Monday, November 14, 2011

The Adventures of Tintin - மழலைகளுக்கான ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.onlinemovieshut.com/wp-content/uploads/2011/09/the-adventures-of-tintin-poster1.jpgபொதுவா 3 படம் ஹிட் கொடுத்துட்டாலே  நம்மாளுங்களுக்கு கொஞ்சம் கிர்னு ஏறிக்கும்.. தொட்டதெல்லாம் துலங்குனா கேக்கவே வேணாம்.. ஜூராஸிக் பார்க் போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்த (Steven Spielberg   )  ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கொடுத்திருக்கும் ஒரு தோல்விப்படம் தான்  டின் டின் என சுருக்கமாக அழைக்கப்படும் The Adventures of Tintin AND The Secret of the Unicorn..

போஸ்டர்ல 3 டி அப்டினு போட்டிருந்தாலும் ஈரோட்ல சாதா படமாத்தான்  காட்னாங்க.. ஹாலிவுட்ல இது பயங்கர ஹிட்டாம், ஆனா இங்கே தேறாது.. ரிலீஸ் அன்னைக்கே மொத்தமே 18 பேர் தான் தியேட்டர்ல இருந்தாங்க.   ( 18 + படம்னா 1008 பேர் வந்திருப்பாங்க).. சரி.. படத்தோட கதை என்னா?


டின் டின்  -ஹீரோ வோட பேரு ..அவர் ஒரு ஜர்னலிஸ்ட்.. அவரும் , அவர் வளர்ப்பு நண்பன் நாயும்  ஐரோப்பா டவுன்ல பர்ச்சேஸ் பண்ண  பஜார் போறாங்க..  ஒரு கப்பலுக்கான மினியேச்சர் மாடலை ( யூனிகார்ன்) அங்கே வாங்கறார்.. ஆனா அதை அவர் கிட்டே இருந்து வாங்க 2 பேர் முயற்சி பண்றாங்க.. ஹீரோ ஒத்துக்கலை.. வீட்டுக்கு கொண்டு போயிடறாரு.. 

அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டு பூனைக்கும், இவரோட நாய்க்கும் நடக்கற ஒரு சேஸிங்க் போராட்டத்துல அந்த கப்பல் கீழே விழுந்து உடைஞ்சிடுது.. அதுல ஒரு பார்ட் மட்டும்  உருண்டு போய் டேபிளுக்கு அடியே ஒதுங்குது.. அதை டின் டின் கவனிக்கலை, ஆனா நாய் பார்த்துடுது.. 

அந்த யூனிகார்ன் பற்றி தகவல்  தெரிஞ்சிக்க டின் டின் லைப்ரரி போறார்.. வந்து பார்த்தா சி பி ஐ ரெய்டு நடந்த ஆ ராசா வீடு மாதிரி எல்லாம் கலைஞ்சு கிடக்கு. அப்போதான் நாய் வந்து அந்த ஒதுங்கிய பார்ட்டை கவ்வி டின் டின் கிட்டே கொடுக்குது. அந்த குழலுக்குள் ஒரு மேப் இருக்கு.. அந்த மேப் தான்  புதையலுக்கான கோட்வோர்ட்ஸ் உள்ளடக்கியது.. 

டின் டின் இடம் இருப்பது போலவே இன்னும் 2 மாடல் கப்பல்கள் வேறு வேறு ஆளிடம் இருக்கு.. அதை கண்டு பிடிக்க பயணம் போகும் ஹீரோவின் சாகசப்பயணமும், காமெடி கலாட்டாவும் தான் கதை.. 
 http://img.poptower.com/pic-72012/adventures-of-tintin.jpg?d=600


படத்தில் ரசித்த வசனங்கள்

1.  என்ன இஸம் உனக்கு பிடிக்கும்?  மேஜிக் ரியலிஸமா?  ரியலிஸமா?


எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஜர்னலிஸம்தான்.. 


2. சாகறதுக்கு முன்னே அவர் ஏதோ சொல்ல வந்தாரே..?

போய்ட்டு வர்றேன்னு சொல்லி இருப்பாரோ?

ம்ஹூம்.. ஏதோ க்ளூ......

3. இப்போ நீ எதுக்கு பெட்ரோல் குடிக்கறே..? ஆல்ரெடி பெட்ரோல் ரேட் அதிகம்.. 

4. செயின் திருடர்கள் யாரும் என் பாக்கெட்டை பிக் பாக்கெட் அடிச்சதே இல்ல..

எப்டி?

இதோ பார்த்தியா? அந்த செயினோட  பாக்கெட்க்கு ஒரு அட்டாச் செயின் பண்ணி வெச்சிருக்கேன் பாரு.. 

5. என்னமோ சொல்ல வர்றே? என்ன? பஞ்ச் டயலாக்கா?

ம்ஹூம்.. அதுக்கெல்லாம் நேரம் இல்ல.. 

http://www.dapperlifestyle.com/wp-content/uploads/2011/05/the-adventures-of-tintin-movie-poster-thumb1-460x280.jpg

வாய் விட்டு சிரிக்க வைத்த காட்சிகள்

1. ஒரு சேஸிங்க் சீனில் ஹீரோ மாடுகள், அடைக்கப்பட்டுள்ள இடத்தில் போய் விழுவார்.. அவைகள் உதைத்து உதைத்தே இவர் பறந்து பறந்து இடத்தை க்ராஸ் செய்வது செம காமெடி.. 

2. ஹீரோ நாயிடம் தூங்கும் அடியாளிடம் இருக்கும் சாவிக்கொத்தை எடுக்கச்சொல்லும் சீனில் நாய் அதைக்கேட்காமல் அவனிடம் இருக்கும் பிஸ்கெட்டை கவ்விக்கொண்டு ஓடுவது..

3.  நாவல்கள் , சிறுகதைகளில் வில்லன் அடிபட்டா அவன் தலையை சுற்றி பட்டாம்பூச்சிகள் பறந்தன.. அவன் நினைவு இழந்தான் அப்டினு சொல்வாங்களே.. அதை நக்கல் அடிச்சு ஒரு சீன்..  வில்லனின் அடியாள் தலை சுத்தி கீழே நடு ரோட்ல விழுவான்.. உடனே கைல நெட்டோட 2 பேர் வந்து பட்டாம்பூச்சியை பிடிப்பாங்க.. பாருங்க.. புரிஞ்சவங்க மட்டும் செம சிரிப்பு..

4.  நடுக்கடல்ல ஹீரோ , கூட இருக்கற டிடெக்டிவ் குளிரை கட்டுப்படுத்த போட்ல நெருப்பு மூட்ட ஒரே களேபரம்.. ஹீரோ அதை அனைக்க கடல் நீரை இறைக்க டிடெக்டிவ் டக்னு பாட்டில்ல இருக்கற சரக்கை ஊற்ற போட் டமால்.. ஹா ஹா செம காமெடி சீன்பா.. 

5.  ராணி கர்ண கடூரக்குரலில் பாடும்போது நாய் உட்பட அனைவரும் காதை பொத்திக்கொள்வது.., கண்ணாடி டம்ளர்கள், ஜன்னல் கண்ணாடிகள் அந்த பாட்டின் நாராசம் தாளாமல் உடைவது கலக்கல் காமெடி.. படமாக்கப்பட்ட விதம் செம. அதன் உச்ச கட்டமாய் புல்லட் புரூஃப் கண்னாடித்தொட்டி கூட சிதறு தேங்காய் போல உடைவது கலக்கல்

6.  பாரசூட்டின் வார்கள் ஃபிளைட்டின் ஃபேனில் மாட்டி அந்த சக்கரத்துடன் மாங்கு மாங்கு என  டிடெக்டிவ் சுற்றி வருவது அவேசம் மேஜிக் காமெடி

7. பாலைவனத்தில்  ஹீரோ கவலையாக இருக்க.. என்னமோ ஆராய்ச்சி பண்ணுவது மாதிரியே பில்டப் கொடுக்கும் நாய் கடைசியில் ராட்சச எலும்புத்துண்டை கவ்வி வருவது செம..


இந்தப்படம் எல்லா தரப்பு ரசிகர்களூக்கும் பிடிக்கும்னு சொல்லிட முடியாது.. காமிக்ஸ் ரசிகர்களுக்கும் , டோரா புச்சி பார்க்கற  குழந்தை மனசு உள்ளவங்களுக்கு மட்டும் பிடிக்கும்.. 

சி.பி கமெண்ட் - இது ஒரு காமிக்ஸ் கதை என்பதாலும், ஹீரோயினே இல்லாத படம் என்பதாலும் நிதானித்து போங்க.. குழந்தைங்க மட்டும் பாருங்க.. ஹி ஹி 

 ஃபாரீன்ல ஆஹா ஓஹோ என ஓடியதாக, ஓடுவதாக சொல்லப்பட்டாலும் தமிழ்நாட்ல 10 டூ 20 நாட்கள் ஓடுவதே பெரிய விஷயம் தான்

ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்தேன்.. இதை இங்கே வெளியிட்டவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன்

19 comments:

சென்னை பித்தன் said...

3D 2D இரண்டும் இருக்கு.

ராஜி said...

முதல் வருகை

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே மழலையர் தின வாழ்த்துக்கள்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

சரியான டைமிங்கா போட்டுருக்கே விமர்சனம்...!!!

சக்தி கல்வி மையம் said...

மாப்ள டைமிங்கா.. இன்னைக்கு இந்தப் படத்தோட விமர்சனம் சூப்பர்..

சேகர் said...

சென்னைல இருக்குற மாதிரி சினிமா தியேட்டர் எல்லாம் நம்ம ஈரோடுக்கு எப்பனா வரும்...

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
கோவை நேரம் said...

சிபி ...உங்க வாரிசை கூட்டிட்டு போனீங்களா..?

ஹேமா said...

ஓ....சின்னப்பிளைங்க படமா.அப்போ எனக்கும்தான் !

ஸ்ரீராம். said...

குழந்தைகள் தினத்துக்கு குழந்தைகள் சம்பந்தமா எதாவது பதிவு போடணுமே என்றுதான் இந்தப் படம் பார்த்தீர்களோ...

காரிகன் said...

டின்டின் ஐரோப்பாவின் மிக பெரிய பிரபலமான காமிக்ஸ் கதாபாத்திரம்.டின்டின் கதைகளை படித்தவர்களே இந்த படத்தை நன்றாக ரசிக்க முடியும். உங்களை போன்ற ஆட்கள் மங்காத்தா மற்றும் வேலாயுதம் படங்களை பார்த்து கை தட்டி ஆராவாரமாக விமர்சனம் செய்வதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.கொஞ்சமாவது தெரிந்து கொண்டு பின்னர் எழுதினால் நலம்.நீங்கள் எழுதும் விமர்சனம் ஒரு பெரிய தலைவலி.ரொம்ப அலுப்பூட்டுகிறது.

Unknown said...

அண்ணே நீங்க எப்படி சொன்னாலும் நீங்க குயந்த மனசுக்காரருன்னு மனசு ஒத்துக்க மாட்டீங்குது ஹிஹி!

குரங்குபெடல் said...

18 பேர் தான் தியேட்டர்ல இருந்தாங்க. ( 18 + படம்னா 1008 பேர வந்திருப்பாங்க)

செம பார்ம்ல போயிட்டிருக்க தம்பி . . .

நன்றி

Mohammed Arafath @ AAA said...

ஹலோ இது எவ்ளோ பெரிய ஹிட் தெரியுமா..? சும்மா தெரியாம spealberg தோல்விப்படம் ன்னு சொல்ல கூடாது.ஈரோடு வந்த கூட்டம் வச்சு எப்டி நீங்க தோல்வி படம் ன்னு சொல்லலாம்.இதுக்கு எவ்ளோ புதுபுது டெக்னாலஜி பயன்படுத்தி இருகங்கனு தெரியுமா? உங்கள மாற்றி வயசான ஆளுங்களுக்கு ஒரு வேற போர் அடிச்சு இருக்கலாம்.உங்க குழந்தைய கூட்டி போயி பாருங்க சார்.நீங்க எதிர்பாக்குற இங்கிலீஷ் படம் இது இல்ல..

N.H. Narasimma Prasad said...

இந்த படம் நான் வசிக்கும் உகாண்டாவிற்கு வந்தால், கண்டிப்பாக திரையரங்கில் பார்த்து ரசிப்பேன். பகிர்வுக்கு நன்றி.

arul said...

ரசனையே இல்லாத ஒரு விமர்சனம். ஹீரோ மாடுகள் மேல விழுந்து போக மாட்டான். நாய் தான் மாடுகள் மேல் விழுந்து போகும். படம் பார்தீர்கள அல்லது ??????

http://www.arulselvan.com/

Philosophy Prabhakaran said...

இது மழலைகளுக்கான படம்ன்னு உங்களுக்கு யார் தல சொன்னது... நான் போட வேண்டிய பின்னூட்டங்களை முன்னாடியே சில நண்பர்கள் போட்டுவிட்டார்கள்...

நமக்கு வராத விஷயத்தை எல்லாம் முயற்சி பண்ணக்கூடாது தல... ஏதோ நாலு பிட்டு படம் பார்த்தோமா, ஜோக்ஸ்ன்னு சொல்லி மொக்கை போட்டோமா போய்க்கிட்டே இருக்க வேண்டியது தானே...

இளம் பரிதி said...

sir..padam nalla iruke...nan kanagathara la parthen...its a hit movie..chumma adichu vidathinga...

Mohamed Faaique said...

இந்தப் படம் பிடிக்கலையா?????
ஆஹா...சிபிக்கு வயசு போய்ட்டு;னது உறுதியாயிடுச்சே!!!!