Saturday, November 19, 2011

1911 - அட்டர் ஃபிளாப் ஆன ஜாக்கிசானின் 100வது படம் - சினிமா விமர்சனம்

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/2/26/1911_filmposter.jpg/215px-1911_filmposter.jpg 

ஜாக்கிசான் ரசிகர்களுகு அதிர்ச்சி ஊட்டும் ஒரு மேட்டரை முதல்லியே சொல்லிடறேன் , பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது 100 வது படம்  செம டப்பா.. த புரொடக்டர் படம் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து த ஆர்மர் ஆஃப் காட், ஸ்பானிஸ் கனெக்‌ஷன்,போலீஸ் ஸ்டோரி படங்களின் மூலம் ஆக்‌ஷனின் உச்சத்தை, பொழுது பொக்கின் பிரம்மாண்டத்தை காண்பித்த அகில உலக ஆக்‌ஷன் ஹீரோவின் 100 வது படம் ரொம்ப சாதாரணமாக அமைந்தது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியே..

படத்தோட கதை என்ன? 100 வருடங்களுக்கு முன் சீனாவில் மன்னர் ஆட்சி நடந்த காலம்.. நம்ம ஊர் ஜெ மாதிரி யார் பேச்சையும் மதிக்காத ,ஒரு ராணி சீனாவை ஆள்கிறார்.. கஜானா காலி.. ஆட்சி செய்ய முடியல.. இங்கே எப்படி பஸ் கட்டணம், பால் விலை எல்லாம் உயர்த்தி தன் கையாலாகாத்தனத்தை புரட்டாசித்தலைவி நிரூபிச்சாங்களோ அந்த மாதிரி அந்த ஊர் ராணி ரயில்வே டிபார்ட்மெண்ட்டை அடகு வெச்சு காலம் தள்ள வேண்டிய சூழ்நிலை.. எல்லா ஊர்லயும் பொம்பளைங்க ஆட்சி இப்படித்தான் போல..

சுன்யாட்சன் என்பவர் சிப்பாய் கலகத்தை ஆரம்பிக்கிறார்.. ராணிக்கு பண உதவி செய்ய வேண்டாம் என இங்கிலாந்திடம் கேட்டுக்கொள்கிறார். அவர் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படுது.. சீனாவில் நடத்தும் புரட்சிக்கு ஜாக்கிசான் தான் தலைமை.. ஆனா அவர் தமிழ்நாட்ல எப்படி கேப்டன் செயல்படாம சும்மா இருக்காரோ அந்த மாதிரி சும்மாதான் இருக்கார்.. 

http://s11.allstarpics.net/images/orig/f/e/fe7qis8csv48c8vq.jpg
ஜாக்கிசான் படம்னா மக்கள் என்ன விரும்புவாங்க? ஏதோ காமெடி இருகும் , அதிரடி சாகசம் இருக்கும்னு தானே ஆவலா இருப்பாங்க.. சரி போர் சம்பந்தப்பட்ட படம்னா ஓரளவு ஃபைட் சீனாவது காட்டனும்.. சும்மா தொண தொண னு பேசிட்டே இருக்காங்க.. செம கடுப்பு..

சுன்யாட்சன் குடியரசுத்தலைவரா தேர்ந்தெக்கப்படறார்.. சீனா முழுவதும் கைப்பற்றப்பட்ட பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள் தான் சீனாவின் குடியரசுத்தலைவர் ஆகனும்னு சுன்யாட்சன் பதவி விலகறார்.. எல்லாரும் கை தட்டி அந்த முடிவை வரவேற்கறாங்க.. தியேட்டர்ல நம்மாளுங்க செம காண்ட்ல கிளம்பறாங்க.. 

நாட்டுக்கு ஒரு நல்லவன்ல சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எப்படி ஏமாற்ற,ம் அடைஞ்சாங்களோ. அந்த மாதிரி ஜாக்கிசானின் ரசிகர்கள் இதுல ஏமாற்றம் அடைஞ்சு கிளம்பறாங்க.. 

படத்துல ஜாக்கிசான் வர்ற நேரத்தை விட சுன்யாட்சனா வர்றவர் நடிப்புதான் நல்லா இருக்கு.. அவருக்கு தான் அதிக காட்சிகள் வேற.. 

http://mimg.sulekha.com/english/1911/stills/1911-film-049.jpg

ரசிக்க வைத்த வசனங்கள்

1. நாங்க எங்கே வாழந்தாலும் சீனா தான் தாய்நாடு.. தாய் நாட்டுக்கு முன்னால தாத்தா சொத்து  முக்கியம் இல்ல. இந்த சொத்தை வித்து வந்த பணத்தை புரட்சிக்கு நான் தர்றேன்.. 

2. ரயில் துறையை அடமானம் வெச்சா  நம்ம மானமே போயிடும்னு மக்கள் பேசிக்கறாங்க.. 

ஆள்றது நான்.. அவங்க என்ன சொல்றது? நான் என்ன கேட்கறது? ( இந்த ராணியோட டி என் ஏ வை தூண்டி விட்டு ஜெ வுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி வெச்சிருப்பாங்களோ? )

3. நீங்க கொடுக்கப்போற பணத்தை வெச்சு கோயிலா கட்டப்போறாங்க?ஆயுதங்களை வாங்கி எங்களை அழிப்பாங்க...

. 4. நம்ம 2 பேருக்கும் வயசு 40.. ஆனா 50 வயசுல தான் எல்லா குழப்பங்களும் வரும்னு சொல்றாங்க.. 

5, என்னை கொன்னு போட்டுட்டு இந்த சுவர்ல இருக்கற ஃபோட்டோ மாதிரி மாட்டி வைக்க ஆசைப்படறீங்களா?

6. உங்க ஆட்சி மாறப்போகுது.. 

அதானே, நாடு 2 பட்டாலும் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே.. 

7. உயிரோட இருக்கனும்னு ஆசைப்பட்டா அந்த காலை வெட்டியே ஆகனும்.. கொஞ்சம் பொறுத்துக்குங்க.. 

ஆ ஆ ஆ

ஏய்... அறுக்கறதை நிறுத்து,.. அவர் இறந்துட்டாரு.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGwYnd-Fv9DaLA2eAI99Z-MK2idrQBWR-4MuRPE8kUzSyPqLut6VyV5fxZMSs-rj2G2gENmqCMb3HhnUf4a1cSY0PN8Y2BWpysL9y-9MpdDLarn4QPlGNAEXKaXH5N3g29PDZV52syEh0y/s1600/li-bing-bing4.jpg

8. அடிக்கடி சொல்வீங்களே.. ஒரு தடவை தோத்தா இன்னொரு தடவை ஜெயிச்சே ஆகனும்னு ஒரு தத்துவம்.. இப்போ அதை சொலுங்க.. 

9.  உன் கை...?

போராட்டத்துக்கு காணிக்கையா கொடுத்துட்டேன் ( ஆனா ஒரே ஒரு விரல் மட்டும் தான் கட் ஆகி இருக்கு... வசனகர்த்தா மிஸ்டேக் போல)

10.  புரட்சியால மட்டும் தான் மக்களோட வாழ்க்கைத்தரம் உயரும்.. 

11. பணத்தை கொண்டு வர்லை.. நம்பிக்கையை கொண்டு வந்திருக்கேன்.

12. என்ன சார்  .. கோபத்துல ஒவ்வொரு ஜாடியா உடைச்சிட்டு இருக்கீங்க/ இந்தாங்க சார்.. உடைங்க.. 

சார்,, இந்தாங்க .. இதை உடைங்க.

போதும்  போர் அடிக்குது.. நீங்களே உடைங்க.. 

.  13.  ஹீரோயின் ஜாக்கியிடம் - நம்ம குழந்தையை நான் சுமந்துட்டு இருக்கேன்.. ( ஆடியன்ஸ் - இது எப்போ நடந்தது சொல்லவே இல்ல? ஏப்பா ஆபரேட்டர்.. இந்தப்படத்தை நிறுத்திட்டு அந்தப்படத்தை போடு . சீனாவது பார்க்கலாம்.. ) # சீனா படத்தில் சீனா?

14. இப்போ புரட்சி ஜெயிச்சாச்சு. மன்னர் குடும்பத்தை என்ன செய்யப்போறீங்க? கொல்லப்போறீங்களா?

புரட்சி ஜெயிச்சா மன்னர் குடும்பத்தை கொல்லனும்னு அவசியம் இல்ல.. அவங்களும் இந்த நாட்டோட குடி மக்கள் தான்.. 


http://asiapacificarts.usc.edu/files/images/20111013174981911.png?AspxAutoDetectCookieSupport=1

ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்‌ஷன் 2ம் குறிப்பிட்டு சொல்லும் அளவு இருக்கு.. போர்க்காலத்தை அப்படியே கண் முன் வந்து நிறுத்துது.. சைனாவில் வேண்டுமானால் இது ஹிட் ஆகலாம்..

STARRING:  Jackie Chan, Li Bing Bing, Zhao Wen Xuan, Joan Chen, Jaycee Chan

DIRECTOR:  Jackie Chan, Zhang Li

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்.

