Tuesday, November 08, 2011

ஒரு அட்டு ஃபிகர் எழுதிய ஹிட்டு கவிதைகள்


1.கல்யாணமே பண்ணிக்காதவன் கல்யாணம் வேணாம்னு சொல்றத ஒத்துக்க முடியுமா?

பாழுங்கிணத்துல குதிக்காதவன் அதுல குதிக்காதேன்னு அட்வைஸ் பண்ணக்கூடாதா?

----------------------------------------------

2.ஆத்திகம் பேசுகிறவர்கள் அன்பற்றவர்கள்னு எப்டி சொல்றீங்க ?

சக  மனிதனை நேசிக்காமல் கடவுளை மட்டும் வணங்கி என்ன பயன்?

--------------------------------------

3. ஒரு நாத்திகவாதி சக மனிதனை நேசிக்கவில்லை என்பதை விட ஒரு ஆத்திகவாதி அப்படி நேசிக்காதது பெரிய தவறாகப்படுகிறது

------------------------------

4.  கோயில் வாசலில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு 1 ரூபா கூட தர்மம் செய்யாதவன் உண்டியலில் லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி என்ன பயன்?

-------------------------------

5. கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்யும் ஆத்திகவாதியை விட பசியால் இருக்கும் ஒரு ஏழைக்குழந்தைக்கு பால் வாங்கித்தரும் நாத்திக வாதி சிறந்தவன்

-------------------------------
6. ஆத்திகவாதி  கடவுளை நம்புகிறான், அப்போ கடவுளின் படைப்புகளான சக மனிதனை  நேசிக்கத்தெரிய வேண்டாமா?உதவி செய்ய வேண்டாமா?

--------------------------------

7. ஆத்திகவாதி மனிதனுக்கு உதவாமல் கடவுளுக்கு படைப்பதில் பயன் இல்லை என்பதே

------------------------------

8. உங்க பையனுக்கு கிள்ளி வளவன்னு ஏன் பேர் வெச்சிருக்கீங்க?தமிழ்ப்பற்றா?

இல்லை, வள வளனு பேசிட்டே இருப்பான், எல்லாரையும் கிள்ளி வெச்சுடுவான்

---------------------------------

9. பாரதியார், பகத்சிங்க் உட்பட பல நல்லவர்கள் அற்ப ஆயுளில் இறப்பதும், பல அக்கிரமக்காரர்கள் நீண்ட ஆயுளுடன் நலமாக இருப்பதும் இயற்கை விசித்திரம்

---------------------------------

10. ஏழைகளை வயிற்றில் அடிக்கும் செல்வந்தர்களும், பிள்ளைகளை  முதுகில் அடிக்கும் பெற்றோர்களும் என்றும் இருப்பார்கள்

-------------------------------
11. நடிகை - நடிக்க வராட்டி டாக்டர் ஆகி இருப்பேன்

நிருபர் - மேடம், அதுதான் நடிக்க வர்லையே, கிளம்புங்க, போய் டாக்டர் ஆகுங்க

---------------------------------

12.  உணவே வாழ்க்கைன்னு சொல்றீங்களே, எப்டி?

  நான் ஹோட்டல் முதலாளிங்க

---------------------------------

13. அத்தான், நீங்க ஏன் வெண்டைக்காய் சாப்பிடமாட்டேங்கறீங்க?

நான் ஒரு உத்தம பத்தினன், லேடீஸ் ஃபிங்கரை எப்படி சாப்பிட? # அம்புட்டு நல்லவனாடா நீ?

------------------------------------

14. டாக்டர், ஆம்பளைங்க ஏன் வெண்டைக்காய் சாப்பிடறது இல்ல?

மூளை நல்லா வளர்ச்சி அடைஞ்ச பின்னால தேவை இல்லைன்னு விட்டுடறாங்க

--------------------------------

15. நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?

ச்சே, ச்சே.. நடக்கறப்ப அந்த பயத்தை வெளீல காட்டிக்க மாட்டேன்

-------------------------------------
16. தன்னலம் என்பது தன் உடல் ஆரோக்யம் பற்றிக்கவலைபப்டுவதையும் (தன் நலம்), சுயநலம் என்பது தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்படுவதையும் குறிக்கும்

------------------------------------

17. எந்த தாயும் தன் குழந்தையை பையன், பெண் என வேறு படுத்திப்பார்த்து பாசம் காட்டுவதில்லை

-----------------------------

18. ஆசிரியர் - என்னம்மா சொல்றே? 35 வயசாகியும் நீ பேரிளம்பெண்ணா?

மேடம்- அய்யோ, சார் என் பேர் இளம்பெண் அப்டினு சொன்னேன் # இப்டி ஒரு பேரா?அவ்வ்

---------------------------------

19. மனிதன் செய்யும் குற்றங்களை வேடிக்கை  பார்க்கும் கடவுளை மனிதர்கள் நம்புவது ஆச்சரியம் + விசித்திரம்

-------------------------------

20. என் மனைவி என்னை ரொம்பத்தாங்கறா.

. ஓஹோ, ரொம்ப செல்லமோ?

ம்க்கும், நகை வாங்கித்”தா”ங்கறா, பட்டுப்புடவை வாங்கித்”தா”ங்கறா # பட்ஜெட் பாலு

-------------------------------------------
டிஸ்கி - டைட்டில்ல இருக்கற அட்டு ஃபிகர் வேற யாரும் இல்ல, நான் தான் ஹி ஹி .அதாவது நான் எந்த ட்வீட் போட்டாலும் அதுல யாரையாவது மறைமுகமா @ போட்டு மென்ஷன் பண்ணுவேன்.. அதான் @ட்டு ஃபிகர் # சமாளிஃபிகேஷன் சண்முக ராஜ்

33 comments:

rajamelaiyur said...

பிரஸ்ட் ஹிட்டு

rajamelaiyur said...

நான் அட்டு இல்ல ஹிட்டு

rajamelaiyur said...

//
4. கோயில் வாசலில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு 1 ரூபா கூட தர்மம் செய்யாதவன் உண்டியலில் லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி என்ன பயன்?
//
நியாயமான கேள்வி

rajamelaiyur said...

//பாரதியார், பகத்சிங்க் உட்பட பல நல்லவர்கள் அற்ப ஆயுளில் இறப்பதும், பல அக்கிரமக்காரர்கள் நீண்ட ஆயுளுடன் நலமாக இருப்பதும் இயற்கை விசித்திரம்


//

நீங்க கருணாநிதிய சொல்லலல ?

rajamelaiyur said...

//11. நடிகை - நடிக்க வராட்டி டாக்டர் ஆகி இருப்பேன்

நிருபர் - மேடம், அதுதான் நடிக்க வர்லையே, கிளம்புங்க, போய் டாக்டர் ஆகுங்க
//
இது டாக்குடர் விஜய் ய கிண்டல் பன்றாபோல இருக்கு

rajamelaiyur said...

இன்று என் வலையில்

Hamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

2 மற்றும் 19 ரொம்ப சூப்பர்...நீங்க ஆத்திகர் ரா இல்ல நாத்திகரா???

பேக்கிரவுண்ட் மியூசிக் எல்லாம் கிடையாது..........

Philosophy Prabhakaran said...

பெரியார் பொறந்த ஊர்ல நீங்களும் பொறந்திருக்கீங்கன்னு ஒத்துக்குறேன்...

அம்பலத்தார் said...

அட்ரா சக்க அட்வைஸ் சக்க என்ன போட்டு வாங்கிட்டிங்க

கும்மாச்சி said...

கீச்சு நம்பர் 5 சூப்பர் பாஸ். கடவுள் தனக்கு பாலாபிஷேகம் செய்ய சொல்லி யாரிடமும் கேட்கவில்லை, அழவுமில்லை.

கோகுல் said...

முதல் பத்து.யாவும் முத்து கலக்கிட்டிங்க தல!

அடுத்த பத்து டிபிக்கல் சிபி.அருமை

மூ.ராஜா said...

நீங்க ஆத்திகரா?... நாத்திகரா?...

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

கலக்கல்!!
புதிய பதிவு என் வலைப்பூவில்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தத்துவம்,

அட்வைஸ்,

நகைச்சுவை..

என இன்றை பதிவுக்கு என் வாழ்த்துக்கள்..

Unknown said...

அட்டு பதிவரே...ஏன் இப்படி ஆத்திக வாதிகளையும்...மனைவிக்கு மரியாதை(!) கொடுக்கும் அன்பு நண்பர்களையும் கிண்டல் பண்ணி இருக்கீங்க...ஹிஹி...கொளுத்தி போட்டாச்சி!

கவி அழகன் said...

பெண்களை பார்த்து நடத்துனர்...

"யாரு வயசானவங்களோ அவங்க அந்த சீட்ல உக்காந்து வாங்கம்மா"

அப்புறம் அந்த சீட் காலியாகவே பயணம் செய்தது.. :-)

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
சமாளிப்பிக்கேசன் சண்முகராஜ்....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நல்லா இருக்கிறீங்களா?

பரங்கி மலை ஜோதி, சாந்தி அப்புறம் நித்தியா இவங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?

நிரூபன் said...

முதல் ஆறும் ஆத்திகவாதிகளுக்கு ஆப்பாக அமைந்திருக்கிறது.

காலத்திற்கேற்ற, புதுமை நோக்கிய சிந்தனை.

நிரூபன் said...

ஏனைய நகைச்சுவைகளும் கலக்கல்.

டிஸ்கியில் விளக்கம்...

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

K.s.s.Rajh said...

1,8,11,15.சூப்பர்.......ஏனையவையும் கலக்கல்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ஹ ர ணி said...

நகைச்சுவை எழுத்து எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதற்கென்று ஒரு திறன் வேண்டும். வாய்த்திருக்கிறது உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

ஆத்திகவாதிங்க அருவாளோட வரப்போறாங்க ஓடுடா சிபி....

MANO நாஞ்சில் மனோ said...

பாரதி, பகத் சிங்//

என்ன செய்ய மக்கா, காலம் கலிகாலம்டா அண்ணா...

ஆனாலும் குலைஞரை இப்பிடி தாக்கி இருக்கக்கூடாது...ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

ஆத்திகவாதிங்க உன் பிளாக்குக்கு யாகம் வளர்த்து சூனியம் வைக்கப்போராங்கலாம் ஓடிப்போயிறு...

சசிகுமார் said...

டிஸ்கி எழுத ஒரு தனி திறமை வேணும் போல...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆல் ஓகே!

இந்திரா said...

அட.. எல்லாப் படங்களுமே இயற்கை பற்றியது..
ஹீரோயின் போட்டோ காணோமே?
செந்தில் சார் பதிவா இது???

Unknown said...

அட்டு பிகர் நீங்களாவே இருங்க ஒரு பிட்டு பிகர் படத்தைக்கூட கானல
என்ன சிபியானந்தாவா மாறிட்டிங்களா?

Unknown said...

ஸ்வீட்னா சேட்டுகடை
ட்வீட்டுனா அட்ராசக்க...

ஸ்ரீராம். said...

எட்டாவது...."ஏன் கிள்ளிவளவன் என்று உங்கள் பையன் பெயரை மாற்றி விட்டீர்கள் என்றிருந்தால் பொருத்தமாயிருக்குமோ...

பதினொன்று...அருமை.

படங்கள் எங்கிருந்துதான் எடுப்பீர்களோ...அருமை.

சக்தி கல்வி மையம் said...

பாரதியார், பகத்சிங்க் உட்பட பல நல்லவர்கள் அற்ப ஆயுளில் இறப்பதும், பல அக்கிரமக்காரர்கள் நீண்ட ஆயுளுடன் நலமாக இருப்பதும் இயற்கை விசித்திரம்// ஆமால்ல..

Anonymous said...

தலைப்புல தொடங்கியது...ஒரே வாரல்...