Wednesday, April 04, 2018

ஸ்டாலின் = தமிழகம்

அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு மாரடைப்பு- ஜெ.அனுமதிக்கப்பட்ட கிரீம்ஸ் சாலையில் அனுமதி # ஜெ மர்ம"மரணத்துக்கு காரணமானவங்க எல்லாம்"வரிசையா பாதிப்பு வருதே?நேத்து நடராஜன்் ,இன்று"இவரு"நாளை""OPS============

2 திண்டுக்கல் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு - செய்தி # திண்டுக்கல்லுக்கே திண்டுக்கல்"பூட்டா?
===============
3 சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை நீதிமன்றம் தடை.

ராமசாமியின் முதல் மனைவி சத்தியபிரியா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ஆணை. நீங்கும் வரை இடைக்கால நிவாரணமா திருச்சி சிவா கட்டிக்குவாரா?


================4 மாட்டுத்தீவன ஊழல்.. 4வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 7 வருடம் சிறை # பரவால்ல அப்பப்ப நீதி தேவதை ஜெயிக்குது


================5 தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்
# பெண்"போலீஸ் எதுக்கும் தள்ளியே இருங்க,ஆம்பள போலீஸ் மட்டும் விசாரிக்கட்டும்


==================6 கர்ணனை விட பாரியே கொடை வள்ளல் - திருச்சி சிவா
# இவரு படிச்ச ஸ்கூல்ல இவருக்கு மட்டும் தனியா புதுசா பாடம் நடத்தி இருக்காங்க போல


====================7 நாதெள்ளா நிறுவனம் நகை சீட்டு பெயரில் பொதுமக்கள் பணம் கொள்ளையடிப்பு, நகை சீட்டில் சேர்ந்த 21000 பேர் ஏமாற்றம். அடுத்தது முத,மாத தவணையை அவங்களே கட்டுவாங்களே அந்த க்ரூப்பா?


==================8 தமிழகம் திராவிட முன்னேற்ற கழகத்தை தான் நம்பியுள்ளது : திருச்சி சிவா # ஸ்டாலின் = தமிழகம் னு யாரோ தப்பா இவருக்கு"சொல்லிக்கொடுத்திருக்காங்க.அப்டி நம்பி இருந்தா RK நகர்ல"டெபாசீட் வாங்கி இருப்போமே?


==================9 இனி கழக நிகழ்வுகளில்

பிராமணர்களை
வைத்து பூசை போடக்கூடாது_ ஸ்டாலின் # அண்ணி துர்கா ஸ்டாலின் காதுல விழற மாதிரி சத்தமா சொல்லுங்க.அவரு பாட்டுக்கு எதுனா செய்யப்போய் மீம்ஸ் போட்டு தளபதியை கும்முவாங்க பாவம்
======================10 ‘மனைவி சண்டை போடுவது, சமையல் செய்யாதது சித்ரவதை அல்ல’ ஐகோர்ட்டு கருத்து # உப்புமா செய்வது சித்ரவதைதானே ஐயா?


===================


11 எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் தங்களது டுவிட்டரில் 3 லட்சம் ஃபாலோயர்களை ஈர்த்துக் கொள்ளுங்கள் - மோடி #
# ஆனா டாக்டர் ராமதாஸ் மாதிரி ஒரு பயலையும் பாலோ பண்ணிடாதீங்க


==============12 சேலம் - சென்னைக்கு 1499 ரூபாய்க்கு விமான சேவை : தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி # அதென்ன பேட்டா கடை பிரைஸ் லிஸ்ட் மாதிரி?ரவுண்டா 1500 பண்ணா என்ன?


==================


13 என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து வெற்றி பெறுவேன் − கார்த்தி சிதம்பரம் எவனாவது ஆமா நான் திருடன்தான் தான் ஒத்துக்கறானா?நிரூபிக்கப்பட்ட லல்லு கூட நான் யோக்யன்னு தான் சொல்றாப்டி


================14 மனைவி சமைக்காததற்கு எல்லாம் விவாகரத்து கொடுக்க முடியாது.. மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! # அவங்க மட்டும் அவங்கம்மா வீட்ல போய் சாப்டுட்டு வந்துடறாங்க யுவர் ஆனர் ,அதுக்கு எதுனா தண்டனை தர முடியுமா?பாருங்க


================


15 அரசியல் ரீதியான தாக்குதல் :என் மீதான வழக்குகளில் நிச்சயம் வெற்றி பெறுவேன் -திரு காா்த்தி சிதம்பரம்
பிரசாத் யாதவ் கூட இதே"பஞ்ச் டயலாக்கைத்தான் பேசுனாரு ,24 வருசம் ஜெயில்ல களி சாப்டனும்னு தீர்ப்பு


=================


16 யோகா ஆசிரியராகவே என்னை சிலர் மாற்றி விட்டனர்; இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் யோகா சென்றடைந்திருக்கிறது'' - பிரதமர் மோடி
சொல்லனும்னா GST மாதிரி"ரீச்


================


17 சென்னை விமான நிலையத்தில் உள்ள காபி கடை ஒன்றில் காபி விலை ரூ.180, டீ விலை ரூ.135 - முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்
# பாவம் ,கடந்த பத்து வருசமா இங்கே எல்லாம் இவரு காபி ,டீ குடிச்சதே இல்லை போல


===============18 மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தமிழக அரசு கேட்பதை செய்து தர மோடி ரெடி - எடப்பாடி.# வீட்டோட மாப்ளையா போய்ட்டா இணக்கமாதான் இருக்கனும்.சுணங்கினா சுளுக்கெடுத்து அனுப்பிட மாட்டாங்க?


==================19 தமிழகத்தில் 20 சுங்கசாவடி-களில் கட்டணம் உயர்வு: ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்... ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரிப்பு - செய்தி # டூ வீலருக்கு"மட்டும்தான்"சார்ஜ் இல்ல,விட்டா அதுக்கும் வசூலிச்சுடுவாங்க


================20 ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள் தமிழக முதல்வர் என்று அழையுங்கள் - தமிழருவி மணியன் # இன்னும்"மாப்ளை பொண்ணு"பாக்கவே வர்லை,அதுக்குள்ள"பிறக்கப்போற குழந்தைக்கு பேர் வெச்சா எப்டி?


==============

0 comments: