Saturday, April 14, 2018

நானும் என் கணவரும் Love பண்ணும்போது Dinner அஞ்சப்பர் ஹோட்டல்லதான் சாப்டுவோம்;

சார் ஆரஞ்சு ஜூஸ் எவ்ளோவ்?

50 ரூபாங்க
சரி 1 குடுங்க
இந்தாங்க
ஹலோ",யாரை ஏமாத்தப்பாக்கறீங்க?
ஏன்?
ஆரஞ்சு ஜூஸ்னா ஆரஞ்சு கலர்ல தானே இருக்கும்?

==============


2 here empty flower available னு போர்டு போட்டிருக்கீங்களே?புரியலை

காலி ப்ளவர்ங்க


===============


3 உடன்பிறப்பே!பார்த்தாயா அடிமைகளின் லஞ்ச் பிரேக் எடுத்த உண்ணாவிரதத்தை? 2 மணி நேரம் இருந்தாலும் முழுமையான உண்ணா விரதம் நம்முடையது,9 மணி நேரம் இருந்தாலும் லஞ்ச் பிரேக் எடுத்த போலி உண்ணாவிரதம்.எளிமையாகச்சொன்னால் நான் எட்டாவது பாஸ்,அவங்க 10வது பெயில்.பாஸ் பெருசா?பெயில்"பெருசா?


===============4 ஜட்ஜ் = எதுக்காக ஹெல்மெட் போடலைனு ஒருத்தரோட கையை உடைச்சீங்க?

100 ரூபா பிச்சைக்காரர்கள் 3 பேர் = அப்பவாவது பிரேக்கிங் நியூஸ்ல நாம வருவோம்னுதான்


=====================5 டேய் வெண்பா எழுதச்சொன்னா ஸ்கெட்ச் பென்சில் எதுக்கு எடுக்கறே ?

டீச்சர்,இன்னும் ஒயிட் & பிளாக்"காலத்துலயே இருக்கீங்க.கலர் பா வேணா எழுதறேன்===============6 சார்,விஜய்மல்லய்யா வை உலகம் பூரா தேடீட்டோம்,ஆள் சிக்கவே இல்ல

இலங்கைல தேடிப்பாருங்க
ஏன்?
அது சி"லோன்".அங்கேதான் இருப்பாப்டி===============7 பெண்"என்றால் கண்ணை"மூடிக்கொண்டு எதிர்ப்பதும் ,போலீஸ் என்றால்"கேப்"விடாம திட்றதும்"பலருக்கு பழக்கமா இருக்கு

ஓஹோ,நீங்க யாரு?
நான் ஒரு பெண் போலீஸ்
நினச்சேன்


==============


8 நானும் என் கணவரும் Love பண்ணும்போது Dinner அஞ்சப்பர் ஹோட்டல்லதான் சாப்டுவோம்;

ஓஹோ, லவ்"பண்ணி முடிச்சதும்"எங்கே சாப்பிடுவீங்க?
ஆறுபடையப்பன் ஹோட்டல்ல
ஏழுமலையான்"மெஸ்ல
இப்பதான்"மேரேஜ்"ஆகிடுச்சே?இப்போ?
அப்ப,ஸ்டெப் பை ஸ்டெப்""டெவலப் ஆகிட்டே இருக்கீங்க?


==============9 சார்.1 மணி நேரம் பர்மிஷன் வேணும்.

மேடம் இன்னைக்குதான் ட்யூட்டில ஜாய்ன் பண்ணி இருக்கீங்க,முத நாளே கட் அடிச்சா எப்டி?
ரெகுலரா எல்லா சீரியலும் பார்ப்பேன். கதைச்சுருக்கம் வேலைக்காரி கிட்ட கேட்டுட்டு வந்துடறேன்


==============10 உங்கள் பல்தூரி / பல்துலக்கி., அதாங்க டூத்பிரஷ்! அதை எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை புதியதாக மாற்றுவீங்க?

டெய்லி
அடேங்கப்பா,எப்டி?
வேப்பங்குச்சி

==============11 நீ முத்தமிட்ட கன்னத்தில் வேறொருவர் முத்தமிடக் கூடாது என்பதற்காக நான் அமைத்த வேலி தான் இந்த தாடி 🙄

அப்டியா?அப்போ உங்க வாய்க்கு சூடுதான் போடனும்
எதுக்கு?
வேற யாருக்காவது"கிஸ்"தந்துட்டா?


==================


12 பூட்டு போட்ட கேர்ள்ஸ் ஐடிலாம் கேர்ள்ச ஃபாலோ பன்றதில்ல எல்லாம் பசங்கல தான் ஃபாலோவிருக்குதுங்க என்ன ரீசனா இருக்கும் 🐊?


RT பண்ணிவிட பசங்கதான் உதவி செய்வாங்க.ஒரு பொண்ணோட ட்வீட்டை இன்னொரு"பொண்ணு பாராட்றது அபூர்வம்.பசங்க அப்டி இல்ல.மொக்க பிகர் மொக்க ட்வீட் போட்டாலும் மார்வலஸ்ம்பான்


============


13 ஆச்சுவலி எனக்கு டைமிங் சென்ஸ் அதிகம்னு சொல்லிக்குவாங்க

ஓஹோ,நிரூபிங்க"பார்க்கலாம்.
யார் எப்போ டைம் என்ன?னு"கேட்டாலும்"வாட்சைப்பார்க்காமயே மணி சொல்லிடுவேன்


=================14 மிளகுதக்காளி பழம் (மணத்தக்காளி)வழக்கமா கருப்பாதானே இருக்கும்?இது சிவப்பா இருக்கே?

இது பெங்களூர் மிளகு"தக்காளிப்பழம்ங்க


=================15 சார்,உங்க கம்பெனி பிஸ்கெட் பாக்கெட் 50:50 ல 25% எக்ஸ்டரானு போடுறாங்க.. எல்லாம் ஒரே அளவா தான் இருக்கு.. ஏமாத்துறாங்களா?

நீங்க பிஸ்கெட் சைஸ்ல/பிஸ்கெட்எண்ணிக்கைல 25% அதிகம்னு நினைச்ட்டீங்க.உப்பு ல 25% அதிகம்.


================16 என் தேவைகளை
நான் தீர்மானிக்கிறேன்,
நானே பூர்த்தி செய்கிறேன்,
ஓஹோ,எங்களுக்கு"மட்டும் பக் வீட்டு பங்கஜமா பூர்த்தி பண்ணுது.எல்லார்க்கும்"அவங்கவங்கதான்


============17 சார்.உங்க கம்பெனில என்னை செலக்ட் பண்ணதுல சந்தோஷம்.எவ்ளோ சம்பளம் எதிர்பார்க்கலாம்?

நீங்க ஒரு லட்சம் கூட எதிர்பார்க்கலாம்,ஆனா நாங்க 30,000 தான் தருவோம்


===============18 தலைவரே!உங்க தலைமையில் ஒரு படை தடையை மீறி மெரீனா பேரணி சென்ற நிலையில் உங்க மகன்் தலைமையில் ஒரு படை அண்ணாசாலையில் மறியல்..
உங்க சகோதரி தலைமல ஒரு மறியல்னு
திரிசூல வியூகம் நடத்தறீங்களாமே?
ஆமா ,ஜனங்க"என்ன"பேசிக்கறாங்க?
ஓவர் ஆக்டிங்னு தான்


===============19 தலைவரே!போர் வியூகம்னா என்ன தெரியுமா?

என்ன?
படை வீரர்கள் ,உப தளபதி ,தளபதி இவங்க எல்லாரையும் பிடிச்ச பின் தான் மன்னனை பிடிக்கனும்.நீங்க என்னடான்னா இப்டீ அசால்ட்டா போலீஸ்ல மாட்டிக்கிட்டீங்களே


============20 தலைவரே ! ் எதிர்க்கட்சித் தலைவராக மிக அருமையாக செயல்படுறீங்க

மகிழ்ச்சி.அப்போ அடுத்த சிஎம்,நான்தானே?
அதான் இல்லை.. காலம் பூரா எதிர்க்கட்சித் தலைவராகவே செயல்படனும்னு"ஜனங்க"ஆசைப்படறாங்க.ரஜினி ,கமல் ,விஜயகாந்த்னு போட்டி பலமா இருக்கே?


===============

0 comments: