்கு எப்படிப்பட்ட மாப்ளை வேணும்னு  சொல்லிடறேன்.

கண்டிஷன் நெம்பர் 1 - மாப்ளை படிச்சிருக்கக்கூடாது, ஆனா கை நிறைய சம்பளம் வாங்கனும் ( ஏன்னா, படிச்ச மாப்ளை திமிரா பேசுவான்)

கண்டிஷன் நெம்பர் 2 -  மாப்பிள்ளை சைவமா இருக்கனும், ஆனா அசைவமும் சமைக்கத்தெரிஞ்சிருக்கனும் ( ஏன்னா நான் அசைவம், அவரும் அசைவமா இருந்தா குடும்ப செலவு ஓவர் ஆகிடும்)

கண்டிஷன் நெம்பர் 3 - மாப்பிள்ளைக்கு டான்ஸ்ஸை ரசிக்கற ரசனை வேணும் ( ஏன்னா நான் அப்பப்ப கோபத்துல ஆட்டமா ஆடுவேன்)

கண்டிஷன் நெம்பர் 4 - மாப்பிள்ளைக்கு தமிழ் தவிர வேற எந்த மொழியும் தெரிஞ்சிருக்கக்கூடாது  ( ஏன்னா எனக்கும் எதுவும் தெரியாது)

கண்டிஷன் நெம்பர் 5 -  மாப்ளை யார் கண்ணுக்கும் தெரியக்கூடாது ( ஏன்னா நான் ரொம்ப பொஸஸிவ் டைப், என்னைத்தவிர வேற யாரும் அவரை பார்க்கவே கூடாது )

கண்டிஷன் நெம்பர் 6 - நான் செத்துட்டா உடனே அவரும் என் கூட உடன் கட்டை ஏறிடனும். ( இல்லைன்னா அவர் வேற ஒரு கட்டையை கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருப்பார்.. அதுக்கு விடலாமா?)

கண்டிஷன் நெம்பர் 7 -  மாப்ளை வாய் பேச முடியாதவரா இருக்கனும் அல்லது காது கேட்காதவரா இருக்கனும் ( ஏன்னா நான் ஓவரா பேசுவேன்.. ஒரு வீட்டுக்குள்ள ஒரு வாயாடி தான் இருக்கனும்)

கண்டிஷன் நெம்பர்  8  -  ரொம்ப முக்கியமான கண்டிஷன் , மாப்ளை இண்ட்டர்நெட் நாலெட்ஜ் இல்லாதவரா இருக்கனும்.. (ஏன்னா நான் நாள் பூரா நெட்ல இருப்பேன், அவரும் அப்டியே இருந்தா வீட்டு வேலை எல்லாம் யார் பார்ப்பாங்க? அதான்.. )மாப்ளை வீட்டுக்கு போறாங்க..

அறிமுகப்படலங்கள், வரவேற்பு ஃபார்மாலிட்டி பேச்சுக்கள் முடிந்த பின்...

”மாப்ளையை வரச்சொல்லுங்க, என் பொண்ணு அவர் கிட்டே பேசனுமாம்.. ”

“இதோ, இப்போ வரச்சொல்றேன்.. அவன் கூட பொண்ணு கிட்டே ஏதோ பேச ஆசைப்பட்டான்.. “
”சாரி.. சம்பந்தி.. யார் பேசுனாலும் என் பொண்ணுக்கு பிடிக்காது.. அவ கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும்.. “


மாப்பிள்ளையும், பொண்ணும் தனியே தன்னந்தனியே.....

” தம்பி.. நீ எது வரை படிச்சிருக்கே?”

”என்னது? தம்பியா?”

”உன் பேரு தம்பிதுரை தானே? அதை சுருக்கிட்டேன்..”

”சரி.. என்ன மரியாதை இல்லாம நீ , வா, போ அப்டி கூப்பிடறீங்க?”

”மரியாதைங்கறது மனசில இருந்தா போதும்.. உதட்டளவில் தேவை இல்லைன்னு நினைக்கறவ நான்”

“பார்க்கறவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா?”

” மத்தவங்களுக்காக வாழ்ற வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா?”

“சரிங்க.. வம்பு எதுக்கு... எப்படியோ கூப்பிடுங்க.. “

”அப்போ நான் வம்புக்காரியா?”

”அய்யோ, நான் அப்டி சொல்லவே இல்லீங்களே.. சரி, நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன்.. நான் எட்டாங்கிளாஸ் வரை படிச்சிருக்கேன். “

”வெரிகுட்.. உன்னை மாதிரி கூமட்டையனைத்தான் தேடிட்டு இருந்தேன்.. உனக்கு ஃபைட் போடத்தெரியுமா?”

”ச்சே.. ச்சே.. நான் எதுக்குங்க உங்க கூட ஃபைட் போடறேன்..? சந்தோஷமா வெச்சு காப்பாத்துவேன்..

என்னது? வெச்சு காப்பாத்துவியா? நான் என்ன சின்ன வீடா? என் கூட ஃபைட் போடறதுக்கு இல்லை.. ரோட்ல நாம ஜோடியா போறப்ப 4 ரவுடிங்க வர்றாங்க, அவங்களை அடிச்சு விரட்டுவியா?”

”என்னங்க இது அநியாயமா இருக்கு.. நான் என்ன தளபதி தினேஷா? ஃபைட் எல்லாம் போட.. நீங்க எதிர்பார்க்கறது எல்லாம் ஓவர்ங்க..”

” டான்ஸ் ஆடத்தெரியுமா? பாடத்தெரியுமா?ன்னு எல்லாம் நீங்க கேட்கறீங்களே.. டிட் ஃபார் டாட் அதாவது பழிக்குப்பழி..”

“ யார் மேலயோ இருக்கற கோபத்தை ஏன் என் மேல காட்றீங்க?”

” உனக்கு லேடீஸ் சைக்காலஜியே தெரியாதா? எவன் இளிச்சவாயனோ அவன் கிட்டே த்தானே துள்ள முடியும்..?

” அவ்வ்வ்வ்வ்வ்”

” சரி.. உனக்கு சமைக்கத்தெரியுமா?”

”ஓ... எல்லா அயிட்டங்களையும் பிரமாதமா சமைப்பேங்க.”

” என்னது? அயிட்டமா?”

”அதாவது வகைகள்”

”ம்.. அது.. எனக்கு டபுள் மீனிங்க்ல பேசறது கொஞ்சம் கூட பிடிக்காது.. என்ன பேசப்போறியோ அதை முதல்லியே ரிகர்சல் பார்த்துட்டு அதுல டீசண்ட்டான அர்த்தம் வருதான்னு பார்த்துட்டு அப்புறமா பேசு..”

” ஓக்கேங்க.. உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க.. “

” அது முக்கியம் இல்லை.. உன்னை எனக்கு பிடிக்கனும்.. அதுக்கு நீ எனக்குப்பிடிச்ச மாதிரி நடந்து காட்டனும்.. “

” அடடா.. எனக்கு ஒரே மாதிரி தாங்க நடக்கத்தெரியும்.. ரஜினி நடை.. சிவாஜி நடை இதெல்லாம் தெரியாதுங்க.. “

” ஜோக்? இதுக்கு நான் சிரிக்கனுமா? ஒண்ணு சொல்றேன்.. எனக்கு இந்த வழியறது.. கடிக்கறது.. மொக்கை போடறது இதெல்லாம் பிடிக்காது.. “

“சரி.. உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்க”

” என்னை எதிர்த்து யார் பேசினாலும் எனக்குப்பிடிக்காது.. அதே சமயம் ஆமாம் சாமி போடற ஆளுங்களையும் பிடிக்காது.. “

” குழப்பறீங்களே.. “

” ஆர்கியூமெண்ட் பண்றதுன்னா எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி..”

“அதுக்கு நீங்க வக்கீலா போய் இருக்கலாமே?”

”இப்போதான் சொன்னேன்.. என்னை எதிர்த்து கேள்வி கேட்டா பிடிக்காதுன்னு.. வக்கீலா போனா கறுப்பு கோட், வெள்ளை சட்டை போடனும்.. என்னை யார் கண்ட்ரோல் பண்ணூனாலும் எனக்கு பிடிக்காது.. “

”அய்யய்யோ. அப்போ டிராஃபிக் ரூலை மதிக்க மாட்டீங்களா?”


” எனக்கு எந்த ரூல்ஸூம் பிடிக்காது.."
"அம்மா தாயே.. நான் ஒண்ணே ஒண்ணு சொல்லவா?”

“ ம், சொல்லு”

“ என்னை விட்ரு..!!!!!!!!”

அவர் ஓடுகிறார்.. பின்னணியில் கமல் -ன் விக்ரம் பட பாடல் ரீ மிக்ஸில்

தம்பி.. ஜும்ஜ்ஜுசுகும் , ஜும்ஜ்ஜுசுகும்  நீ என்னப்பார்த்தவன், நான் உன்னைப்பார்த்தவள்.. உன் கைகளால் மாலையை நீ சூடிடு.. தம்பி... ச்சும் ச்சுசுகும் ச்சும்ச்சுசுகும்.. தம்பி..

டிஸ்கி - 1 
இது ஆணாதிக்கப்பதிவோ, பெண்ணாதிக்கப்பதிவொ அல்ல, ஜஸ்ட் காமெடி & மொக்கை ஆதிக்கப்பதிவு..

டிஸ்கி - 2 குறிப்பிட்ட அந்தப்பெண் பதிவர், அவங்கம்மா, அப்பா, தாத்தா, பாட்டி , அம்மம்மா, அப்பப்பா.. உஷ் அப்பா.... அனைவரிடமும்  பதிவின் ப்ரீவ்யூ காட்டி அப்ரூவல்  வாங்கி பின் போடப்பட்டுள்ளது..38 comments:

கோவை நேரம் said...

மாலை வணக்கம் ...ஹீரோ யாருங்க ...

கோவை நேரம் said...

சாரி ..ஹீரோயின் யாரு..?

கோவை நேரம் said...

இனி வரும் காலம் இப்படிதான் இருக்கும் போல ...

Unknown said...

கந்த சஷ்டி !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் ஹீரோயின்னு சும்மா புரளிய கெளப்பிவிட்டுட்டு.... கடைசில அதுக்கு டிஸ்கி வேற....? ஏன் இந்த கொலவெறி?

பால கணேஷ் said...

ரீமிக்ஸ் செம... எல்லார் கிட்டயும் பர்மிஷன் வாங்கின நீஙக ஹீரோயின் யார்னு சொல்ல பர்மிஷன் வாங்கலையா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கண்டிசன்களை பார்த்தா இது எங்கேயோ அல்ரெடி நடந்த மாதிரி தெரியுதே?

சேகர் said...

ada ungaluku yen thaan ipdi thonutho..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hahaa hehe hu hu hey hey

தமிழ்வாசி பிரகாஷ் said...

டிஸ்கி போட்டா நம்பிருவோமா? யாரோ கதையை சுட்டு போட்டு தாளிச்சிருக்கிங்க.. ஹி..ஹி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இப்பவே கண்ணை கட்டுதே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மக்களுக்கு ஒரு நற்செய்தி...

மனோ ஒரு பொண்ணுகிட்டே சாட்ல ரொமான்ஸ் பண்ணிகிட்டு இருக்காரு..

இதை யார்கிட்டேயும் சொல்லாதே சிபி..
இந்த விஷயம் நமக்கு ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியனும்...

rajamelaiyur said...

//

Blogger கோவை நேரம் said...

மாலை வணக்கம் ...ஹீரோ யாருங்க ...
//
சி .பி தான்

settaikkaran said...

எட்டுவிதக் கட்டளைகள் இட்டு ஒரு லாபமில்லை
கிட்டுமணி போலே ஒரு மக்குமணி யாருமில்லை!
-----மணல்கயிறு பாட்டு ஞாபகத்துக்கு வந்திச்சு! :-)

Shanmugam Rajamanickam said...

ஓகுகூ..... ஹி ஹா... ஹு..... சூப்பரு...........

சக்தி கல்வி மையம் said...

ஹா, ஹூ, ஹேய்,..ஹி..
சூப்பர்.,

சக்தி கல்வி மையம் said...

இந்தப் பதிவிக்கான உங்கள் உழைப்பு அபாரம்., பாராட்டுகள்..

Anonymous said...

2மச்...

MANO நாஞ்சில் மனோ said...

டேய் ஏண்டா முதல்லயே நீ சொல்லவே இல்லை, இப்பிடித்தான் கல்யாணம் கட்டிகிட்டு முழிக்கிறாயாக்கும் ராஸ்கல் சொல்லவே இல்லை, அதானே பார்த்தேன் நெல்லையில வச்சி கால் நிலை கொள்ளாமல் நின்னியே அது இதுக்குத்தானா கொய்யால....

MANO நாஞ்சில் மனோ said...

சொம்பு அண்ணனுக்கு படு பயங்கரமா நசுங்கி இருக்குற மாதிரி தெரியுதே....!!!

MANO நாஞ்சில் மனோ said...

டிஸ்கி'ல பில்டப்பு வேற மூதேவி...

சென்னை பித்தன் said...

இது வேறயா?

RAMA RAVI (RAMVI) said...

ஆஹா..எப்ப இந்த மாதிரி ஒரு காலம் வரப்போகுது??

RAMA RAVI (RAMVI) said...

அந்த 8 கண்டீஷன் சூப்பர்.....

K.s.s.Rajh said...

உங்கள் படம் பிரமாதமாக இருக்கு ஆமா..இது சொந்தக்கதையா?ஹி.ஹி.ஹி.ஹி......

K.s.s.Rajh said...

ரொம்ப உஷாரா இருக்கனும் பொண்ணுங்க எல்லாம் எதிர்காலத்தில் இப்படி கண்டிசன் போட வெளிக்கிட்டால்.........அவ்......

Yoga.S. said...

பின் போடப்பட்டுள்ளதா?அட்ரா சக்க....!!!

.

கடம்பவன குயில் said...

Unga kathaya oormaatri permaatri neenga post pottaal naanga nambiruvoma??

Ippadiyellam condition pottu ungala lock panniya ammanikku parattuvilaave edukanum. Unga sonthakatha nalla thaan iruku

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Menaga Sathia said...

கலக்கல்

ILA (a) இளா said...

அட்டகாசமான பதிவு

chinnapiyan said...

என்னே ஒரு கிண்டல்! என்னே ஒரு நக்கல்!! அருமை அருமை.இது போல் இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன்.அந்த பெண் கீச்சர் யாரென்று நீங்கள் சொல்லவும் வேண்டுமோ? ஆனால் திபேத்திய "லாமா" இல்லை.

Unknown said...

இதுக்கு பேரு காமடி! நான் சிரிக்கணுமா...ஹிஹி இப்படியும் கேக்கலாம்ல!

நிரூபன் said...

அண்ணே,
இம்புட்டு கண்டிசன்கள் போடுறாங்களே..

இதில உள்ள எல்லாக் கண்டிசனுக்கும் நான் சரியான ஆளா இருப்பேன் என்று சொன்னா கோவிச்சுக்க மாட்டாங்களா...

நானும் பொண்ணு தேடிக் கிட்டு அலைகிறேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சும்மா ஜாலி கமெண்ட்.
சீரியஸ் ஆகிடாதீங்க.

HBA said...

எல்லா கன்டிஷனும் சூப்பரப்பு.

கன்டிஷன் 4 ம் 7ம் முரனாக இருக்கிறதே!

அன்புடன்
HBA.

ம.தி.சுதா said...

சீபி என்னை ரொம்பவே குழப்பீட்டிங்க சரி சரி மலியட்டும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

MURUGANANDAM said...

A brilliant imagination which creates non stop laughing and a total relaxation.