Saturday, November 05, 2011

பரி பூர்ண ஃபேமிலி ஜோக்ஸ் ஹி ஹி ஹி


1.நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! # ஆமாண்ணே, ஒரு மாதிரியாதான் நடிக்கறீங்க, நோ டவுட்டு

---------------------------

2. நடிகை பூர்ணாவுக்கு 5 தங்கைகளாம், தயாரிப்பாளர்கள் படை எடுப்பாம் # பரி பூர்ண ஃபேமிலி போல ( டைட்டில் ட்வீட்)

-------------------------------

3. கவர்ச்சியான ஸ்டில்கள் வெளியானதால் என் இமேஜ் எல்லாம் போயிருச்சே- நடிகை ஆண்ட்ரியா # வீடியோவே வந்தாச்சு, பாப்பா வுக்கு இன்னும் தெரில போல

-----------------------------------------

4.  அத்தான், நீங்க ஆன்மீக வாதியா? நாத்திக வாதியா?

கோயிலுக்கு போவேன், ஆனா சாமி கும்பிட மாட்டேன்.. ஹி ஹி ஹி

---------------------------

5. ஜீவாவுடன் நடிக்க கூடாது என்று, ஒஸ்தியில் தன்னுடன் நடித்த ரிச்சாவுக்கு தடை போட்டுள்ளார் சிம்பு. # ஆக்டிங்க் தானே நோ? டேட்டிங்க்? - ஜீவா


----------------------------6. டியர், என்னை லவ் பண்றதா சொன்ன இந்த 4 வருஷமும் என் கிட்டே பல்பு தான் வாங்குனீங்க, வேற என்ன யூஸ்? 

அட கிறுக்கி, நான் பல்பு கடை வெச்சுட்டேன்

-----------------------------

7. டியர், எனக்கு கிரிக்கெட்ல ஏ, பி சி டி கூட தெரியாது..

அப்டியா? நீ தேவலை. எனக்கு இங்கிலீஷ்ல கூட நீ சொன்ன அந்த லெட்டர்ஸ் எல்லாம் தெரியாது

---------------------------

8. காதல் என்பது உளவியல் சார்ந்தது, கள்ளக்காதல் என்பது களவியல் சார்ந்தது

-----------------------

9..நல்லவர்கள் சின்ன வயசில் இறப்பதற்குக்காரணம் கடவுள் அவர்களை அதிகம் நேசிப்பதாலாம் # எதுக்கும் நான் கெட்டவனாகவே இருந்திடலாம்னு நினைக்கறேன்


-----------------------------------

10. . லேடி ரைட்டர் - 50 வயசு ஆனபின் தான் என் ஃபோட்டோவைவெளியிடுவேன்.


நிருபர் - மேடம்,குழப்பாதீங்க, 60க்குப்பிறகு எப்படி 50 வரும்?

-------------------------------------

11.சிலர் நம் வாழ்வின் வாழ்த்து ஆவார்கள், பலர் நம் வாழ்வின் படிப்பினை ஆவார்கள்

--------------------------------------

12. சம்பந்தப்பட்ட நபரே சலித்துக்கொள்ளும் அளவு தூக்கிப்பேசுவதும் தவறு, வலிக்கும் வரை ஒருவரை தாக்கிப்பேசுவதும் தவறு

-------------------------

13. டியர் , 11.11.11  ராசியான நாள் ,என்ன பண்ணலாம்? 

சாரி சதீஷ், அன்னைக்குதான் உங்களை கழட்டி விட்டுட்டு புது லவ்வருக்கு வாய்ப்பு தரலாம்னு ஐடியா

-------------------------------

14. மற்றவர்களின் கண்ணீரை துடைக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் அவர்கள் கண்ணீர் விட தான் ஒரு காரணமாகவாவது இல்லாமல் தவிர்க்கலாம்

---------------------------------------

15. ஹீரோ பாம்பை கைல பிடிச்சுக்கிட்டு இருக்கற மாதிரி சீன் இருந்தா படம் ஹிட் ஆகிடும்னு ஒரு செண்ட்டிமெண்ட் இருக்கு.. 

சார்.. படம் ஹிட் ஆகும் ஓக்கே, நான் அவுட் ஆகிடுவனே?

-----------------------------------


16. பல நாட்களாக நீடித்திருந்த நட்பு  ஒரே ஒரு வார்த்தையால் முறிகிற வாய்ப்புகள் இருப்பதால் நாம் நாக்கில் ,உதட்டில் ஜாக்கிரதையாக இருக்க நேரிடுகிறது

--------------------------------

17. காமமில்லாத காதல் அரிதானது,ஆனால் அதுதான் அழகானது, அன்பானது

--------------------------------

18. மாமா, உங்க பொண்ணுக்கு குழந்தை மனசுன்னு எப்டி சொல்றீங்க? 

30 வயசு ஆகியும் இன்னும் JOHNSON & JOHNSON பேபி சோப்தான் யூஸ் பண்றாளே?

------------------------------------

19. செம்பில்லாமல் தங்க நகை செய்ய முடியாது, ஆனால் அன்பு மட்டுமே கொண்டு காதல் செய்யலாம் # KDM  காதல்

---------------------------------

20.  காமம் எட்டிப்பார்க்கும்போது காதல் கோபம் கொண்டு வெளி நடப்பு செய்து விடுகிறது

--------------------------------

Green Roses

21. மனதை மட்டுமே தொட்ட காதல்கள் பல உண்டு, உடலை மட்டுமே தொட்ட காதல்கள் தொட்ட பின் நேசிப்பின் சதவீதம் கொஞ்சம் குறையக்கூடும்

-------------------------------

22. டியர், என்னை தொடாம லவ் பண்ணுங்க.

சாரி, கண்ட கண்ட கவிதையை எல்லாம் படிச்சு உன் மனசை கெடுத்துக்காதே. உன் மனசை மட்டும் தொட்டா போதுமா? # பல்டி

----------------------------------

23. காமம் முடிந்த பின் காதல் முழுமை பெறுவதோ, நிறைவு பெறுவதோ கிடையாது,அப்படி நடந்தால் அது சுயநலக்காதல் அல்லது உள்நோக்கம் கொண்ட காதல்

-------------------------------------

24. டியர், என்னை மயக்கனும்னா நேருக்கு நேர் என் கண்ணை பார்க்கனும், எதுக்கு என் இடுப்பைப்பார்க்கறீங்க? 

ஹி ஹி இது “ஹிப்” னாடிஸ காதல்

-----------------------------------

25. என் மனைவிக்கு மாடர்னா இருக்கறது பிடிக்காது.. 

நிஜமாவா?  

ஆமா, மிக்ஸி யூஸ் பண்ணாம அம்மிக்கல்லுல சட்னி அரைக்கச்சொல்றா #அவ்வ்வ்வ்வ்வ்வ்

---------------------------------


23 comments:

சக்தி கல்வி மையம் said...

முதல் பார்வை..

rajamelaiyur said...

//ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! # ஆமாண்ணே, ஒரு மாதிரியாதான் நடிக்கறீங்க, நோ டவுட்டு
//

நோ டவுட்டு..நோ டவுட்டு

rajamelaiyur said...

இரண்டாம் பார்வை

rajamelaiyur said...

இன்று என் வலையில்
விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு

வெளங்காதவன்™ said...

:)

சசிகுமார் said...

ஹா ஹா ஹா.... டெய்லி ஒரே கமென்ட் போட்டு போர் அடிக்குது என்ன பண்ணலாம் சொல்லுங்க....

நம்பிக்கைபாண்டியன் said...

11 ம், 12 ம், சூப்பர்

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

படங்கள் ரொம்ப அருமை....16 மற்றும் 13 100க்கு 100 உண்மையான வார்த்தைகள்.....

SURYAJEEVA said...

அண்ணே அந்த 12 செம தத்துவம்... அனுபவம் தானே?

மகேந்திரன் said...

அத்தனையும் அருமை...
அதிலும் 11ம் 12ம் மிக அருமை.

ராஜி said...

டியர், என்னை லவ் பண்றதா சொன்ன இந்த 4 வருஷமும் என் கிட்டே பல்பு தான் வாங்குனீங்க, வேற என்ன யூஸ்?

அட கிறுக்கி, நான் பல்பு கடை வெச்சுட்டேன்
>>>
காரியவாத காதல் போல இருக்கு

Lingesh said...

உங்களது நகைச்சுவைத் துனுக்குகள் அனைத்தும் அருமை...

Unknown said...

“பரி பூர்ண ஃபேமிலி ஜோக்ஸ்“
எங்க “பூர்ணா“ ஜோக்க காணம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

மிக அருமை.

K.s.s.Rajh said...

அண்ணே அந்த கள்ளக் காதல் களவியல் சூப்பர்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கலகல டவீட்ஸ்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றைய அதிடிக்கும் ஒரு சபாஷ்...

RAMA RAVI (RAMVI) said...

11,12,14, மூன்றும் சூப்பர்.

படங்கள் எல்லாமே ரொம்ப அழகாக இருக்கு.

MANO நாஞ்சில் மனோ said...

கோவிலுக்கு போவேன் ஆனா சாமி கும்பிடமாட்டேன்//

உருப்படுமா இல்லை உருப்ப்படுமான்னு கேக்குறேன் ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது அஞ்சி தங்கைகளா, என்னை விடுடா நான் போயி பார்த்துக்குறேன் ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

அதானே வீடியோ மட்டுமா வந்துருக்கு இன்னும் என்னல்லாமோ வந்துருக்கு பாவம் பாப்பாவுக்கு ஒன்னுமே தெரியலை...

கும்மாச்சி said...

அண்ணே கலக்கல்

நிரூபன் said...

அண்ணே, இது பேமிலி ஜோக் என்று நீங்க சொன்னாலும், டபுள் மீனிங் இருக்கே..

அப்போ இது வயசுப் பசங்களுக்கான ஜோக் தானே...

ஹே.....

அருமையான தொகுப்பு பாஸ்.