Friday, June 10, 2016

பெண்கள் பாதுகாப்பும் பாத்திமா பாபுவும்

பெண்கள் பாதுகாப்புக்கு வழி செய்தது ஜெ ஆட்சி- பாத்திமா பாபு # வீட்லயே இருந்தா பாதுகாப்புதான், கட்சிக்கூட்டத்துக்கு வந்தா தான் ஆபத்து


==============



2 அண்ணி என இனி அழைக்க வேண்டாம், அம்மா என்றே அழைக்கவும் - பிரேமலதா # அய்யோ அம்மா, இன்னும் ஒரு அம்மாவா? நாடு தாங்குமாம்மா?



==============




3 அதிமுக வில் இணைய விரும்புவதாக நமீதா ஜெ-க்கு கடிதம் -செய்தி # மைதா உணவில் சேர்ப்பது கெடுதல், நமீதா கட்சியில் சேர்த்தால் எதிர்காலத்தில் ஆபத்து



===============



4  பச்சை தலைப்பாகையை இனிமேல் கழற்றப் போவதில்லை- வைகோ# அப்போத்தான் பச்சைத்தமிழன்னு மக்கள் நம்புவாங்களா?



===================




5 தமிழ்நாட்டு மக்களுக்கு என்னை இலவசமாக தருகிறேன்


- கருணாநிதி.# எண்ணெய் இலவசமா தந்தாலாவது எதுனா பயன் உண்டு



====================

6 அம்மா,மக்களை சந்திக்கவில்லை என்கிறார்கள்,குறையிருந்தால் தானே சந்திப்பார்கள்'
-நாஞ்சில் சம்பத் # அவரை சுத்தி ஏகப்பட்ட ஜிங்க் ஜக்ஸ்,உங்களை மாதிரி, அதான் பெரிய குறை

===============

7 அரசாங்கமே பீர்பாட்டில் விற்கும் அவலநிலையை உருவாக்கியவர் தான் ஜெ - ஸ்டாலின் # நாம மட்டும் பீர்பால் புக்சா வித்தோம்?நம்ம ஆட்சில?

===============

8 தமிழக மக்கள் 48% மதுவிற்கு அடிமையாகிவிட்டனர் : ஸ்டாலின் # தமிழன் ஒண்ணா மதுவுக்கு அடிமையா இருக்கான், இல்ல கட்டுன மாதுவுக்கு அடிமையாக்கிடக்கான்


==================

9 மேல்மருவத்துார் பங்காரு அடிகளாரிடம், ஸ்டாலின்,  ஆசி பெற்றார். பின், அம்மனை, 108 போற்றி சொல்லி வழிபட்டார்.# பகுத்தறிவுக்கு பங்கம்

=======================


10 டைம்' இதழின் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியல்; மோடிக்கு இடமில்லை # செல்வாக்கு போனா பரவால்ல, வாக்கும் வராம போய்டப்போகுது

======================

11 ருணாநிதியின் தலைமையில் ஆட்சி அமைந்தால் மட்டுமே, மக்களுக்கு நன்மை ஏற்படும்.-அன்பழகன் # அப்போ ஸ்டாலின் தலைமையை நீங்க ஏத்துக்கலை? அவரால நன்மை செய்ய முடியாதா?


=======================


12 முதல்வருக்கு ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக, அ.தி.மு.க., வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவில்லை. -தமிழிசை # எல்லாரும் வெளியிட்ட பின் வெளியிடுவதிலும் ஒரு ராஜ ( ராணி)தந்திரம் இருக்கு


===================

13  நாங்கள் ஆட்சிக்கு வந்தால், என்றைக்கும் நீதி நியாயம் தான் நடைபெறும்.-கருணாநிதி # நிதி இருப்பவர்களுக்குத்தான் நீதி வளையும்னு சொல்றாங்களே அய்யா


==============


14 மக்களுக்காக நான், மக்களால் நான் என்று கூறும் ஜெயலலிதா, மக்களைப் பற்றி கவலைப்படாமல், அவர்களை வெயிலில் காக்க வைத்து வாட்டி வதைக்கிறார்.- கனிமொழி # சூரியனால ஆபத்துன்னு நீங்களே சொல்லலாமா?


==================


15 கூட்டம் சேர்க்க ஆட்கள் வேணுமா?: தயாராக இருக்குது தனியார் ஏஜன்சி # நல்ல வேளை, கள்ள ஓட்டுப்போட இன்னும் ஏஜென்சி வர்லை


=====================


16  2016 சட்டசபைத் தேர்தல், தேர்தல் அல்ல; போர்.-விஜயகாந்த்  # தேர்தல் முடியும் வரை உங்களோடு ஒரே அக்கப்போர்தான்


====================


17 

பணம் பெற்று வாக்களித்தால் தமிழகத்தை எப்போதும் மாற்ற முடியாது - பிரேமலதா # பணம் குடுத்தா வாங்கிக்குங்கன்னு நீங்களே தானே சொன்னீங்க?



=================


18 

கருணாநிதி உழைத்தது போதும். அவர் ஓய்வு பெற வேண்டும்- அன்புமணி # மு.க ஸ்டாலின் மனசுக்குள் உங்களுக்கு நன்றி சொல்வார்



==================


19 

கருணாநிதி உழைத்தது போதும். அவர் ஓய்வு பெற வேண்டும்- அன்புமணி #  அப்போ கலைஞர் அரசியலில் இருக்கும் வரை உங்களால  ஜெயிக்க முடியாதுன்னு நினைக்கறீங்களா?



=====================

20 

தனது துறையில் உச்சத்தில் இருக்கும்போது விடை பெறுவதே அவரது வெற்றிக்கு அடையாளம்-நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் # நீங்க கலைஞரை சொல்லலையே?



=================

1 comments:

R. Jagannathan said...

Premalatha innoru amma-vaa! Sabhash, sariyaana potti! Prema lalthaannu maaththikkalaame!