Saturday, April 07, 2018

திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் என்பது ஆணாதிக்கமா? பெண்ணாதிக்கமா?

தலைவரே!ஸ்டெர்லைட் புரட்சி பற்றி உங்க கருத்து என்ன?

பொதுமக்களின் முனைப்பால் ஸ்டெர்"ஸ்ட்ராங்க்" புரட்சி ஆகி விட்டது


----------------2 ஜட்ஜ் − முதல் மனைவி உயிரோட இருக்கறப்ப ,அவர் கிட்ட டைவர்ஸ் வாங்காம 2 வதா ஒரு"செகண்ட்சை கட்டிக்க சட்டத்துல இடம் கிடையாது

கைதி − ஓகே யுவர் ஆனர் ,டைவர்ஸ் ட்ரை பண்றேன்,கிடைக்கலைன்னா போட்டுத்தள்ளிடறேன்

================3 டெய்லி காலைல மெரீனா வுல 10 ரவுண்ட் போலாம்னு இருக்கேன்

போலீஸ் 1ம் சொல்லாதா?
அவங்களுக்கு ஒரு ரவுண்ட்"ஊத்திக்குடுத்தா தீந்தது பிரச்ன


===============4 தலைவரே!உங்க செல்போன் ரிங்க் டோன் ஆக எதை வெச்சிருக்கீங்க?

வெச்சிருக்கறதை வெச்சிருக்கேன்
புரில அன்பான மனைவி
அமைந்தாலே பேரின்பமே..
அழகான துணைவி அறமான இறைவி


=================5 ஏர்போர்ட்ல ஒரு காபி விலை 180 ரூபாயாம்.கேட்டதும் ஆடிப்போய்ட்டேன்

அப்றம்?;;
;ஆடி ல ஏறி போய்ட்டேன்


==================6 மேடம் ,முழங்கால்ல எதுக்கு குழந்தை போட்டோ டாட்டு குத்த சொல்றீங்க?

முட்டி தெரியுதுனு எவனும் கமெண்ட் பண்ண மாட்டான்,முட்டி ல டாட்டு தெரியுதுனு பேசுவான்,இப்டிதான் டைவர்ட் பண்ணி விடனும்


================7 FB ல என்னை திமிரு பிடிச்சவனு சொல்லுவாங்க frd request accept பண்ணலைனா..

திமிரு மட்டுமில்ல விஷால் நடிச்ச எந்தப்படமுமே பிடிக்காதுனு ஸ்டேட்டஸ் போட்டுடுங்க


==============8 குருவே! பிரசாதம் ,வரப்பிரசாதம். என்ன வித்யாசம்?

பொண்ணு பாக்க போன இடத்துல பொண்ணு செம பிகரா இருந்தா உனக்கு கிடைச்சது பிரசாதம்,பொண்ணோட தங்கச்சியும் கலக்கல் பிகரா இருந்தா உன் வாழ்க்கை ஒரு வரப்பிரசாதம்


==================


9 தலைவரே!நம்ம ஊர்ல துறைமுகம் வரப்போகுது,திறப்பு விழா க்கு வருவீங்களா?

கட்டிங்சை இறக்கி விட்டா பார்பர் ஷாப்பா இருந்தாலே வருவேன்.ஹார்பர் க்கு வர மாட்டேனா?


==================10 தலைவரே!அரசியல்ல பழம் தின்னு"கொட்டை போட்ட உங்களாலயே முதல்வர் ஆக முடியல,அதுக்குள்ள உங்க பையனை களம் இறக்கீட்டீங்க?

என் அப்பா செஞ்ச தப்பை நானும் செய்யக்கூடாதில்ல?==================


11 குருவே!திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் என்பது ஆணாதிக்கமா? பெண்ணாதிக்கமா?

ஆணாதிக்கம்தான்
அதெப்டி?
அந்த கதாபாத்திரத்தை வடிவமைச்சது ,கதை எழுதுனது 2 ம் ஒரு ஆம்பளைதானே?


==================


12 குருவே!உலக பூமி தினத்தை முன்னிட்டு மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் ஒரு மணி நேரம் மின்சாரம் நிறுத்தம் னு நியூஸ் வருதே?

ஆமா,அதனால என்ன?
பூமி தினம்னா பூமியைத்தானே நிறுத்தனும்?எதுக்கு மின்சாரத்தை நிறுத்தனும்?


===================


13
யுவர் ஆனர்,என் போட்டோவை அந்தப்பொண்ணு மிஸ்யூஸ் பண்ணுது,விசாரிங்க
;விசாரிச்ட்டேன்.மிஸ்.யூஸ் பண்றது மிஸ் இல்ல,அது"ஒரு"பேக் ஐடி===============


14 தலைவரே!ஏர்போர்ட்ல ஒரு டீ 135 ரூபா னு ஸ்டேட்டஸ் போட்டிருக்கீங்களே?2010 ல நாம ஆட்சில இருந்தப்போ எவ்ளோ?

;அதே 135 ரூ தான்
அப்போ ஏன் ஸ்டேட்டஸ்"போடலை?
அப்போ நான் FB அக்கவுண்ட்டே ஓப்பன் பண்ணலையே?


==================


15 பதவி எல்லாம் எங்களுக்கு தோள்ல போட்டிருக்கற துண்டு மாதிரி

ஓஹோ,அப்போ பதவி மூலம் கிடைக்கும் சைடு வருமானம்?
அது கைல இருக்கற துண்டு சீட்டு மாதிரி,அதில்லாம 1ம் பண்ண முடியாது


==================


16 நைட் 10.30 மணிக்கு எங்க வீட்டுக்கு பாம்பு"வந்துடுச்சு

அதெப்டி?சிட்டில தானே இருக்கீங்க?கிராமம்னாதானே பாம்பு"வரும்?
ராமநாராயணன் படமே சிட்டி ல ஓடுது,ராமநாராயணன் படத்துல வர்ற பாம்பு ஓடாதா?


================


17 குருவே!!FB ல ஒரிஜினல் டிபி வைக்க
அழகு ,பர்சனாலிட்டி எல்லாம்"வேணும்கறாங்களே?அது நிஜமா?
யார் சொன்னது?இதான் நான் ,இவ்ளவ்தான் நான் னு ஒத்துக்கற பக்குவமும் ,தைரியமும் இருந்தா யார் வேணா வைக்கலாம்


=================18 தலைவரே!ஈரோட்ல"செம கூட்டத்தை கூட்டீட்டிங்க போல?

;ஆமா,ஆனா அதுல சோகம் என்னான்னா சேலத்துல நயன்தாராவை வேடிக்கை பாக்க வந்த கூட்டத்துல பாதி தான்.குஷ்பு க்கு ஆல்டர்நேடிவ்வா நயனை கழகத்துக்கு இழுத்துடலாம்னு இருக்கேன்


===================19 தலைவரே!ஸ்டெர்லைட் ஆலையால பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லைனு நிரூபிக்க ஒரு ஐடியா இருக்கு

ஏன்ன?
நம்ம கட்சி எம் பி ங்க எம் எல் ஏக்கள் 50 பேரை 2 மாசம் ஆலைக்கு பக்கத்துல தங்க வைங்க


=================


20 தலைவரே!நம்ம கட்சி ஆளுங்களுக்கு பிராந்திய உணர்வு அதிகமாமே?நிஜமா?

ஆமா,சரக்கு பாட்டில் லேபிளைப்பார்க்காமயே சரக்கை டேஸ்ட் பண்ணி இது பிராந்தியா?விஸ்கியா?னு சரியா சொல்லிடுவாங்க


===============

0 comments: