Thursday, April 12, 2018

இதெல்லாம் ஒரு “பிழை”ப்பா?

கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை: பொன்.ராதா # எங்கப்பன் குதிருக்குள் இல்லை மொமெண்ட்==============
2 கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற தமிழக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் - ஹெச்.ராஜா

#"கூட்டணி ஒர்க் அவுட் ஆகலை ,அட்லீஸ்ட் கூட்டு பிரார்த்தனையாவது ஒர்க் அவுட் ஆகுதா?னு பார்ப்போம்"மொமெண்ட்

===============3 ராஜினாமா செய்தால் வாரியம் அமைக்கப்படும் என்றால் அதற்கு தயார்" - பொன்.ராதா # சொல்லாதீங்க செய்ங்க.வெறும் வாய்லயே முழம் போட்டுட்டு இருந்தா எப்டி


===========4 அதிமுக சார்பில் ஏப்ரல் 3-ம் தேதி காவிரி விவகாரத்தில் உண்ணாவிரத போராட்டம் : ஓ.பி.எஸ் # ஏப்ரல்,1 ந்தேதி வெச்சிருந்தா மேட்சிங்கா இருக்கும்.ஜனங்களை முட்டாள் ஆக்கத்தானே இது?

================5 காவிரி விவகாரத்தில் அதிமுக கொடுத்த அளவுக்கு வேறு எந்த கட்சியும் அழுத்தம் தரவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

செஞ்சீங்களா?
இல்லை
போராட்டம் செஞ்சீங்களா?
இல்லை
பேரணி,ஊர்வலம்?
இல்லை
தற்கொலை"செய்வோம்னு மிரட்னோம்.மோடி"பயந்திருப்பார்ல?
என்ன தான் செஞ்சீங்க?=============


6 Scheme குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக கூறியிருந்தால் பிரச்சனையில்லை : பொன்னார் விளக்கம் # தெளிவா சொல்லாம ஜட்ஜ் மப்புல உளறி இருக்கார்ங்கறாரா?கோர்ட் அவமதிப்பு ஆகிடுமே?

==============7 நான் தவறு செய்தாலும் கர்நாடக மக்கள் தேர்தலில் தவறு செய்ய மாட்டார்கள்: அமித்ஷா # நீங்க மாத்தி உளறுனதுல த்ரிசா வை விட செம பேமஸ் ஆகிட்டீங்க


============8 'மோடி அரசுக்கு தமிழக அரசு ஓவர்டைம் பார்க்கிறது!' - ஸ்டாலின் தாக்கு | # ஏன்? மோடிக்கு மணி பார்க்கத்தெரியாதா?

============


9 தேர்தலில் கர்நாடக மக்கள் தவறு செய்ய மாட்டார்கள் - அமீத்ஷா
# சுத்த கர்நாடகத்தனமான கமெண்ட்டா இருக்கே?இப்ப ஜெயிப்பீங்களா?மாட்டீங்களா?

==============10 கர்நாடகாவில் பாஜக வெற்றிபெற தமிழக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்- H.ராஜா


பாஜகவ வேனும்னா வெச்சி செய்றோம்னு பல மீம்ஸ் க்ரியேட்டர்கள் கிளம்பீட்டாங்க கவனிக்கல?=============


11 டோல்கேட் கட்டணம் இன்று முதல் உயர்வு அமல்: ரூ.5 முதல் ரூ.20 வரை விலையுயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி # குறுக்கு"வழி எதுனா இருக்கா?னு"தேடுவாங்களோ?இனி


================


12 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தேசியக்கொடியை எரித்தவர் (பேராசிரியர்) கைது # உணர்ச்சிவசப்பட்டு யாரும் இப்டி பண்ணீடாதீங்கப்பா.போராட பல வழி உண்டு


================13  யாரிடமும், 'ஐடியா' கேட்டு, பன்னீர்செல்வம் முடிவெடுக்க மாட்டார். அவர், சுயமாக முடிவெடுக்கக் கூடிய திறமை உள்ள அனுபவசாலி. பிரிந்ததும், இணைந்ததும் அவரது, 'ஐடியா' தான் - தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி:  # அப்போ ஆடிட்டர் குரு மூர்த்தி பொய் சொல்றாரா?ஓபிஎஸ் வாயால அதை சொல்லச்சொல்லுங்க பார்ப்போம். 

==========================


 ஆனா அவரே ஒரு முறை மோடி கேட்டுக்கொண்டதால் இணைந்தேன்னாரே?
===================

14   காவிரி விவகாரத்தில், காங்., ஆதரவு அளித்தால், மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரத் தயார் - லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை:  # அப்போ உங்களை விட காங்கிரசுக்குத்தான் பவர் அதிகம்னு சொல்ல வர்றிங்களா?

====================

15   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், பார்லிமென்டை முடக்குவோம். - அ.தி.மு.க., -- எம்.பி., அன்வர் ராஜா:   # அது மோடி உங்களுக்கு தந்த அசைன்மெண்ட்னு பேசிக்கறாங்களே?


================

16  முத்துக்கருப்பன் எம்.பி.யின்
ராஜினாமா எழுத்துப்பிழையால்
நிராகரிப்பு-செய்தி   # இதெல்லாம் ஒரு “பிழை”ப்பா?

=================

17  'ஸ்டெர்லைட்' போராட்டத்தில், நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோரும், தாங்களும் பங்கேற்பது போன்று மாயையை தோற்றுவித்து விளம்பரம் தேடுகின்றனர். -  தமிழக செய்தித் துறை அமைச்சர் ராஜு பேட்டி:   # மாயா மாயா எல்லாம் மாயானு பாபா படத்துலயே ரஜினி பாடி இருக்காரே>?


====================


18 தமிழகம் போராட்ட களமாக இருக்க வேண்டும் என, எதிர்க்கட்சியினர் விரும்புகின்றனர். தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க, பா.ஜ., விரும்புகிறது - தமிழிசை   # தமிழர்களை போராட வைப்பதே நீங்க தான், பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்ட கதை தான்=================


19  தமிழக மின் நிலையங்களுக்கு மின் உற்பத்தி செய்ய, 20 வேகன்களில் நிலக்கரி வருவது வழக்கம். ஆனால், தற்போது, 16 வேகன்களில் தான் அவை வருகின்றன. இதை, வழக்கம் போல் தொடர்ந்து, 20 ஆக வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன். முதல்வர் பழனிசாமியும், இது குறித்து, பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். எனவே, கோடை காலத்தில் மின்வெட்டு இருக்காது - தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணி # கடிதம் போய்ச்சேர்ந்ததா?ன்னு ஒரு ஃபோன் போட்டு கன்ஃபர்ம் பண்ணிக்குங்க, கடைசி நேரத்துல கடிதம் ஏதும் கிடைக்கப்பஎறவில்லைனு கையை விரிச்சுடப்போறாங்க 


====================

 20 வன்முறையை துாண்டும் வகையிலும், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், தமிழக, பா.ஜ., திரைமறைவு சதித் திட்டங்களில் ஈடுபடுகிறதா என்பதை, உள்துறை செயலரும், தமிழக காவல் துறை தலைவரும் விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  - 
தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் பொன்முடி அறிக்கை:  # எஜமான் விசுவாசம் உள்ளவங்க அதிமுக காரங்க, அப்டி எல்லாம் செய்ய மாட்டாங்க

0 comments: