Published on Wednesday, August 03, 2016 at 7:30:00 AM with 1 Comments

கலைஞர் VS மோடி - காமெடி கும்மி

1

யுவர் ஆனர், தீர்ப்பு சாதகமா சொல்வதுன்னு முடிவு பண்ணீட்டீங்க? எதுக்கு தள்ளிப்போடனும்? இப்பவே சொல்லலாமில்ல?

 எதுக்காக ரிலீஸ்?னு சப்பைக்கட்டு கட்ட காரணம் கண்டுபிடிக்கனும்,டைம் வேணும்

=================


2  தலைவரே! நீங்களும் சம்பளம் வேணாம்னு சொல்லிட்டீங்களாமே?ஆச்சரியமா இருக்கு?
 பாவத்தின் சம்பளம் மரணம்னு சொன்னாங்க, அதைத்தான் வேணாம்னேன்



=================

சார்.பால் 1 லிட்டர் கொடுங்க

 மாட்டுப்பாலா? எருமைப்பாலா?

 அடடா, தெரியலையே?

 வீட்ல எப்டி திட்டுவாங்க?

 எருமைன்னு

 அப்போ எருமைப்பாலா தான் இருக்கும்

========================


4  சார், FDFS னா   என்ன?

 FIRST DAY FIRST SHOW,அதாவது ரிலீஸ் ஆகும் அன்றே முதல் காட்சி பார்ப்பது

ஓஹோ, அப்போ நைட் 7 மணி ஷோ ஃபர்ஸ்ட் நைட்  ஃபர்ஸ்ட் ஷோவா?


================


5 கலெக்டர் விஜய் ரசிகர்னு எப்படி சொல்றே?

 மாவட்ட மேம்பாட்டுத்திட்டம் கறதை ஜில்லா தெறி ஸ்கீம் அப்டீங்கறாரே?



================

6  சார், உங்க ஜோக்ஸ் படிச்சா  சிரிப்பே வர மாட்டேங்குதெ?

 சிரிப்பு வர்ற மாதிரி காமெடி எழுத த்தெரிஞ்சா நான் சினி ஃபீல்டு போயிருப்பேன் இல்ல?எதுக்கு இங்கே வாரேன்?



================


7   தலைவரே!
 தேர்தல் ஆணையம் அயோக்கியத்தனம் மிக்கதுன்னு சொன்னீங்களா?

 ஆமா

அப்போ அந்த அயோக்கியர் நடத்தி ஜெயிச்ச 89 தொகுதியையும் ரிசைன் பண்ணிடுவீங்களா?


=================


எங்கள் ஆட்சியில் தான் சச்சின் -க்கு பாரத ரத்னா விருது கிடைத்தது. எங்கள் ஆட்சி மலர்ந்திருந்தால் தெறிக்கும் அதே விருது கிடைத்திருக்கும்


==================

தலைவரே! நீங்க உங்க சொந்தப்பையனுக்காக உங்க பதவியை தியாகம் செஞ்சிருக்கீங்களா?
இல்ல
அப்புறம் எப்டி”இளைஞர்கள் தியாகம் செய்ய வேண்டும்”னீங்க?


================


10 தலைவரே! தேர்தலுக்கு முன்பு ஒரு டைம் நீங்க மோடியை பாராட்னிங்க

 ஆமா

 அதனால தான் 89  சீட் கிடைச்சுதுன்னா ஒத்துக்குவீங்களா?


===================

11 தலைவரே, ரிசல்ட் அன்னைக்கு நீங்க என்ன டி வி பார்த்திங்க?

சன் டிவி , கலைஞர் டிவி

அதான் ரிசல்ட் தெரியல. பிரதமர் பாலிமர் சேனல் பார்த்தாராம்


=================

12 தலைவரே! மோடி உங்களை வாழ்த்துனாரா?

இல்ல.

அப்புறம் நீங்க எப்டி 89 சீட் ஜெயிச்சீங்க?

லூசு மாதிரி உளறாதேய்யா. அவர் வாழ்த்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

அதே தான் நானும் டிட்டோ

====================

13  தலைவரே! மோடி வாழ்த்துனதாலதான் ஜெ ஜெயிச்சாரா?

ஆமா

அப்புறம் ஏன் பிஜேபி டெல்லி, பீகார்ல தோத்துது? வாழ்த்தி ஜெயிக்க வெச்சிருக்கலாமில்ல?


================


14  தலைவரே! மோடி தமிழிசைக்குக்கூட வாழ்த்து சொன்னராம்

ஓஹோ, அதனால் என்ன?

 அவங்க ஏன் 100 சீட் ஜெயிக்க முடியல?


=========================


15 தலைவரே! மோடி எத்தனை மணிக்கு வாழ்த்து சொன்னாரு?

காலை 10

அப்பவே கவுண்ட்டிங்கை நிறுத்தனும்னு போராடி இருக்கலாமே? ஏன் செய்யலை?

ஒரு வேளை நாம ஜெயிச்சுட்டா?


================


16 தலைவரே! மோடி வாழ்த்து சொன்னதே ட்விட்டர்ல காலை 11.15 குன்னு சொல்றாங்களே?நீங்க 10-ன்னு ஏன் பொய் சொன்னீங்க?

அப்பொ ட்விட்டர் ஜாக் கும் இதுக்கு உடந்தை, மோசடி, அய்யோ போச்சே


======================


17 தலைவரே! மோடி வாழ்த்துச்சொன்னது எப்போ?

மே 19
இன்னைக்கு என்ன தேதி?
ஜூன் 4 
இத்தனை நாளா மானாட மயிலாட பாத்துட்டு இருந்தீங்களா? அன்னைக்கே ஏன் கேட்கலை


================


18 தலைவரே! மோடி 10 க்கு வாழ்த்தினார்னீங்க, இல்லை 11.15 -னு நிரூபிச்சாச்சு. இப்போ என்ன செய்யப்போறீங்க?

ஏன் 11.15 க்கே வாழ்த்தினார்?னு பிளேட்டை திருப்புவோமில்ல?


================

19  தலைவரே! காலை 11.10 க்கு சன் டிவி ல யே அதிமுக -130 திமுக 99 -னு போட்டாங்க,11.15 க்கு மோடி வாழ்த்து, இப்போ என்ன சொல்றீங்க?

சன் டிவில ஏதோ கறுப்பு ஆடு

===================


20 தலைவரே! மோடியை விட வயசுல மூத்தவர் நீங்க ஏன் ஜெ வை வாழ்த்தலை?

நாம எப்போ வாழ்த்தி இருக்கோம்? சாபம் வேணா விடுவோம்

==================


1 comment:

சுனா பானா said...

// 6 சார், உங்க ஜோக்ஸ் படிச்சா சிரிப்பே வர மாட்டேங்குதெ?

சிரிப்பு வர்ற மாதிரி காமெடி எழுத த்தெரிஞ்சா நான் சினி ஃபீல்டு போயிருப்பேன் இல்ல?எதுக்கு இங்கே வாரேன்?//

செம.