Showing posts with label எப்படி இப்படி. Show all posts
Showing posts with label எப்படி இப்படி. Show all posts

Sunday, December 27, 2015

பதினோரா வது கொலை!-பட்டுக்கோட்டை பிரபாகர்

குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் என்று சொல்வார்கள்.


பெரும்பாலான குற்றவாளிகளின் வாழ்க்கையிலும் அப்படி உருவா வதற்கான சூழல் இருக்கலாம். ஒரே இர வில் ஒருவன் கொள்ளைக்காரனாகிவிட லாம் என்று தீர்மானம் செய்து, அப்படியே கொள்ளைக்காரனாக மாறி வங்கியைக் கொள்ளையடித்துவிட முடியாது. இன்றைக்கு கொலைசெய்யலாம் என்று வண்டிக்கு பெட்ரோல் போடுவது மாதிரி சாதாரணமாக செய்வதில்லை. கூலிப் படையில் காசுக்காக இரக்கமே இன்றி கொலைகளைச் செய்கிற யாரும் “இது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு’’ என்று சொல்வதில்லை. எல்லோரிடமும் ஒரு கதை இருக்கும்.


நேனிதாஸின் கதை மிக அழுத்தமானது. அமெரிக்காவில் பிறந்த நேனி தாஸ், தனது சின்ன வயதில் பள்ளியில் சேர்ந்து படித்துப் பெரிய அரசு அதிகாரி யாக வளரத்தான் ஆசைப்பட்டாள். ஆனால், அவளுடைய தந்தை அவளை பணம் கொடுக்கும் ஒரு இயந்திரமாக நினைத்து, வேலைக்கு அனுப்பி சம்பா தித்து வரச் சொன்னார். அங்கேயே விழுந்தது அவள் மனதில் முதல் விரிசல்.பதின்பருவத்தில் நேனிதாஸுக்கு ஒரு நல்ல உடை வாங்கித் தந்ததில்லை அவள் தந்தை. அவளுக்கு வயிறார சாப்பாடு போட்டது இல்லை. கொஞ்சம் திருத்தமாக மேக்கப் போட்டுக்கொள்ள வும் அனுமதி இல்லை. வெளியே எங்கும் தனியாகப் போகக் கூடாது. ஆண் நண்பர் களுடன் பழகக் கூடாது. பார்ட்டிகளுக்கு, விழாக்களுக்குப் போகவே கூடாது என்று ஏகப்பட்ட கூடாதுகள்!ஆனால், மறுக்கப்படுவதைத்தானே மனித மனம் விரும்பிச் செய்யும்? எதை எல்லாம் வீட்டில் மறுக்கப்பட்டதோ, அதையெல்லாம் பிடிவாதமாக நாடியது அவளுடைய மனசு.நேனிதாஸ் கனவுகளில் மிதந்தாள். கற்பனை சுகத்தில் மகிழ்ந்தாள். மனதில் காதல் பொங்கி வழிந்தது. காதல் தொடர்பான புத்தகங்களை மட்டுமே படித்தாள். பத்திரிகைகளுக்கு தனது பெயர் போடாமல் காதல் கட்டுரைகள் எழுதி அனுப்பினாள். மற்றவர்களின் காதல் அனுபவங்களை ஆர்வமாகக் கேட்டாள். ஆனால், அவளின் காதலைப் பகிர்ந்துகொள்ள ஓர் ஆண் மகனைச் சந்திக்கவே இல்லை. அதாவது சந்திக்க வாய்ப்பு அமையவில்லை.16 வயதில் பெற்றோர் பார்த்து வைத்த திருமண வாழ்வை ஏற்று, ஆயிரம் கனவுகளுடன் புதிய வாழ்வில் நுழைந்தாள். அங்கே நேனிதாஸின் ஒவ் வொரு கனவும் முறிக்கப் பட்டது. அன்பான கணவன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவளுக்கு அவளு டைய தந்தையைவிட மோச மானவனாக அவன் அமைந் தான். அவனுடைய வார்த்தை கள் சாட்டையடிகளாக விழுந் தன. அவனுடைய நடவடிக்கை எதுவுமே அவளுக்குப் பிடிக்காமல் போனது. ஆனாலும், அவனோடு பொறுமையாக வாழ்ந்து குழந்தைகளும் பெற்றாள்.வெளியே கடைக்காரர்களிடம், கார் டிரைவர்களிடம் என்று எவரிடம் அவள் பேசினாலும் அவனுக்கு சந்தேகம். மனம் நொந்துபோன அவள் புகைப் பழக்கத்துக்கும், மதுப் பழக்கத்துக்கும் ஆளானாள். தினமும் குடித்தே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு போதைக்கு நேனிதாஸ் அடிமையானாள்.


திடீரென்று உடல்நலம் கெட்டு அவளது கணவன் இறந்தபோது அவள் அழவே இல்லை. மனதுக்குள் கொண் டாடியபடி, வெளியே பொய் துக்கத்தில் இருந்தாள். இதைத் தொடர்ந்து உடனடியாக இரண்டாவது திருமணமும் செய்துகொண்டாள்.புதிய கணவனின் செயல்களிலோ மர்மம் இருந்தது. அவன் இரவில் தாமதமாக வீட்டுக்கு வந்தான். அவனைத் தேடி காவல் துறை ஆசாமிகள் அடிக்கடி வந்து போனார்கள். அந்தத் துறையில் தனக்கு நண்பர்கள் இருப்பதாக அவன் சொன்னதை நேனிதாஸ் நம்பினாள்.அவன் உடம்பில் இருந்து வீசும் பெண்கள் உபயோகிக்கும் செண்ட் வாசனையைப் பற்றி அவள் கேட்டபோது, அவனால் அவளுக்கு விளக்கம் சொல்ல முடியவில்லை. ஆனால், அது என் பலவீனம் என்று ஒப்புக்கொண்டான். பிறகுதான் தெரிந்தது, தினமும் விதவிதமானப் பெண்களைத் தொட்டாக வேண்டும் என்கிற அவனது காம உணர்வு. அதற்குப் பணம் தேவை. பணத்துக்காக அவன் ரகசியமாக குற்றங்கள் செய்திருக்கிறான். விசாரிக்க வரும் அதிகாரிகளுக்கு லஞ் சம் கொடுத்து சமாளித்திருக் கிறான்.அவனும் திடீரென்று இறந்துபோனான். உறவினர் கள் நேனிதாஸின் நிலைமைக் காகப் பரிதாபப்பட்டார்கள். ஆறுதல் சொன்னார்கள். அப்போதும் அவள் திருமணத்தின் மீது தனக்கு இருந்த நம்பிக்கையை மாற்றிக்கொள்ளவே இல்லை. மூன்றாவதாகவும் ஒரு கணவனைத் தேடிக் கொண்டாள்.மூன்றாமவன் இதற்கு முந்தையவர் களைப் போல இல்லை. அவனுக்கு ஒரே ஒரு பலவீனம்தான். அவனுக்கு தினமும் சூதாட வேண்டும். அதற்கு முதலில் அவளுடைய நகைகள் பலியாகின. பிறகு, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் எடுத்துச் சென்று விற்றுவிடுவான்.மனம் வெறுத்துப் போன நேனிதாஸ் அவன் இறக்கக் காத்திருந்து, கடைசி முயற்சியாக நான்காவதாக ஒருவனைத் திருமணம் செய்துகொண்டாள். இந்தக் கணவன் படு மக்கு. அவனோடு இருந்த அவனுடைய அம்மாதான் … அங்கே இவளுக்கு வில்லி. சீரியல்களில் வரும் மாமியாரைப் போல அதிகாரம் செய் வதும் வேலைகள் வாங்குவதுமாக நேனிதாஸைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.மன உளைச்சலுக்கு மருந்தாக தன் அம்மா வீட்டுக்குச் சென்றால், அங் கேயும் இவளை விமர்சித்து இவளின் அம்மாவும் கடுமையாகத் திட்டினாள். தனது உடன் பிறந்த இரண்டு சகோதரி களும் இவளின் வாழ்க்கையைக் கிண்டல் செய்தார்கள். பொது விழாக்களில் வைத்து இவளை அவமானப் படுத்தினார்கள்.போதாக்குறைக்கு இவளுக்குப் பிறந்த இரண்டு பெண்களும் தாய் என் றும் பார்க்காமல் இவளை அலட்சியப் படுத்தினார்கள். எங்கும் மரியாதை இல்லை. எல்லோருக்கும் நேனிதாஸின் வாழ்க்கை கேலிப் பொருளானது.
ஒரு சுபயோக சுபதினத்தில் இவள் தன் மாமியாரை உணவில் விஷம் வைத்துக் கொன்றாள். முதலில் அது வெளியில் தெரியவில்லை. பிறகு காவல் துறையின் தீவிர விசாரணையில் உண்மை வெளிப்பட்டு, நேனிதாஸ் கைது செய்யப்பட்டாள்.தொடர் விசாரணையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான தகவல்கலைக் கொட்டினாள் நேனிதாஸ். மாமியாரைக் கொன்றது இவளின் முதல் கொலை இல்லை; அது அவளுடைய பதினோரா வது கொலை!இவள் மனதைக் காயப்படுத்திய ஒவ் வொருவரையும் ரகசியமாக திட்டமிட்டு, அது கொலை என்று வெளியே தெரியாத படி கொலை செய்திருக்கிறாள். இவளின் நான்கு கணவர்களுக்குமே இயற்கை மரணம் நேரவில்லை. அத்தனை பேரை யும் நேனிதாஸ்தான் கொன்றிருக்கிறாள். கணவர்கள் மட்டுமல்ல; சொந்த தாய், இரண்டு சகோதரிகள், இரண்டு மகள்கள், ஒரு பேரன் உட்பட அவளுக்கு மன வருத்தம் கொடுத்த அத்தனை பேரையும் கொலை செய்திருக்கிறாள்.இவளை விசாரித்த நீதிமன்றம் மரண தண்டனை தர நினைத்து, பிறகு.. இவளின் சூழ்நிலை, மனநிலை எல்லாவற்றையும் கணக்கில் எடுத் துக்கொண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. சிறையில் இருந்தபோது ரத்தப்புற்று நோய் வந்து நேனிதாஸ் இறந்து போனாள்.
குற்றவாளிகள் பிறப்பதில்லை; உரு வாக்கப்படுகிறார்கள் என்னும் கூற்றை நேனிதாஸின் வாழ்க்கை நிரூபித்தது. ஒரு மனநலக் கணக்கெடுப்பில் திருமணங் களில் தோல்வியைச் சந்தித்த ஒரு சில பெண்கள் தங்களுக்குள் கொலை செய் யும் எண்ணம் வந்ததாக ஒப்புக்கொண் டிருக்கிறார்கள். அந்த எண்ணம் தீவிர மடைகிற தருணத்தில் அதற்கான வாய்ப்பு அமைந்தால் அது செயலாகிவிடுறது.- நிறைந்தது
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

தஹிந்து

Monday, December 14, 2015

திருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ்வாஞ்சிநாதனால் சுடப்பட்டவழக்கு-பட்டுக்கோட்டை பிரபாகர்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று - திருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ் வாஞ்சிநாதனால் சுடப்பட்டது.


