Thursday, April 05, 2018

IOB பேங்க்ல ஏன் கொள்ளை"அடிச்சே?

தலைவரே!உங்களை நிரந்தர முதலமைச்சர் ஆக்குவோம் கறாங்களே? நடக்குமா?

ஒரு தடவை,ஒரே ஒரு தடவை அந்த சீட்ல உக்காந்துடலாம்னு பாக்கறேன் விட மாட்டாங்க போல,நம்ம நேரம் கமல் ,ரஜினி னு வரிசையா தடங்கல் வேற

===============


2 காதல் ல மிஸ் யூனுலாமா இன்னும் சொல்றாய்ங்க?

ஆமா,கள்ளக்காதல் னா மிஸஸ் யு னு சொல்வாங்க


================


3 தலைவரே!நம்ம கட்சித்தொண்டர்கள் காரா சேவுக்கடைல மிக்சர் ஜாடியை எல்லாம் உடைச்ட்டு இருக்காங்க

ஏன்?
அதி காரக்குவியலை அடித்து நொறுக்குவோம்னீங்களே?


===============4 தலைவரே! வளமான தமிழகத்தை வளர்த்து எடுப்போம்னிங்க

ஆமா
நம்ம கட்சி ஆட்சி ல இருந்தப்ப வளம் ஆக்கி இருக்கலாமே?ஆளுங்கட்சியா இருக்கும்போது குடும்ப வளம் பத்தி எதிர்க்கட்சியா ஆகிட்டா மாநில வளம் பத்தி சிந்திப்பது ஏன்?


==================


5 தலைவரே!மதில் மேல் பூனை போல அப்டினு சொல்றதுக்கு பதிலா பூனை மேல்"மதில் போல ் னு சொல்லீட்டீங்களாமே?

போச்சுடா!இதை வெச்சு இன்னும் ஒரு வருசம் மீம்ஸ் வருமே.நமக்கு நாக்குல தான் சனி


================6 தலைவரே!ஆட்சியும் ,பழமொழியும் ஒண்ணுதான்னு யாராவது சொன்னாங்களா?

இல்லையே?
பின்னே?பலவீனமான இந்த ஆட்சியை மாத்துவீங்கனு பாத்தா நீங்க பலவீனம் ஆகி பழமொழிகளை மாத்தி மாத்தி தப்பா சொல்லீட்டு இருக்கீங்களே?


================


7 ஒரு சொடக்கு போடுற நேரத்துல இந்த ஆட்சியை கலைத்துவிட முடியும்.!
~ஸ்டாலின்
மேல சொடக்கு போட்டாச்சு ,இன்னும் ஆட்சி கலைஞ்ச பாடில்லை


==================


8 தலைவரே!தமிழகத்தில் வெற்றிடம் என எதுவுமே இல்லைனு எப்டி உறுதியா சொல்றீங்க?

நாம ஆட்சில இருந்தப்பவே எல்லா வெற்றிடம் ,பொறம்போக்கு இடம் இதெல்லாம் வளைச்சுப்போட்டுட்டமே?


=================


9 தலைவரே!ஏர்போர்ட்ல ஒரு கடைல ஒரு காபியோட விலை ரூ 180 னு பொங்குனீங்களே?

ஆமா
அந்தக்கடை ஜெயில்ல களி சாப்டுட்டு இருக்கற உங்க பையனோட பினாமி கடையாமே?


==============


10 தலைவரே!ஈரோட்ல மாநாடு நடத்துனதுக்கு ஆளுங்கட்சி நன்றி சொல்லி இருக்கு

எதுக்கு?
நேத்து ஒரு நாள் டாஸ்மாக் சேல்ஸ் மட்டும் 10 கோடி ரூபாயாம்.நாம 20% கமிஷன் கேட்ரலாமா?


=============


11 ஜட்ஜ் = பழனி"மலைல ஐம்பொன்"சிலை"அமைக்க காசு"வாங்கிட்டு சாதா சிலை வெச்சீங்களாமே?

கைதி = பொன் வைக்கற இடத்துல"பூ வைக்கற"மாதிரி"யுவர்"ஆனர்,இதெல்லாம்"கண்டுக்காதீங்க


================12 அரசியல் மாற்றத்துக்கு"தகுதியான ஒரே"தலைவர் நம்ம தளபதி தானாமே?

பழமொழி மாற்றத்துக்கு"வேணா சரியா இருக்கும்.அரசியல் மாற்றத்துக்கு எல்லாம் அவரு"சரிப்பட்டு வர மாட்டார்ங்க


=================


13
பழமொழி சொன்னா அனுபவிக்கனும்,ஆராயக்கூடாது
அதுக்கு பழமொழியை கரெக்டா சொல்லனும் தலைவரே!கந்திரகோலம்"பண்ணக்கூடாது,2 வரி பழமொழியையே,ஒழுங்கா சொல்லத்தெரில,5 வருச ஆட்சி எப்டி சரியா செய்வாரு?னு ஜனங்க நினைப்பாங்க இல்ல?=================14
யுவர் ஆனர்",கோர்ட்"தடை விதிச்சும் அதை மதிக்காம கல்யாணம் நடந்துடுச்சு,இனி என்ன பண்ண?
விடுய்யா,எப்டியோ"போகட்டும்,அந்தாளை காப்பாத்தலாம்னு பாத்தோம்,அவன் தலை விதி மாட்டிக்கனும்னு இருக்கு===============


15 ஜட்ஜ் = IOB பேங்க்ல ஏன் கொள்ளை"அடிச்சே?

கைதி = Be Indian buy indian னு"சொல்வாங்க.அதனாலதாங்க HSBC மாதிரி பாரீன் பேங்க்ல கொள்ளை அடிக்காம இந்தியன் பேங்க்",இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ,இப்டி கொள்ளை அடிச்ட்டு இருக்கனுங்க


===================


16 டாக்டர்,இரண்டு வாழைப்பழங்கள்/ ஒரு சப்போட்டா/ பெரிய மாம்பழம் னு குழந்தைகளுக்கு கொடுக்க...
உறுதியான உயரமான அறிவார்ந்த குழந்தைகளாவாங்களாம்🤔நிஜமா?
ஆமா,பழமொழியைத்தான் தப்பா சொல்றாங்க,பழங்களையாவது சரியா உபயோகிச்சா சரி


================


17 கால வரையற்ற உண்ணா விரதப்போராட்டத்தை அறிவிச்சிருக்கீங்களே?எப்போ இதை கை விடுவீங்க?கோரிக்கை நிறைவேறும் வரையா?

இல்லை,எப்போ பசிக்குதோ அது"வரை


=====================


18 ஜட்ஜ் =நேத்து நைட் 11 மணிக்கு பேங்க் கொள்ளை அடிக்கப்பட்டது இன்று காலை 11 மணிக்கு தான் தெரிஞ்சுதா?

IOB மேனேஜர் = ஆமாங்க,திருடன் 11 மணிக்கு தாங்க போன் பண்ணி சொன்னான்.பொறுப்பில்லாதவன்


==================19 ஜட்ஜ் = கல்யாணம் பண்ண தடை விதிச்சோம்,மீறி ஏன்"பண்ணிக்கிட்டீங்க?

லேடி = அம்மா ,அப்பா,தாலி கட்ன முத புருசன் சொல்லியே கேட்கல,நீங்க சொல்லி கேட்பனா?


=================20 ஸ்டெர்லைட் ஆலையால எந்த"கெடுதலும் வராது

அப்டியா?
ஆலையோட ஓனர் எங்கே?
பாரீன்ல
ஆலைக்கு அனுமதி கொடுத்தவர்?
டெல்லில
ஆலையோட ஓனர் பேமிலி,அனுமதி தந்தவர் பேமிலி யை தூத்துக்குடில 2 மாசம் ஆலைக்கு பக்கத்துல தங்கி இருந்து பாதிப்பு இல்லைனு நிரூபிங்களேன்


===============

0 comments: