Wednesday, April 11, 2018

சன் டிவி,கலைஞர் டிவி இயங்குமா?

டாக்டர்.என் கூந்தல் கர்லிங் ஹேரா இருக்கு.இதை மாத்த முடியாதா?

மிஸ் ராணி.உங்க பேரை வேணா சுருளிராணினு மாத்திக்குங்க.அது"ஈசி

==========


2 தலைவரே!நம்ம மாநாடு பந்தல்ல இருக்கற 200 ரூபா கோஷ்டிங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து "சொடக்கு"மேல சொடக்கு"போடுது"பாட்டு பாடறாங்களே ,எதுக்கு?

அப்பதான் இது "தானா சேர்ந்த கூட்டம்"னு உலகம்"நம்பும்


=============


3 தலைவரே!உண்ணாவிரதத்தை ஏன் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வெச்ட்டீங்க?

"திங்க"ட்கிழமை அன்னைக்கு எப்டி திங்காம இருக்கறது?

============4 சொந்தமா வீட்லயே"சோப்"தயாரிக்கப்போறேன்.அதுலதான் இனி"குளிக்கனும்

வெரிகுட்.ஆனா பாக்க லிக்விட் மாதிரி இருக்கே?
30 நாள் ஆகும் அது சோப் ஆக
அடடா,அப்ப 30 நாள்"கழிச்சுதான் சோப்"போட்டு குளிப்பீங்களா?


===============


5 ஜட்ஜ் = 15 நாள் பரோல் கேட்டீங்க.அனுமதிச்சோம்.ஆனா 2 நாள் முன்கூட்டியே வந்துட்டீங்களே ஏன்?

கைதி = ஆல்ரெடி 2 நாள் ஷாப்பிங்க் போனதை இப்ப கழிச்ட்டேன் ,நமக்கு நேர்மைதாங்க முக்கியம்


================6 தலைவரே!ஆளுநர்"வரும்போது அவங்களை"வரவேற்க பூங்கொடி ,அன்னக்கொடி,மலர்க்கொடி இவங்க 3 பேரையும் நிறுத்தி வெச்சிருக்கீங்களே ஏன்?

அவங்க கைல கறுப்புக்கொடியை"குடுத்துடுவோம்,மீடியா வாயை அடைச்சுடலாம்.ஆளுநரும் சந்தோஷப்பட்டுக்குவாரு

==============7 யுவர் ஆனர் ,ஸ்கீம் னா"என்ன?

திட்டம்
திட்டம்னா என்ன?சரியா புரியல.3 மாசம் அவகாசம்"வேணும்
எதுக்கு?அதுக்குள்ள கர்நாடகா"தேர்தலை முடிச்சுடலாம்னா?தீர்ப்பு புரியலைனு தீர்ப்பு வந்தப்பவே கேட்க என்ன கேடு?


===============


8 யுவர் ஆனர்,நன்னடத்தைக்காக எனக்கு ஜெயில் தண்டனைல 2 வருசம் குறைக்கனும்

ஓஹோ,நன்னடத்தைன்னா?என்ன செஞ்சீங்க?
15 நாள்"பரோல் கிடைச்சும் 13 நாள்லயே ஜெயிலுக்கு திரும்பி"வந்தேனே?
ஏம்மா?2 நாள் முன்னே வந்ததுக்கு 2 வருசம் முன்னே விடனுமா?குத்து"மதிப்பு குமாரசாமி கூட இதை ஒத்துக்க மாட்டாரே?


===============


குருவே!பெண்மையை மதித்தால் போதுமானது, பொண்ணுங்கள மதிக்கனும்ன்ற அவசியம் இல்லை னு சொல்றாங்களே அது சரியா?

கமல்"படத்தை பாத்தா"போதும்,படத்துல கமலை பாக்கனும்னு அவசியம் இல்லை னு சொல்ற மாதிரி"தான் இதுவும்


==============


11 ஏண்டா எக்சாம் எழுதலை?தறுதலை.திரு திரு னு முழிச்சிட்டிருக்க?

