Friday, July 03, 2015

தோற்றத்தால் பதவி உயர்வு பெற்றேனா?- ஆங்கில பத்திரிகையை விளாசி பெண் அதிகாரி நோட்டீஸ்

ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால்.
ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால்.
தனது தோற்றத்தை வைத்தே பதவி உயர்வு பெற்றதாக சித்தரித்து எழுதிய பிரபல ஆங்கில வாரப் பத்திரிகையை எதிர்த்து ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
டெல்லியிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்று, தெலங்கானா பெண் ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வாலை மறைமுகமாக விமர்சித்து வெளியிட்ட கட்டுரையும் கேலிச்சித்திரமும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தெலுங்கானா மாநில அரசுத் துறையில் பணியாற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா சபர்வால். இவர் சமீபத்தில் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பெண் அதிகாரி ஸ்மிதா சபர்வால் பெயரை குறிப்பிடாமல், "பெண் அதிகாரி பதவி உயர்வு பெற்றுள்ளது ஆச்சரியமாக உள்ளது. அவர் தனது அழகு, உடை அணியும் விதம் போன்றவற்றை வைத்து அனைவரையும் கவரக்கூடியவர். ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியிலும் அவர் இடம்பெற்றுவிடுகிறார். முதல்வர் அலுவலக விழா அனைத்திலும் இடம்பெறுகிறார்.
காண்பவரை கவரக் கூடியவராக இருக்கும் அந்த அதிகாரி ஃபேஷன் ஷோவிலும், ஜீன்ஸ் பேன்ட் மற்றும் பிரில் வைத்த சட்டைப் போட்டு வந்து அனைவரையும் அசத்தினார்" என்று குறிப்பிட்டு பெண் அதிகாரியைச் சித்தரிக்கும் கேலிச்சித்திரத்தையும் வெளியிட்டது.
இது தெலுங்கானா மாநில அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பத்திரிகைக்கு கடும் கண்டன நோட்டீஸும் அனுப்பியுள்ளார் அதிகாரி ஸ்மிதா. இது குறித்து அவர் கூறும்போது, "ஐஏஎஸ் அதிகாரியான என்னை இழிவுபடுத்தி பிரபல வாரப் பத்திரிகை கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனக்கே இது போன்ற நிலை என்றால், சாதாரண பெண்களின் நிலையைப் பற்றி யோசிக்கவே முடியவில்லை. இந்த விவகாரத்தை சட்டபூர்வமாக எதிர்க்க உள்ளேன். இது குறித்து பத்திரிகை பதில் அளித்தாக வேண்டும்" என்றார்.
மேற்குவங்கத்தை சேர்ந்தவரான ஸ்மிதா சபர்வால் (38). இவரது தந்தை முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். கடந்த 2011-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இவர் ஆந்திர மாநிலம் சித்தூரின் மதனப்பள்ளியின் துணை ஆட்சியரானார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நிலைகளைக் கடந்து தெலங்கானா முதல்வர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் அகும் சபர்வால் என்ற ஐபிஎஸ் அதிகாரியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.


நன்றி -த இந்து


 • ஷ்  
  திறமையான ஒரு பெண் அதிகாரி தனது தகுதியால் பெற்ற முன்னேற்றத்தை அவர் ஒரு அழகான பெண்ணாக இருப்பதால்தான் முன்னேறினார் என்று கொச்சை படுத்துவது தவறு. அவுட் லுக் பத்திரிக்கை மன்னிப்பு கேட்பதும் பொது மக்கள் தங்கள் மன நிலையை மாற்றிக் கொள்வதும் அவசியம்.
  Points
  775
  about 15 hours ago
   (0) ·  (0)
   
  reply (0) 
     
  • இருமேனி Irumeni  
   அழகாக இருப்பது அவர் குற்றம் அல்ல .. திறமையால் முன்னேறி இருந்தாலும் தப்பில்லை ... தன் அழகைப் பயன் படுத்தி அவர் முன்னேறினார் என்றால் அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் .. அது உண்மையாக இருந்தால் மட்டுமே அவரின் மீது குற்றம் சுமத்த முடியும் ... அவரின் முன்னேற்றம் பிடிக்காமல் யாரோ போட்ட வதந்தியை ஒரு பத்திரிக்கை வெறுமனே குற்றம் சாட்டி இருப்பது ஏற்றுக் கொள்ளும் படி இல்லை ...
   Points
   4835
   about 16 hours ago
    (1) ·  (0)
    
   kumaresanUp Voted
   • Shanmugam  
    ஐ ஏ எஸ் அதிகாரிக்கு இப்படிப்பட்ட விமர்சனம் என்றால் சாதாரண பெண் நம் நாட்டில் படும் பாடு ! என்ன கொடுமப்பா திருத்தாத ஜன்மங்கள்.
    Points
    890
    about 18 hours ago
     (0) ·  (0)
     
    • Tree  
     இது தவறு என்றால் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தவறு, அடிப்படையற்றது. திறமையை வைத்து மட்டும் முன்னுக்கு வாங்கப்பா.
     Points
     14650
     about 19 hours ago
      (1) ·  (1)
      
     PRADHEEBANDown Voted
     • shankar  
      சரியாகச் சொன்னீர்கள்!
      about 16 hours ago
       (0) ·  (0)
       
     • Kasi.R.Durai  
      அந்த பத்திரிக்கை நம்ம ஊரு நக்கீரன் பத்திரிக்கைக்கு சமம் என்று நினைக்கிறேன்
      Points
      530
      about 19 hours ago
       (1) ·  (2)
       
      KailashUp Voted
      JayDown Voted
      • R.M.Manoharan Manoharan  
       பத்திரிக்கை தர்மம் என்று ஒன்றிருக்கிறது. ஊடகங்களுக்கும் எல்லை இருக்கிறது. விமரிசனங்கள் எல்லை மீறினால் .....? அமிர்தமும் அளவுக்கு மீறினால்....? அரசியல் சாசன அமைப்பின் நான்கு தூண்களில் ஒரு தூண் -- பத்திரிக்கைகள், ஊடகங்கள். அதன் மாண்பு கெடாமல் பார்த்துக் கொள்வது அந்தந்த அமைப்புகளின் பொறுப்பு..
       Points
       11235
       about 19 hours ago
        (0) ·  (0)
        
       • Mumbai  
        பத்திரிகை செய்ததது தவறுதான். உங்கள் தோற்றத்தைக் குறை கூறியது கண்டிக்கத்தக்கது தான். தாங்கள் திருமணமானவர் நமது நாட்டு முறையில் அதற்க்கு சில அடையாளங்கள் உண்டு அந்த அடையாளங்கள் மறைக்கப் பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன்.
        Points
        7260
        about 20 hours ago
         (0) ·  (1)
         
        • kusumban  
         வங்காளத்து பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டாலே திருமணம் ஆனவர்.நம் ஊர் வீரமணி மற்றும் ஸ்டாலின் சாஸ்திரிகளிடம் ஆலோசனை கேட்க மாட்டார்கள்.

       0 comments: