Showing posts with label சேலம். Show all posts
Showing posts with label சேலம். Show all posts

Monday, December 31, 2012

திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. - சகாயம் ஐ ஏ எஸ் பேட்டி

http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/01/sagayam.jpg 

சேலம்:""உத்திரமேரூர் கல்வெட்டில், மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அதற்கான தகுதி நிர்ணயம் குறித்த தகவலும், திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்பது பற்றியும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுபோல் ஆட்சியாளர்கள் வரவேண்டும்,'' என,கோ ஆப்டெக்ஸ் மேலான் இயக்குனர் சகாயம் பேசினார்.

லஞ்ச, ஊழலற்ற சமுதாயம் என்ற தலைப்பில், சேலம் குஜராத்தி திருமண மண்டபத்தில், சிறப்பு கருத்தரங்கு நேற்று நடந்தது. கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் பேசியதாவது:ரத்தம் சிந்தி வாங்கிய தேசத்தில், லஞ்சமும், ஊழலும் பெருகி கிடக்கிறது. நாமக்கல் கலெக்டராக பணியாற்றியபோது, ராசிபுரத்தில் கல்லூரி விழாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற, இரு வாலிபர்கள், அங்கும், இங்குமாக ஓடியபடி சென்றனர்.

அவர்களை மறித்து, என்னுடைய உதவியாளர்கள் சோதனை செய்தபோது, அவர்கள் மது அருந்தியிருந்ததும், லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதும் தெரியவந்தது. உடனடியாக அவர்களை எச்சரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.அப்போது, அதில் ஒரு வாலிபர், 100 ரூபாயை எடுத்து என்னுடைய கையில் கொடுத்தான். லஞ்சம் கொடுத்தால், தப்பித்து விடலாம் என்ற பழக்கத்தை, இந்த சமூகம் உருவாக்கியுள்ளது.

மூன்று ஆண்டுக்கு முன், அப்போதைய முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அதில், "நான் சரியாக வேலை செய்யவில்லையென்றால், என்னை பணி நீக்கம் செய்யுங்கள். ஜாதி, மத ரீதியாக யாருக்காவது உதவியிருந்தால் கைது செய்யுங்கள். 19 ஆண்டு காலத்தில், யாரிடமாவது, ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால், தூக்கிலிடுங்கள்' என, கூறினேன். என்னுடைய இருக்கைக்கு பின்புறம், "லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற வாசகம் தான் இருக்கும்.

உத்திரமேரூர் கல்வெட்டில், அப்போதே, மக்கள் பிரதிநிதிகள் எப்படியிருக்க வேண்டும். அவருக்கு உண்டான தகுதிகள் என்னன்ன, திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே வரவேண்டும் என, கூறப்பட்டுள்ளது.ஊழல் நாடுகள் பட்டியலில், இந்தியா, 140வது இடத்தில் உள்ளது. இது, இந்தியாவுக்கு நேர்ந்த தேசிய அவமானம். அரசு பள்ளிகளில், முன்பு ஆய்வு செய்தபோது, அங்குள்ள மாணவர்களிடம், உன்னுடைய லட்சியம் என்னவென்று கேட்டால், சம்பாதித்து அரிசி வாங்க வேண்டும் என்கின்றனர். அந்த அளவுக்கு வறுமையின் பிடியில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

லஞ்சத்தை ஒழிப்பதை பற்றி பேசுகின்றனர், ஆனால், பின்னர், அவர்களே லஞ்ச ஒழிப்பு போலீஸில் சிக்குகின்றனர். ஊழல், லஞ்சம் என்பது புற்றுநோய் போன்றது. அது தொற்றுநோயாக உருவெடுத்து, தேசத்தையே அழித்து விடும்.

தமிழகத்தில், கடந்த காலங்களில், 40 சதவீதம் இருந்த ஊழல், தற்போது, 80 சதவீதமாக உயர்ந்து விட்டது. கோவணம் தான், இன்றைய விவசாயியின் தேசிய அடையாளமாக மாறிவிட்டது. ஒவ்வொரு மாணவரும், லஞ்சம், ஊழலற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என, சபதம் ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ஜெயராம் கல்லூரி தலைவர் ராஜேந்திரபிரசாத், கன்ஸ்யூமர் வாய்ஸ் பூபதி, ஐந்தாவது தூண் ராசமாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர். மக்கள் கருத்து =


 1. என்றோ ஊழலுக்கு படித்து இருந்த அன்பழகனும், நெடுஞ்செழியனும், இன்னும் பலரும் பலியாகி விட்டதின் பலன் இன்று ஊழல் பெருத்து விட்டது.எங்கும் எதுலும், எவரிடமும் ஊழல்.மாற்றுவது கடினம்.அரசன் எவ்வழி மக்கள் அவ்வ்வழி. 2. என்றோ ஊழலுக்கு படித்து இருந்த அன்பழகனும், நெடுஞ்செழியனும், இன்னும் பலரும் பலியாகி விட்டதின் பலன் இன்று ஊழல் பெருத்து விட்டது.எங்கும் எதுலும், எவரிடமும் ஊழல்.மாற்றுவது கடினம்.அரசன் எவ்வழி மக்கள் அவ்வ்வழி. 3.  CGS 
Kumar எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளை குறை சொல்வது நம் பழக்கம் ஆகி விட்டது. நம்மில் எத்தனை பேர் சுத்தம்? கடையில் பொருள் வாங்கும்போது ரசீது கேட்டு வாங்குகிறோமா? இதுவும் வரி ஏய்ப்புதானே? எத்தனை டாக்டர் பில் கொடுக்கிறார்கள்? தனியார் பள்ளியில் எவ்வளவு பணம் கொடுத்தாவது பிள்ளைகளை படிக்க வைக்கவில்லையா? சாலை விதிமுறைகளை எத்தனை பேர் கடை பிடிக்கிறோம்? ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்வதில்லையா? நம் குறைகளை மறைக்க அடுத்தவர்களை குறை சொல்வது பழக்கம் ஆகி விட்டது4. சகாயம் சொல்வது மிகவும் சரியானது ,.,. ஆனால் ரவுடி தனம் இருந்தால் தான் அரசியலில் இருக்க முடியும் என ஆகிவிட்டது,. நல்லவர்களுக்கு vote போட ஆள் இல்லை,. மொழி, இனம் என மகளை பிரிக்கும் அரசியல் வாதிகள் , புதிய ரத்தம் வந்தால்தான் இது சாத்தியம்,. சில IAS காரர்கள் மதம் மாற்றுவதில் கவனம் செலுதுகின்றேனர்,. அரசாங்க வேலையை சொந்த உபயோகம் சைகின்றேனர்,. 5. ஊழல் நாடுகள் பட்டியலில், இந்தியா, 140வது இடம் இதுகூட உலக சாதனைதானே.இந்த ஊழல் பட்டியல் நிச்சியம் அதிகாரிகள் மக்களை தாண்டி அரசியல் வியாதிகள்தான் முன்னணியில் இருப்பர் அவர்களில் முதல் ஐந்து இடங்களில் 1 தாத்தாவின் திமுக.. 2 தியாக தீபத்தின் காங்கிரஸ். 3 மாயவதி கட்சி. 4லல்லு கட்சி. 5 அம்மா கட்சி. என்று வகுத்தாலும் தமிழனுக்குத்தான் முதலிடமும் கடைசி இடமும்.6. சகாயம் சொல்வது கேட்க கஷ்டமாக இருக்கிறது ஊழல் ஒழிப்பை பற்றிபேசும் அதிகாரிகள் சில நாட்களில் லஞ்ச ஊழல் ஒழிப்பு போலீசிடம் சிக்குகிறார்கள் என்றார். உண்மையில் நடப்பது என்ன?( நேர்மையான) அதிகாரிகள் மிக குறைந்த அளவில் இருப்பவர்களை, மாட்டி விட்டு அசிங்கபடுத்த ஒரு கூட்டம் அரசு அலுவலகங்களில் முழு நேரமாக வேலை செய்வது திரு சகாயத்திற்கு தெரிந்து இருக்க வேண்டுமே என் அனுபவத்தில், தற்போது வேலைக்கு சேரும் அரசு ஊழியர்கள் அதிகபட்சம் நேர்மையாகவே இருக்கிறார்கள். என் 30 வருஷ அரசு பணி அலுவலகத்தில், தற்போது வேலைக்கு சேரும் இளைஞர்கள் கொஞ்சம் முரட்டு தனமாக பேசுகிறார்களே தவிர, லஞ்சத்தை கேட்பதில்லை அவர்கள் கொஞ்சம் கூட மரியாதையுடன் இனிமையாக பழகினால், இன்னும் 20 ஆண்டுகளில் அரசு பணி நன்றாக ஆகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது கடந்த 20=30 ஆண்டுகளில், ஊழல் செயல்பாடுகளில் ஈடுபட்டவரை தண்டிக்க உபயோகபடுத்தவேண்டிய சட்டங்கள், பலவும் ஊழலில் ஈடுபடாத உண்மை ஊழியர்களுக்கு எதிராக மிரட்டுவதற்கே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது 7. பெருசுகள் ரிட்டயர் ஆனபின் பார்க் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு பேசும் பேச்சு போல இருக்கு. இன்றைய நுகர்வோர் கலாசாரம் பெருகிய காலக் கட்டத்தில் அவனவன் யாரைக் கொள்ளையடித்து ,அதை வைத்து தான் மட்டும் நன்றாக வாழலாம் என நினைக்கும்போது .இதெல்லாம் எடுபடுமா? அட தேவாலயங்களில் கூட பாவ மன்னிப்பு கேட்பவர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக பத்திரிக்கையில் வெளிவந்தது., தான் செய்வதை பாவம் என நினைப்பதே பாவம் என நினைக்கும் காலம் இது .அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு முழு நேர மதபோதகராக ஒரு சீனியர் ஐ ஏ எஸ் ஆபீசர் பணிபுரிகிறார்.அதனை எதிர்ப்பீர்களா? நீங்க நல்ல உள்ளம் உள்ளதால் சூது வது தெரியாம பேசறீங்க. உங்க போதகர் வேலை பலன் தருவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவே .செவிடர்கள் காதில் சங்கு ஊதுறீங்க.அவங்க திரும்ப உங்களுக்கு அதையே செய்யாமலிருந்தா சரி 8. சகாயம் அவர்கள் தவறான இடத்தில் இருக்கிற சரியான மனிதர். இவர் இருக்க வேண்டிய இடம் பள்ளிக்கூடம் அங்கு இளம் வயதில் படிக்கும் மாணவர்கள் மனதில் இது போன்ற விஷயங்களை விதைத்தால் எதிர்காலத்தில் சமுதாயம் பயனடையும். ஊழல்வாதிகள் அரசுயந்திரத்தில் உள்ளவர்கள் தான் திருவாளர் பொது ஜனங்கள் அல்ல இது சாதாரண பொது அறிவு, அதுகூட தெரியாமல் அறிவுரை கூறவரக்கூடாது. கிரனைட் வெட்ட அனுமதி கொடுக்கிறாயா? சரியான விதிப்படி அனுமதி கொடு. அரசு இடத்தை ஆக்கிரமித்து, வீடுகட்டி, மின்சார இணைப்பு பெற்று, குடி நீர் இணைப்பு பெற்று, வரியும் கட்டியபின் சுமார் ஒரு பத்து ஆண்டுகளுக்கு பின் அது ஆக்கிரமிப்பு என்று வந்து அதை இடிப்பதை என்னென்பது. 


இதுவரை இருந்த அதிகாரிகளுக்கு அது தெரியாதா, இல்லை லஞ்சம் பெற்றுக்கொண்டு எல்லாம் செய்து கொடுத்தார்களா, எப்படி எடுப்பது.எத்துனை கட்டடங்களை இடித்து இருப்பீர்கள் இதுவரை அதை அனுமதித்த எத்துனை அதிகாரிமேல் இதுவரை நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். மதுரை ஆட்சியர் அலுவலக எரிந்ததற்கு காரணம் அதில் அதிகாரிகள் இடமாற்றம் , புரோமோஷன் சார்ந்த கோப்புகளே அதிகம் இருந்ததாக நாளேடுகளில் செய்தி வந்ததை பார்க்கும் பொழுது கிரனைட் ஊழலில் சம்பந்தபட்ட அதிகாரிகளை கண்டுவிடுவார்கள் என்று சதி செய்து எரிய விட்டு இருக்கலாம் அல்லவா? அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுக்காமல் ஒரு பத்திர பதிவு செய்ய முடியுமா ஒரு சாதாரண குடிமகனால். நன்றி - தினமலர் 

Friday, November 23, 2012

வீரபாண்டி ஆறுமுகம் இறந்தார், சேலம் ரண களம்

http://www.koodal.com/news/2011/july/7-27-2011-9-veerapandi-arumugams-bail-plea.jpgசென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை 11 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.


சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.கடந்த 1937ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி சேலம் மாவட்டம் பூலாவாரியில் பிறந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் கடந்த 1957ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 1958ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை பூலாவாரி ஊராட்சி தலைவராக இருந்தார். அதன் பிறகு அவர் 1970-76ல் பஞ்சாய்தது யூனியன் தலைவராக இருந்தார். பின்னர் 1973ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தார்.1962 முதல் 2011 வரை 6 முறை எம்.எல்.ஏவாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 முதல் 84 வரை மேல்சபை உறுப்பினராகவும் இருந்தார். 4 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.


சேலம் திமுக வட்டாரத்தில் பெரிய சக்தியாக இருந்த அவர் 1989ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். பிறகு 1990-91, 96-2001, 2006-2011 ஆகிய காலகட்டகங்களில் வேளாண் அமைச்சராக இருந்தார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சங்ககிரியில் அதிமுக வேட்பாளர் விஜயலக்ஷ்மியிடம் தோற்றார்.


அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு நில அபகரிப்பு வழக்குகளில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அதை நீதிமன்றம் ரத்து செய்தது. வழக்குகளில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.


அவரது மரணத்தையடுத்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களும் கட்சி கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறும் திமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.


இதே தினத்தில் தான் திமுக மூத்த தலைவரான முரசொலி மாறனும் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.சென்னை: திமுகவின் சேலம் 'தூணாக' விளங்கிய மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் பயணம் சலசலப்புகளோடும் சர்ச்சைகளோடும் பயணித்த ஒன்று...


திமுகவில் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து பணியாற்றக் கூடிய திமுக தலைவர்கள் சிலர்தான்.. அந்த வகையில் பேராசிரியர் அன்பழகன், கருணாநிதி ஆகியோருக்கு அடுத்த நிலை தலைவராக இருந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். 1957ம் ஆண்டு திமுகவில் உறுப்பினராக இருந்தாலும் 1958ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு பதவியில் இருந்து வந்திருக்கிறார்.http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/dmk/Aug-20-salamcm1.jpg

பறவைக்காய்ச்சல் காரணமா?

இதனிடையே வீரபாண்டி ஆறுமுகம் பறவைக்காய்ச்சல் காரணமாக மரணடைந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1957ம் ஆண்டு தி.மு.க.,வில் உறுப்பினரான வீரபாண்டி ஆறுமுகம், 1957 முதல் 70 வரை பூலாவரி ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1970 ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 1962,67,71,89,96 மற்றும் 2006ம் ஆண்டில் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். 1978 முதல் 84ம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக பணியாற்றினார். கடந்த தி.மு.க., ஆட்சியில் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றினார்.


3 நாள் துக்கம்:

வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைந்ததைத் தொடர்ந்து, தி.மு.க., சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. மேலும் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்கள் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சேலத்தில் கடையடைப்பு

: வீரபாண்டி ஆறுமுகம் காலமானதையடுத்து, சேலத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.ஸ்டாலின் இரங்கல்:

வீரபாண்டி ஆறுமுகம் மரணடைந்ததை தொடர்ந்து, தி.மு.க, பொருளாளர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வீரபாண்டி ஆறுமுகம் மரணம் தி.மு.க.,விற்கு இழப்பு என கூறியுள்ளார்.
குண்டர் சட்டம்

அதிமுகவின் தற்போதைய ஆட்சிக் காலத்தில் சிறைவாசத்தில் சிக்கிய திமுக பெருந்தலைகளில் வீரபாண்டி ஆறுமுகமும் முக்கியமானவர். இவர் மீது குண்டர் சட்டம் போட்டும் ஒரு கை பார்த்தார் முதல்வர் ஜெயலலிதா.
54 ஆண்டு கால பொதுவாழ்வு

சுமார் 54 ஆண்டுகால பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரரான வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக வைத்திருந்தவர் என்பது மிகையல்ல.. அதே நேரத்தில் சேலத்தில் அவருக்கு போட்டியாக எவரையும் வளரவிட்டதும் இல்லை. சேலத்தில் திமுக என்றால் தானும் தனது மகன்களும் மட்டுமே என்ற நிலையையும் உருவாக்கி வைத்திருந்தார்.


http://3.bp.blogspot.com/-L6MojmVwx6g/TjK1PXr5t3I/AAAAAAAAEos/qXk-NPjNUkw/s1600/A1.jpgஇறுதிக்கால சர்ச்சைகள்

வீரபாண்டி ஆறுமுகத்தைப் பொறுத்தவரை கட்சியில் சீனியர் என்பதால் கருணாநிதியுடன் மல்லுக் கட்டக் கூடியவர். இந்த சீனியாரிட்டியை மனதில் வைத்துக் கொண்டு கருணாநிதியும் கண்டு கொள்ளாமல்தான் இருந்து வந்தார். அதேபோல் திமுகவில் கருணாநிதி கோஷ்டியில்தான் தொடர்ந்தும் இருந்து வந்தார் அவர்.அண்ணன்' அழகிரி கோஷ்டி...

பேரறிஞர் அண்ணா தலைமை ஏற்று திமுகவில் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகம் தனது கடைசிகாலத்தில் அண்ணன் 'அ' என்றழைக்கப்படும் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி கோஷ்டியில் ஐக்கியமானது ஒரு சோகம் என்றுதான் சொல்ல வேண்டும். மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை அழகிரி நேரில் சந்தித்து தம் பக்கம் சாய்த்துக் கொண்டு போனார்.6 பேர் கொலை வழக்கு

அதிரடி அரசியல்வாதியாக பெயரெடுத்த வீரபாண்டி ஆறுமுகம் 'அடாவடி' அரசியல்வாதியாகவும் இருந்தார். கடந்த திமுக ஆட்சியில் சேலத்தில் 6 பேர் கொல்லப்பட்ட வழகில் அவரது தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் தம்பி மகன் என்பதற்காகவே பாரப்பட்டி சுரேஷை ரொம்பவே ஆதரித்தவரும் வீரபாண்டி ஆறுமுகம்தான்! இந்த 6 பேர் 
ஸ்டாலினை எதிர்த்து...

மு.க.ஸ்டாலினைத்தான் அடுத்த திமுக தலைவராக முன்னிலைப் படுத்தப்படும்போதெல்லாம், வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்கள் எப்படி ஏற்பார்கள்? என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. இந்நிலையில் மதுரையில் அழகிரி தனது படை பரிவாரங்களுடன் தனி கோஷ்டியாக செயல்பட சேலத்தில் வீரபாண்டியும் அழகிரி கோஷ்டியாகவே செயல்பட்டு வந்தார்.
நீக்கும் நிலை...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி நிர்வாகிகளை தேர்வு செய்ய மு.க.ஸ்டாலின் முனைப்பு காட்டிய போது அவருடன் மல்லுக்கட்டிய இரண்டு மாவட்டங்கள் மதுரையும் சேலமும்தான்! சேலத்தில் திமுக இளைஞரணிக்கான விண்ணப்பங்களை தமது மகன் வீரபாண்டி ராஜாதான் வாங்குவார் என்று அறிக்கை வெளியிட உச்சகட்ட கோஷ்டிப் பூசலில் கடுப்பாகிப் போன கருணாநிதி, வேறுவழியில்லாமல் கட்சிப் பத்திரிகையான முரசொலியில் எச்சரிக்கைவிட வேண்டிய நிலைக்குப் போனது.இந்த விவகாரத்தில் திமுகவை விட்டே வீரபாண்டி ஆறுமுகம் நீக்கப்படக் கூடும் என்ற நிலையே வந்தது. தமது கடைசி காலத்தில் தான் நேசித்த தலைவர் கருணாநிதியிடம் 'சங்கடங்களையும்' எரிச்சலையும் சந்தித்தவர் என்பது மறைக்க முடியாத ஒன்று. http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_73952448369.jpg


 நன்றி - தினமலர் ,  தட்ஸ் தமிழ்


டிஸ்கி - ஈரோடு டூ சேலம் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாற்றுப்பாதையில் அந்த ஏரியா மக்கள் பயணிக்கவும்

