Tuesday, April 17, 2012

அட்ரா சக்க சி பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி பாகம் 6

கவிதை வீதி சௌந்தர்:

1.வலைப்பூவில் தாங்கள் அடைய விரும்பும் எல்லை எது?

  அப்படி எந்த விதமான துரத்தல்களும் எனக்கு இல்லை.. வலை உலகைப் பொறுத்தவரை ஜாக்கிசேகரும், கேபிள் சங்கரும் கமல் ரஜினி போல களத்தில் இருக்கிறார்கள்.. இருவருக்கும் 4 வருடங்களூக்கும் அதிகமான அனுபவம்.. 3 வது இடத்தில் உண்மைத்தமிழன் உள்ளார்.. தமிழ்மண ரேங்க்கை வைத்து சிலர் நான் தான் நெம்பர் ஒன் என தவறாக நினைக்கிறார்கள்.. நான் நெம்பர் 4 தான்.. போதும்.. இதே நிலைமை..


2. காபி டூ பேஸ்ட் பதிவர் என்பதில் தங்களுக்கு ஏதாவது சங்கடம் உண்டா?

     ஹா ஹா ஹா உண்மையை, ஆமா உண்மைன்னு ஒத்துக்க எதுக்கு சங்கடம்?


3. தங்களை அதிகம் கலாய்க்கும் மனோவை என்ன செய்யலாம்?

    கலாய்ப்பதால் தான் அவர் நெருங்கிய நண்பர்.. ஆமாம் சாமி ஜால்ரா அடிச்சா 10 ஓடு 11..


4. பதிவுலகில் ஏதவாது ஒரு பிளாக்கில் பதிவிடச் சொன்னால் யாருடைய பிளாக்கை தேர்ந்தெடுப்பீர்?

      என்னால் யாருக்கும் கெட்ட பெயர் வர வேணாம்னு நானே இன்னொரு பிளாக் ஓப்பன் பண்ணி அதுல பதிவு போடுவேன்.. ஹி ஹி 


5. குடும்பம்-பதிவுலகம்-அலுவலகம்-சென்னிமலை-உறவினர்-பள்ளி நண்பர்கள்-பிள்ளைகள்-சினிமா-விளையாட்டு: இவைகளை வரிசைப்படுத்துங்கள்...

1. அலுவலகம்
2. பதிவுலகம்
3. குடும்பம்

4. சினிமா
5. சென்னிமலை
6. பிள்ளைகள்
7. பள்ளி நண்பர்கள்
8. உறவினர்
9. விளையாட்டு


 ட்வீட் உலகின் கமல்ஹாசன் ரவியுடன் (மன்மதன் அம்பு கமல் ஸ்டில் போல் இருப்பாரே அவர் தான் )


உணவுலகம் - சங்கரலிங்கம்:

அய்யா சின்ன பிள்ள, ஆப்பரேசன் முடிஞ்சு இத்தனை நாள் ஆச்சே, இன்னும் ஏன் கறுப்பு கண்ணாடியைக் கழட்டல?

 அண்ணே. கண்ணாடியை கழட்டிட்டா கூட்டத்துல யாரைப் பார்க்கறோம், எங்கே பார்க்கறோம்னு கரெக்ட்டா தெரிஞ்சிடுது ஹி ஹி - சின்ன வயசுப்புள்ள.


செங்கோவி:

1. போஸ்டரை வைத்தே பிட்டுப் படத்தில் சீன் உண்டா, இல்லையா என்று கண்டுபிடிக்க முடியுமா? அல்லது அதற்கு வேறு ஏதேனும் நல்ல வழிகள் உள்ளனவா?

    அது ரொம்ப சிரமம்னே, ஆனா ஒண்ணு செய்யலாம், தியேட்டர் பைக் பாஸ் போடறவன் கிட்டே கேட்டா தெரிஞ்சுடும், அல்லது படம் விட்டு வெளில வர்ற ரசிகர்கள் கிட்டே ரிசல்ட் கேட்டா தெரிஞ்சிடும். உங்களூக்குத் தெரியாததில்லை.


2. ஷகீலா படப் போஸ்டரை மாடுகள் தின்பதனால் சமூகத்திற்கு விளையும் நன்மை-தீமைகள் என்ன?

   சாரி.. அண்ணே. நாங்க எப்பாவோ ஹன்சிகா மோத்வானி ரசிகர் ஆகிட்டோம். யூத்துய்யா .. நீங்க இன்னும் ஷ்கீலா ஆண்ட்டியையே கட்டிட்டு அழுதா..?


3. விகடனை மட்டும் பதிவிடும் நீங்கள், உங்களது படைப்புகளாக விருந்து/மருதம்/பாக்யாவில் வெளிவந்தவற்றை பதிவிட மறுப்பது ஏன்?

    விகடன்ல தான் ஆன்லைன் ல மேட்டர் வருது. டைப் பண்ற வேலை இல்லை. மற்ற புக் மேட்டர்னா டைப் பண்ணனும்.. - பை நோகாம நோம்பி கும்பிடும் தமிழன்.


4. அருமையாக அரசியல் பதிவுகள் எழுதும் ஆற்றல் இருந்தும் பதிவுலக பாக்கியராஜாக மட்டுமே இருக்க நீங்கள் ஆசைப்படுவது ஏன்?

    முருங்கைக்காய் சாம்பார் வாரம் ஒரு தடவை சாப்பிடுவேன்கறதுக்காக ஏன் அண்ணே அவர் பேரை கெடுக்கறீங்க? அரசியல் பதிவு எழுத தான் 1000 பேர் இருக்காங்களே.. என் நோக்கம் சிரிக்க வைப்பது சிந்திக்க வைப்பது அல்ல. ஹி ஹி.

கோவை ஷேக்கு - கோவை ட்விட்டப்பில் ஃபிகர்கள் இல்லா ஒரு நாயர் ஷாப்பில்

வம்பை வெலைக்கு வாங்குவோம்ல - நா. மணிவண்ணன்


1 . செருப்படி அல்லது வெளக்கமாத்து பூசை வாங்கிய அனுபவம் பற்றி விளக்குக ?( இல்லை அப்படியெல்லாம் இதுவரைக்கும் நடந்ததில்லை என்று பூசி மொளுகினால் அது போன்ற சம்பவம் பல முறை நடந்ததாகவே எடுத்து கொள்ளப்படும் ) 

    யோவ் மணி, உனக்கு ரொம்ப லொள்ளுய்யா.. நெல்லைல கூட பார்த்தே இல்லை.. 37 பேர் கும்முனாங்க.. யாராவது செருப்பால அடிச்சாங்களா? டீசண்ட்டா இருக்கறவன் டீசண்ட்டாத்தான் உதை வாங்குவான். ஹி ஹி 



2 . முதலிரவில் முதலில் என்ன செய்ய வேண்டும் ?( விளக்கை அணைக்க வேண்டுமென்று சினிமா முதலிரவில் காட்சியில் காட்டுவதை கூறக்கூடாது )


      முதல்ல கொஞ்ச நேரம் பேசனும். வேற எதுவும் "செய்யக் கூடாது"


M. காதர்அலி:

1.அண்ணே, நீங்க ஏன்? உயிர் வாழ்றிங்க? 

       இயற்கை படைப்பினில் நான் ஒரு மனிதனாகப் பிறந்ததால்.. வாழும் வரை இந்த சமூகத்திற்கு என்னால் ஏதாவது பயன் தர முடியும் என்ற நம்பிக்கையால்.. 


2 .கில்மா விமர்சனம் எழுத ஷகிலா அக்காட்ட எவ்வளவு வாங்குவிங்க?

     சாரி. 19 வயசு தாண்டுனா அந்த ஃபிகர் அத்தை மகளே ஆனாலும் நான் கண்டுக்கறதில்லை.. அதுக்காக எனக்கு என்ன வயசுன்னு கேட்கக்கூடாது,, விதி விலக்குகள் எனக்கு மட்டும் ஹி ஹி 


3 .ஒரு வாரத்துக்கு எத்தனை copy -paste பண்ணுவீங்க?

     சனி, ஞாயிறு தலா 3 வீதம் 6 போஸ்ட் , அது போக சூடான அரசியல் நியூஸ் வாரம் 1 அல்லது 2 .. 

 பரிசல், ராஜன் உடன் ( ராஜன் நோக்கும் ஃபிகர் மாடி வீட்டு மாளவிகா)



கவி அழகன்:

எனது கேள்வி என்ன்னவென்றால் சி.பி தனியே வலை தளம் எழுதுகிறாரா அல்லது அவரது குடும்ம்பமே எழுதுகின்றதா ( ஆன்மிகம் சமையல் எண்டேல்லாம் படைப்புகள் வரும் போது இவரது பாட்டி மனைவி எல்லாரும் வலைபதிவில் எழுதுகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது ) 


       ஹா ஹா .. ஹா நான் என்ன கலைஞரா? குடும்ப அரசியலோ, குடும்ப பதிவோ நடத்த? ஒன் மேன் ஆர்மி தான், ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான மேட்டர்ஸை ஒரு தேனி போல சேகரித்து கொடுக்கும் கமர்ஷியல் கலைஞன்.


நேசன்:

1. அதிகமாகவும் அசத்தலாகவும் பதிவு போடுவது உங்களின் தனித்தன்மை எப்படி உங்களால் பதிவு எழுதும் போது இப்படித்தான் வார்த்தைகளை கையாளனும் என்று தீர்மானிக்கிறீர்கள்?


     ஹா ஹா வார்த்தைகளை நான் கையாளுவதில்லை.. அவை தான் என்னை கையாளுகிறது.. ஒரு சினிமா பார்க்கும்போதே என்னால் முழுமையாக படத்தை ரசிக்க முடிவதில்லை.. படம் திரையில் ஓடும்போதே விமர்சனம் என் மனத்திரையில் ஓடுகிறது எல்லாம் பயிற்சி தான் காரணம்.. 


2. என் போன்றவர்களின் (புதியவர்களின்) பதிவுகளை எப்படி முயன்றும் ஒரு குறிப்பிட்ட நண்பர்களைத் தாண்டி பலரிடம் சேர்க்க முடியாமல் இருக்கிறது இதனை எவ்வாறு தீர்க்கலாம்?

        நல்ல படைப்புகள் கண்டிப்பாக அனைவரையும் சென்றடையும்.. காலம் தீர்மானிக்கும். ஆனால் குறுக்கு வழி ஒன்று உள்ளது.. நீங்கள் 50 பேர் பிளாக் போய் கமெண்ட், ஓட்டு போட்டால் பாதிப்பேராவது வருவாங்க, உங்க பதிவு ஹிட் ஆகிடும்.. ஆனால் இது நிலைக்காது. 


"கற்றது தமிழ்" துஷ்யந்தன்-பிரான்ஸ் :

கொஞ்சம் கஸ்டமான கேள்விதான், இருந்தாலும் பதில் சொல்லுங்களேன்
உங்களுக்கு பிடித்த மிக சிறப்பாக எழுதுகிறார் என்று நினைக்கும் சக பதிவர் யார் ???

       கேள்வி கஷ்டம் தான், ஆனா பதில் ஈசி. இலங்கை அலப்பரை மன்னன் நிரூபன். 




டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html

12 comments:

rajamelaiyur said...

அண்ணே .. நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் வரலே ?

rajamelaiyur said...

அனைத்து பதிலும் அருமை

rajamelaiyur said...

இன்று

ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம்

Unknown said...

தலைவா நிலாவுல பாட்டி சுட்டது பருப்பு வடையா? உளுந்து வடையா?

ராஜி said...

கூலிங்க் கிளாசும், சிவப்பு சட்டையும் போட்ட உங்க படத்தை இனி பிளக்குல போட்டால் மைனஸ் ஓட்டு போடப்படும் என்று கனிவுடன் சொல்லிக்குறேன்

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!எக்ஸ்குளூசிவ் பேட்டி நல்லாருக்கு.

Admin said...

சிறப்பு.இதன் முந்தைய பகுதிகளையும் வாசித்து விடுகிறேன்..

மகேந்திரன் said...

கேள்விகளும் பதில்களும் நல்லா இருக்குது நண்பரே..

அனுஷ்யா said...

அண்ணே பதிவுலகுல நாலாவது எடமா? அப்புடி ஒரு நெனப்பா? டூ மச்... சொல்லிபுட்டேன்... ஹி ஹி :) என்ன மாதிரி பெரிய ஆளுங்க இருக்கும்போதே இவ்வளவு தென்வட்டா?.. ஹ்ம்ம்ம்...

சரி என்னோட கேள்விகள்...

1.தமிழ்மண ரேங்குக்கு மாசாமாசம் எவ்வளவு இலஞ்சம் தர்றீங்க...ஹி ஹி...:) ?

2.வேற யாரோட பதிவையாவது படிக்கும்போது.. "ச்ச...இது நமக்கு தோணாம போயிருச்சே..?" அப்புடின்னு தோனிருக்கா?

3.பதிவுலக அரசியல்ல உங்களோட நிலைப்பாடு என்ன? சும்மா எல்லாரும் நண்பர்கள்ன்னு கதை விடாதீங்க...

4.நீங்க உங்களோட தளத்துல கவர்ச்சி புகைப்படங்கள் போடறத பார்த்து வீட்டுல அண்ணி வெளக்கமாத்தால அடிக்கறது இல்லையா?

5.முக்கியமான அஞ்சாவது கேள்வி...
எனக்கு என் இன்னும் ஹன்சிகா போஸ்டர் அனுப்பல? ஹி ஹி...

நம்பள்கி said...

@ராஜி


I like this kindal..கிண்டல் ஜாஸ்திபா! அம்மாவிற்கு ஈரோடா பூர்வீகம்!

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள் சிபி.

Anonymous said...

1 to 6 i read.. good.....
vaalthukal.
Vetha.Elangathilakam.
http://kovaikkavi.wordpress.com