Monday, November 14, 2011

பேபி ஸ்பெஷல் ஜோக்ஸ்

இன்னைக்கு காலைலயே ஒரு ஃபிகர்ட்ட இருந்து ஃபோன். இன்னைக்கு குழந்தைகள் தின ஸ்பெஷல் போஸ்ட் போடுங்கன்னு.. என்னா போடலாம்னு கேட்டதுக்கு நேரு பற்றி ஏதாவது போஸ்ட் போடுங்கன்னாங்க.. அவங்களே ஓப்பனிங்க் லைன் வேற எடுத்துக்குடுத்தாங்க.  சின்னப்பசங்களா இருக்கறப்ப படிச்சது.. இப்பவும் சின்னப்பையன் தான். அப்போ ரொம்ப சின்னப்பையன்.. அந்தப்பாட்டு.. அதோ பாரு காரு.. காருக்குள்ளே யாரு..? எங்க மாமா நேரு.. என்னா சொல்லித்தந்தாரு.. நல்லா படிக்கச்சொன்னாரு..


 அப்டினு சொல்லுச்சு.. சரி எல்லாரும் இன்னைக்கு அதையே தானே செய்வாங்க,... நாம ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு ஒரு ஐடியா செஞ்சேன்...அந்த கேவலமான ஐடியா என்னான்னா.. எங்க ஊர்ல ஒரு லைப்ரரி இருக்கு.(. ஊர்னா லைப்ரரி இருக்கத்தான் செய்யும், மேட்டர்க்கு வாடா..) அந்த லைப்ரரியன் சாருக்கு ஒரு ஃபிகரு பேபின்னு பேரு.. அந்த ஃபிகரு எனக்கு பஸ் மேட்.. அதுக்கு மேரேஜ் ஆகிடுச்சு.. அந்த ஃபிகர்ட்ட போய் 50 ஜோக்ஸ் கொடுத்து ஏதாவது 20 செலக்ட் பண்ணிக்குடுங்கன்னு கேட்டேன்.. அது காரியை துப்பாத குறையா எல்லா ஜோக்கும் கேவலமாத்தான் இருக்கு, சிரிப்பே வர்லைன்னு ரிஜக்ட் பண்ணிடுச்சு...

அப்புறம் அது கிட்டே கெஞ்சி கூத்தாடி 20 ஜோக்ஸ் செலக்ட் பண்ணி வாங்கிட்டேன்.. இந்த பத்திரிக்கைக்காரங்க தான் மனசாட்சியே இல்லாம நம்ம ஜோக்ஸ்ஸை ரிஜக்ட் பண்றாங்கன்னா  ஃபிகருங்களும் ரிஜக்ட் பண்ணுதே.. அவ்வ்வ்வ்வ்வ்


1.நீங்க கடவுள் இல்லைங்கிறீங்க? அப்புறம் ஏன் அவரை குத்தம் சொல்றீங்க? 

ஆமா, காதல் இல்லைனு சொல்றவங்க அதை குத்தம் சொல்றதில்லையா?

----------------------------

2. டியர், என்னை நீங்க கை விட மாட்டீங்கனு நினைக்கறேன், ஏன்னா நான் கடவுளை நம்பறவ... 

ஓஹோ, அப்போ என்னை நீ நம்பல ? # வம்புப்பார்ட்டி வடிவேல்

---------------------------

3. பர்ச்சேஸ் மாலா- இன்ஸ்பெக்டர், என்னை டெயிலி ஒருத்தன் ஃபாலோ பண்றான்..

அட போம்மா,, 700 பேர் ட்விட்டர்ல ஃபாலோ பண்றாங்க, அதையே கண்டுக்கலை?

-------------------------------------

4. டாடி- செல்லம், அம்மா கிட்டேதான் கதை கேட்கறே, ஏன் என் கிட்டே கேட்கறது இல்ல? 

பேபி- போப்பா, அம்மா கதை சொல்லும், நீ கதை விடுவே,.

---------------------------------

5.மேடம், அலாரமா எதுக்காக உங்க கணவரோட குரலை வெச்சிருக்கீங்க? அவ்ளவ் அன்பா?

ம்ஹூம், சகிக்க முடியாம அதை நிறுத்தவாவது எந்திரிப்பனே?

--------------------------------------
6. மேடம், எந்த கவிதை எழுதுனாலும் ஒண்ணே முக்கால் லைன் தான் எழுதறீங்க, ஏன்?

நான் வள்ளுவர் வழி வம்சம்னு  எல்லாருக்கும் சிம்பாலிக்கா சொல்றேன்

----------------------------------

7.  ஆபீஸ்ல போர் அடிக்கும்போது உங்க நாவல் படிப்பேன்.

ரொம்ப தாங்க்ஸ் மேடம், அவ்ளவ் நல்லாருக்குமா?

ம்ஹூம், 1 பக்கம் படிச்சதும் தூக்கம் வந்துடும்

-----------------------------------

8. டியர், உன் கண் மீன் மாதிரி இருக்கறதாலதான் நீ மீன ரசியா?

ம்ஹூம், நான் கழுவற மீன்ல நழுவற மீன் அதான் #  மில்லி மீட்டர் புன்னகை மீனாவின் காதல் கதை

---------------------------

9. என்ன கொடுமை சார் இது? விஜய் படமும் பார்க்க முடியல, விஜய் டி வி யும் பார்க்க முடியல # நீயா? நானா? செம மொக்கை போட்டிங்க்

----------------------------

10. ஏய் மிஸ்டர், இவ்வளவு கேவலமா மொக்கை போடறியே, நீ விஜய் ரசிகனா?

நோ மிஸ், பவர் ஸ்டார் சீனிவாசனோட ரசிகன்

-------------------------------
11. மிஸ்.. நான் ஒரு லவ் லெட்டர் தந்தேனே, ஏன் இன்னும் நோ ரிப்ளை?

தம்பி.. நீ ஒருத்தன் தானா? இன்னும் 890 லெட்டர்ஸ் படிக்காம பெண்டிங்க்

------------------------------

12.அத்தான் , எதுக்காக பொய் சொல்ற பழக்கம்?

நான் அழகா இருக்கேனா?னு நீ கேட்கறப்ப  உண்மையை சொன்னா அடிப்பே.. அதான் பொய் சொன்னேன்

--------------------------------

13. நீ எது சொன்னாலும் அதை கேட்காம உன் மனைவி அத்து மீறுகிறாளா?

அது கூட தேவலையெ, அத்தையையும் மீறிடறாளே?

------------------------------

14.மழலை இல்லாதவர்கள் மழலை பற்றிய கவிதைகளை படிப்பதன் மூலமும், மழலை ஓவியங்களை ரசிப்பதன் மூலமும் தங்கள் ஆற்றாமையை போக்கலாமே?

-----------------------------

15 . நடிகை சினேகா நடிகர் பிரசனாவை மணக்க இருக்கிறார் - ட்விட்டர் நியூஸ் # சினேகாவின் இதழ்களில் புன்னகை பிரசன்னம்?

-------------------------------


16 வேலாயுதம் டைட்டானிக்கை மிஞ்சி விட்டது -செய்தி # வசூல்லயா? மூழ்கறதுலயா?

-----------------------------------

17 மழலைகளை அடிக்கின்ற, வேலை வாங்குகின்ற, துன்புறுத்துகின்ற  ஜீவன்கள் மழலை பாக்கியம் கிடைக்காதவர்களின் மன உளைச்சல்களை நினைத்துப்பார்க்கவும்

-----------------------------------

18. முரண் படத்தில் நடிக்கும்போதாவது பிரசன்னா சினேகாவுடனான மண வாழ்வு முரண் ஆகலாம் என்பதை நினைத்துப்பார்த்திருக்கலாம்

---------------------------------

19. . சார் உங்க பையனை அக்ரிகல்ச்சர் படிக்க வைச்சீங்களே, இப்போ என்ன பண்றான்?

அதோ வயக்காட்ல நாத்து நடும் பொண்ணுங்க கிட்டே கடலை போடறான்

-----------------------------------

20. சினேகாவின் முன்னாள் காதலர் நாக் ரவி ஷாக் ரவி ஆனார்# நியூஸ் அப்டேட்

---------------------------------

டிஸ்கி - டைட்டிலுக்கான விளக்கம் முதல்லியே சொல்லிட்டேன்.. அதனால யாரும் டைட்டிலுக்கு விளக்கம் கேட்காதீங்க.. கேட்டாலும் சொல்ல மாட்டேன்.. ஏன்னா எனக்கே அவ்ளவ் தான் தெரியும். ஹி ஹி ஹி 

டிஸ்கி பார்ட் 2 -

நான் சிவனாகிறேன் - சைக்கோ த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 

IMMORTAL - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 

தம்பி வெட்டோத்தி சுந்தரம் - சினிமா விமர்சனம்

 

 


15 comments:

ராஜி said...

Happy childrens day

ராஜி said...

Unga childwood days rhyming super CP sir.

Unknown said...

அண்ணே குஷந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் மற்றும் மாமா(!) நேருவுக்கும் வாழ்த்துக்கள்..

5. Why blood same blood>

10. எங்கயோ நல்லா வாங்கப்போறே ஹிஹி...

15. வாழ்த்துக்கள்...

16. 2வது அருமை....

அந்த டிஸ்கிய பாத்தாலே பல விஷயம் புரியுது...மூளை கிடைக்கும் இடம் மட்டன் ஷாப் ஹிஹி!

குரங்குபெடல் said...

"அது காரியை துப்பாத குறையா எல்லா ஜோக்கும் கேவலமாத்தான் இருக்கு, சிரிப்பே வர்லைன்னு ரிஜக்ட் பண்ணிடுச்சு..."

Correct . . .

இந்திரா said...

17வது அருமை..

ADMIN said...

குட் போஸ்ட்.!

ADMIN said...

எனது வலையில் இன்று ஒரு சுய முன்னேற்றப் பதிவு:
காளான் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

K.s.s.Rajh said...

பாஸ் அப்ப நீங்க போடுற ஜோக் எல்லாம் பிகருகள் தான் செலக்ட் பண்ணிதருதுகளா?ஹி.ஹி.ஹி.ஹி...

முத்தரசு said...

கலக்கல் ஜோக்ஸ்

தமிழ்வாசி பிரகாஷ் said...

சிபிக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள். ஆமா, சிபி எப்போ குழந்தையா மாறினார்?


நம்ம தளத்தில்:
மனைவியா டிவியும், தோழியா மொபைல் போனையும் வச்சு செம காமெடிங்க...

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது ஃபிகர் போன் பண்ணுச்சா, அண்ணிக்கு தெரியுமா இல்லை போட்டு குடுக்கனுமா...?

MANO நாஞ்சில் மனோ said...

அந்த பஸ்மேட் உண்மையிலேயே உன்னை காறி துப்புனதால்ல விக்கி சொன்னான்...??

MANO நாஞ்சில் மனோ said...

சினேக'மும் பாம்பும் ஒண்ணுதான் நெருங்குனவன் நிம்மதியா வாழமுடியாது, சீக்கிரமே அடுத்த டைவர்ஸ் எதிர்பார்க்கலாம்...!!!

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் மாப்ள..

மூ.ராஜா said...

உண்மையை உள்ளபடிச் சொன்ன அப்பேருந்து துணைக்கு நன்றி...