சி.பி கமெண்ட் - ஜாக்கிசான் ரசிகர்கள் கூட பார்க்க முடியாது

டிஸ்கி -

வித்தகன் - வின்னர் ?- சினிமா விமர்சனம்

 

வித்தகன் - எள்ளல் நிறைந்த ஆர் பார்த்திபன் வசனங்கள் - காமெடி கலாட்டா

 

http://i1.sinaimg.cn/ent/m/c/2009-08-30/U1584P28T3D2675876F326DT20090830033439.jpg

24 comments:

Anonymous said...

அண்ணே சேம் பிளட், என் காதுலயும் ரத்தம்.

K.s.s.Rajh said...

அண்ணே அந்த ராணியா நடிச்சவங்கள் படமா போட்டு இருக்கீங்க பிகர் சூப்பர்
நாம அதை ரசிப்போம் கதை மொக்கை என்று முடிவாகிடுச்சி இப்படி மனசை தேத்த வேண்டியதுதான்

சக்தி கல்வி மையம் said...

தேவை இல்லாம அம்மாவை எதுக்கு மாப்ள இழுக்குற? ஆட்டோ வரணுமா?

ஜெட்லி... said...

இது ஒண்ணும் ஜாக்கி யோட நூறாவது படமெல்லாம் இல்லை....
அவரு வொர்க் பண்ண 107 வது படம் இது....
சும்மா நம்ம ஊரு விளம்பர டெக்னிக் தான் இந்த நூறாவது படம்
விளம்பரம் எல்லாம்.... நாங்க shinjakku incident படத்தையே பார்த்தவங்க...
கண்டிப்பா 1911 படத்தை பார்ப்போம்....


- ஜாக்கி ரசிகர்கள்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Mohammed Arafath @ AAA said...

hmm padam flop nu solratha ellam tamil padam bitu padathooda niruthikunga sir. neenga ethirparthu porathu illaina udane padam FLOP nu solliduveegala...?

Unknown said...

காலையிலதான் போஸ்டரே பார்த்தேன் இங்க விமர்சனம் உங்க மேனேஜர் நம்பர் என்ன தல 98XXXXXXXXதானே....

Unknown said...

பகிர்வுக்கு நன்றிங்க சார்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

புஸ்ஸா... மற்றவர்களின் விமர்சனம் என்ன சொல்லுதுன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.


நம்ம தளத்தில்:
நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?

ராஜி said...

thanks

rajamelaiyur said...

ஜாக்கிக்கு ஆப்பா ?

Unknown said...

mmm...!

சசிகுமார் said...

ஹாலிவுட் விமர்சனதுல தமிழக அரசியலை புகுத்திய மாப்ள சூப்பர்....

சரியில்ல....... said...

after long time.... vimarsanam pakka.!

powerstarbala said...

kizattu singathin 100 avathu padam flop anathu varuthamaga ullathu..

ivan,
http://powerstarbala.blogspot.com/

MANO நாஞ்சில் மனோ said...

டேய் நீ மூனா கானாவை போட்டு தாக்கி தாக்கி இப்போ ஆட்சியும் போயி குடும்பமும், கட்சியும் உள்ளே கிடக்கு, இப்போ அம்மாவை போட்டு தாளிக்க ஆரம்பிச்சிட்டியா...??? ராஸ்கல் ஆட்டோ இல்லை அல்லிராணிங்க கூட்டம் லாரில வரப்போகுது வளர்மதி தலைமையில் ஜாக்கிரதை...!!!

MANO நாஞ்சில் மனோ said...

நூறாவது படம் பப்படம் ஆகிருச்சா சுத்தம்....

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
பகிர்வுக்கு நன்றிங்க சார்!//

ஜேக் டேனியல் வாழ்க.....!!!

சென்னை பித்தன் said...

படம் பப்படம் அப்படின்னு சொல்றீங்க!

Napoo Sounthar said...

எல்லா ஊர்லயும் பொம்பளைங்க ஆட்சி இப்படித்தான் போல..

ஜானகிராமன் said...

good review. but, this content may very well pick-up in China, as the story line is close to local people over there. (Also, ad's in your blog is heavily disturbing the natural reading. Please consider.)

சேகர் said...

this film is already hit in china. i saw this film before 2 month.. now only it is released in india... its not bored.. its historical based movie... so,, the way they can taken is right.. jackie chan is already tired because of his backbone accident from tower.. so we hope he did best a lot.. no one can touch his hardwark..

”தளிர் சுரேஷ்” said...

ஜாக்கிசான் படமும் ஊத்திகிச்சா! ஐயோ பாவம்!

அசோக்ப்ரியன் said...

ஜாக்கிசான் படமும் அவுட்டா........என்ன கொடுமை தல இது