எக்சாம்னா என்ன?
மனப்பாடம் பண்ணீட்டு"வந்து"எழுதறது;
ஓஹோ,எனக்கு"படிக்க 3 மாசம் டைம் வேணும்


===============12 சார் அவர் பிரமாதமா வாதாடறாரு,அப்போ அவரு நல்லவர் தானே!?

க்ரிமினல் லாயரு
ஊர் சொத்தை திட்டம் போட்டு திருடறவன்
இவங்க கூடத்தான் திறமையா வாதிடுவாங்க,அதுக்காக அவங்க நல்லவன் ஆகிட முடியுமா?


===============13 டியர்,
நீ வாட்ச்ச எந்த கைல கட்டிப்பே?வலதா?இடதா?
யோவ்.என் கழுத்துல தாலி கட்ட வழி பாருய்யா,கீப்பாவே எத்தனை வருசம் வெச்சிருப்பே ?


=============14 என்னைக் கூப்பிடாம வெளிய போய்ட்டு நான் திட்டுவேனோனு பயந்து எனக்கு பிடிச்சதை சாப்பிட வாங்கிண்டு வர husband கிடைப்பது வரம்😍

ஆமா,ஆனா அவர் போனது உங்க திட்டுக்குப்பயந்து இல்ல,சமையலுக்கு பயந்து


=========================15 டாக்டர் ,காலையில இருந்து சாப்டல ,சாப்டாமலே தூங்க போறேன்

சாப்பிடாம பசியோட இருந்தா அல்சர் தான்மா வரும் ,தூக்கம் எப்டி வரும்?


================16 தலைவரே! ஆ ராசா திறமையா பேசறாப்டி,துண்டு சீட் பாக்காமயே!அவரு"தலைவர் ஆக"வாய்ப்பிருக்கா?

ஒரு"நாட்டோட இளவரசரை"விட அமைச்சரோட"மகன் புத்திசாலி ,திறமைசாலி என்பதற்காக"பட்டாபிசேகம்",மகுடம் அவருக்கு"தரப்பட்ட வரலாறு இருக்கா?==============17 தர்பூசணிப்பழம் (கோஷாப்பழம்) ஆப்பிரிக்காவுலதான் முதன்முதலா விளைஞ்சுது

நான் நம்ப மாட்டேன்"டாக்டர்
ஏன்?
ஆப்பிரிக்கால விளைஞ்சா கறுப்பா தானே இருக்கனும்?இது பச்சையா இருக்கு,உள்ளே"சிவப்பா இருக்கே?===========================


18 டிவியும் ஆன் பண்ணிக்கிட்டு ஹாலுக்கும் கிட்சனுக்கும் நடந்துக்கிட்டே சீரியலையும் மிஸ் பண்ணாம தோசையும் கருகாம எடுக்கறதுலதான்
பெண்களோட திறமையே இருக்கு
அந்த சீரியலையும் சகிச்சுக்கிட்டு ,சம்சாரத்தையும் ,சமையலையும் அட்ஜஸ் பண்ணிக்கிட்டு காலத்தை ஓட்றானே ஆம்பளை அந்த திறமைதான் டாப்


=================19 டேய் ,நேத்து நாம பொண்ணு பாத்துட்டு"வந்தோமே",அந்த"சம்பந்தம் வேணாம்.சரியான ராட்சஷி குடும்பமாம்

பரவால்லம்மா,செலவு மிச்சம்,அதையே கட்டிக்கறேன்
ஏன்?
ராட்சஷி ன்னா பேய் ,பேய்னா கால் இருக்காது ,கால் இல்லைனா கொலுசு வாங்கித்தர்ற செலவு மிச்சம் தானே?


===============


20 தலைவரே!ஏப்ரல் 5 பந்த் ,கடையடைப்பு.தமிழகமே ஸ்தம்பிக்கும்னீங்க?

ஆமா,போராட்டம் ,திட்டவட்டம்,அடுத்த கட்டம்
சன் டிவி,கலைஞர் டிவி இயங்குமா?
யோவ்.ஒரு நாள் விளம்பரமே 50 லட்சம் வருது.அதை விடுவாங்களா?நான் சொன்னது அடுத்தவன்"கடை தான்


==================


0 comments: