Wednesday, April 11, 2018

18 வயசான மாணவர்களுக்கு ஓட்டுரிமை உண்டா? இல்லையா?

எச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு!!!
# அப்டியே தமிழிசைக்கும்,அவருதான் அடிக்கடி தாமரை தமிழகத்தில் மலரும்னு ரொம்ப நாளா உளறிட்டு இருக்காரு


=============


2 நானும், ஓ.பி.எஸ்.சும் ராமர், லட்சுமணன் போல செயல்படுகிறோம் - எடப்பாடி
2021 ஆட்சி முடிஞ்சு அடுத்து வனவாசம்தானே?


================


3 ஏங்கி நிற்கும் மக்களை தாங்கி நிற்கிறோம் - எடப்பாடி #
ஜெ கால்ல சசி கால்ல விழுந்து கிடந்த், நீங்களே இப்போதான் எந்திரிச்சு நின்று இரு ுக்கீங்க..!

============4 கவுன்சிலரே இல்லாத திரிபுராவில் வென்றதை போல், தமிழகத்திலும் ஆட்சியை பிடிப்போம்" - தமிழிசை #
3000 வருசம் ஆனாலும்"அது"மட்டும் நடக்காதுங்க்கா!


=============5 தமிழக அரசு வெற்று விளம்பரம் செய்கிறது; சாதனைகள் ஒன்றும் இல்லை-ஜி.கே.வாசன் விமர்சனம்
# சாதனைகளே செய்யாம சாதனை"செஞ்சதா விளம்பரம் பண்றதும் ஒரு சாதனை தானே?

===============


6 பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தினால் அவர்களின் கைகள் இருக்காது - தமிழிசை மிரட்டல்
பேச்சு,சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்னு சொல்லி இருக்கலாம்


=============


7 நாட்டின் பொருளாதாரம் வளர்ந்தாலும் புதிய வேலைவாய்ப்பு உருவாகவி்ல்லை : ராகுல்காந்தி குற்றச்சாட்டு
# அப்போ நாட்டோட பொருளாதாரம் வளர்ந்திருக்குனு ஒத்துக்கறீங்களா?னு மோடி ஜி மடக்குவாரே?இப்டியா வாயைக்குடுத்து மாட்டிக்கனும்?


===============


8 மாட்டுத்தீவன ஊழல்.. 4வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 7 வருடம் சிறை # 7 வருசம் உள்ள உக்காந்து செஞ்ச தப்பை எல்லாம்"அசை போட்டுட்டு இருப்பாரோ?


============9 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி - விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் சரத்குமார்
// கட்சில இருக்கற ஒரே ஆளு நீங்கதான்,நீங்களும் டெல்லி போய்ட்டா ஆபீசை யார் பாத்துக்குவா


============10 மாண்புமிகு முதலமைச்சர் ஓராண்டில் 5208 கோப்புகளுக்கு ஒப்புதல்: எடப்பாடி அரசின் சாதனைப் பட்டியல் -5208/365 =14.26.படிச்சுப்பாத்தா சைன் பண்றோம்?நமக்கு"படிக்கத்தான் தெரியுமா?கூடக்குத்தகையா போடறதுதானே?


===============


11 மத்திய அரசிடம் தமிழகத்தை அதிமுக அரசு
அடகு வைத்துவிட்டது - கனிமொழி # ஒரேயடியா விக்கலையேனு சந்தோஷப்பட"வேண்டியதுதான்,நா ிம"கச்சத்தீவை வித்த மாதிரி


==============


12 தமிழக அரசை குறைகூறும் டிடிவி.தினகரன் யாருடைய ஏஜென்ட்?:−் பொன்.ராதா # அங்கே அடிச்சா இங்கே ஏன் வலிக்குது?அதிமுக பாஜகவின் பினாமி அரசு"என்ற வாக்கு பலிக்குது


===============


13 குக்கர் வீட்டுக்கு தான் தேவை நாட்டுக்கு தேவை இல்லை- தமிழிசை
# அப்போ வீட்டுக்குத்தேவைப்படற எதுவும் நாட்டுக்குத்தேவை இல்ல?என்ன லாஜிக் இது?

===============


14 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிட்டால் தற்கொலை செய்வோம் - நவநீத கிரிஷ்ணன் அதிமுக எம்.பி..# ராஜினாமா"பண்றது"அதை,விட ஈசி.கூரை ஏறி கோழி,பிடிக்காதவனா வானம்,ஏறி வைகுந்தம் போவாப்டி?


================


15 மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து தமிழர்களை மொட்டையடித்து விட்டது−ஸ்டாலின்
# 5 வருசத்துக்கு ஒரு டைம் யார் ஆட்சிக்கு வந்தாலும் அதான் பண்றாங்க


==============


16 காவிரி நீர் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென குறிப்பிடவில்லை - # நீதிமன்ற தீர்ப்பை இவரு"சரியா படிக்கலையா?நாம முட்டாளா?


==============17 மும்பையில் வெயில் வெப்பத்தால் வளைந்த ரயில் தண்டவாளத்தை இலைகளை போட்டு மூடிய அரசு அதிகாரிகள் - செய்தி
# வீட்டுக்கு வீடு வாசப்படி ஊருக்கு ஊரு செல்லூர் ராஜூ மண்டகப்ப


=================


18 ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்களோடு இணைந்து ஏப்.,1ம் தேதி போராட உள்ளேன் - கமல் # ஒரு நாள் முன்னாடியோ,பின்னாடியோ போராடக்கூடாதா?முட்டாள்கள் தினம் ஆச்சே?

===============19 காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக: மாலை 5 மணி வரை காத்திருக்க தமிழக அரசு முடிவு # 5 மணிக்கு,அப்றம்?
ட்யூட்டி டைம் முடிஞ்சுடும்,வீட்டுக்கு போய்டுவாங்க.நாளை பொழப்பை நாளை பாப்போம்

==============20 அரசியலில் மாணவர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் - கமலுக்கு தமிழிசை ...
18 வயசான மாணவர்களுக்கு ஓட்டுரிமை உண்டா? இல்லையா?


=============

0 comments: