
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தின் பாதுகாப்பில் உள்ள 64 ஆவணங்களை அம்மாநில அரசு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.
இந்த ஆவணங்கள் அனைத்தும் கொல்கத்தா போலீஸ் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை அருங்காட்சியகத்தில் நடந்த ஆவண வெளியீடு நிகழ்ச்சியில் நேதாஜி குடும்பத்தினர், அவரது எள்ளுப் பேரன் சந்திரகுமார் போஸ், முன்னாள் எம்.பி.கிருஷ்ண போஸ்,செய்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கொல்கத்தா போலீஸ் கமிஷனர் சுராஜித் கர் கூறும்போது, "சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ஆவணங்களை வெளியிடும் பணி மிகச் சவாலானது. 12,744 பக்கங்கள் கொண்ட 64 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் முறையில் இவை வெளியிடப்பட்டுள்ளன.
அசல் ஆவணங்கள் அனைத்தும் கொல்கத்தா போலீஸ் அருங்காட்சியகத்தில் உள்ள கண்ணாடிப் பேழையில் பத்திரமாக பாதுகாக்கப்படும்" என்றார்.
திங்கள்கிழமை முதல் டிஜிட்டல்மயமாக்கி வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களை பொதுமக்களும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அருங்காட்சிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 11-ம் தேதியன்று நேதாஜி ஆவணங்களை வெளியிடுவதாக அறிவித்த மம்தா பானர்ஜி, "வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு காரணமாக நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட முடிவு செய்துள்ளோம்.
சுபாஷ் சந்திர போஸ் இங்கு வாழ்ந்துள்ளார். இங்கிருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கிறார், தனது போராட்டங்களை இங்கிருந்தே நடத்தினார். ஆனால் அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி நாம் அறிந்து கொள்ள முடியவில்லை. இது புதிரானது.
இந்த ஆவணங்கள் தற்போது தயார் செய்யப்பட்டு போலீஸ் ஆவணக் காப்பகத்தில் அனைவரும் படிக்க வசதியாக வைக்கப்படவுள்ளது. ஊடகங்கள்தான் உண்மையைக் கண்டறிய வேண்டும். மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் பல கோணத்தில் ஆராய்ந்த பிறகே ஆவணங்களை வெளியிடும் முடிவு எட்டப்பட்டுள்ளது" எனக் கூறியிருந்தார்.
நன்றி-தஹிந்து
- THIRUMALAIKUMAR Aநேதாஜியின் வாழ்க்கை யை அறிய முதல்வர் மம்தா ஏற்பாடு செய்தது பாராட்டத் தக்கது. மத்திய அரசும் அம்மாவீரரின் வாழ்க்கையை மக்கள் அறிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.about 11 hours ago(1) · (0)reply (0)
- SSundarsvprதகவல்கள் வெளியிடுவதால் நாட்டிற்கு ஆபத்து என்றால் வெளியிடவேண்டாம் தனிப்பட்ட தலைவரின் அல்லது தலைவர்களின் குறைபாடுகள் என்பதால் மறைத்தால் அது பச்சை தேச துரோகம் பீகார் தேர்தலில் எதிரொலிக்கும்about 14 hours agoPoints3770
RAJAN Kittappa காங்கிரசை காப்பாற்றுவது, நேருவின் பிம்பத்தை காப்பாற்றுவது, நட்பு நாட்டின் உறவை காப்பாற்றுவது என இல்லாமல் ஊடகங்கள் பொறுப்பாக ஒரு தேசபக்தனின் தியாகத்தை வெளிக்கொணர வேண்டும். செய்யுமா?about 14 hours agoPoints5330
RAJAN Kittappa காங்கிரசை காப்பாற்றுவது, நேருவின் பிம்பத்தை காப்பாற்றுவது, நட்பு நாட்டின் உறவை காப்பாற்றுவது என இல்லாமல் ஊடகங்கள் பொறுப்பாக ஒரு தேசபக்தனின் தியாகத்தை வெளிக்கொணர வேண்டும். செய்யுமா?about 14 hours agoPoints5330- AAthiyamanமாவீரர் நேதாஜியின் மறைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் வெளி கொணர வேண்டும். அப்போதுதான் நம்முடைய வரலாறு முழுமை அடையும். இதுவரையில் நம்ப படுகிற பரப்புரைகள் காங்கிரஸ் மற்றும் அதனை இயக்கும் ஆதிக்க சக்திகளினாலும் தேச, கலாச்சார பற்றில்லா சக்திகளினால் நெறைய வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாறு வெறும் அடிமை காலத்திய வரலாறாக, அன்னியர்கள் விட்டு சென்ற புழக்கடை வரலாறாக இல்லாமல், மக்களின் வரலாறாக முழுவதுமாக அறியப்பட வேண்டும். இதில் இன்னொன்று, நம் தலைவர்களின் குற்றங்களையும் ஆற்றாமைகளையும் சீர்தூக்கி பாக்கும் பக்குவம் உள்ளவர்களாக நாமும் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.about 16 hours agoPoints275
- RRநாட்டில் எவ்வளவோ பெரும் பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்குத் தீர்வு கண்டால் மக்களுக்கு நன்மை ஏற்படும். அதைவிட்டுவிட்டு நேதாஜி பிரச்சினையில் இத்தனை வருடம் செலவழித்தாகிவிட்டது. இந்த ஆவணங்களினால் இன்னும் எத்தனை வருடம் பேசுவார்களோ தெரியவில்லை. அப்படியே குற்றவாளியை நிரூபித்தாலும் தண்டனை எப்படிக் கொடுப்பது. சசி தரூர் சொல்வதுபோல் பொது மன்னிப்புக் கேட்கலாம். பிரச்சினையை முடித்துக் கொண்டால் நல்லது.
நன்றி-தஹிந்து