Wednesday, August 29, 2012

ஈரோடு , சேலம் மாவட்ட மக்களே! உஷார் ! புதிய மோசடிகள் உலா

'ஈமு, நாட்டுக் கோழியைத் தொடர்ந்து அகர் மரம்ஈமு கோழியை வைத்து ஏமாற்றப்பட்ட அதிர்வலையில் இருந்து மீள்வதற்குள், நாட்டுக் கோழி, ஆடு, கொப்பரைத் தேங்காய், டேட்டா என்ட்ரி என்று வரிசையாகப் புகார்கள் கிளம்பவே, கொங்கு மண்டலம் அதிர்ந்து கிடக்கிறது!ஈரோடு நசியனூரைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படும், நந்து கொப்பரா பவுல்ட்ரி கேட்டில் ஃபார்ம்ஸ் நிறுவனம் தங்களை ஏமாற்றிவிட்டதாக ஈரோடு, சேலம் மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகங்களில் புகார் கொடுத்தபடி உள்ளனர். இவர்கள் அனைவரும் கொப்பரைத் தேங்காய், நாட்டுக் கோழி, உயர்ரக ஆடு திட்டங்களில் முதலீடு செய்தவர்கள். புகார் கொடுத்தவர்கள் ஏமாந்த தொகை 100 கோடி ரூபாயைத் தாண்டிச் செல்கிறது. கம்பெனியின் எம்.டி. நந்தகுமாரும், அவருக்கு மூளையாகச் செயல்பட்ட ராஜ்குமாரும் தலைமறைவாகி விட்டனர்.
நாட்டுக் கோழித் திட்டத்தில் ஏமாந்த சேலம் இருப்பாலை பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், ''ஒன்றரை லட்சம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தினால், 300 நாட்டு கோழிக் குஞ்சுகளைத் தருவார்கள். அவர்களே பண்ணை அமைத்துக் கொடுத்து தீவனம், மருந்து, ஊசி எல்லாம் போடுவதாகவும் சொன்னார்கள். கோழிக் குஞ்சுகளைக் கவனமாக மூன்று மாதம் வளர்த்துக் கொடுத்தால், வாரம்தோறும் 2,500 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகச் சொன்னார்கள். கடன் வாங்கித்தான் ஒன்றரை லட்ச ரூபா கட்டினேன்.


 சொன்னபடியே 300 நாட்டுக் கோழிக் குஞ்சுகளைக் கொடுத்தவங்க, மூன்று வாரங்கள் சம்பளமும் கொடுத்தாங்க. அதுக்குப் பிறகு வரலை. என்னை மாதிரி எங்க ஊரில் மட்டும் பணத்தைக் கட்டி நான்கு பண்ணைகள் போட்டிருக்காங்க. எங்களைப் பார்த்து 20-க்கும் மேற்பட்டவங்க வைப்புத் தொகை கட்டி ரெண்டு மாசமாகுது. அவங்களுக்குக் கோழிக் குஞ்சுகளும் தரலை. ஓமலூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்டவங்க ஏமாந்து இருக்காங்க'' என்றார் கவலையுடன். 
சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த ராணி, கொப்பரைத் தேங்காய் ஸ்கீமில் பணம் கட்டி ஏமாந்துள்ளார். ''எங்க வீட்டுக்காரர் மூட்டை தூக்கும் தொழிலாளி. நானும் ஏதாவது தொழில் செஞ்சா குடும்பக் கஷ்டம் தீரும்னுதான் இந்த ஸ்கீம்ல சேர்ந்தேன். ஒரு லட்சம் வைப்பு நிதியாகக் கொடுத்தால், வாரா வாரம் வெள்ளிக்கிழமை 4,000 கொப்பரைத் தேங்காய் போடுவாங்க. அதை உறிச்சு, தேங்காயை உடைச்சுக் காயவைச்சுக் கொடுத்தால், வாரத்துக்கு 3,500 ரூபாய் சம்பளம் கொடுப்பதாச் சொன்னாங்க. அதனால், வட்டிக்குக் கடன் வாங்கிப் பணத்தைக் கட்டினோம். ரெண்டு வாரம் தேங்காய் போட்டாங்க. அதுக்குப் பிறகு வரலை. கம்பெனியில் போய் பார்த்தால், பூட்டிக்கிடக்குது'' என்று கண்ணீர் சிந்தினார்.சேலம் மாவட்டப் பொருளாதாரக் குற்றப் பிரிவுத் துணைக் கண்காணிப்பாளர் கணேசனிடம் பேசியபோது. ''இவர்கள் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் கைவரிசையைக் காட்டி இருக்கிறார்கள். ஈரோட்டில்தான் நிறைய பேர் ஏமாந்து இருக்கிறார்கள். அத்தனை புகார்களையும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கிறோம். விரைவில் அதிரடிகள் அரங்கேறும்'' என்றார்.ஈரோடு சென்னிமலை தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பொன்னையன், '''பண்ணைக் கோழி வளர்வதற்கு மூன்று மாதங்கள் வரை ஆகும். இந்த மூன்று மாதங்களுக்கும் நிறுவனங்கள் சொல்லும் கணக்குப்படி, செட் அமைத்துக் கொடுத்து தீவனம் தந்து, பராமரிப்புத் தொகையையும் கொடுப்பதாக இருந்தால், அந்த நிறுவனத்துக்கு ஒரு பண்ணைக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். பண்ணை முறையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு பெரிய சந்தையும் கிடையாது. கோழி மற்றும் ஆடு பற்றி நம் மக்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் தங்களுடைய பேராசை காரணமாக ஏமாறுகிறார்கள்.ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் அரசு பதிவு பெற்ற நிறுவனம் என்றும் ஐ.எஸ்.ஓ. தரச் சான்று பெற்றவர்கள் என்றும் கொட்டை எழுத்துகளில் விளம்பரம் செய்கின்றனர். இதை ஏன் கால்நடைத் துறையோ மாவட்ட நிர்வாகமோ கவனிப்பது இல்லை? புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்பது தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் கதை. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க கடுமையான சட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும்'' என்றார்


.

கால்நடைத் துறை அமைச்சர் சின்னையாவிடம் பேசினோம். ''தனியார் நாட்டுக் கோழிப் பண்ணைகளுக்கு அரசு அங்கீகாரம் எதுவும் வழங்க வில்லை. அரசு அங்கீகாரத்துடன் செயல்படுகிறோம் என்று தனியார் ஒப்பந்தப் பண்ணைகள் கூறினால், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.இந்தச் சிக்கல்கள் போதாது என்று இப்போது, 'அகர் மரம் வளர்ப்போம்... அரசனாய் வாழ்வோம்!’ என்ற புதிய திட்டம் கொங்கு மண்டலத்தில் பரபரக்கிறது. 'ஒரு லட்ச ரூபாய் செலுத்தினால் 200 மரக்கன்றுகளும், ஆறு வருடங்களுக்கு வருட போனஸ் 10 ஆயிரம் ரூபாயும், 6-வது வருட இறுதியில் 10 லட்ச ரூபாயும் கொடுப்போம்’ என்று தூண்டில் போடுகிறார்கள். 'மச்சி இந்த ஸ்கீம் நம்பிக்கையாத் தெரியுதே... பணம் கட்டலாமா?’ என்று ஏமாறத் தயாராகிறது இன்னொரு குரூப்!

நன்றி - ஜு வி

Wednesday, May 30, 2012

ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றப்பட்டு கற்பை இழந்த சேலம் பெண்கள்-ஜூ வி கட்டுரை


ட்பு வட்டங்களுக்குத் தளமாக இருக்கும் ஃபேஸ்புக், சில நேரங்களில் தப்பு வட்டங்களுக் கான களமாகி விடுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சேலத்தைச் சேர்ந்த லலிதாவும் கன்னியாகுமரியை சேர்ந்த மேரியும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஆன நண்பர்களிடம் தங்களையே இழந்து நிற்கிறார்கள் இருவரும்! 


கடந்த 24-ம் தேதி வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வந்து புகார் கொடுத்தவர்கள் சார்பில் பேசினார் வழக்கறிஞர் மணிகண்டன். ''லலிதா, மேரி இருவரும் தோழிகள், சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இருவரும் ஃபேஸ்புக்கில் இருக்கின்றனர். ஃபேஸ்புக் மூலமாக லலிதாவுக்கு வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் பழக்கமானார். சதீஷின் நண்பர் ஆனந்தபாபுவும் லலிதாவிடம் அறிமுகமாக, மேரியும் அவர்களின் நட்பு வட்டத்தில் சேர்ந்துள்ளார்.

 சிவப்புச்சட்டை போட்டு நான் டேஞ்சரான ஆள்னு சொல்லாம சொல்றாரு போல அண்ணன் பார்க்க பாரதிராஜா பையன் மனோஜ் மாதிரி இருக்காரு
அடுத்து செல்போன் பேச்சாக இவர் கள் நட்பு வளர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் ஒரு நாள் லலிதாவையும் மேரியையும் பார்க்க ராணிப்பேட்டை நண்பர்கள் காரில் சென்னைக்கு வந்தனர். இருவரையும் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதாக அழைத்துப் போனார்கள். சி.பி -   ஹா ஹா >>வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதாக>>> 

 தங்கக்கோயிலா? அங்கே போய் தங்கறதுக்கு கோயிலா?


ஆனால் அவர்கள், ராணிப்பேட்டையில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துப் போயி ருக்கிறார்கள். அங்கே ஆனந்த பாபு - மேரி ஓர் அறையிலும், லலிதா - சதீஷ் ஓர் அறையிலும் தங்கி இருக்கின்றனர். காதலிப்பதாகவும் உருக்கமான வார்த்தைகளால் சொல்லி இருக்கிறார்கள். தங்களை நிச்சயமாகத் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எண்ணி, இருவரும் அவர்களிடம் ஏமாந்து போய் இருக்கின்றனர். பிறகு, 'எப்போது திருமணம்?’ என்று பெண்கள் இருவரும் நச்சரித்திருக்கிறார்கள்.


சி.பி - ஏம்மா, அப்பாவிப்பெண்களே! அந்த நச்சரிப்பை மேட்டர்க்கு முன்னாலயே பண்ணி இருந்தா தக்காளிங்க 2ம் ஓடி இருக்குமே?


 ஆள் எஸ் ஜே சூர்யா மாதிரியே இருக்காரு. அப்பவாவது பொண்ணுங்க ஜாக்கிரதையா இருந்திருக்கலாம்
'உங்களிடம் நாங்கள் டைம் பாஸ்க்குத்தான் பழகினோம். உங்களை எங்களால் திருமணம் செய்ய முடியாது. மீறி ஏதாவது பிரச்னை செய்ய நினைத்தால், உங்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் எங்களிடம் இருக்கிறது, அதை ஃபேஸ்புக்கில் போட்டுவிடுவோம்’ என்று மிரட்டி இருக்கிறார்கள்.சி.பி - உடனே பொண்ணுங்களும் மிரட்டி இருக்கனும்.. தம்பி.. உன் ஆபாச ஃபோட்டோவும் இருக்கு அதை நாங்க நெட்ல போட எவ்ளவ் நேரம் ஆகும்? எங்க முகத்தை மறைச்சு உன் முகம் தெரியற மாதிரி போட்டுடுவோம்னு மிரட்டி இருக்கலாம் , பய புள்ளங்க பயந்து தெறிச்சிருக்கும்

அவர்களின் நண்பர்களான திலீப், லூயிஸ், ஆனந்த நித்தியானந்தம் ஆகியோரும் இந்தப் பெண் களை மிரட்டவே, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள் ளார்கள். இப்போது ஆனந்த், சதீஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்'' என்றார் கொந்தளிப்பாக.
வேலூர் காவல் துறையினரிடம் விசாரித் தோம். ''சதீஷ் மிகவும் டிப்டாப்பாக இருப்பான். பெண்களை ஏமாற்றுவது சதீஷ§க்கும் அவனது நண்பன் ஆனந்த பாபுவுக்கும் கை வந்த கலை. ஏற்கெனவே சென்னையைச் சேர்ந்த  விஜயலட்சுமியை ஃபேஸ்புக் மூலம் தொடர்புகொண்டு, சதீஷ் ஏமாற்றி உள்ளான். 'உன்னுடைய ஆபாசப் படம் என்னிடம் இருக்கிறது. இரண்டு லட்சம் தர வேண்டும்’ என்று மிரட்டி, 50,000 ரூபாய் வாங்கியுள்ளான். மேலும் மிரட்டவே, விழுப்புரம் மாவட்டத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். இதுபோன்று நிறையப் பெண்களை ஏமாற்றி இருக்கிறார்கள். எங்களின் கணிப்புப்படி 15-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்திருப்பதாகத் தெரிகிறது'' என்று சொன்னார்கள்.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் வேலூர் மாவட்டத்தில் யாஸ்காம் இன்டர்நெட் சென்டர் நடத்திவரும் ஆஸாம் இர்பான், ''பெண்கள் ஃபேஸ்புக்கில் எந்தக் காரணம்கொண்டும் யாருக்கும் தொலைபேசி எண்ணைத் தரக்கூடாது. நன்கு அறிமுகமான நபர்களை மட்டுமே தங்களுடைய நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தனது புகைப்படங்களையோ அல்லது குடும்பத்தாரின் புகைப்படங்களையோ ஃபேஸ்புக்கில் வெளியிடக்கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் சாட் செய்யாதீர்கள்'' என்று ஆலோசனைகள் சொன்னார்.பெண்களே உஷார்!

Wednesday, November 02, 2011

சேலம் டாக்டர்-ன் மோசடிகள் - உண்மை சம்பவம்


Anti-smoking ads
Anti-smoking ads

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிராமத்துல டாக்டர் சண்முகம் மிக ஃபேமஸ்.. அவருக்கு 2 பொண்ணுங்க , முத பெண்ணின் பெயர் லதா.. 2வது பெண்ணின் பெயர் உமா பாரதி..

2வது பெண்ணை டாக்டருக்கு படிக்க வைத்தார்..அவருக்கு மாப்பிள்ளையும் டாக்டராவே பார்த்து மேரேஜ் பண்ணி வெச்சாரு.. சேலத்துல  மாப்ளைக்கு சொந்தமா க்ளினிக் இருக்கு..

அப்துல்கலாம் கிட்டே அவார்டு வாங்கற மாதிரி உமாபாரதி  ஒரு ஃபோட்டோவை ரெடி பண்ணி அதை தன் க்ளினிக் விளம்பரமா வெச்சு  காசு பார்த்தாங்க.. அது யாரோ கண்டு பிடிச்சு கேஸ் ஃபைல் பண்ணி பல முறை நடையா நடந்து கோர்ட்டின் கண்டனத்தையும் , அபராதம் கட்டச்சொல்லி ஆணையும் பெற்று எப்படியோ மீண்டு வந்தார்..


இப்போ மோசடி உமாபாரதியின் கணவர் டர்ன்..

டெஸ்ட் டியூப் பேபி ட்ரீட்மெண்ட்ல அவர் ஸ்பெஷலிஸ்ட்.. ஆனா அவர் ஒரு எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் தான்.. அப்புறம் எப்படி இவர் டெஸ்ட் டியூப் பேபி ஸ்பெஷலிஸ்ட் ஆனார் என்பது இப்போ தான் வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கு..

ஒரு தம்பதி குழந்தை இல்லைன்னு ட்ரீட்மெண்ட்க்காக வந்திருக்காங்க.. பல டாக்டர்ட்ட போயாச்சு, பல கோயில் குளம் அலைஞ்சாச்சு.. ஆனா மழலை பாக்கியம் இல்லை..

டெஸ்ட்ல மனைவி சைடுல எந்த குறைபாடும் இல்லைன்னு தெரிய வந்தது.. கணவனிடம் உயிர் அணுக்கள் கவுண்ட்டிங்க் கம்மி .. டெஸ்ட் டியூப் பேபிக்காக வந்திருக்காங்க..

வழக்கம் போல் செய்யும் பில்டப்பாக ரொம்ப சிரமம் சார் என சொல்லி ஏதோ டெஸ்ட் எடுப்பது போல் பாவ்லா காட்டி ஒரு வாரம் கழிச்சு வாங்க, ரிசல்ட் சொல்றேன் என அனுப்பி விட்டார்.. ஒரு வாரம் கழிச்சு அவங்க வந்ததும் 10 லட்சம் ரூபா செலவு ஆகும்.. என்று கூறி இருக்கிறார்..

ரொம்ப அதிகம் என அந்த தம்பதி தயங்கியதும் பேரம் (!!) ஒரு வழியாக படிந்து ரூ 8 லட்சத்துக்கு வந்தது..

கணவனிடம் இருந்து ஸ்பெர்ம் எடுத்துக்கொண்டார்.. அடுத்த நாள் ட்ரீட்மெண்ட்க்கு மனைவியை வரச்சொல்லி இருந்தார்..

பொதுவாக ஒரு மனைவி என்பவர் கணவன் தன்னைத்தவிர வேற யாராவது ஒரு பெண்ணை பார்த்தாலோ, பழகினாலோ மனைவிக்கு பிடிக்காது , பொஸஸிவ்நெஸ்தான் காரணம்.. ஆனால் உமாபாரதி செய்த மேட்டர் தமிழ்க்காலாச்சாரத்துக்கு முற்றிலும் புதியது, புதிரானது.. பணம் என்னவெல்லாம் செய்யத்தூண்டுகிறது என்பதற்கு ஒரு உதாரணமாக , மோசமான முன்னுதாரணமாக உமா பாரதி விளங்கினார்அந்த பேஷண்ட்டிடம் பிரெயின் வாஷ் செய்ய ஆரம்பித்தார்..

 ”இங்கே பாரம்மா, டெஸ்ட் டியூப் பேபி ட்ரீட்மெண்ட் என்பது ரொம்ப ரிஸ்க்.. 40% சான்ஸ் தான் இருக்கு.. சப்போஸ் 4 மாச கருவுல கலையவும் வாய்ப்பு இருக்கு, அதே கரு 6 மாசத்தில் கலைந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து தான்.. “

“ இப்போ என்னம்மா பண்றது?”

“ ரொம்ப ஈஸியான,100% ரிசல்ட் கரெக்ட் ஆக , இந்த பிரச்சனைக்கு ஒரு வழி இருக்கு.. ஆனா அதுக்கு நீ சம்மதிக்கனும்..”

“என்னம்மா? என்னென்னவோ சொல்றீங்க?”

“ இதெல்லாம் சகஜம் டவுன்ல.. நிறைய பேர் இப்படி ஓக்கே சொல்லி இருக்காங்க.. அதாவது நீங்க கண்ணை மூடி 5 நிமிஷம் அட்ஜஸ் பண்ணிக்குங்க ...என் கணவர் உங்களுக்கு குழந்தை வரத்தை இயற்கை முறைப்படி தருவார்.. விஷயம் யாருக்கும் தெரியாது...”

அந்தப்பெண் மிரண்டு போய் வேக வேகமாக வீட்டுக்கு வந்து விட்டார்,.. அட்வான்ஸ் ஆக ரூ 5 லட்சம் பணம் கட்டி இருக்கிறார்கள்.. அவள் தன் கணவனிடம் அழுது கொண்டே இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார்..

அவர் சில ஆட்களை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் போய்  நியாயம் கேட்டிருக்கிறார்.. பணத்தை ரிட்டர்ன் கேட்டார்.. டாக்டர் தர மறுத்து விட்டார்.. அட்வான்ஸ் கொடுத்தா கொடுத்ததுதான்.. நான் அப்படி எல்லாம் உங்க மனைவி கிட்டே கேட்கவே இல்லை.. அவங்க தான் ஏதோ சதி செய்யறாங்க  அப்டினு பிளேட்டை திருப்பி போட்டிருக்கிறார்.. 

இப்போது கேஸ் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

பிள்ளை வேண்டி ட்ரீட்மெண்ட் எடுக்கும் நபர்களுக்கு சில ஆலோசனைகள்


1. மனைவியுடன் அவரது அம்மா, அல்லது உங்கள் அம்மா துணையாக எப்போதும் விட்டு வாருங்கள்
 
2. சில டாக்டர்கள் வேண்டும் என்றே உங்களை டைவர்ட் பண்ணவும் , பெண்ணை தனிமைப்படுத்தவும் ஏதாவது வாங்கி வர சொல்லலாம். அதனால் வெளிவேலைகள் பார்க்க இருவர்.. மனைவியுடன் ஒரு பெண் துணை அவசியம்.. 3. நல்ல டாக்டர் தானா? என வெளி உலகில் விசாரிக்கவும், ஆல்ரெடி அவரிடம் ட்ரீட்மெண்ட் எடுத்தவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் அனுபவம் கேட்டறியவும். 

4. எல்லாவற்றையும் விட சிறந்தது. அநாதை இல்லங்களில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது.


டிஸ்கி - இந்த சம்பவம் நடந்து 4 வருடங்கள் ஆகிறது. வழக்கு இன்னும் நடந்து வருகிறது, ஹாஸ்பிடல் சீல் வெச்சுட்டாங்க. சேலத்துலதான் சீல். அவங்க 2 பேரும் இப்போ தலை மறைவு. எந்த ஊர்ல ஹாஸ்பிடல் திறந்து வெச்சாங்களோ? சமீபத்தில் வெளியான கருங்காலி என்ற படம் இந்த சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்.