Thursday, November 03, 2011

சுட்டிப்பாப்பாவிடம் ஒரு மக்கு பிளாஸ்திரி அப்பா வாங்கிய பல்புகள்

 என் குட்டி தேவதையின் பெயர் அபிராமி ஸ்ரீ.. எட்டு வயது ஏஞ்சல்.. ஈரோடு இந்து கல்வி நிலையத்தில் 3ஆம் வகுப்பு படிக்கிறா.. அவ சில சமயம் டாடின்னு கூப்பிடுவா, பல சமயம் அப்பா, வெகு சில சமயங்களில் பெயர் சொல்லி.. கோபம் வரும் போது டேய் லூசு... எப்படி கூப்பிட்டாலும் இனிமைதான் எனக்கு..  மத்தவங்க கிட்டே பல்பு வாங்குனா அவமானமா இருக்கும்.. ஆனா நம்ம வாரிசு கிட்டே வாங்குன பல்பு ஜாலியா இருக்கு..

அவமானங்களையே கூச்சப்படாம பதிவு போடற நாம வெகுமானத்தை போடாம விடுவோமா?ஹா ஹா இதோ அணிவகுப்பு....

1. டாடி.. ராட்டன் தூரி சுத்தலாம், வா.


எனக்கு தலை சுத்தும், நீ போம்மா..

நீ சுத்த வேஸ்ட்ப்பா.....


--------------------------------------

2. டாடி.. இந்த ஹோம் ஒர்க்கை எப்படி பண்றது?ன்னு . எனக்கு சொல்லிக்குடுங்க...

அம்மா கிட்டே கேளுடா செல்லம்..

ஏம்ப்பா.? நீ மக்கா?

--------------------------------------

3. ஓடும் பஸ்ஸில்..

கண்டக்டர் வர்ற வரை நீ என் மடிலயே இரு.. ஒரு டிக்கெட் மிச்சம் பண்ணலாம்..

அப்போ. அம்மாவையும் மடிலயே உக்கார வைங்கப்பா. 2 டிக்கெட் மிச்சம் பண்ணலாம்..

-------------------------------------------

4. அப்பா. எடுபுடி ஆள்னா என்ன அர்த்தம்?

ஏன் கேட்கறே?

அப்பாவை ஏன் மேரேஜ் பண்ணிக்கிட்டே ?அப்டினு அம்மா கிட்டே  கேட்டப்ப நிறைய எடுபுடி வேலை செய்ய ஆள் தேவைபட்டுச்சுனு சொன்னாங்கப்பா.

--------------------------------------

5. அப்பா... நம்ம வீட்ல எல்லா வேலையும் செய்யறே.. ஆனா அம்மாவோட அம்மா வீட்டுக்கு வந்தா மட்டும் கால் மேல கால் போட்டுக்கிட்டு கெத்து காட்றியே ஏன்?


”  .............................................”


----------------------------------------------------------

6. அப்பா... ஆஃபீஸ்ல ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் எவ்ளவ் தர்றாங்க? (HRA)

ரூ 3000

ஆனா ஹவுஸ் ஓனர் கிட்டே ரூ 2000 தானே தர்றே? ஏன் ஏமாத்தறே? ஒண்ணா ஆஃபீஸ்ல ரூ 1000 ரிட்டர்ன் குடு, அல்லது ஹவுஸ் ஓனர் கிட்டே ரூ 3000 குடு.


--------------------------------------------------------

7. அப்பா... யு கே ஜி  பாடத்துல ஒரு டவுட்டு..

ஸாரிம்மா.. நான் எல்கேஜி , யு கே ஜி  எல்லாம் படிக்கல..

அப்போ என் கூட நீயும் ஸ்கூல்க்கு வாப்பா.

---------------------------------------------------------------

Modern Slides


8. டாடி.. டூர் போலாமா?

ஆஃபீஸ்ல லீவ் கிடைக்காதம்மா.

ஏம்ப்பா? உங்களுக்கு லீவ் லெட்டர் எழுத தெரியாதா?


-------------------------------------------------------

9. அப்பா, ஆஃபீஸ் மீட்டிங்க்னா என்ன?

எப்படி வேலை செய்யறது?ன்னு ஹிண்ட்ஸ் குடுப்பாங்க..


அப்போ உனக்கு சுய புத்தியே இல்லையா?

----------------------------------------------------

10. பிராக்ரஸ் கார்டுல ஏன் தமிழ்ல சைன் பண்றீங்க?

தமிழன் தமிழ்ல தான் கையெழுத்து போடனும்மா..


பொய்.இங்க்லீஷ் தெரியாதுதானே?


----------------------------------------------------

11. சைக்கோ -ங்கறதை தமிழ்ல எழுதறப்ப ஏன்  க்கோ என எழுதறே?

இங்கிலீஷ்ல சைக்கோ என்ற வார்த்தைல P  சைலண்ட், அப்போ அந்த லாஜிக் பிரகாரம் தமிழ்ல சை சைலண்ட்,,

-----------------------------

12. அப்பா, நீ ஏன் பியூட்டி பார்லர் போறதில்லைன்னு கண்டு பிடிச்சிட்டேன்..


ஏன்?

அது பியூட்டிங்களுக்கு மட்டும் தான்..

--------------------------------------------


13. பாப்பா - டாடி, கடவுள் ஒரு ஐ ஸ்பெஷலிஸ்ட்டா?

ஏன்?

தப்பு செஞ்சா உம்மாச்சி கண்ணை குத்தும்னு மிரட்றாங்களே?


----------------------------------------

14. ஆண்கள் எந்த வித முக மூடியும் இல்லாமல் (அணியாமல் )சந்தோஷமாக பொழுதை கழிப்பது தன் மழலையுடன் இருக்கும் தருணங்களே!

-------------------------------------

15.பெண்கள் எந்த வித முக மூடியும் இல்லாமல் சந்தோஷமாக பொழுதை கழிப்பது தன் அம்மா வீட்டில் இருக்கும் தருணங்களே!

--------------------------------------

42 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

appanukku pulla thappama poranthirukku. :)

சக்தி கல்வி மையம் said...

கண்டக்டர் பல்பு சூப்பரோ சூப்பர்.,

Unknown said...

அஹா...இன்னோரு பதிவரை உருவாக்கிட்டு இருக்காருப்பா....
(குழந்தையின் பள்ளி,வகுப்பு,பெயர் பதிவில் நீங்கள் போடுவதற்க்கு எனக்கு உடன்பாடு இல்லை)

மூ.ராஜா said...

இன்று காலை சிறந்த பதிவுடன் ஆரம்பித்ததில் மிக்க மகிழ்ச்சி.

RAMA RAVI (RAMVI) said...

உங்க பெண் ஆச்சே நன்னாதான் பல்ப் கொடுத்திருக்கா!

3,4 சூப்பர்.

14,15 உண்மை.

குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

காலை வணக்கம் பாஸ்,

கலக்கலான நகைச்சுவைகள்.

உங்கள் சுட்டியும் வருங் காலத்தில் காமெடியில் களை கட்டும் என நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

பஸ்ஸில மடியில இருக்கிற காமெடி தான் செம ஜோக்............

செல்ல நாய்க்குட்டி மனசு said...

2 -குட்டி பிள்ளைக்கு கூட தெரிஞ்சிடுச்சா ?
10 - எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்குது இந்த குட்டி பாப்பா
14 -மிகச் சரியாக சொன்னீர்கள்
15 -அங்கே தானே ஹாய்யா வேலை செய்யாம இருக்க முடியுது
good
'வீடு' சொல்வதுடன் நானும் ஒத்துப் போகிறேன்

கடம்பவன குயில் said...

அபியின் அலப்பறை அட்டகாசம். ஆனாலும் வருங்காலத்தில் நீங்க இன்னும் நிறைய பல்பு அபிகிட்ட வாங்குவீங்கன்னு நினைக்கிறேன்.

கேரளாக்காரன் said...

Bus buld ultimate boss

வனம் said...

சரி கையெழுத்து தமிழில் போடுரிங்க......


குழந்தையோட பேர் மட்டும்.........


புத்திசாலி குழந்தை வாழ்த்துக்கள்

Unknown said...

வீட்டுக்கு வீடு வாசற்படி போயி..
இப்ப பல்பு !!!
குட்டிப் பாப்பா குண்டு பல்போ ?

//அம்மாவோட அம்மா வீட்டுல கால்மேல கால் போட்டிட்டு...//
முடியும் ?

வெளங்காதவன்™ said...

:-)

Astrologer sathishkumar Erode said...

ரெண்டு டிக்கெட் மிச்சம் பண்ணலாம் சூப்பர் ஜோக்...அலவுன்ஸ் அதைவிட கலக்கல்..அபிராமி நல்லாருக்க்கா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Leave letter HRA Super

சசிகுமார் said...

lkg,ukg ஜோக் செம சூப்பர்....

SURYAJEEVA said...

5,7,13,14,15 A-one

Vathiyar Paiyan said...

This is my experience..
Me:- Where can we take new dress for your birthday....
Son:- as usual from dress shop only daddy.....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பல்போ.. பல்பு...


செம பல்புகள்...

கோகுல் said...

சுட்டிக்கு வாழ்த்துக்கள்!

மகேந்திரன் said...

கலக்கல் காமெடிகள் நண்பரே....

Lingesh said...

சந்தோசமான தருணங்கள். அருமையான பதிவு...நன்றி.

பால கணேஷ் said...

-எடுபிடி ஆள் ஜோக்கும், எல்கேஜி யுகேஜி ஜோக்கும் மனம் விட்டுச் சிரிக்க வைத்தன. மற்றவையும் குறைவில்லை. அப்பாவுக்கு பல்பு தந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்...

Prakash said...

ஜோக்ஸ் எல்லாம் நன்றாக இருந்தது... அனால் உங்கள் கற்பனையை குழந்தை சொன்னதாய் உருவக படுத்தியது உறுத்துகிறது.

எட்டு வயது குழந்தை HRA பற்றி பேசும் என்பது நம்பும்படியாய் இல்லை..

rajamelaiyur said...

//அவமானங்களையே கூச்சப்படாம பதிவு போடற நாம வெகுமானத்தை போடாம விடுவோமா?ஹா ஹா இதோ அணிவகுப்பு....

//

சரியா சொன்னிங்க தல

rajamelaiyur said...

பயங்கர பல்பு போல ?

கூடல் பாலா said...

அடேங்கப்பா எத்தனை பல்பு !

சென்னை பித்தன் said...

100 வாட்ஸ்!

Unknown said...

சூப்பர்!

கடைசில ரெண்டு வரி செம்ம!!

செவிலியன் said...

வீட்ல ஜீரோ வாட்சுல இருந்து ஆயிரம் வாட்ஸ் வரைக்கும் பல்பு எரியும் போல இருக்கு...நல்ல அப்பா...நல்ல பொண்ணு....அருமை...

COOL said...

பல்ப் சூப்பர்...

ராஜி said...

பச்சை பிள்ளைக்கிட்ட பல்ப் வாங்கிகிட்டு பேச்சை பாரு, லோள்ளை பாரு, எகத்தாளத்தை பாரு

Angel said...

வாழ்த்துக்கள் ......,இந்த மாதிரி நிறைய பல்பு வாங்கத்தான் :)

ராஜி said...

உங்க பாப்பாக்கு HRA லாம் என்னன்னு தெரியுதா? ரொம்ப புத்திசாலியான பொண்ணுதான்.

Agarathan said...

மகிழ்ச்சியான தருணங்கள். அருமையான பதிவு...நன்றி.

ராஜி said...

15, 16 top class

MANO நாஞ்சில் மனோ said...

கடைசி ரெண்டும் டச்சிங் டச்சிங் ஹார்ட் டச்சிங்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

குழந்தைங்க கூட இருந்தால் அழகும், மனசுக்கு இதமுமா இருக்கும் ம்ம்ம்ம் நமக்கு கொடுப்பினை இல்லை...

MANO நாஞ்சில் மனோ said...

எல்லாமே செம கலக்கல்டா அண்ணா...!!!

நம்பிக்கைபாண்டியன் said...

வாங்கிய அத்தனை பல்புகளும் பிரகாசமாக எரிகின்றன!இன்னும் நிறைய வாங்கி அதையும் பகிர வேண்டுகிறேன்.

Unknown said...

அனைத்து பல்புகளும் 1000 வாட்ஸ்