Friday, November 25, 2011

மனிதர் குல மாணீக் பாட்ஷா!!! ( ஜோக்ஸ்)


1.தலைவர் ஏன் கோபமா இருக்காரு?

மனிதர் குல மாணிக்கமே-ன்னு வர்ணிக்காம ஒரு ஆள் மனிதர் குல மாணிக் பாட்ஷாவே அப்டினு வர்ணிச்சுட்டாராம்

--------------------------------------------

2. கறுப்பா இருக்கற நான் சிவப்பா இருக்கற பொண்ணை ரசிக்கறது ஓக்கே, சிவப்பா இருக்கற பசங்களும் ஏம்ப்பா சிவப்பா இருக்கற பொண்ணையே ரசிக்கறீங்க? #Y Y

-----------------------------------------

3. அத்தான், நான் இப்போ சண்டை போடற மூடுல இருக்கேன், நீங்க ஃபிரீயா இருக்கீங்களா?

 ராம்சாமி - சாரி டியர்.. இப்போதான் சரக்கடிச்சென் செம டைட், குட் நைட்


-----------------------------------------------

4. ஐ ஹேட் யூ ( I HATE YOU) என்றாள்.. ஒண்ணும் பிரச்சனை இல்லை , ஐ ஹேடு யூ ( I HAD YOU )  என்றேன் # காதல் ஜாலம் @ வார்த்தை ஜாலம்

----------------------------------------

5.  சி.பி - டியர், உன் உதடு மட்டும் எப்படி இவ்வளவு ரத்தச்சிவப்பா இருக்கு?

டேய், லூஸு.. சிவப்புக்கலர்ல லிப்ஸ்டிக் போட்டா அப்டித்தான் இருக்கும்

-----------------------------------
6. நீ தான் கைப்புள்ள அப்டிங்கறதை நான் எப்டி நம்பறது?

விக்கி தக்காளி - என் கூட எந்த ஃபிகர் பழகுனாலும் கைல ஒரு புள்ளயை குடுத்துடுவேன்

-------------------------------------

7. லேப் டாப் மனோ - மாமா, உங்க பொண்ணுக்கு சீரா என்ன தருவீங்க?

மாப்ள.. உங்களுக்குப்பொண்ணு தர்றதே பெரிசு.. இதுல சீர் செனத்தி வேற வேணுமா?

---------------------------------------

8.தலைவரோட பையன் ஜொள்ளு பார்ட்டி போல..

ஏன்?

மகளிர் அணிக்கு தலைவர் ஆகிடவா?ன்னு கேட்கறாராம்.

-----------------------------------------

9. இன்னும் 10 வருடங்கள் மட்டும் தான் அரசியலில் நான் இருப்பேன்னு  தலைவர் சொல்லிட்டாரே?

ம்க்கும், ஆல்ரெடி அவருக்கு 98 வயசாகுது...

---------------------------------------------

10.  தமிழ்வாசி பிரகாஷ் - என் காதலிக்கு சிரிச்ச முகம்..

 அடடே.. ம் ம் ..

ஃபேஸ் பிக் அட்ரஸ் கேட்டாக்கூட [email protected] -னு அட்ரஸ் சொல்றாளே?

----------------------------------


 11. அவர் எடக்கு மடக்கு ஏகாம்பரம்னு எப்டி சொல்றே?


காக்காவுக்கு சோறு வைக்கறப்ப காகா-னு கத்தறோம், ஆனா பூனைக்கு பால் வைக்கறப்ப ஏன் மியாவ் ம்யாவ்-னு  கத்தறதில்லை?னு கேட்கறாரே?

---------------------------------------------------

12. எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மன்னர்  நோக்கு வர்மம் கற்றும் பயன் இல்லை..

அப்போ அவர் ஒரு பேக்கு வர்மர்-னு சொல்லு

--------------------------------------

13. சதீஷ்.. தள்ளி உக்காருங்க.. பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்கும்..

ம்க்கும்.. பயந்து நடுங்க நான் ஒண்ணும் நெருப்பு இல்ல.. பருப்பு..

-------------------------------------

14.   பர்ச்சேஸ் மாலா ,சிங்கப்பூர் - காய வைக்கறதுல என் புருஷன் கில்லாடி..

அட.. உன்னையா?

ம்ஹூம்.. என் டிரஸ்ஸை... துவைச்சு காய வைச்சுடுவார்..

-----------------------------------------

15. நிரூபன் -  லவ் பண்றப்ப என் ஆளு கவரி மான் மாதிரி இருந்தா.....

அடாடா.. இப்போ..?

கவரிங்க்  மான் மாதிரி ஆகிட்டா.. அவங்கப்பன் போட்ட 30 பவுனும் போலி..

-------------------------------------------

16. டியர்.. 24 மணி நேரமும் எனக்கு உன் நினைப்புத்தான்..

 கருண் -நீ என்ன மெடிக்கல் ஷாப்பா?

-------------------------------------------------

17.  கவிதை வீதி   சவுந்தர் - மிஸ்.. நீங்க அசைவம், நான் சைவம்.. சரி வருமா?

டேய்.. லூஸு... நாம லவ் தானே பண்ணப்போறோம்? ஹோட்டலா கட்டப்போறோம்?

---------------------------------------------------------

18.  சிங்கப்பூர் சாந்தி - அத்தான்... இதோ என் கிஃப்ட்.. வீடிடோ அட்டாச்டு திசை காட்டும் கருவி..

புரியலையே.. எதுக்கு?

நீங்க எங்கே போனாலும் இது காட்டி குடுத்துடும்..

----------------------------------------------

19. சின்ன வயசுல இருந்தே நான் எறும்பு புற்று, பாம்பு புற்று பக்கம் போக மாட்டேன்..

ஏன்?

புற்று நோய் வந்துட்டா?

--------------------------------------------

20. மேடம், நீங்க எழுதற கவிதைகளை உங்க வீட்டுக்காரர் படிப்பாரா?

 சோனா - நோ நோ.. மாசம் ஆனா வாடகை மட்டும் வாங்குவார்.. ஹவுஸ் ஓனர். அவர் ஏன் படிக்கனும்?

---------------------------------------

20.  உணவு உலகம் ஆஃபீசர் - மேரேஜ் ஆகி 8 வருஷம் ஆகுது.. என் மனைவிக்கு ஒரே ஒரு டைம் தான் கோபம் வந்திருக்கு..

அடடே..

அந்த ஒரு டைம் வந்த கோபமே இன்னும் தீரலை..

-----------------------------------


 

18 comments:

Unknown said...

வெள்ளி'க்'கிழமை ராமசாமி !

Try 🆕 said...

ஹா,ஹா ,ஹா,ஹா,ஹா சில ஜோக்குகள் மொக்கையா இருந்தாலும் பல ஜோக்குள் அருமையாக இருந்தது.
நன்றி.

Unknown said...

எத்தனை வருஷம் ஆனாலும் 'அந்த' ஒரு கோவம் தீராது'தான்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நீங்க நண்பர்களுக்குள் ஒருவரைஒருவர் கலாச்சிக்கிரும் போது சந்தோஷமா இருக்குது. இந்த நட்பு என்றும் தொடரட்டும்

maithriim said...

Friday morning laughs, thanks! Amazing pictures to go along with it :-)
amas32

வெளங்காதவன்™ said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))))

இந்திரா said...

ஜோக்கெல்லாம் வழக்கம் போல செம செம..

அப்புறம்... இப்பல்லாம் ஹீரோயின் போட்டோ எதுவும் கிடைக்குறதில்லையோ????

Unknown said...

அண்ணே ஏன் இந்த கொலைவெறி...என் பொண்டாட்டி படிச்சா என்னைய போண்டா டீ ஆக்கிடுவாங்க ஹிஹி!

சசிகுமார் said...

சவுந்தர் ஜோக் செம ....

கோகுல் said...

நாடு நடுவுல நம்மாளுங்க கலாய்ச்சல் கலக்கல்.

இந்த கட்டடங்களை கட்டுனாங்களா?
ஒட்டுனாங்களா?

சென்னை பித்தன் said...

விக்கி உங்க மேல மான நஷ்ட வழக்குப் போடப் போறாரு!
கலக்கல்.

rajamelaiyur said...

அனைத்தும் அருமை .. மனோ மேட்டர் சூப்பர்
வணக்கத்துடன் :
ராஜா

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

20. ரொம்ப சின்ன கோபமா இருக்கே...

Yoga.S. said...

பாவம்,நிரூபன்!சிபியும் தான்!லிப்ஸ்டிக்??????????????????!!!!!!!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏலேய். அம்புட்டுபேறையும் கலாய்ச்சாச்சா...

இதோ மனோ வராரு இரு...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

செம ஹாட்'டு மச்சி!

துரைடேனியல் said...

Kalakkal.
TM 9.