104 வருடங்களுக்கு முன்பு 1911-ல் நிகழ்ந்தது இந்தக் கொலை. நிகழ்ந்த இடம் மணியாச்சி ரயில் நிலையம். திருமணமான 25 வயது இளைஞரான வாஞ்சிநாதன் வனத்துறையில் பணி புரிந்தபடி வாய்ப்பு கிடைத்தால் நம் நாட்டில் ஊடுருவிய வெள்ளையர்களை கொலை செய்ய வேண்டும் என்கிற வெறியுடன் இயங்கிய ஓர் அமைப்பில் இருந்தவர்.


17.06.1911 அன்று ஆஷ் தன் மனைவி மேரியுடன் கொடைக்கானலில் படித்த தனது பிள்ளைகளைப் பார்க்க திருநெல்வேலியில் இருந்து ரயிலில் புறப்பட்டான். மணியாச்சியில் அவன் வந்த ரயில் பெட்டி வேறு ரயிலில் கோக்கப்படக் காத்திருந்தது. ஆஷின் பாதுகாவலர் தண்ணீர் பிடிக்கப் போன இடைவெளியில் வாஞ்சிநாதன் அந்தப் பெட்டியில் நுழைந்தார். ஆஷின் மார்புக்கு நேராக பெல்ஜியம் நாட்டின் தயாரிப்பான பிரவுனிங் வகை துப்பாக்கியை நிமிர்த்தினார். மூன்று முறை சுட்டார்.


ஆஷின் மனைவி மேரி அலற, ஓடிவந்த பாதுகாவலர் வாஞ்சிநாதனைத் துரத்த, வாஞ்சிநாதன் பிளாட்பார கழிவறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டார். காவலர்கள் கழிவறையின் கதவைத் திறந்து பார்த்த போது அங்கே வாஞ்சிநாதன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதை உணர்ந்தார்கள்.


அவருடைய சட்டைப் பாக்கெட் டில் இருந்த இரண்டு காகிதங்களில் ஒன்று - பிரான்சில் இருந்து வெளிவந்த ‘வந்தே மாதரம்’ பத்திரிகையின் தலையங்கப் பகுதி. அதில் ‘வெள்ளையர்களைக் கொன்று பாரத மாதாவுக்கு ரத்த அபிஷேகம் செய்ய வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொன்று, காவல்துறைக்கு வாஞ்சிநாதன் எழுதி வைத்திருந்த கடிதம். அதில் ‘ராமனும், கிருஷ்ணனும் வாழ்ந்த புண்ணிய பூமியை ஆங்கிலேயர்கள் அரசாள்வதா? ஒவ்வோர் ஆங்கிலேயனுக்கும் நமது பாரதத்தின் புத்திரர்கள் நான் செய்ததைப் போலவே செய்வதுதான் கடமை’ என்று எழுதப்பட்டிருந்தது.காவல்துறை வாஞ்சிநாதனின் இல்லத்தில் சோதனை போட்டபோது நடந்த கொலை தனி மனித செயல் அல்ல என்பதும், இந்தச் சதியில் பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஆறுமுகப் பிள்ளை, சோமசுந்தரம் என்கிற இருவர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் இரு வரும் அரசுத் தரப்பின் சாட்சிகளாக மாறுவதாகச் சொல்லி அப்ரூவர் ஆனார் கள். நடந்த கொலையை யாரெல்லாம் சேர்ந்து, எப்படி எல்லாம் திட்டம் தீட்டினோம் என்று விரிவாகச் சொன் னார்கள். அவர்கள் கொடுத்தத் தகவல்களை வைத்து மொத்தம் 16 பேரைக் கைது செய்ய காவல்துறை பட்டியல் போட்டது. காவல்துறை கெடுபிடிகளுக்கு பயந்து 16 பேர்களில் இருவர் தற்கொலை செய்துகொள்ள, மீதி 14 பேர்களும் கைது செய்யப்பட்டர்கள்.இந்த அமைப்பின் தலைமைப் பொறுப் பில் இருந்து செயல்பட்டவர் நீலகண்ட பிரம்மச்சாரி. அவரும் குழுவினரும் அடிக்கடி கூடி சதித் திட்டங்களைப் பேசி வடிவமைப்பார்கள். ஆஷ் கொலை யைப் பற்றி முடிவெடுத்ததும் அதை செயல்படுத்துவது யார் என்று கேள்வி வந்தது. அனைவருமே அதைச் செய்து முடிக்க முன்வந்ததால், அனைவரின் பெயர்களும் எழுதிப் போடப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப் பட்டவர்தான் வாஞ்சிநாதன்.


இந்தச் சதித் திட்டத்தில் பங்கிருந்த தாக மேலும் ஐந்து பேரை ஆங்கில அரசு சந்தேகப்பட்டது. அந்த ஐவரையும் கைது செய்ய உத்தரவும் போட்டது. ஆனால் அவர்களில் மாடசாமிப் பிள்ளை என்கிறவர் தலைமறைவானார். அவர் என்ன ஆனார் என்பது இன்று வரைத் தகவலில்லை. மீதி நான்கு பேரும் பாண்டிச்சேரி சென்று தங்கிவிட்டதால் அங்கு சென்று அவர் களைக் கைது செய்ய இயலவில்லை.


அப்போது பாண்டிச்சேரி பிரெஞ்சுக் காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் அங்கு சென்று யாரையும் கைது செய்வதானால் அதற்கு பாண்டிச்சேரி அரசின் சம்மதமும் அனுமதியும் தேவை. அதை அத்தனை சுலபமாகப் பெற முடியாது. அங்கே பதுங்கியிருந்த நான்கு பேரையும் ரகசியமாகக் கண்காணித்து அவர்கள் தமிழக எல்லைக்குள் வரும்போது கைது செய்யத் தயாராக ஒற்றர்களையும் காவலர்களையும் நியமித்தது அரசு.இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட 14 பேர்களையும் குற்றவாளிகள் என்று மூன்று நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சில் இரண்டு நீதிபதிகளின் கருத்தின் அடிப்படையில் கோர்ட் தீர்மானித்தது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அங்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நியமிக்கப்பட்டது. அவர்களில் மூன்று பேர் இவர்களைக் குற்றவாளிகள் என்று கருதியதால் அனைவருக்கும் சிறைத் தண்டனை உறுதியானது.


குறிப்பாக ஆஷ் மேல் வாஞ்சிநாத னுக்கு மிகுந்த கோபம் ஏற்படக் காரணம் சுதந்திரப் போராளிகளுக்கு எதிராக ஆஷ் எடுத்த பல நடவடிக்கைகள். குறிப் பாக வ.உ.சி-யை ஆஷ் தன் எதிரியாகவேக் கருதினான். வெள்ளை யர்களுக்கு எதிராக சுதேசிப் பொருட்களைத் தயாரிப்பதும், மக் களைப் பயன்படுத்த வைப்பதும் நோக்கமாகக் கொண்டு சுதேசி இயக்கம் நிகழ்ந்தபோது தூத்துக்குடியில் வ.உ.சி இரண்டு கப்பல்களை விலைக்கு வாங்கி ஆங்கிலக் கப்பல்களுக்குப் போட்டியாக இயக்கினார்.அப்போது தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குச் செல்ல ஆங்கிலக் கப்பல்கள் வசூலித்த பயணக் கட்டணம் 16 அணா. (அதாவது ஒரு ரூபாய்) வ.உ.சி தனது கப்பல்களில் எட்டணா மட்டுமே வசூலித்தார். மக்கள் ஆர்வத்துடன் சுதேசிக் கப்பல் களில் பயணம் செய்யத் தொடங்கினார்கள்.
அப்போது தூத்துக்குடியில் உதவிக் கலெக்டராக இருந்தவன் ஆஷ். வ.உ.சியின் கப்பல் வணிகத்தை நசுக்குவது என்று முடிவெடுத்த ஆஷ் ஆங்கிலக் கப்பல்களை கட்டணமே, இல்லாமல் இலவசமாக இயக்க உத்தரவிட்டான். அது தவிர பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவசமாக ஒரு குடையும் கொடுத்தான். (ஆக, மக்களுக்கு இலவசம் தரும் கவர்ச்சித் திட்டத்தையும் நமக்குக் கற்றுக் கொடுத்தவன் ஆங்கிலேயனே) அத னால் சுதேசிக் கப்பல்கள் பயணிக்க ஆளின்றி முடங்கின. மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்தார் வ.உ.சி. வேறு வழியே இல்லாமல் தனது இரண்டு கப்பல்களையும் ஏலத்தில் விட்டார். அவற்றை ஏலத்தில் எடுத்ததும் ஆங்கிலேய அரசே.
ஆஷ் திருநெல்வேலி மாவட்டத்தின் கலெக்டராக இருந்தபோது நிகழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டான். அதில் நான்கு பேர் இறந்தார்கள். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய வ.உ.சியை ஆஷ் கைது செய்து அவருக்கு கோர்ட்டில் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வாங்கிக் கொடுத்து சிறையில் செக்கிழுக்க வைத்தான்.
வ.உ.சியின் மீது அபரிமிதமான பக்தி கொண்ட வாஞ்சிநாதன் இந்த சம்பவங்களால் ஆஷ் மீது மாறாத கோபமும் கொலை வெறியும் கொண்டிருந்தார். குலுக்கலில் தன் பெயர் வந்ததும் மிகவும் மகிழ்ந்த வாஞ்சிநாதன் பாண்டிச்சேரி சென்று ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டு திட்டமிட்டபடி செயல்பட்டார்.
சுதந்திரப் போராட்டத்தின் தமிழக தியாகியான வாஞ்சிநாதனின் பெய ரைத் தாங்கி வாஞ்சி மணியாச்சி சந்திப்பு என்று ரயில் நிலையத்தில் பெயர் பலகை மட்டுமே இருக்கிறது. தவிர வாஞ்சிநாதனுக்கு எங்கும் சிலைகள் கிடையாது. ஆனால் ஆஷின் இந்திய விசுவாசிகள் 32 பேர் பணம் போட்டு தூத்துக்குடியில் ஆஷுக்கு ஒரு மணி மண்டபமும், பாளையங்கோட்டையில் ஒரு சிலையும் வைத்தார்கள்.


2011-ம் வருடம் ஆஷ் சுடப்பட்டு நூறாண்டு ஆன சமயத்தில் ஆஷின் வாரிசுகள் வாஞ்சிநாதனின் குடும்பத் தாருக்கு ‘நடந்ததை மறந்து சமாதான மாக இருப்போம்’ என்று கடிதம் எழுதி அனுப்பினார்கள். வாஞ்சிநாதனின் குடும்பத்தினர் அதற்கு ‘ஆஷின் வாரிசு கள் இந்தியா வந்தால் வரவேற்போம்’ என்று மனிதநேயத்துடன் பதில் சொன்னார்கள்.


- வழக்குகள் தொடரும்..
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]\

 • Thangamani  India
  வீர வாஞ்சி, வீர சவார்கர் என்ற வீர வீர அடைமொழியெல்லாம் மதவாதிகள் தங்கள் ஆட்களுக்கு வைத்துகொண்ட அடைமொழிகள். சிறை வாசத்திலிருந்து வெளிவருவதற்கு ஆங்கிலேயனிடம் மன்றாடி மன்னிப்புக்கடிதம் கொடுத்தவரைதான் வீர என்ற அடைமொழியிட்டு வீர சவார்க்கர் என்பார்கள். வாஞ்சியும் (சனாதனவாதி) இந்த ரகம் தான்.
  23105
  2 days ago
   (0) ·  (0)
   
  • Sivakumar Sivakumar  United States
   வாஞ்சிநாதனின் முழுமையான வாக்கு- ' கட்டுரை ஆஷ் அடிச்சுவட்டில்... ஆ. இரா. வேங்கடாசலபதி அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் விமான முனையத்தில் நான் தரை இறங்கிய நாள் ப்ளும்ஸ்டே 2006. ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யூலிஸஸ்’ நாவல் முழுவதும் டப்ளின் நகரைக் களமாகவும் 16 ஜூன் 1904ஐக் காலமாகவும் கொண்டதால் ஒவ்வொரு ஜூன் 16ஐயும் ப்ளும்ஸ்டே என்று கொண்டாடுகிறார்கள். எனது அயர்லாந்து பயணத்தில் தற்செயல் நிகழ்வுகளுக்குக் குறைவில்லை. இந்தியக் கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு இலண்டனிலுள்ள அயர்லாந்து தூதரகத்தில் விசா பெறுவது எளிதாக இல்லை. தூதரக அலுவலருக்குக் ‘கலெக்டர்’ என்பதற்கு என்ன பொருள் என்று விளக்கி மாய்ந்து போனேன். டப்ளின் விமான முனைய விராந்தைகள் உலகக் கால்பந்துப் போட்டியின் பரபரப்பில் அலைவுற்றிருந்தன. அல்லற்பட்டு வாங்கிய விசாவைப் பார்க்கத்தானும் குடியேறல் வரிசையில் ஆளில்லை. வாயிலில் நின்று சுற்றுமுற்றும் விழித்தேன். நான் சந்திக்க வந்தவருக்கு என்னை அடையாளம் காண்பதில் சிரமமிருந்திருக்க முடியாது. அங்கு நான் ஒருவனே இந்தியன். நரைத்த தாடியும் தடித்த கண்ணாடியுமாக உயரமாகவும் பொலிவாகவும் அவர் இருந்தார். சம்பிரதாயமான நல உசாவல
   3 days ago
    (0) ·  (0)
    
   • SKS Kalyanasundaram  India
    அருமையான பதிவு.
    2395
    3 days ago
     (0) ·  (0)
     
    • SSugir  India
     இது வரலாற்றின் ஒருபக்க பார்வை மட்டுமே. இந்த கலெக்டர் ஆஷ் இன் நடவடிக்கை மூலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு , கல்வி கிடைத்தது. சாதி துவசங்கள் கட்டுக்குள் இருந்தது. மேலும் ஒரு அருந்ததிய பென்னிக்கு பிரசவ நேரத்தில், மருத்துவ சிகிச்சைக்காக , அக்கரகாரம் வழியாக செல்ல தடைவிதித்த பொது, இந்த ஆஷ் துரை தான் , தன்னுடைய குதிரை வண்டியில் அவர்களை ஏற்றி , தடுத்தவர்களை சாட்டையால் அடித்து, அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்த செயல் தான், இந்த வான்ச்னதனை, கோபம் கொள்ள வைத்தது. மேலும் வாஞ்சிநாதன் தற்கொலை செய்த கொண்டபோது கிடைத்த கடிதத்தில் கூட, " இந்த மிலேச்சனை, கோ மாமிசம் , ஜார்ஜ் மன்னன் மூலம் ஆங்கிலேயர் ஆட்சி செய்வதை எதிர்கிறேன் " என்று தான் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளது. நீங்கள் நடந்த சம்பவத அப்படியே ரீபைண்ட் செய்து , ஏதோ சுதந்திர போர் வீரர் போல குரிப்பிட்டுலீர்கள். உண்மையிலேல நாட்டு பற்று இருந்தால் அந்த வந்ச்நாதன், ஆங்கிலேய அரசாங்கத்தின் வன துறையில் வேலை செய்ய வேண்டிய தேவை என்ன. அதற்கு பதில் விவசாயம் பார்க்கலாமே?ஆங்கிலேயர் அடித்தட்டு மக்களுக்கு நம்மை தான் செய்தனர், கல்வி, மருத்துவம், போல
     1235
     3 days ago
      (9) ·  (1)
      
     rajdurai · thangamani · பீ · Raana · Prabaharan · Stalinraj · Sembiyan · Sivakumar · Niranjan Up Voted
     woraiyuril Down Voted
     • Balu Nathan  India
      வாஞ்சிநாதனுக்கு குற்றாலம் அருகே செங்கோட்டைல சிலை உள்ளது. செங்கோட்டை அவர் பிறந்த இடம்.
      1750
      3 days ago
       (0) ·  (0)
       
      • SSundari  India
       நன்றி .ஒவ்வொரு வரலாறும் வீரம் தரும் வரலாறு

      Monday, December 07, 2015

      மஞ்சள் பத்திரிகை‘இந்து நேசன்'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு-பட்டுக்கோட்டை பிரபாகர்

      தமிழ் சினிமாவில் இந்த நடிகர் அடைந்த வெற்றியையும், புயும் அப்போது உலகமே திரும்பிப் பார்த்தது. இவரின் உடையும், சிகை அலங்0காரமும் இளைஞர்களால் காப்பியடிக்கப்பட்டது. பெண்கள் இவர் அழகிலும், குரலிலும் கிறங்கிப் போனார்கள். ஒன் பது படங்களிலேயே புகழின் உச்சத்தைத் தொட்டவர்.


      அவர்தான் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1934-ல் 60 பாடல்களைக் கொண்ட இவர் நடித்த முதல் திரைப்படம் பவளக் கொடி. இவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 1,000 ரூபாய். படம் சூப்பர் ஹிட்.


      இனிமையான குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த, இவர் கர்னாடக சங்கீதத்துடன் தமிழிசைப் பாடல்களும் பாடியவர். இவர் நடித்த ‘ஹரிதாஸ்’ பட சாதனையை தமிழ் சினிமா வரலாற்றில் வேறு எந்தப் படமும் செய்யவில்லை. 1944, 1945, 1946 வருடங்களில் மூன்று தீபாவளிகளைக் கண்டு வசூலை அள்ளிய படம் அது.


      பாகவதர் நடித்த ‘சிந்தாமணி’ படத்தை வெளியிட்டதன் மூலம் சம்பாதித்த பணத்தில் ஒரு தியேட்டரே கட்டி, அதற்கு சிந்தாமணி என்றே பெயரும் வைத்தார் ஒரு திரையரங்க அதிபர்.


      இந்தப் புகழ்மிக்க மனிதரின் வாழ்வில் நிகழ்ந்தது ஒரு திருப்புமுனைச் சம்பவம். ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் பாகவதர். அவர் கைது செய்யப்பட்டதை ரேடியோவில் கேட்டறிந்த ரசிகர்கள் கொந்தளித்தார்கள். காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பெண்கள் கதறி அழுதார்கள்.


      இந்தக் கொந்தளிப்பு அடங்குவதற்குள், ‘கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அதே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்’ என்கிற பூகம்பச் செய்தி வந்தது.      அந்த பிரபலங்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள்?


      பாகவதரும், கலைவாணரும் லட்சுமி காந்தன் கொலை வழக்குத் தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்தனர். அந்த லட்சுமிகாந்தன், வில்லங்கமான ஆசாமி. பத்திர மோசடியில் கைது செய்யப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது தப்பிச் சென்றவர். பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டவர்.


      தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த லட்சுமிகாந்தன், ‘சினிமா தூது' என்கிற பெயரில் பத்திரிகை ஆரம்பித்து, அதில் பிரபல நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி கொச்சையாக எழுதி வந்தார். பரபரப்பாக விற்ற அந்தப் பத்திரிகையில் லட்சுமிகாந்தன் தங்களைப் பற்றியும் எழுதிவிடுவாரோ என்று திரையுலகப் பிரபலங்கள் பயந்தார்கள். சிலர் அவருக்குப் பணமும் கொடுத்து வந்தார்கள்.


      பாகவதரும் கலைவாணரும் அந்த மஞ்சள் பத்திரிகையைத் தடை செய்ய வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்தனர். ‘சினிமா தூது’ தடை செய்யப்பட்டது. அதன் பிறகு லட்சுமிகாந்தன் ‘இந்து நேசன்' என்கிற வேறு ஒரு பத்திரிகையில் அதே போலவே எழுதி வர, அந்தப் பத்திரிகையும் பிரபலமானது.


      பாகவதர் மற்றும் கலைவாணர் மீது ஆத்திரத்தில் இருந்த லட்சுமிகாந்தன் இந்துநேசனில் அவர்களைப் பற்றி அவதூறாக எழுதித் தள்ளினார்.


      இந்நிலையில்தான் 1944-ல் நவம்பர் 8-ம் தேதி யாரோ இரண்டு பேரால் லட்சுமிகாந்தன் கத்தியால் குத்தப்பட்டார். ரத்தம் சொட்டும் அந்நிலையிலும், தன் வக்கீல் நண்பரின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிறகுதான் மருத்துவமனைக்குச் சென்றார்.
      லட்சுமிகாந்தன் முதலில் காவல் துறையில் சொன்ன வார்த்தைகள் “அவன் என்னைக் கத்தியால் குத்தி விட்டான்' என்பதே. அவருடைய புகாரிலும் பாகவதர், கலைவாணர் பெயர்கள் இல்லை. மறுநாள் அவர் இறந்து போனதும் கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாறியது.


      போலீஸாரின் விசாரணையில், லட்சுமிகாந்தன் மீதான முன்பகை காரணமாக வடிவேலு என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்ததாக தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அடுத்தக்கட்ட விசாரணையில் லட்சுமிகாந்தனை கொலை செய்யச் சொல்லிப் பணம் கொடுத்ததாக பாகவதர், கலைவாணர் மீது குற்றம் சாட்டியது போலீஸ். அப்ரூவராக மாறிய நித்தியானந்தம் என்பவர் கொடுத்த வாக்குமூலமே போலீஸுக்கு பிரதான ஆதாரமானது.      கைது செய்யப்பட்ட பாகவதரும் கலைவாணரும் போராடித்தான் பெயில் பெறவேண்டியிருந்தது. வழக்கு நடைபெற்றது. குறிப்பிட்ட தினத்தில் தாங்கள் ஊரிலேயே இல்லை என்று வாதிடப்பட்டது. ஆனால், செஷன்ஸ் கோர்ட்டில் ஒன்பது ஜூரிகளை கொண்டு நடந்த வழக்கில் மூன்று பேர் அவர்கள் சதி செய்யவில்லை என்றும்; ஆறு பேர் அவர்கள் சதி செய்ததாகவும் கருத்து சொல்ல, அதன் அடிப்படையில் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பானது.      தீர்ப்பை அறிந்த ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள். ஆத்திரப்பட்ட ரசிகர்கள் கோர்ட் உள்ளே நுழைந்து கையில் கிடைத்த பொருட்களை அடித்து நொறுக்க, போலீஸ் தடியடி நடத்த வேண்டியிருந்தது.


      இருவரும் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார்கள். அங்கும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அப்போது இந்தியாவில் உச்சநீதி மன்றம் இல்லாததால் லண்டனில் இருந்த பிரிவியூ கவுன் சிலில் மிகச் சிறந்த வக்கீல்கள் மூலம் வாதிட்டார்கள். ஹைகோர்ட் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற அறிவுரை வழங்கப்பட்டது.      மறுவிசாரணையில் இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பு வந்தது. இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்த இந்த சட்டப் போராட்டத்தில் மனம் நொந்தார் பாகவதர். வழக்கின் செலவுக்காக பல சொத்துக்களை விற்க நேரிட்டது. அவர்களுக்காக வாதாடிய முன்ஷி என்னும் வக்கீலுக்கு ஒரு நாளைக்கு 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பாகவதர் அவர் ஒப்பந்தமாகியிருந்த 9 படங்களுக்காக பெற்ற அட்வான்ஸ் தொகையை திருப்பியளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தன் சொந்த ஊரான திருச்சிக்குத் திரும்பிய பாகவதர், மனம் வெறுத்து இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றார்.      பலரது வற்புறுத்தலால் மீண்டும் சினிமா தயாரித்து நடித்தார். ஆனால், தோல்விகளைத் தழுவினார். தங்கத்தட்டில் சாப்பாடு, பட்டாடை, பத்து விரல்களில் மோதிரம், வெள்ளி ஊஞ்சல், அரண் மனை வீடு, சொந்தமாகக் குதிரை, பல வகை கார்கள் என்று ஆடம்பரமாக வாழ்ந்த பாகவதரின் நிலை மாறியது. நீரிழிவு நோய் ஏற்பட்டு 49-வது வயதில் பாகவதர் காலமானார்.      பாகவதரும் கலைவாணரும் சிறையில் இருந்தபோது சிறை மீட்பு குழு என்கிற பெயரில் ஓர் அமைப்பு திருச்சி யில் உருவாக்கப்பட்டது. அதில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கி.ஆ.பெ.விஸ்வநாதம் போன்றோர் இருந்தார்கள். அவர்கள் பாகவதரையும் கலைவாணரையும் விடுவிக்க வேண்டும் என்று கூட்டங்களில் பேசினார்கள்.      இந்த வழக்கில் இன்று வரை முடிச்சு அவிழாத மர்மக் கேள்விகள் சில:      1. அப்ரூவராக மாறிய நித்தியானந்தம் ஹை கோர்ட்டில் வாக்குமூலம் தந்த போது பல்டியடித்து என்னை அப்படி சொல்லச் சொல்லி போலீஸார் வற்புறுத் தினார்கள் என்று சொன்னபோதும், அவரின் முதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜூரிகள் ஏன் தவறான தீர்மானத்துக்கு வந்தார்கள்?


      2. லட்சுமிகாந்தன் தன் புகாரில் இந்த இருவரின் பெயர்களைக் குறிப்பிடவே இல்லை எனும்போது, இந்த வழக்கில் அவர்களை ஏன் காவல்துறை சேர்த்தது? இவர்களின் பிரம்மாண்டமான வளர்ச்சியை சகிக்க முடியாத தொழில் எதிரிகள் செய்த சதியா?


      - வழக்குகள் தொடரும்

      த்ஹிந்து

      எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

      Monday, September 21, 2015

      ஷகீராவைக்கொலைசெய்தசாமியார்வழக்கில்மாட்டியதுஎப்படி?-பட்டுக்கோட்டை பிரபாகர்


      1992-ல் நடந்த அந்த வழக்கை அபூர்வத் திலும் அபூர்வமான தாக வழக்கறிஞர்கள் குறிப்பிடு கிறார்கள். அந்த வழக்கில் இந்தியா வில் முதல்முறையாக தடயவியல் நிபுணர்கள் பயன்படுத்தப்பட்டார் கள். முடி, ரத்தம், மரபணுச் சோதனை களுடன் மண்டை ஓட்டின் நகலின் மீது புகைப்படத்தை கம்ப்யூட்டர் மூலம் மேல்பதிவு செய்து அடை யாளம் காண்கிற முறை இப்படி பல விஷயங்கள் முதல் முறையாக அந்த வழக்கில் உபயோகப்படுத்தப் பட்டன. என்ன வழக்கு அது?
      பெங்களூரில் வாழ்ந்த அழகான பெண் ஷகிரா. வயது 40. மைசூர் திவான் மிர்ஸா இஸ்மாயிலின் பேத்தி. கணவர் அக்பர் ஐ.எஃப்.எஸ் படித்து ஆஸ்திரேலியாவில் தூத ராக இருந்தவர். 4 பெண் குழந்தைகள். எக்கச்சக்கமான சொத்துக்கள். ஆண் வாரிசு இல் லையே என்கிற ஏக்கம் ஷகிராவுக்கு.
      அப்போது கணவர் ஈரானில் இருந்தார். குழந்தைகள் வெளிநாடு களிலும் ஷகிரா பெங்களூரிலுமாக வாழ்ந்தார்கள். ஒரு விழாவில் சுவாமி ஸ்ரத்தானந்தாவின் அறி முகம் ஷகிராவுக்குக் கிடைத்தது. நிலங்களில் உள்ள பத்திரச் சிக்கல்களை சரிசெய்வதில் சுவாமி நிபுணர் என்று சொன்னதால் தன் நிலங்களில் இருந்த சிக்கல்களைத் தீர்த்துத் தரச் சொன்னார்.
      தன்னிடம் அதிசய சக்திகள் இருப்பதாக ஷகிராவை நம்ப வைத்தார் சுவாமி. தன் கணவரை விவாகரத்து செய்யும் அளவுக்கு சுவாமியைப் பிடித்துப் போனது ஷகி ராவுக்கு. தன் பெற்றோர், மகள்களை எதிர்த்துக்கொண்டு சுவாமியை திருமணம் செய்துகொண்டார். வங்கிக் கணக்குகள் இருவர் பெயரிலும் தொடங்கப்பட்டதுடன், கட்டிடத் தொழில் நிறுவனமும் ஆரம்பிக்கப்பட்டது.
      ஆனால், நாளடையில் சுவாமி யின் சில நடவடிக்கைகள் சுவாமி மேல் ஷகிரவுக்கு வெறுப்பு வர வைத்தது. சின்னச் சின்ன சண்டைகளும் வரத் தொடங்கின. இந்தச் சூழ்நிலையில் திடீரென்று ஷகிராவைக் காணவில்லை.
      ஷகிரா தன் மகள்களுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தார். அவரின் மகள்களில் ஒருவரான சபா போன் செய்தபோது ஷகிரா ஹைதராபாத் சென்றிருப்பதாக சொன்னார் சுவாமி. இன்னும் சில நாட்கள் கழித்து கேட்டபோது, வருமான வரி பிரச்சினையால் தலை மறைவாக இருப்பதாக சொன்னார். சபாவுக்கு லேசாக சந்தேகம் அதிகரிக்கவே வெளிநாட்டில் இருந்து புறப்பட்டு வந்துவிட்டாள். சபாவிடம் ஷகிராவைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று நடித்தார் சுவாமி.
      சபா போலீஸ் ஸ்டஷன் சென்று தன் தாயைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார். அது 1992-ல். போலீஸ் சுவாமியை விசாரித்தது. தனக்கும் ஷகிராவுக்கும் சில பிரச் சினைகள் இருந்ததாகவும், தான் வெளியூர் சென்று திரும்பியபோது வீட்டில் ஷகிரா இல்லையென்றும் சொன்னார்.
      அடுத்த 2 வருடங்கள் ஷகிரா வைத் தேடும் முயற்சியில் போலீஸ் மிகவும் மெதுவாகவே செயல்பட் டது. இதற்கிடையில் சுவாமி தன் னிடம் உள்ள பவர் அதிகாரத்தை வைத்து ஷகிராவின் சொத்துக்களை விற்று பணமாக்கினார். வங்கிக் கணக்குகளில் இருந்து எல்லா பணத்தையும் எடுத்தார். கட்டிட நிறுவன போர்டு மீட்டிங்குகளில் கலந்துகொண்டு தான் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுத்தார்.
      ஷகிராவின் மகள் சபா பொறுத் துப் பொறுத்துப் பார்த்து கோர்ட்டில் ஹேபியஸ் கார்ப்பஸ் என்கிற ஆட்கொணர்வு மனு போட்டார். இப்போது புகாரை சிறப்பு கிரைம் பிராஞ்ச் விசாரிக்கத் தொடங்கியது. சுவாமியை மடக்க எந்த ஆதாரமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
      சுவாமி வீட்டு வேலைக்காரனுடன் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிநேகமானார். அவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து பல உண்மை களை அவனிடம் இருந்து பெற்றார்.
      அடுத்த நாள் சுவாமி கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரிக்கப் பட்டபோது, “ஷகிராவை நான் கொலை செய்துவிட்டேன்’’ என்று ஒப்புக்கொண்டார் சுவாமி. எப்படி கொலை செய்தேன் என்பதை சுவாமி விவரித்தபோது காவல் துறை அதிர்ந்துபோனது.
      ஒரு சவப்பெட்டி ஆர்டர் செய்து, அதை கெஸ்ட் ஹவுசில் மறைத்து வைத்துக் கொண்டார். ஷகிரா ஊரில் இல்லாதபோது, பங்களாவின் பின் பகுதியில் ஆட்களைவிட்டு கழிவு நீருக்காக என்று சொல்லி ஒரு குழி வெட்டச் சொன்னார். ஷகிரா ஊரில் இருந்து வந்த இரவில் அவருக்குத் தெரியாமல் நிறைய தூக்க மாத்திரைகளை விழுங்க வைத்தார். ஷகிரா ஆழ்ந்த உறக்கத் தில் இருக்கும்போது சவப்பெட் டியை எடுத்து வந்து, அதில் பெட்ஷீட்டைச் சுற்றி ஷகிராவை உயிருடன் படுக்க வைத்தார். பெட்டியை மூடினார். குழிக்குள் தள்ளினார். மணலைத் தள்ளினார். மேலே கடப்பா ஸ்லாபுகளைப் பதித்து, சிமெண்ட் வைத்து அதன் இடைவெளிகளைப் பூசினார். இதையெல்லாம் வேலைக்காரனின் உதவியுடன் செய்திருக்கிறார்.
      கோர்ட் உத்தரவின்படி விடியோ பதிவுடன் ஸ்லாபுகள் பெயர்க் கப்பட்டு சவப்பெட்டி வெளியே எடுக்கப்பட்டது. உள்ளே போர்வை சுற்றிய, நைட்டி அணிந்த எலும்புக் கூடாக இருந்தாள் ஷிகிரா. தடயவியல் நிபுணர்களின் துணையுடன் அது ஷகிராவின் எலும்புக் கூடு தான் என்று நிரூபிக்கப்பட்டது. கொஞ்சம்கூட மனிதாபிமானமே இல்லாமல் நடந்த கொலை என்பதால் சுவாமிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வந்தது. சுவாமி அப்பீல் செய்தார். ஹைகோர்ட்டிலும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். 69 வயதாவதாலும், இதய நோய் இருப்பதாலும், கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கச் சொல்லி கோரினார். மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாறியது. ஆனால், தண்டனையில் குறைப்பு என்பதே கூடாது, சுவாமி தன் கடைசி மூச்சு வரைக்கும் உண்மையான ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண் டும் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.
      - வழக்குகள் தொடரும்… 
      எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

      a


      நன்றி-தஹிந்து