Friday, November 18, 2011

கழகத்தை காட்டி கொடுத்தவன் ( ஜோக்ஸ்))

1.மேனேஜர் சார், எதுக்காக என்னை டிஸ்மிஸ் பண்றீங்க?

சாரி மிஸ்.. இந்த ஆஃபீஸ்ல பொண்ணுங்களுக்கு 21 வயசு வரை தான் அனுமதி # யூத்துங்கோ

-----------------------------------

2. உங்க ஆபீஸ் பிகர்களுக்கு 60 வயசு இருக்குமா?

ஆமா, 3 ஃபிகருங்க வயசையும் கூட்டுனா 60 வரும் சார்

---------------------------------

3. குழந்தைகள் தினம் என்பதை சாக்காக வைத்து என் கன்னத்தை கிள்ள நினைக்கும் ஆஃபீஸ் ஃபிகர்களை எச்சரிக்கிறேன்

--------------------------------

4. அத்தான், எங்க வீட்டுக்கு வந்தா மட்டும் டிஃபன் மட்டும் தான் சாப்பிடறீங்க, ஏன்?

அப்பத்தானே எப்பவும் என்னை தண்டச்சோறுன்னு சொல்ல முடியாது

-----------------------------------
5.நூலகம் ஹாஸ்பிடலா மாறுதே , இதுல நடிகர் விஜய்க்கும் பங்கு இருக்கு..

எப்டி?

ஆஸ்”பத்ரி” ஆகுதே?

--------------------------------------
6. . பாதயாத்திரை , ரதயாத்திரை என்ன வித்தியாசம்?


உடம்பு குறையனும்னு வாக்கிங்க் போனா அது பாதயாத்திரை, அலைச்சலா இருக்குனு ஓய்வெடுக்கனும்னா அது ரதயாத்திரை

---------------------------------

7. மேடம், ஏன் ஓவர் ஆக்டிங்க் பண்றீங்க?

சாதா ஆக்டிங்க்னா 5 லட்சம் சம்பளம் தர்ற புரொடியூசர் ஓவர்ஆக்டிங்க்னா சம்பளம் சேர்த்துதருவார்னு நப்பாசை

---------------------------------------

8. ஆண் குழந்தைகளைப்பற்றி ஏன் நீங்க கவிதையே எழுதறது இல்ல? தற்பெருமை பிடிக்காத தமிழன் சார் நான்


----------------------------------

9. மாமியார் வீட்ல மட்டும் ஏன் மாப்ளைங்க மாப்ள முறுக்கோட இருக்காங்க? 

ஸ்வீட் குடுத்துப்பாருங்க, ஸ்வீட்டோட இருப்போம்,

----------------------------

10. .எதிர் பால் ஈர்ப்பு வருவதும் , பின்  எதிர்ப்பால் ஈர்ப்பு கூடுவதும் காதல் புத்தகத்தின் தவிர்க்க முடியாத பக்கங்கள்

------------------------------------

11 . அன்பில்லாத உள்ளத்திற்கு அழகு மட்டும் இருந்தும் என்ன பயன்?

------------------------------

12. ஜட்ஜ் - இப்போ உங்க 2 பேர் கிட்டேயும் சில கேள்விகள் தனித்தனியா கேட்கப்போறேன்,

ஆ ராசா & கனிமொழி - எப்படியும் 2 பேரும் ஒரே பதில்தான் சொல்வோம்

-----------------------------

13. .அசைவம் உண்பவர்கள் எண்ணிக்கை உலகில் அதிகம் என்பதற்காக அசைவம் சாப்பிடுவது சரி என்று ஆகி விடாது

-----------------------------

14. . சார்.. நான் சென்னைக்கு புதுசு, அறிவாலயத்துக்கு எப்படி போகனும்? 

சாரி சார், நான் வழி சொன்னா கழகத்தை காட்டிக்கொடுத்தவன்னு பழி சொல்லிடுவாங்க

---------------------------------


15.ஜோசியரே!  கறுப்புப்  பணம்  எப்போ  மீட்கப்படும்...?


என்னைக் கேட்டா? பிரைம்  மினிஸ்டரை  கேளுய்யா!


விளையாடறீக்களா? அவரைக் கேட்டா உங்களை  கேட்கச் சொன்னாரே?

----------------------------------------------


16. எக்ஸாம்  ஹால்ல  ஒரே  குழப்பமான  மன  நிலைல  இருந்தேன்.


ஏன்?

பக்கத்து  சீட்ல  பக்கா ஃபிகர்..  சைட்  அடிக்கவா? காபி  அடிக்கவா?னு  டவுட்.


---------------------------------------------
17. லைப்ரரியன்  தானே  நீங்க? எதுக்கு  வெள்ளை  பேண்ட்,  வெள்ளை  சட்டை, வெள்ளை  கோட் போடறீங்க?


சொல்ல  முடியாது....  லைப்ரரிய  ஹாஸ்பிடலா  மாத்திட்டா  நான்  Dr. ஆகிடுவேனே!

-----------------------------------------


18. .ஐஸ்வர்யாராய்  எதுக்காக  தமிழ்நாடு  வர்றார்?


கூடங்குளம்  அணு உலையால  எந்த  பாதிப்பும்  இல்லைனு  சொல்லி  மக்களை  சமாதானப்  படுத்த.

-----------------------------------------


19. மேரேஜ்  ஆன ஆண்கள்  எல்லாம் இந்த  ஆட்சில  சந்தோஷமா  இருக்காங்களே, ஏன்?


போன  ஆட்சில  நடந்த  திருமணங்கள்  செல்லாது...  அப்டினு  அற்விப்பு  வரப்  போகுதாம்.


---------------------------------------


20. .என்  கணவர்மேல  நம்பிக்கை வெச்சது  தப்பா  போச்சு.

ஏன்?

நான்  ஊர்ல  இல்லாதப்ப  என்க்கு  தெரியாதுனு  நம்பி  கை வெச்சுட்டார்  என்  தங்கச்சி  மேல.


------------------------------------

டிஸ்கி - அன்லிமிட்டட் ஸ்கீமில் நெட் கனெக்‌ஷன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே என் பிளாக் ஓப்பன் ஆவதாகவும் ப்ரீ பெயிடு சிஸ்டம் வைத்திருப்பவர்களுக்கு இமேஜ், படங்கள் காரணமாக டவுன்லோடிங்க் தாமதம் ஆவதாகவும் பலர் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டதால் மாற்று வழிகளை யோசிக்கும் வரை இமேஜ் போடாமல் பதிவு போடுகிறேன்

23 comments:

Philosophy Prabhakaran said...

குட் மார்னிங் ஆபீசர்...

குரங்குபெடல் said...

Haaaa Haaa . . .

Philosophy Prabhakaran said...

உங்க ஆபீஸ்ல இருக்குற ஃபிகர்கள் உங்க ப்ளாக்கை படிப்பாங்களா... படிச்சா இன்னைக்கு உங்களுக்கு சங்குதான்...

Philosophy Prabhakaran said...

இமேஜ் இல்லாமல் பதிவா... அப்ப இனி உங்க இமேஜ் என்னாவது...?

SURYAJEEVA said...

13,14 really super

rajamelaiyur said...

//அத்தான், எங்க வீட்டுக்கு வந்தா மட்டும் டிஃபன் மட்டும் தான் சாப்பிடறீங்க, ஏன்?

அப்பத்தானே எப்பவும் என்னை தண்டச்சோறுன்னு சொல்ல முடியாது
//
ஹா ...ஹா ...ஹா ...

rajamelaiyur said...

அருமை

rajamelaiyur said...

இன்று என் வலையில்


விஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே

Unknown said...

பகிர்வுக்கு நன்றி!

மதுரை அழகு said...

14TH JOKE SUPER!

வெளங்காதவன்™ said...

:-)

Unknown said...

சிபி உங்க கன்னத்த கிள்ளுன பிகர்க்கு ஒரு 60 வயசு இருக்குமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இன்று என் வலையில்
காப்பி பேஸ்ட் பதிவர் மன்னர் மார்த்தாண்டம் VS பிரபல பதிவர்கள் PART -II

சசிகுமார் said...

மாப்ள unlimited,limited பிரச்சினை இல்லை. அவுங்க வச்சிருக்கும் Net speed Package குறைவாக இருக்கலாம். உன் பதிவுல ரொம்ப பிடிச்சதே போட்டோக்கள் தான்(அப்ப பதிவு புடிக்காதான்னு கேட்க கூடாது) அது இல்லாம கொஞ்சம் டல்லடிக்குது...

K.s.s.Rajh said...

அனைத்தும் அருமை

நீங்கள் போடும் பிகருகள் படம் பார்பதற்காகவே பல தடவைகள் உங்கள் தளத்துக்கு வருபவன் நான்(அப்ப பதிவை படிக்க வாரது இல்லையா)

இருந்தாலும் அனைத்து வாசகர்களுக்காகவும் நான் பொறுத்துக்கொள்கின்றேன் சீக்கிரம் மாற்று வழியை கண்டு பிடியுங்கள்

Lingesh said...

Joke #3 is super.

ராஜி said...

குழந்தைகள் தினம் என்பதை சாக்காக வைத்து என் கன்னத்தை கிள்ள நினைக்கும் ஆஃபீஸ் ஃபிகர்களை எச்சரிக்கிறேன்
>>>
ம்க்கும், நினைப்புதான் பொழப்பை கெடுக்குமாம்

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, இமேஜ் இல்லாம பாக்க புடிக்கல உங்க பிளாக்கை... அவங்கவங்க நெட் ஸ்பீட் பொறுத்து தான் ஸ்லோ/ஸ்பீட் எல்லாம்... நீங்க எப்பவும் போல போடுங்க.....

நம்ம தளத்தில்:
சின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்டைக் கச்சேரி

MANO நாஞ்சில் மனோ said...

கழகத்தை காட்டி குடுக்காத சிபி அண்ணன் ஒழிக வரலாறு உன்னை மன்னிக்காது போ...!!!

MANO நாஞ்சில் மனோ said...

கலகத்தை கட்டி கொடுத்தவன்னு தலைப்பு வச்சிருந்தா நல்லா இருந்துருக்கும்...

சென்னை பித்தன் said...

18. அதுவும் நடக்கலாம்.
15.உங்க ஊரிலேயே இருக்காரே!கேட்க வேண்டியதுதானே!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர் .

சக்தி கல்வி மையம் said...

ஹா.ஹா...

துரைடேனியல் said...

ha...ha...ha..
TM 9.