Monday, April 02, 2018

கம்பெனியில் பணியாற்ற ரஜினி +அஜித் ரசிகர்கள்"தேவை ( kongu mandalam)

தலைவரே!ராணுவத்துல 5 வருசம் இருந்தா"தான் இனி"கவர்மெண்ட் ஜாப்பாம்


அதனால"நமக்கு,என்னய்யா ஆபத்து?
அய்யோ"ராமா,MLA MP பதவி"கூட"அரசுப்பணி"தானே?============


2 டாக்டர் ,தலைக்கு Oil வைப்பது மட்டும் பிடிக்கவே மாட்டிங்குது.


கூந்தல் பராமரிப்புக்கு தேங்காய் எண்ணெய் மிக அவசியம்.கேரளா வில் இருக்கும்"கர்லிங்க்"ஹேர் கட்டழகிகளைப்பாருங்க,ஆயுள்"உள்ள"வரை தினம்"தலைக்கு ஆயில்"போட"மறக்கமாட்டீங்க-==============3 சிகரெட் புகைச்சா காது சரியா கேட்காதுங்கறாங்களே உண்மையா டாக்டர்?


கொஞ்சம் சத்தமா பேசுங்க ,காது கேட்கல
=============4 குருவே! புலிப்பல், புலிநெகம்

ஒரிஜினல் எங்க கிடைக்கும்???
புலி கிட்டே===============5b ஜோசியரே!புலி நகம் வெச்ச"டாலரை அணிந்தா அதிர்ஷ்டம் அடிக்குமா?


புலி தான் அடிக்கும்,யோவ் ,புலி நகம் ஒரிஜினலா வெச்சிருக்கும் புலிக்கே அதிர்ஷ்டம் இல்லையே?==============


6n தலைவரே!கட்சியோட கொள்கைக்கு விரோதமா நடந்துக்கிட்டார்னு அவரை கட்சியை விட்டு டிஸ்மிஸ் பண்ணீங்களே?அப்டீ என்ன செஞ்சாரு?


நம்ம கட்சிக்குன்னு தனி கொள்கை எதும் கிடையாதுங்கற உண்மையை மேடை ல சொல்லீட்டார்=============7 குருவே! நாட்ல அசைவம் சாப்பிடாத ஆளுக எல்லாரும் பிராமின்ஸ்னு ஒரு புரிதல் இருக்கு மக்கள்ட்ட...அது எதனால?


நம்மாளு எதைத்தான் சரியா புரிஞ்சிருக்கான்.எல்லா ஜாதியிலும் சைவர்கள் உண்டு.பிராமின்சிலும் அசைவர்கள் உண்டு
=============8 டாக்டர்.கேக் சாப்பிடறது உடல்"நலனுக்கு நல்லதா?


கேக் தயாரிக்க பயன் படும் மைதா ,அஸ்கா 2 ம் உடல் நலனுக்கு கெடுதல் .சொன்னா எவன் "கேக்"கறான்?==============


9 குருவே!பெண்களை பிடிக்காத ஆண்கள் எதற்காக காதல் & கல்யாணம் பண்ணி கொள்கிறார்கள் ?


பெண்ணைப்பிடிக்காத ஆண் உலகத்தில் இல்லை,அது உலக நியதியும் இல்லை,பெண்புத்தி பின் புத்தி யாய் இருப்பது வேணா பிடிக்காம இருக்கலாம்=============10 குருவே!கல்யாணம் ஆன பின்னும் ட்விட்டர் ,Fb வருபவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்..!என்பது நிஜமா?

இல்ல,கல்யாணம் ஆன ஆண்கள்"பரிதாபத்துக்கு உரியவர்கள் என்பதே சரி


================


11 குருவே!சொந்த ஊர விட்டு போனாலே ஆயுசுல பாதி காலம் செழிப்பா வாழ்ந்திடலாம் என்பது உண்மையா?

செல்வச்செழிப்புடன் வாழ்ந்தா மட்டும் போதும்னா அது சரி, சொந்த ஊர்லயே சொந்த மண்லயே ஜெயிக்கறதுதான் கெத்து


================


12 தலைவரே!நம்ம நாட்டுக்குத்தேவையானது வலது சாரி யா?இடது சாரியா?

ஆப் சாரி தான்
புரியல
தாவணி தான் இப்ப வழக்கொழிஞ்சிட்டு வருது,அதான் தேவை


===================


13 ஜட்ஜ் = கேள்வி கேட்ட பெண் நிருபர் ட்ட "அழகா இருக்கே" னு சொன்னதுக்கு விளக்கம் குடுங்க

கைதி = ஜூஜூபி மேட்டர் யுவர் ஆனர் ,ஷாம் சினேகா நடிச்ச "ஏய் ,நீ ரொம்ப அழகா இருக்கே " படம் பாத்தாச்சா?"னு கேட்க வந்தேன்


==================


14 திராவிட நாடு உருவாக வேண்டும் என நான் குரல் கொடுக்கவில்லை

ஏன் தலைவரே பல்டி அடிச்ட்டீங்க?
நான் ஏதோ 4 மணி நேரம் உள்ளே வெச்சு விட்ருவாங்கனு நினைச்சேன் ,2 வருசம் தீட்டீடுவாங்களாம்


====================15 ஜட்ஜ் = டாடா ஏஸ் ஒரு 4 வீலர் ஆட்டோ.அதுல டிரைவர் ஹெல்மெட் போடலைனு 100 ரூபா அபராதம் போட்டிருக்கீங்க ,ஏன்?

S.I = டாடா ஏஸ் ஒரு டூ வீலர் இல்லை என்பது போலீசுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லைனு தீர்ப்பு சொல்லி கேசை முடிங்க யுவர் ஆனர்


==================16 டாக்டர் ,பச்சை திராட்சை அடிக்கடி சாப்பிடறவங்க பச்சை பச்சையா பேசுவாங்களா?

ஏம்மா,அப்போ பீட்ரூட் சாப்பிடறவங்க கம்யுனிசம் பேசுவாங்களா?===============17 சார் ,நீங்க ஒரு லோன் ட்ராவலர் னு சொல்றீங்களே?இயற்கைப்பிரதேசங்களை பார்க்க பிடிக்குமா?

ஒவ்வொரு ஊரா போய் பேங்க் ல லோன் வாங்கி வேற ஊருக்கு எஸ்கேப் ஆகிடுவேன்=================18 டாக்டர் ,எந்தப்போண்ணைப்பாத்தாலும்"நடிகை மஞ்சுளா மாதிரியே தெரிது என் கண்ணுக்கு

காமாலை காரனுக்கு கண்டதெல்லாம்"மஞ்சுளா"வா தான் தெரியும்


==============


19 தலைவரே!நம்ம கட்சிக்காரங்க எல்லாருக்கும் படர் தாமரை வந்திருக்கு

;அய்யய்யோ,இதுக்கு எதுனா பரிகாரம் இருக்கா?
நம்பிக்கை இல்லா தீர்மானத்துல பாஜக வுக்கு எதிரா நாம வாக்களிச்சா இது வரை செஞ்ச பாவத்துக்கு எல்லாம் விமோசனம் கிடைக்கலாம்============20 எம் டி சார் ,நம்ம கம்பெனியில் பணியாற்ற ரஜினி +அஜித் ரசிகர்கள்"தேவை னு விளம்பரம்"கொடுத்திருக்கீங்களே",ஏன்?

அவங்க கிட்ட தான் "எஜமான்" "விசுவாசம்" இருக்கும்?

0 comments: