Wednesday, February 27, 2019

ஜூன் (மலையாளம்) - சினிமா விமர்சனம்


பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு பிப் 15 அன்னைக்கு ரிலீஸ் ஆன ஏ செண்ட்டர் ஹிட் படம் இந்த ஜூன், கிட்டத்தட்ட நாயகியின் ஆட்டோகிராஃப் டைப் படம், பிரமாதமான திரைக்கதை அமைப்பு, நடிகர்களின் மிக இயல்பான நடிப்பு , அற்புதமான ஒளிப்பதிவு இவற்றால் கேரள மக்களை கொண்டாட வைத்திருக்கும் படம்


ஹீரோயின் ஒரு பிளஸ் 1 மாணவி,ஸ்கூல்ல சக மாணவனை லவ் பண்றா.ஜாலியான ஸ்கூல் நிகழ்வுகள் 4 ரீல் ஓடுது. பிளஸ் 2 முடிச்ட்டு காலேஜ் போறப்ப நாயகனும், நாயகியும் பிரியறாங்க. நாயகன் எங்கே இருக்கான்ன்னு தெரிஞ்சுக்கிட்டு காலேஜ் படிப்பை முடிச்ச நாயகி ஃபாரீன் போய் நாயகனை சந்திச்சு தன் காதலை வெளீப்படுத்தறா

இங்கதான் ஒரு சிக்கல், நாயகன் வீட்ல ஒரு கண்டிஷன் போடறாங்க, பொண்ணு வீட்டோட இருந்து சமையல் வேலை, புருசன் இந்த இரண்டை மட்டும் கவனிச்சா போதும் , வேலைக்குப்போக வேண்டாம்,, அது தேவை இல்லாத ஆணிங்கறாங்க


இது சம்பந்தமான நாயகன் நாயகி வாக்குவாதத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருவரும் பிரியறாங்க

ஸ்கூல் படிச்சப்ப நாயகியை ஒன் சைடா லவ்வின இன்னொரு பையனை  இப்ப நாயகி சந்திக்குது, அவர் கூட பழகறது, காதலை ஏத்துக்க நினைக்கறதுனு ஒரு 4 ரீல் ஓடிடுது


இப்பதான் சிக்கல், நாயகி வீட்ல 

 நாயகி வீட்ல 2 லவ்வரையும் மறந்துடு, நாங்க பாக்கற மாப்ளையை கட்டுங்கறாங்க

 நாயகி என்ன முடிவு எடுத்தா என்பது க்ளைமாக்ஸ்

ஸ்கூல் மெமரீஸ் ஆடியன்ஸ் மனசுல ஆழமா பதிய வைக்கப்பட்ட பிரமாதமான படங்களான ஆட்டோ கிராஃப் , வைகாசி பொறந்தாச்சு ,96 , அழகி, பள்ளிக்கூடம் பட வரிசையில் நிச்சயம் ஜூன் இடம் பிடிக்கும்


 இயக்குநரின் திரைக்கதை அறிவு , கேரக்டர்களை அவர் வடிவமைத்த விதம், நடிக நடிகையர்களீன் அற்புதமான நடிப்பு . அட்டகாசமான ஒளிப்பதிவு அனைத்தும் படத்தை தூக்கி நிறுத்துது


 நாயகியா  ராஜிஷா விஜயன் நடிப்பு பிரமாதம், ஓப்பனிங் சீன்ல யே அவரோட கேரக்டர் வெளீப்படுத்தற விதம் அருமை, தன்னை எல்லாரும் கிளாமரான பொண்ணா பார்க்கனும், த்னிப்பட்ட  டேலண்ட் எதுவும் கில்லைன்னாலும் தனித்துவமா தான் மத்தவங்க கண்ணுக்கு தெரியனும் என நினைக்கும் கேரக்டர்


காதலிக்கும் மனசு , அம்மா அப்பாவுக்கு கட்டுப்பட்டு இருப்பது, தன் தன்மானம்  சீண்டப்படும்போது காதலனை தூக்கி வீசுவது என நடிப்பில் ஆங்காங்கே சிக்சர்


பொதுவா சினிமா வில் அப்பா கேரக்டர்  மிக்சர் சாப்பிடற ஆளாகவோ, ஓவரா பில்டப் தர்ற அன்புள்ள அப்பா சிவாஜியாவோ பார்த்தே பழக்கப்பட்ட நமக்கு மிக இயல்பான அப்பா கேரக்டர் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு  

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  நேத்து ரிலீஸ் ஆன இன்று ரிலீஸ் ஆன 2ம் பள்ளிக்காதல் பற்றிய கதை.காட்சி அமைப்புகள் பாத்தா ஒரே டிவிடி யை அட்லீயும் ,முருகதாசும் பாத்து தனித்தனியா 2 படம் எடுத்த மாதிரி இருக்கு
2 தியேட்டர்ல கைதட்டல் வாங்கறதுக்காக மடத்தனமான காட்சிகளை வைப்பது இயக்குநர்களுக்கு பழகிடுச்சு,காதலன் படத்துல அப்பா,மகன் ஒண்ணா உக்காந்து சரக்கு அடிக்கற மாதிரி இதுல அப்பாவும் மகளும் (15 வயசு) சரக்கு அடிக்கறாங்க வீட்ல,விளங்கிடும் (malayalam)


3 இடைவேளை வரை ஒருத்தனை லவ்விட்டு சில பிரச்சனைகளால் (கருத்து வேற்றுமை)நாயகி டக்னு ஆளை மாத்தி இடைவேளைக்குப்பின் வேற ஒருத்தன் கூட பழகீட்டு இருக்கு,நமக்கு ஜீரணிக்க கஷ்டமா இருக்கு,நிஜ வாழ்க்கைலயும் இப்டித்தான் ,பொண்ணுங்க (malayalam)
இயக்குநரிடம் சில கேள்விகள்

1  லாஜிக் மிஸ்டேக் 1− கேரளா வில் ரேஷன் கார்டு இருக்கோ இல்லையோ ஒவ்வொரு வீட்டிலும் மினிமம் 2 குடை உண்டு,(ஏழை வீட்டிலும்) ஒரு மிடில் கிளாஸ் பேமிலி கேர்ள்ஸ் 10 பேரு ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் குடை இல்லாம வெளில கிளம்பறாங்க ,மழை சீசனில் (malayalam)2 லாஜிக் மிஸ்டேக் 2− பள்ளி வளாகத்தில் செல்போனே நாட் அலோடு.இதுல வீடியோ கேமராவே ஸ்கூல் க்ளாஸ் ரூம்க்குள்ள கொண்டு வந்து பொண்ணுங்களை வீடியோ எடுக்கறாரு (malayalam)
3 லாஜிக் மிஸ்டேக் 2− ஸ்கூல் முடிஞ்சு (4.30 pm) வீட்டுக்கு வர்ற (5pm) மாணவி வீட்ல அப்பா ஆபீசுல இருந்து அவருக்கு முன்பே ரிட்டர்ன் வந்திருக்காரு,சுகவாசிகளான பாங்க் ஆபீசர்ஸ் ,அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூட வீட்டுக்கு வர 6 pm ஆகிடுமே? (malayalam)

நச் டயலாக்ஸ்
1 நான் போன் பண்றப்ப நீ போன் அட்டண்ட் பண்றப்ப உங்க வீட்ல யாராவது பக்கத்துல இருந்தா பவ் னு சொல்லு
அப்டின்னா?

Parents are watching (paw) ( malayalam)

2
ஜூன் (மலையாளம்)− எதிர்பாராத வெற்றிப்படம்.கண்ணியமன திரைக்கதை அமைப்பு,உணர்வுப்பூர்வமான நெறியாள்கை,நடிகநடிகையர்களின் ஆத்மார்த்தமான நடிப்பு அனைத்தும் கிளாசிக்,ஏ சென்ட்டர் பிலிம்,கிட்டத்தட்ட நாயகியின் ஆட்டோகிராப் ,ரேட்டிங் 3 / 5இந்த வார ரிலீஸ் ரிசல்ட்


1 ஜூன் (மலையாளம்) ரேட்டிங் 3 / 5 ஏ சென்ட்டர் பிலிம்

2 ஒரு அடார் லவ் (மலையாளம்) ரேட்டிங்க் 2.5 / 5
( தமிழன்"தமிழ்ப்படத்தை 3 வது இடத்துக்கு கொண்டு வந்துட்டான்னு யாரும் கிளம்பிடாதீங்க)
3 தேவ் (தமிழ்) விகடன்",39 ரேட்டிங் 2.5 / 5

கேரளா கோட்டயம் ரம்யா ஜூன் fdfs 11 am show ( malayalam)
=

a
0 comments: