Tuesday, April 03, 2018

நித்தியானந்தா யாகம்

ஸ்டாலினை முதல்வராக்க திமுக தொண்டர்கள் தீவிரமாகக் களப்பணியாற்ற வேண்டும்: கே.என்.நேரு.
# அப்பவும் தளபதி எதுவும்"செய்யமாட்டாரு?கிரீடத்தை அவர் தலைல வெச்சா ஏத்துக்குவாரு?

=====================


2 நான் ஏன் டி.டி.வி. தினகரனிடம் போய் நிற்க வேண்டும்.நான் என்ன பொறம்போக்கா? பரதேசியா?கொந்தளிக்கிறார் - நாஞ்சில்சம்பத் # அது சரியா தெரியலைங்க,ஆனா நேத்து வரை அங்கே தானே இருந்தீங்க?அதுக்கு என்ன அர்த்தம்?


=============


3 தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை : மன்மோகன் சிங் குற்றச்சாட்டு
# குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு ,அரசியல்வாதி பேச்சு எலக்சன் முடிஞ்சதும் போச்சு


=============4 நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் : மைத்ரேயன் # இன்னோவா தந்தால் பரிசீலிக்கப்படும் −நா.சி


================5 455 ரூபாய்க்கு 1,000 பாலோவர்ஸ்.. டிவிட்டரில் புதுப் பிஸ்னஸ்..! வேளை ,பெண் பாலோயர்ஸ் வேணும்னா தனி சார்ஜ் னு சோல்லலை

===============6 கட்சி நிர்வாகிகள் வரையறைக்கு உட்பட்டு பேச வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்.
# பழையபடி பேசாமயே கமுக்கமா இருந்துட்டாதான் பாதுகாப்பு


================


7 கல்லூரிக்கு செல்வது போல் ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு சென்று வருகிறார்-டி.ஆர்# கடைசி வரை கல்லூரி முதல்வராக்கூட ஆகமுடியாதுங்கறாரா?


===============


8 இப்போது தேர்தல் நடந்தால் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார்- நாஞ்சில் சம்பத் # நேத்து வரை இதே வாய் தினகரன் தான் அடுத்த சிஎம் னு சொல்லுச்சு,நரம்பில்லாத நாக்கு எப்டி வேணாலும் மாத்தி மாத்தி பேசும்"போல


==================


9 ரிசர்வ் வங்கி அதிகாரிகளை விட திருப்பதி கோவில் பணியாளர்கள் மேல் - ப.சிதம்பரம்
# மொட்டை போடறதுலயா?


=================10 மோடி எதை செய்தாலும் தமிழர்கள் எதிர்க்கிறார்கள் - தமிழிசை
எதிர்க்கும்படியே மோடி ஏதோ ஒண்ணு பண்ணீட்டு இருக்காரு இப்டியும் சொல்லலாம்================11 ராஜினாமாவை தவிர
மற்ற வகைகளில்
மத்திய அரசுக்கு அழுத்தம்
கொடுப்போம்
# மோடிக்கு கால் அமுக்கி விட்டாலும் அது காலுக்கு தரப்படும் அழுத்தம்தான்
-அமைச்சர் ஜெயக்குமார்


================12 ராஜினாமாவை தவிர
மற்ற வகைகளில்
மத்திய அரசுக்கு அழுத்தம்
கொடுப்போம்
# மோடிக்கு கால் அமுக்கி விட்டாலும் அது காலுக்கு தரப்படும் அழுத்தம்தான்
-அமைச்சர் ஜெயக்குமார்===============13 நித்யானந்தா − ஆன்மீகப்பேரின்பத்துக்காக"பெண் என்னுடன் விருப்பப்பட்டு உறவு வைத்துக்கொண்டது கற்பழிப்பு ஆகாது @ கோர்ட் # இதே வாய் தான் தனக்கு ஆண்மையே இல்லைனு சொல்லுச்சு


==============14 தமிழ்த் தாய்க்கு இந்த ஆண்டே சிலை அமைக்கப்படும் - மாஃபா பாண்டியராஜன்.
சிலை வைக்கறேன்னு உலை வைக்கப்போறாங்க================15 திருச்சி பெண் உஷா உயிரிழக்க முக்கிய காரணம் அவரது கணவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதுதான்: சென்னை உயர்நீதிமன்றம் # அவர் ஹெல்மெட் அணிஞ்சு பைக் ஓட்டி இருந்தா அவர் மனைவி உயிர் தப்பி இருக்குமா?இது என்ன விதமான லாஜிக்?


=================16 சென்னை மருத்துவமனையில் அதிகாலை 1.35 மணிக்கு நடராஜன் உயிர் பிரிந்தது # தமிழக அரசியலில் பல சதி வேலைகள் செய்தவரை இயற்கை பலி கொண்டது.இது சதிகாரர்களுக்கு,சதிகாரிகளுக்கு ஒரு பாடம்.வாழ்வு நிலை இல்லாதது================


17 லஞ்சம் வாங்குவது திராவிடர்களின் கலாச்சாரம்- எஸ்வி.சேகர் பேங்க்ல லோன் குடுத்து அவங்க பாரீன் தப்பிப்போவதை வேடிக்கை பார்ப்பது யார் கலாச்சாரம்?=================18 ரத யாத்திரைக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி.க்கும் தொடர்பில்லை: அமைச்சர் ஜெயக்குமார் # அப்போ அந்த ரத"யாத்திரை முஸ்லீம்/கிறிஸ்டியன் நடத்தறதா இருக்குமோ?கேக்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா படம் கூட 100 கோடி வசூல்னு சொல்லுவாங்க"போல


===============19 சசிகலா புஷ்பா திருமணம் செய்ய இருக்கும் ராமசாமி என் கணவர்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் சத்யபிரியா புகார் # வடிவேலு காமெடி க்ளிப்பிங்க் பாக்கறமாதிரி இருக்கு.எல்லாம் செகண்ட்சாவே இருக்கு


===============

20 எதிரிகளை அழிக்க நித்தியானந்தா யாகம் - செய்தி
# ரூம்"கதவை சாத்திட்டு யாகம்"செய்யவும்,நக்கீரன்",சன்"டிவி கேமராக்கள் ஜாக்கிரதை===================
20

0 comments: