Tuesday, April 10, 2018

டாக்டர். பன்னீர் சோடா ஆபத்தானதா? உடம்புக்கு நல்லதா?

தலைவரே!யார் தப்பு பண்ணாலும் தப்பு தப்புதானே?

ஆமா,
ஒரு சாதாரண பழமொழி மேட்டர்லயே"தப்பா சொன்னதை ஒத்துக்க முடியாத /ஏத்துக்க முடியாத உடன்பிறப்புகள் நாளை ஆட்சில நீங்க தப்பு செஞ்சா எப்டி ஒத்துக்குவாங்க?

==============2 சார்.இந்தியாவின் சிறந்த திரைக்கதை சன்சல்டண்ட்"னு"பட்டம் உங்களுக்கு யாரு எப்போ தந்தாங்க?

நான் திமுக காரன்
புரில
எல்லாம் நமக்கு நாமே திட்டம் தான்


========================


3 சார்,உங்க வெப்சைட்ல நடிகைங்க போட்டோ வை அப்டேட் பண்றீங்களாமே?

ஆமா,அது உங்களுக்கு எப்டி தெரியும்?
டெய்லி விசிட் பண்ணுவேன்,எனக்கு தெரியாதா?


===============4 ஒருத்தர் மெசேஜ் அனுப்புனார்.என்ன அர்த்தம்னே புரியல
தலைகீழா கூட படிச்சு
பாத்துட்டேன் பேசாம
அவர்கிட்டேயே என்னதான்
அர்த்தம்னு கேட்டுட போறேன்
பேசாம எப்டி கேட்பீங்க?


============


5 எல்லாரும் ஏன் whatsappல லவ் ஸ்டேடஸ் மட்டுமே வைக்குறாங்க🤔🤔🤔🤔🤔🤔?

வருமான ஸ்டேட்டஸ் வெச்சா ஒரு பய மதிக்க மாட்டான்.லவ் ஸ்டேட்டஸ் வெச்சா அதை வெச்சு எதுனா லவட்ட முடியுமா?னு பாக்க தான்


===============6 அம்மா தாயே ஓட்டு போடுங்கம்மா

ஓட்டு வேணும்னா நாங்க நல்லாருக்கனும்னு கோயில்ல போய் பிரார்த்தனை பண்ணிட்டு அர்ச்சனை பண்ணீட்டு வாங்க


================7 சென்னைல 45லட்சத்தில் 3BHK வீடு/அப்பார்ட்மெண்ட் வாங்க முடியுமா?

முடியாது.1 கோடி ஆகும்.சென்னைக்கு மிக அருகில்னு எவனாவது ஏமாத்திடப்போறான்


=============8 சார்,குஷ்பூ இட்லி 4 குடுங்க

இன்னைக்கு உலக இட்லி தினம்ங்க,அதனால குஷ்பு இட்லி"க்கு லீவ்

============
ஃப்ரெஞ்சு தெரிஞ்சவங்க யாராவது இருக்கீங்களா?

டீச்சர்,எனக்கு பிரெஞ்ச் கிஸ் வேணா தெரியும்


==========


10 குருவே!அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.என்பது"உண்மையா?

அப்டி பாத்தா மன்மோகன்சிங்க் ,நரசிம்மராவ் ,OPS இவங்களுக்கு எல்லாம்"நல்ல பேர்"கிடைச்சிருக்குமே?மவுனியா இருக்கறவன் ஆபத்தானவன்


==============


11 நடிகை"நதி'யா கன்னடப்படத்துல நடிக்க புக்"ஆகி"இருக்காங்க.இது"நமக்கு சாதகம்
எப்டி?புரில
காவேரி விஷயத்துல நமக்கு"சாதகமா நடந்துக்குவாங்க"இல்ல?


=========


12 தலைவரே!உண்ணாவிரதத்தை ஏன் திங்கட்கிழமை மேற்கொள்றீங்க?
சன்டே மட்டன் சிக்கன் புல்"கட்டு கட்டிடுவோம்
மன்டே ரெஸ்ட்.டேலி ஆகிக்கும்.இந்த ஜனங்களும் நாம நல்லவங்கனு நம்பி ஏமாந்துடுவாங்க


================


13 எங்க வீட்டுக்கு பின்னால இருக்கற பூந்தோட்டத்தை நான்தான் பராமரிக்கறேன்
வெரிகுட்.எவ்ளோ செலவாகுது?
மாசம் 10,000 ரூபா கேட்டா.நான் 8000 தர்றேன்


===============


14 தலைவரே!உங்க கட்சி எம்எல் ஏக்கள் ,கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் 6 பேரு ஒரு அதிகாரியை மிரட்டி இருக்காங்க
ஆமா,பதவில இருந்தா ஒரு கெத்து தான்
ஆட்சில இல்லாதப்பவே இவ்ளோ ஏத்தம்னா ஆட்சிக்கு வந்துட்டா என்ன ஆட்டம் ஆடுவானுங்க அந்த ரவுடிங்க.ஆட்டுக்கு வாலை அதான் அளந்து வெச்சிருக்கான்


==============


15 ஜட்ஜ் = காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கனும்கற கோர்ட் உத்தரவை ஏன் மதிக்கல?
கைதி = சசிகலா புஷ்பா கூடத்தான் தடையை மீறி 2 ம் கல்யாணம் பண்ணிக்கிச்சு,என்ன தண்டனை தந்தீங்க?பொண்ணுக்கு ஒரு நீதி,ஆணுக்கு ஒரு நீதியா?


================


16 டாக்டர். பன்னீர் சோடா ஆபத்தானதா? உடம்புக்கு நல்லதா?
பன்னீரை சேத்துக்கிட்டா என்னைக்கு இருந்தாலும் உயிருக்கு ஆபத்து தான்.ஜாக்கிரதையா இருக்கனும்


===============

17 குருவே!இட்லி டே இன்னைக்குனு தெரியாம
சப்பாத்தி சாட்டுட்டேனே என்ன பண்ணறது...?
சிம்ப்பிள் மேட்டர்,சப்பாத்தி டே அன்னைக்கு இட்லி சாப்ட்ருங்க


==============18 மதுரை கோயில்ல மொபைல் லாக்கருக்கு ஒரு மொபைலுக்கு 10ரூ வாங்குறாங்க. அத்தன பேர் திருப்பதி வந்தாலும் இலவசமா எல்லாம் மேனேஜ் பண்ற ஆந்திராவாலாஸ் டாப்தான் 🙌
மேடம்.மதுரை கோயில் உண்டியல்ல எவ்ளோ காணிக்கை போட்டீங்க?
1 ரூபா திருப்பதில? என் 1 மாச சம்பளம்
அதான் காரணம்


===============19 சார்,பிரபஞ்ச அழகினு"ஒரு"போட்டோ"போட்டீங்க,பாவம் சாப்பாட்டுக்கே வழி இல்லாத மாதிரி பரிதாபமா இருக்கே?
அதான் சொன்னேனே? பிர"பஞ்ச" அழகி னு.அழகுலயும்"பஞ்சம் தான்


=================20 இட்லிக்கு பொடியா சட்னியா என்பதை யார் முடிவு பண்ணுவாங்க?
திமுக ஆட்சி ன்னா மின்சாரம்
மத்த ஆட்சின்னா சம்சாரம்


================


0 comments: