Thursday, April 12, 2018

பெட்ரூமே இல்லாத வீடுகளா

2016ம் ஆண்டு நடராஜன் அழைத்தே நான் அதிமுக கூட்டணிக்கு சென்றேன் - வைகோ

# நடராஜன் உயிரோட இருக்கறப்ப இதை சொல்லி இருந்தா அவர் கிட்ட இது உண்மையா?னு"கேட்டிருக்கலாம்=======


2 ரேசன் கடைகளில்

விலையில்லா அரிசி நகரங்களுக்கு 10 கிலோ, கிராமங்களுக்கு 5 கிலோ வழங்கப்படுகிறது - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் # நகரத்துல பாதிப்பேரு ரேஷன் அரிசி வாங்கறதே இல்ல.அவங்களுக்கு 10. கிராமத்துல எல்லாரும் வாங்குவாங்க,அவங்களுக்கு 5 என்ன கணக்கு இது?===========


3 ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் என்னிடம் டீல் பேசவும், லஞ்சம்

கொடுக்கவும் முயன்றது; நான் ஏற்க மறுத்துவிட்டேன் -பொன்.ராதா # ஊழல் ,லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அப்பவே ஆதாரத்துடன் தகவல் தராதது ஏன்?ஒரு தப்பை மறைப்பதும் தப்புதானே?==========


4 ரூ.621 கோடி மோசடி வழக்கில் யூகோ வங்கியின் முன்னாள் தலைவர் மீது வழக்கு # எல்லா வங்கியும் வரிசையா மாட்டிட்டு வருதே?இந்த வருசம் வங்கி மோசடி வருசமா?


===========


5 இ-வே பில் அமல்படுத்தியதால் சரக்கு பரிமாற்றத்தில் கடும் சரிவு # இதை மாற்ற வழி இல்லையா?னு மோடிஜி கிட்ட கேட்டா "நோ வே"ம்பாரோ?==========


6 அம்பேத்கர் கண்ட கனவுகளை நாடு முழுவதும் இன்று நனவாக்கி வருபவர் பிரதமர் மோடி - தமிழிசை # அப்டியே அப்துல் கலாம் ,காந்தி இவங்க பேரையும்"சேர்த்துக்குங்க.அவங்க நேரில் வந்து மறுக்கவா போறாங்க?


அமகபேத்கர் சிலை உடைக்கப்படும்னு அவர் கனவு கூட கண்டிருக்க மாட்டாரே?===========


7 காவல்துறையினரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை: சீமான் விளக்கம் # நல்ல"வேளை,சீமானே நாம் தமிழர் கட்சியில் இல்லைனு சொல்லலை


============


8 கோயில்களை

எங்களிடம் ஒப்படையுங்கள்
-ஹெச்.ராஜா
# அடுத்ததா அந்தந்த மாநில ஆளுங்கட்சிகள் "கோயில் உண்டியலை"எங்களிடம் ஒப்படையுங்கள்னு கேட்பாங்களோ?=============


9 காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மனுதான் அளிக்க முடியும்' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

# வெறும் மனு மட்டும் அளிக்க முதல்வர் எதுக்கு?சாமான்யனே அதை செய்வானே?============


10 மோடி என்பவர் குளோபல் லீடர்-எஸ்.வீ.சேகர் # சாமான்ய மக்களை,பணப்புழக்காட்டத்தை ,வியாபாரத்தை க்ளோஸ் பண்ண வந்த லீடர்னு ஜனங்க பேசிக்கறாங்களே?


===========


11 காவிரி விவகாரம்: “கருணாநிதி கடப்பாறையை முழுங்கிவிட்டார், ஸ்டாலின் கசாயம் குடிக்கிறார்” - ஓ.எஸ். மணியன் விமர்சனம்

# மொத்தத்துல நாங்க காவேரித்தண்ணீ குடிக்கமுடியாது?==========


12 மான் வேட்டை வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி- செய்தி # ரேஷன்"கார்டை வாங்கிட்டு அனுப்புங்க,நம்மை ஏமாத்தி அவர்"பாரீன்"போய்"அரிசி"வாங்கிட்டா?


=============13 தமிழகத்தில் நிறைய நாரதர்கள் இருக்கிறார்கள் : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் "ரத" யாத்திரை வெச்சிடலாமா?


=============


14 : பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை துவக்கம்

ஆளுநர் நியமித்த சந்தானம் கமிஷன் மதுரையில் விசாரணையை தொடங்கியது
விசாரணையில் எந்த முரண்பாடும் வராது - சந்தானம் # விசாரணை பண்றதை ஆன் லைன் ல லைவ் டெலிகேஸ்ட் பண்ணுங்க,உங்களை எல்லாம் நம்ப முடியாது


============


15 என்னைப்பற்றி மிக மோசமாக மீம் போடுபவர்களுக்கு தைரியம் இருந்தால் தொலைப்பேசி எண் & முகவரியை குறிப்பிட்டு பதிவிடுங்கள் - மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சவால்

# நம்ம டயலாக்கை நம்ம கிட்டயே எடுத்து விடறாப்டி
==========16 கேள்வி சிறப்பாக இருந்ததால் பாராட்டுவது போல் கன்னத்தை தட்டினேன் - கவர்னர்

# அதென்ன ஆம்பளைங்க யாரும் சிறப்பா கேள்வி"கேட்கலையா?FB ல பொண்ணுங்க பதிவுக்கு மட்டும் லைக்ஸ் விழற மாதிரி============17 பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உண்டு, வெட்கமாக இருக்கிறது - ரம்யா நம்பீசன் # பெட்ரூமே இல்லாத வீடுகளா கட்டி விட்ரனும்============18 அட்சய திருதியில் 10 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை-செய்தி

# நகைக்கடைக்காரங்க காட்டுல மழை,பொது ஜனங்க நினைப்புல பிழை
=============19 தினமும் 2 கிலோ விமர்சனத்தை எடுத்துக்கொள்கிறேன் - ஆரோக்கியத்தின் ரகசியம் பற்றிய கேள்விக்கு நகைச்சுவையாக பதில் | அப்டியே"தயிர்"சாதத்துக்கு ஒரு சிட்டிகை உப்பும் எடுத்துக்கொள்ளவும்

==========20 எச்.ராஜா, எஸ்.வி.சேகர் மீது அரசே வழக்கு தொடரும்; இரண்டு சைபர் சைக்கோக்களால் தமிழகத்திற்கே ஆபத்து - அமைச்சர் ஜெயக்குமார் # சபாஷ் ,அப்றம் மேலிடம் கண்டிச்சதுனு ஜகா வாங்கிட மாட்டீங்களே?


===========

0 comments: