Monday, April 09, 2018

தமிழக முதல்வர் எடப்பாடியா? வாழப்பாடியா?

சார் ,திமுக ,அதிமுக 2 கட்சிகளுமே திருடனுங்கதான்,ஆனா திமுக தான்"ஆபத்து னு எப்டி சொல்றீங்க?


எப்பவும் சட்டத்துல மாட்டிக்காம சாமார்த்தியமா திருடறவன் கிட்ட தான்"ஜாக்கிரதையா இருக்கனும்.பட்டவர்த்தனமா திருடி மாட்டிக்கறவன் ஆபத்து குறைவானவன்================


2 டாக்டர் ,இப்பலாம் கோவத்துக்கூட அழுகையும் சேந்து வந்துருது என்ன வியாதியா இருக்கும்🐊
இதுக்குப்பேரு AN"CRY" வியாதி மேடம்.ஆங்க்கரா ஒர்க் பண்றவங்களுக்கு இது வரும்


==============


3 ஜட்ஜ் = சசிகலா புஷ்பா வை நீங்க கல்யாணம் பண்ணிக்கக்கூடாதுனு"தடை விதிச்சும் மீறிட்டீங்க அது ஏன்?


ராமசாமி = யுவர் ஆனர் எனக்கும் சட்டம் தெரியும்.நான்தானே புஷ்பாவை கட்டிக்கக்கூடாது?புஷ்பா என்னை கல்யாணம் கட்டிக்கலாமில்ல?பிம்ப்பிளிக்கி பிளாப்பி==============4 எங்க வீட்டு மாப்பிள்ளை,நிகழ்ச்சில,ஒரு,புதுமையை"புகுத்தப்போறோம்

என்ன அது?
கல்யாண முகூர்த்தத்துக்கு தகுதியானவங்களா?னு சாந்தி முகூர்த்தம்,நடத்தி"டெஸ்ட்"பண்ணப்போறோம்,பொண்ணுங்க எல்லாம் அடிச்சுக்காம"வரிசைல நின்னு டோக்கன் வாங்கிக்குங்க.


===============


5 மிஸ்டர் ஆர்யா.எந்தப்பொண்ணையுமே உங்களுக்குப்பிடிக்கலையா?ஏன்?

பிடிச்சதுனு சொன்னா கட்டி வெச்சிடுவாங்க,இப்டியே,காலத்தை"ஓட்னா"சம்பளமும் மிச்சம்,டெய்லி டூயட் பாடிட்டு இருக்கலாம்


================


6 சம்பந்தி,பொண்ணுக்கு டான்ஸ் ஆடத்தெரியுமா?

என்ன இப்டி கேட்டுட்டீங்க?எங்க வீட்டு மாப்ளை"புரோக்ராம்ல ஆர்யா"கூட,ஆடி"இருக்கு,சிம்பு கூட ஆடி இருக்கு,சிவகார்த்திகேயன் கூட ஆடி இருக்கு


===============7 இந்த"க்ளாஸ்ல"எல்லாம்"சோப்ளாங்கி"பசங்கதான்.இருக்கறதுல"இவன்"ஓரளவு"தேவலை.லீடர் ஆக்கிடலாமா?

தலைவன் கறவன்"தானா உருவாகனும்.தன்னிகரற்று சிறக்கனும்,வேற வழி இல்லாம ஒப்புக்கு சப்பாணியா உட்கார"வைக்கப்படறவன்"தலைவன் ஆகிடமுடியாது


===============


8 அம்மா இல்லாத உலகில் அப்பாவை வாழ அனுமதிக்கும் உலகம்,அப்பா இல்லாத உலகில் அம்மாவை ஏன் வாழ விடுவதில்லை.?

தெரிலங்க.சின்னம்மா"நினைச்சிருந்தா வாழ விட்டிருக்கலாம்.அவங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ?=================9 நாங்க ஆச்சாரமான பேமிலி,பொண்ணு சுத்த பத்தமா இருக்கனும்னு எதிர்பார்க்கறோம்

என்ன இப்டி சொல்லீட்டீங்க?ஒரு டப்மாஸ் போடறதுன்னாக்கூட குளிக்கற,சீன் தான் போடும்.அவ்ளோ சுத்தம்


=================10 ஆண்டவா!காவேரி மேலாண்மை எப்டியாவது அமைக்க"முடியாம"பாத்துக்கப்பா

ஏன்?
யார் யாரெல்லாம் தற்கொலை பண்ணிக்கப்போறாங்கனு"கணக்கெடுக்கனும்


=================11 கடமையை ஆத்தியாச்

ஓஹோ என்ன செஞ்சீங்க?
சூடா இருந்த டீ யை ஆத்தியாச் ,குடிச்சாச்


=================12 சார்,கதை எழுத உகந்த நேரம் எது? கவிதை எழுத உகந்த நேரம் எது?

காதலி பிரிவில் இருக்கையில் கவிதையை எழுதிடனும்.சம்சாரம் அவங்கம்மா வீட்டுக்கு போன கேப்ல கதையை எழுதிடனும்


===============13 நான் சமைக்கும் போது உப்பு காரம் பார்க்க மாட்டேன் ஆனா சாப்பிடும்போது பார்ப்பேன்

அதெப்டி மேடம் ?சாப்பிடும்போதுதான் குழம்புல கரைஞ்சிருக்குமே?எப்டி பார்ப்பீங்க

===============14 விஜய் மல்லய்யா லண்டன்ல நேத்து 3 வது கல்யாணம் பண்ணீட்டாராமே?

நான் நம்ப"மாட்டேன்.அவரோட,ஆதார்"கார்டை தான்"முடக்கீட்டாங்களே?எப்டி மேரேஜ் நடக்கும்?

================15 தான் காதலிக்கப் படுகிறோமென
உணர்ந்த பின்னர்
காதலனை பெண்
நூறு மடங்கு நம்புவாள்
ஆயிரம் மடங்கு சந்தேகிப்பாள்
கூட்டிக்கழிச்சுப்பாத்தா 900 மடங்கு சந்தேகப்பிராணியா இருப்பா னு சொல்ல வர்றீங்க?


=================16 தளபதியாரே!நால்வகைப்படையும் ரெடி பண்ணச்சொன்னா பொண்ணுங்க கூட்டத்தை கூட்டிட்டு போறீங்க?

மன்னா?இது தேவசேனா"படை.எதிரிகளை சண்டை"போடாம கரெக்ட் பண்ணிடுவாங்க


===============


17 டாக்டர் ,நீங்க சொன்னபடி உடல் எடையைக்குறைக்க சாப்பாட்டை"குறைச்ட்டேன்

சபாஷ்,என்ன செஞ்சீங்க?
முதல்ல எல்லாம் அன்லிமிடெட் மீல்ஸ் 1 சாப்பிடுவேன்,இப்போ லிமிடெட் மீல்ஸ் 2 மட்டும் சாப்பிடறேன்

==============


18 தலைவரே!தமிழக முதல்வர் எடப்பாடியா? வாழப்பாடியா?

அது தெரில.துண்டு சீட்ல வாழப்பாடினுதான் எழுதி இருந்தது,


==============
19 தலைவரே!நீங்க எழுதுன பொன் ராதா நாவல் பிரமாதம்

யோவ்,அது பொன்னர் சங்கர்
அது என்னமோ?உங்க மகன் தான் 2 ம் 1 ன்னாரு


============20 டாக்டர்,பழமொழி சொல்லும்போது"டங்க் ஸ்லிப் ஆகி உளறிடறேன்
பிரமாதமான யோக ஜாதகம்.கட்சித்தலைவர் ஆகி"கோடி கோடியா சம்பாதிக்கப்போறீங்க


===========

0 comments: