Tuesday, April 10, 2018

சமாதானம் வேணாம் ,இன்னோவா தானம்"

உலகின் அசுத்தமான நதிகளின் பட்டியலில் 5ம் இடத்திலிருந்து 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது கங்கை # பாவத்தைப்போக்கறேன்னு பாவிகள்"எல்லாம் டெய்லி போய் குளிச்சா பின்ன என்ன ஆகும்? நெ 1 இடத்துக்கு வந்துடும்


==============


2 சசிகலாவிற்காக பல தியாகங்களைச் செய்துள்ளார் நடராஜன் - டிடிவி தினகரன் வை கல்யாணம் பண்ணுனதே ஒரு தியாகம் தான்


===============


3 பெங்களூரில் புழுதி புயலுடன் திடீர் ஆலங்கட்டி மழை.. மக்கள் குஷி # கர்நாடகாவில் கடும் வெள்ளம் ,பெருமழை பெய்தா எல்லா பி ீரச்சனைக்கும் ஒரு முடிவு வந்துடும்


==============4 தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே காவிரி பிரச்னையை தீர்த்துவிடுவோம் - தமிழிசை # இந்த ஜென்மத்துல 2ம் நடக்காதா?ரைட்டு


=============


5
பாஜகவை அதிமுகவுடன் இணைத்துவிட்டார்களா என்ற கேள்வியை இது எழுப்புகிறது - கே.சி. பழனிச்சாமி # தாமரைப்பூவுக்கும் ,இரட்டை இலைக்கும் சண்டையே வந்ததில்லை னு பாட்டே போட்ரலாம் போல


=============


6 மோசமாக கலாய்க்கிறார்கள்.. சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த முடிவு.. ஸ்மிரிதி இராணி அதிர்ச்சி தகவல் # கலாய்க்கப்படுவது பெரும்பாலும் நம்ம ஆளுங்க தான்
ஹெச் ராஜா தமிழிசை மோடி ;ரஜினி


=================

7 சாதி, மத பலவீனங்களில் இருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டும் - பிரதமர் மோடி # அரசியல்வாதிங்கதான் மதக்கலவரத்தை தூண்டி விடறதே!அவங்களை திருந்தச்சொல்லுங்க


==============8 தினகரன் அணியினர் என்னிடம் சமாதானம் பேச முயற்சிப்பது வீண் வேலை ~ நாஞ்சில் சம்பத் # சமாதானம் வேணாம் ,இன்னோவா தானம்"னா ஓகேவா?


=============9 தினகரனை சிகரத்திற்கு கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன் -நாஞ்சில் சம்பத் டுவிட்டரில்...# அவரோட"தீவிர fan னா அவரையே சுத்தி சுத்தி வரனும் ,இப்டி சுத்தல்ல விட்டுட்டு வரக்கூடாது


=============


10 தேர்தல் வந்தால் ஸ்டாலின் முதல்வர் ராகுல் பிரதமர் - நாஞ்சில் சம்பத்
ஜனாதிபதி"யாரு?கவர்னர்"யாரு?ன்னும் சொல்லீட்டா தேவல


===========11 மக்கள் பின்னால் மட்டுமே நாங்கள் நிற்கிறோம்’- தமிழிசை # எதுக்கு அவங்க பின்னால போய் ஒளிஞ்சுக்கிட்டீங்க?


==============12 இந்துமத புனித நூல்கள் மட்டும்தான் சாதியை வலியுறுத்துகின்றன - ஆ.ராசா # தேர்தல் தேதி அறிவிச்சா உடனே ஓடிப்போய் ஜாதிக்கட்சித்தலைவர்களை சந்திச்சு கூட்டணிக்கு அச்சாரம்"போடும் தமிழகத்தலைவர் யார்? நம்ம தானைத்தலைவர் தானே?


==============13 தமிழகத்தில் பாஜக நடத்தும் நாடகம் போல், ஆந்திராவில் நடத்த முடியவில்லை: சந்திரபாபு நாயுடு விமர்சனம் வாகா தஞ்சாவூர் பொம்மை கிடைச்ட்டா யார் வேணா பொம்மலாட்ட"ஆட்சி"நடத்திடலாம்


===================


14 ஓட்டை பானையில் சமையல் செய்ததை போல தமிழக பட்ஜெட் உள்ளது:் மு.க.ஸ்டாலின் # என்னதான் கருத்து"சொன்னாலும்"நம்மால இரட்டை இலை ஓட்டை இழுக்க முடியலையே?நம்ம ரெகுலர் ஓட்டையே விட்டுடவம் போலயே?


===============15 பாஜகவை பற்றி பேசினால் அதிமுகவில் இருந்து நீக்குகிறார்கள் - கே.சி. பழனிச்சாமி # எஜமான் விசுவாசம்"தான்


===============

16 பள்ளி ஆண்டு விழாவில் அதிக ஒளியில் விளக்கு.. 100 குழந்தைகளுக்கு கண்களில் பாதிப்பு.. தாளாளர் கைது # குழந்தைகள் தானே நாட்டின் ஒளி விளக்கு?


===============17 முந்தைய காங். ஆட்சியின் திட்டங்களை பாஜக அரசு பலவீனப்படுத்துகிறது - சோனியா # அது மட்டுமா?ஒவ்வொரு மாநிலத்துலயும் தேர்தல் வரும்போதும் காங் கை தோற்கடிச்சு பலவீனப்படுத்துது,அதை விட்டுட்டீங்க

===============18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அதை பின்தொடர தயார் − மு.க.ஸ்டாலின்...# இது தான்"சாக்குனு ஆட்சி அமைச்சிடுவீங்களோ?னு அவங்க"பயப்படலாம்"இல்ல?


==============19 ரத யாத்திரைக்கு எந்த மாநிலத்திலும் பிரச்னை இல்லை; தமிழகத்தில் மட்டும்தான் - தமிழிசை # பிரச்சனைனு தெரியுதுல்ல?அப்புறமும் தமிழகத்தில் ரத யாத்திரை"வர்றது பிரச்சனையை ஊதி பெருசாக்கவா?


===============20 நானும் பன்னீர் செல்வமும் ராமர் லட்சுமணன் போல செயல்படுகிறோம் - CM EPS # வேற வழி இல்லாம என்ற வரியை விட்டுட்டீங்க


================

0 comments: