Tuesday, November 15, 2011

டபுள் மீனிங்க் ஜோக்ஸ் தான் ஆனா சைவம், அது எப்படி?

1. தலைவர்  சிபிஐ (CBI)  மேலயே குத்தம் சொல்றாரே?


ஆமா பி(B)க்கு  அப்புறம் தானே  சி(C)  வரனும்?-கறாரு.


------------------------------------------


2.எனக்கு ராசியான நெம்பர் 2. அதனால  டபுள்  மீனிங்ல பேசறேன்.  இது  தப்பா?


ஓஹோ...  அப்போ  உனக்கு  ராசியான  நெம்பர்  ஜீரோன்னா பேசவேமாட்டியா?


-------------------------------------------


3.ஹோட்டல்ல  சர்வர்  வேலை  பார்த்தவர்போல..


ஏன்?


புது இங்கிலீஸ்  பட டிவிடி  கேட்டேன்... அண்ணனுக்கு  இம்மார்ஷல் டிவிடி  பார்சல்!-னு  உள்ள  குரல்  குடுக்கறாரே?


---------------------------------------------


4. டியர்... என்னை  புகழ்ந்து  பேசுறப்ப  “நீ  அழகா  இருக்கே!”-னு  சொல்றப்ப  ஏன்  கண்ணை  மூடிக்கறீங்க? வெட்கமா?


ம்ஹூம்.  துக்கம்தான்...  மனசாட்சியை  கழட்டி  வெச்சுட்டு  பொய்  பேசறமே!-னு
-----------------------------------------------


5. இது  என்  லைஃப்  டைம்  படம்.


எப்படி சொல்றீங்க?


இந்த  ஒரு  படம்  ரிலீஸ்  ஆனபின்  வேற  யாருமே  சான்ஸ் தரலை.


-------------------------------------------------

Not Sure If Planking...6.நடிகை:  - சினி  ஃபீல்டுக்கு  வராம  இருந்திருந்தா  நர்ஸ்  ஆகி இருப்பேன்.


ஏன்?


அப்போதானே  டாக்டரை  மடக்கிப் போட  முடியும்!

-----------------------------------------------------


7.உங்க  படம்  பூரா  வாத்தியார்களும் , டீச்சர்களும்  லெக்சரர்களுமே  இருக்கங்களே?


இந்தப்படம்  உங்களுக்கு எல்லாம்  ஒரு  பாடமா  இருக்கப்  போகுதுனு  சொன்னேனே?


----------------------------------------------------


8.உண்மைகளின்  நிழலாக  நீ  இருக்கிறாய்!
உனக்கு  நிழலாக  நான்  இருக்கிறேன்!


---------------------------------------------------
9.கடந்த  காலம்  என்பது  அழகிய  சுற்றுலாத்தலம்தான்... சுற்றிப்பார்க்கலாம்.  தங்கிவிட  முடியாது.


----------------------------------------------------------


10.அதீத  அன்பை  உன்னிடம்  எப்போதும்  நான்  காட்டுவதில்லை  இலவசமாகக்  கிடைக்கும் எதையும்  மனிதமனம்  குறைத்தே  மதிப்பிடுவதால்.


------------------------------------------------------------

Group Picture Fail

11.சிக்கனம்  நல்லதா?  கெட்டதா?

உன்  உடையில்!?

------------------------------------------------


12.என்  மனைவிதான்  எனக்கு  எல்லாமே! ஆனா  அவ  டெய்லி  சரக்கு  ஒரு  ஃபுல்  அடிப்பா...


ஓஹோ... லைஃப்  இஸ்  பியூட்டிஃபுல் , ஒய்ஃப்  இஸ்  பியூட்டி  ’ஃபுல்’-னு  சொல்லுங்க.
-------------------------------------------


13.ரேஷன்  அரிசி  கடத்தறதா  தகவல்  சொன்னீங்க...  யாரும்  கடத்தலையே?


உங்ககிட்ட சொன்னதை  கடத்தறவங்க  கிட்டயும்  சொன்னேன்.  உஷார்  ஆகிட்டாங்க  போல.

---------------------------------------------------


14. தலைவர்  இவ்ளவ்  அப்பாவியா  இருக்காரே!?


ஏன்?

நான்  சிவனாகிறேன்  ஆன்மீகப்  படமா?னு  கேட்கறாரே?


-----------------------------------------------------


15.தலைவரே!  எதுக்காக  எல்லத்தையும்  மாத்திட்டே இருக்காங்க?


மாற்று  அரசாங்கம்  வேணும்னுதானே  மக்கள்  தேர்ந்தெடுத்தாங்க?

----------------------------------------------------

High Hurdles
- Introducing the New Gifs16.தலைவரோட  லொள்ளு  தாங்கல!

ஏன்?

வாஸ்து  சரி  இல்லையாம்.  அதனால  GATE  WAY  OF  INDIA மும்பை to சென்னை  மாத்தனுமாம்.


--------------------------------------------------
17.கரண்  மலையாளப்படத்துல  நடிச்சா  என்ன  டைட்டில்  வைப்பாரு?

தம்பி ‘பிட்’ ஓட்டி  சுந்தரம்.

---------------------------------------------------


18.மனப்பாடப்பாட்டு  சொல்லு.


சாரி  சார்  ஞாபகம்  வர்ல!


உரு  போடமுடியாதவன்  உருப்படமுடியாது. எப்படியோ  போ!

--------------------------------------------


19.போலீஸ்  இன்ஃபார்மர்  கேள்விப்பட்டிருக்கேன். அதென்ன  ஃபிகர்  இன்ஃபார்மர்?


காலேஜ்ல  புதுசா  யாராவது  ஃபிகர்  ஜாயின்  பண்ணுனா  எல்லாரும்  sms அனுப்பி  தகவல்  சொல்லுவான்.


-----------------------------------------


20.கடவுளே! எதுக்காக  எனக்கு  காதல்  தோல்வியை  குடுத்தே?


பக்தா!  தாடி  கெட்டப்  உனக்கு  செமயா  மேட்ச்  ஆகும்...  அதுக்குத்தான்.
--------------------------------------------


டிஸ்கி -

1. The Adventures of Tintin - மழலைகளுக்கான ஹாலிவுட் சினிமா விமர்சனம்

2. நான் சிவனாகிறேன் - சைக்கோ த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 

3. IMMORTAL - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

 

4. தம்பி வெட்டோத்தி சுந்தரம் - சினிமா விமர்சனம்

 

25 comments:

ராஜி said...

20 tweet kalakal

Unknown said...

அண்ணே நல்லா இருக்கு...அதுவும்...12வது தான் டாப்பு ஹிஹி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! அந்த 19க்கு இன்பார்மர் நீங்க தானே...

முத்தரசு said...

ஜோக் எல்லாம் தூக்கலப்பு - படங்களில் முதல் படம் அய்யோ அய்யோ

Unknown said...

சூப்பர் தம்பி! :-)

K.s.s.Rajh said...

அண்ணே அனைத்தும் அருமை 1 எனக்கு மிகவும் புடிச்சிருக்கு(அப்ப மத்ததெல்லாம் வாசிக்கலையா என்று கேட்காதீங்க வாசிச்சேன்)

அப்பறம் அந்த குண்டுப்பொண்ணு படம் வித்தியாசமாக இருக்கு

rajamelaiyur said...

//. இது என் லைஃப் டைம் படம்.


எப்படி சொல்றீங்க?


இந்த ஒரு படம் ரிலீஸ் ஆனபின் வேற யாருமே சான்ஸ் தரலை.


//

டாக்குடர் படமோ ?

rajamelaiyur said...

அருமை ...அருமை ...அருமை ...

rajamelaiyur said...

இன்று என் வலையில்

சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கலக்கலுக்கு பஞ்சமில்லே!

சசிகுமார் said...

நல்லா இருக்கு மாப்ஸ்

இந்திரா said...

முதல் புகைப்படம்... சூப்பர்...

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

good jokes

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நீங்க 'காதல் தோல்வி'யை ட்ரை பண்ணி பார்க்கலாமே சிபி , இல்ல இல்ல தாடி வச்சு பார்க்கலாமேனு சொன்னேன்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இன்று சிறுகதை போட்டி முடிவு வருது. வெற்றி பெற வாழ்த்துக்கள்

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

நல்லா இருக்கிறீங்களா?

கலக்கலான ஜோக்ஸ் பாஸ்.

எனக்கு ஜோக்ஸ் ஐ விட
நீங்க போட்டிருக்கிற எட்டாவது கவிதை கவிதை தான் ரொம்ப பிடிச்சிருக்கு.

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

நல்லா இருக்கிறீங்களா?

கலக்கலான ஜோக்ஸ் பாஸ்.

எனக்கு ஜோக்ஸ் ஐ விட
நீங்க போட்டிருக்கிற எட்டாவது கவிதை கவிதை தான் ரொம்ப பிடிச்சிருக்கு.

அம்பாளடியாள் said...

16 ,13 ,20 அருமையான காமடி !...வாழ்த்துக்கள் மிக்க நன்றி சார்
பகிர்வுக்கு .முடிந்தால் வாருங்கள் என் தளத்திற்கு இன்றும் ஒரு
வாழ்த்துச் சொல்வோம் .

Saro said...

"Gateway of India" is in Mumbai, Delhi has "India Gate" rather

Unknown said...

//சிக்கனம் நல்லதா? கெட்டதா?
உன் உடையில்!//

நமிதாட்ட கேட்டிங்களா?
------------------------------

கடைசி படம் கேட்க உங்க ஆள் ஓடிக்கிட்டே இருக்கார்...

MANO நாஞ்சில் மனோ said...

13.ரேஷன் அரிசி கடத்தறதா தகவல் சொன்னீங்க... யாரும் கடத்தலையே?


உங்ககிட்ட சொன்னதை கடத்தறவங்க கிட்டயும் சொன்னேன். உஷார் ஆகிட்டாங்க போல.//

ஹா ஹா ஹா ஹா முடியல...

MANO நாஞ்சில் மனோ said...

கடைசி படம் சூப்பர்டா அண்ணா...!!!

MANO நாஞ்சில் மனோ said...

கரன் ஏற்கனவே மலையாள பிட் படங்களில் நிறைய நடிச்சிருக்கார்...!!!

vidhyanana said...

kodumai kodumai kovilukku pona anga irandu kodumai thanku thinku adicham? enna kodumai saravana idthu?

துரைடேனியல் said...

Nice.
TM 10.