Friday, April 13, 2018

தங்களை இந்து என்று சொல்லிக்கொள்பவர் ஓட்டு கழகத்துக்கு"தேவை இல்லை-ஆ.ராசா

அரசியலில்
அவசியம் ஏற்பட்டால்
ரஜினியையும் எதிர்க்க
தயங்கமாட்டேன் -கமல்
5% க்கும் கம்மியான ஓட்டு கிடைக்கப்போகுது.அப்போ நாம ரஜினி ஆதரவு கேட்டு போகனும்.ஞாபகம் வெச்ட்டு பஞ்ச் பேசவும்


================


2 அதிமுக-வினர் ராஜினாமா செய்தால் திமுக-வும் ராஜினாமாவுக்கு தயார் : ஸ்டாலின் # அரசியல் அரங்கில் ஒரு நீயா?நானா? ப்ரோக்ராம்.கடைசி வரை இரு"தரப்பும் ராஜினாமா பண்ண மாட்டாங்க


==============3 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் பொள்ளாச்சி MP-க்கு கூரியர் மூலம் எலி மருந்து பார்சல்
# அவரு வீட்ல ரொம்ப நாளா"எலி பெருச்சாளி தொல்லை இருந்ததாம்.நன்றி"சொல்லச்சொன்னாரு==============


4 காவிரி விவகாரத்திற்காக பதவி விலகவா வீதி வீதியாகச் சென்று வாக்கு கேட்டோம்?- ராஜேந்திர பாலாஜி # உணர்ச்சி வசப்பட்டு "பணம் சம்பாதிக்கத்தானே பதவிக்கு வந்தோம்"னு"உளறலை,நல்ல"வேளை


=============5 மோடி அரசு நச்சு திட்டங்களை செயல்படுத்துகிறது மு.க.ஸ்டாலின்.
# அச்சு பிச்சுனு பேசிட்டிருந்தவரு இப்பதான் நச் சுனு கருத்து"சொல்லி இருக்காரு=============6 அரசியல் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம் டிடிவி அணியினருக்கு OPS அழைப்பு#இருக்கிறது இன்னும் 3 வருசம்.அது வரைக்கும் ஒற்றுமையா இருந்து முடிஞ்சவரை சுருட்டிக்கிலாம் கறாரா?


==========


7 எடப்பாடி உருவில் சேகுவாராவை காண்கிறேன் அமைச்சர் - வேலுமணி
# இதுக்கு முன்னால சேகுவாரா வை நேர்லயோ ,போட்டால யோ பாத்திருக்கிங்களா?
இல்ல,அதான்"சொன்னேனே"அவர் உருவில் இவரைக்காண்கிறேன்னு


============


8 தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கால் பத்து பைசா பயன் கிடையாது : ராமதாஸ் காட்டம் # அப்டி சொல்ல முடியாது.வக்கீலுக்கு வந்த வரை லாபம்.அரசுக்கு வக்கீல் செலவுனு கணக்கு எழுதி அதுல லாபம்


===============9 தஞ்சையில் சசிகலாவுடன் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சந்திப்பு! # தமிழ் நாட்டுக்காக எப்டி எல்லாம் பாடுபடனும்னு மக்கள் நலனைப்பத்தி பேசி இருப்பாங்களோ?


=============10 தேசிய அளவில் காங்கிரஸ் தலைவராக ராகுல் இருக்கும் வரை பாஜகவின் வெற்றி உறுதி - தமிழிசை # ப்ரியங்காவை தலைவராக்கிடப்போறாங்க.நாமே ஐடியா குடுத்த மாதிரி ஆகும்


===============11 மெரினாவில் யார் போராட்டம் நடத்தினாலும் கைது செய்யப்படுவார்கள் - காவல்துறை # ops & eps போராடுனாலுமா?


============


12 செய்தி: மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகத்தில் தினமும் 18,500 கோப்பை தேநீர் விநியோகம்.
பஞ்ச்: டீ காண்ட்ராக்டர் முதல்வரை விட அதிகமா சம்பாதிப்பார் போலயே?ஒரு டீ க்கு லாபம் 2 ரூ பான்னா கூட டெய்லி ரூ 37,000 லாபம்.மாசம் ரூ 12 லட்சம் லாபம்

=============


13 திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் எனக்கு அழைப்பில்லை.. கமல்ஹாசன் ஆதங்கம்! # கூட்டத்துல நீங்க "விஸ்வரூபம்" எடுத்துடுவீங்கனு ஒரு பயம் தான்


===============14 காவிரி வாரியம் அமைக்கப்படாததற்கு காரணம் கர்நாடக தேர்தலே - கனிமொழி # அப்போ கர்நாடக தேர்தல் முடிஞ்சதும் அமைச்சிடுவாங்களா? அது ஒரு சாக்கு==============15 காவிரிக்காக வேஷமிட்டு துரோகம் செய்தவர்கள் கைது செய்யப்படவேண்டும்- தமிழிசை பேட்டி!# அப்போ எல்லா கட்சித்தலைவர்களையும் கைது பண்ணனுமே?


============16 காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியது தான் - சுப்பிரமணியன்சாமி# தாலி யை எடுத்துக்குடுங்கனு"ஒரு மரியாதைக்கு"சொன்னா விபரம் தெரியாம அதை பொண்ணு கழுத்துல கட்டப்போன ஆளு தானே நீங்க?


================17 ஸ்டெர்லைட்டால் கேன்சர் இல்லை: ரஜினிக்கு நிர்வாகம் தரப்பில் பதில் # நிர்வாக இயக்குநரோ ,ஆலை யோட ஓனரோ ஆலை அருகே 1 மாசம் தங்கி நிரூபிக்கத்தயாரா?


===============18 ரஜினிக்கு சொன்னது இருக்கட்டும்-ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் எனக்கு பதில் சொல்லட்டும்- கமல் # எல்லாத்துக்கும் ஒரே பதில்தானாம்.தனித்தனியா சொல்லிட்டு இருப்பாங்களா?

=============19 "ஐ.சி.யூ-வில் இருந்த அதிமுகவை, ஓலிம்பிக்கில் ஓடும் வகையில் மாற்றியவர் இ.பி.எஸ்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் # அதிமுக தலைவியை ஐசியூ க்கு அனுப்புனதே நாமதான்னு பேசிக்கறாங்களே?


=============20 தங்களை இந்து என்று சொல்லிக் கொள்பவர்கள் தமிழகத்தில் குறைவு.!
ஆ.ராசா#
தங்களை இந்து என்று சொல்லிக்கொள்பவர் ஓட்டு கழகத்துக்கு"தேவை இல்லைனு அறிக்கை விடுங்க பார்ப்போம்


===============


0 comments: