Friday, April 06, 2018

தி.மு.க மாநாடுக்கு எதிர்மாநாடு

நடிகர்களுக்கு வெள்ளை பணமாகவும் கருப்பு பணமாகவும் கொடுக்கபடும் சம்பளம் வெள்ளையாக மட்டும் கொடுக்கபட வேண்டும் - சிம்பு
# கேஷா கொடுக்காம"அக்கவுண்ட்பேயி"செக்கா தந்துட்டா வடை சுடறவங்க வேற ஜோலி பாக்க போய்டுவாங்க


==============


2 “பெரியார் மண்ணில் பா.ஜ.க., காலூன்ற முடியாது” - மாநாட்டில் கனிமொழி! #
அப்போ கன்னியாகுமரி பெரியார் மண் இல்லையா?கேரளா"பார்டர்னு"சமாளிப்பமா?


================


3 ரஜினி கட்சி, கொடி அறிவிக்கும்போது தமிழகத்தைப் பிடித்த சனியன் ஒழிந்துவிடும்! – தமிழருவி மணியன் # எப்பவும் சனி முற்றிலும் ஒழியாது,ஒரு ராசில இருந்து இன்னொரு ராசிக்கு மாறும்,அவ்ளவ்தான்


================4 சென்னை விருகம்பாக்கம் ஐ.ஓ.பி. வங்கியில் கொள்ளை முயற்சி
> வங்கி பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் லாக்கரை உடைக்க முடியாததால் திரும்பிச்சென்றனர் # ஒண்ணா பேங்க்ல லோன் வாங்கிட்டு ஓடறானுங்க,இல்ல பேங்க்கை கொள்ளை அடிக்கறாங்க,உழைச்சு சாப்டற ஐடியாவே இருக்காது போல


===============5 டெல்லியில் எளிய முறையில் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலாபுஷ்பாவுக்கு 2-வது திருமணம் நடைபெற்றது # கோர்ட் தீர்ப்பை கர்நாடகாவும் மதிக்கறதில்ல,யாரும் மதிக்கறதில்ல


=============6 காவிரி நீருக்காக அதிகம் போராடிய இயக்கம் அதிமுக தான்_ ஜெயக்குமார்
# எப்போ ஜெ.மு வா? ஜெ.பி யா?

==============7 டாக்டர்,இரண்டு வாழைப்பழங்கள்/ ஒரு சப்போட்டா/ பெரிய மாம்பழம் னு குழந்தைகளுக்கு கொடுக்க...
உறுதியான உயரமான அறிவார்ந்த குழந்தைகளாவாங்களாம்🤔நிஜமா?
ஆமா,பழமொழியைத்தான் தப்பா சொல்றாங்க,பழங்களையாவது சரியா உபயோகிச்சா சரி


=================


8 திமுகவை பொறுத்தவை நேரத்திற்கு ஏற்ப பச்சோந்தி போன்று மாறிக்கொள்வார்கள் - அமைச்சர் ஜெயக்குமார் # நீங்க கூடத்தான் ஜெ கால்ல விழுந்தீங்க",பின் சசி கால்ல விழுந்தீங்க ,இப்போ மோடி கால்ல கிடக்கறீங்க!இதுக்குப்பேரு"பச்சோந்திதத்தனமா?மொள்ளமாரித்தனமா?


==================9 Central Bank Of India வங்கியில் தரம்குறைந்த நகைகளை வைத்து கடன் பெற்று மோசடி செய்த புகாரில் நகை மதிப்பீட்டாளர் கைது
@திருநெல்வேலி # அதெப்டீ எல்லாரும் பேங்க் மேனேஜருக்கே அல்வா குடுக்கறீங்க?கமிஷன்"வாங்கிக்குவாரா?


==============10 சுங்கக்கட்டண உயர்வை மட்டுமல்ல... சுங்கக் கட்டணம் வசூலிப்பதையே நியாயப்படுத்த முடியாது: அன்புமணி # வசூலிச்சு தொலைக்கட்டும்.மினிமம் 50 கிமீ க்கு ஒரு டோல்கேட்தான்னு வரைமுறை வேணும்.இவனுங்க இஷ்டத்துக்கு 35 கிமீ க்கு 30 கிமீ க்கு ஒரு இடத்துல கேட் போட்டா எப்டீ?
================11 தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளித்தது மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் # அடுத்த போராட்டத்துக்கு மதுரை மக்கள் தயாராகிக்கனும் போல.


===============12 தி.மு.க மாநாடுக்கு எதிர்மாநாடு நாங்களும் நடத்துவோம் -தமிழிசை # ஓஹோ!நீங்களும்"அட்லி"மாதிரிதான்,சுயமா"யோசிக்க"மாட்டீங்க?அடுத்தவன்"ஐடியாவை,ஆட்டையைப்போட்ருவீங்க?


==================13 திமுகவில்
சாதாரண தொண்டன் கூட
முதல்வர் ஆகலாம்
# உங்க ஐடியா புரியுது,ஸ்டாலினை அதிமுக ல சேர வைக்க பிளான்!?
-கடம்பூர் ராஜு


===================14 எங்களை ராஜினாமா செய்ய சொல்ல ஸ்டாலின் எங்களுக்கு தலைவர் அல்ல - தம்பிதுரை # அவர் கட்சி ஆளுங்களே அவர் சொன்னா கேட்க மாட்டாங்க


=================15 அரசியலில் எனக்கு சவாலாக எந்த பெண்ணையும் நினைக்கவில்லை; எனக்கு நானே சவால் - தமிழிசை # ஜெ உயிரோட இருந்தப்ப இந்த பஞ்ச் டயலாக்கை பேசி இருந்தா பஞ்சர் ஆகி இருப்பீங்க


================16 "கமல் நாவை அடக்கிப் பேச வேண்டும்" - வைகோ
# அப்டியே "சாமான்ய ஜனங்களுக்கு புரியற மாதிரி பேசனும் ,ட்வீட்டனும்னு சொல்லுங்க,இவருக்கே"தனி கோனார் நோட்ஸ் ,துபாஷ் தேவைப்படுது


==================17 ரஜினி, கமல் நினைப்பது போல தமிழக அரசியலில் இருக்கும் வெற்றிடத்தை எளிதாக நிரப்ப முடியாது: நடிகை கவுதமி # முதல்ல வாடகை,பாக்கி ,சம்பள பாக்கி இதை எல்லாம்"செட்டில் பண்ணச்சொல்லனும் 2 பேரையும்


================18 சிபிஐக்கு என்னுடைய செல்போனின் பாஸ்வேர்டை தெரிவிக்கவே மாட்டேன் −கார்த்தி சிதம்பரம் # யார் யாருக்கு எங்கே அடிச்சா எங்கே வலிக்கும்கற ரமணா பார்முலா சிபிஐ க்கு தெரியாமயா இருக்கும்?


==============19 கலைஞரை விட மிகவும் விவேகமாக அரசியல் செய்கிறார் மு.க.ஸ்டாலின்: துரைமுருகன் - " சம்பத்தை விட திறமையாக ஜிங்க் ஜக் அடிக்கிறார் து மு


===========20 முதல்வர் பழனிசாமி தான்
தமிழகத்தின் சூப்பர் ஸ்டார்
-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
# காமெடி ஸ்டார்களே(சந்தானம்",வடிவேலு)சூப்பர் ஸ்டார்"ஆக முடீல.காமெடி பீசுங்க எப்டி ஆக முடியும்?


===============

0 comments: