Friday, January 11, 2013

அலெக்ஸ்பாண்டியன் - சினிமா விமர்சனம்

http://mimg.sulekha.com/tamil/alex-pandiyan/images/stills/alex-pandiyan-movie-012.jpga

மாற்றான் படத்துல பால் பொடி வியாபாரம் பண்ணாங்க்ளே அந்த மாதிரி வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு ஆண்ட்டி பயோட்டிக் மருந்தை வில்லன் தமிழ் நாட்டுக்கு கடத்திட்டு வர்றான். சி எம் தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞரா இருந்தா டக்னு சைன் பண்ணி அக்கவுண்ட்ல பணத்தை ஏத்தி இருப்பாரு, ஆனா சி எம் காமராஜர் மாதிரி மக்கள் நலனை தன் நலனா பார்ப்பவர் . சைன் பண்ண முடியாதுங்கறார். 


 உடனே ஆள் வெச்சு சி எம் மகளை வில்லன் கடத்தறார். அந்த அடியாள் தான் ஹீரோ. அந்த மகள் தான் ஹீரோயின். ஹீரோயின் ஹீரோ கிட்டே உண்மையை எல்லாம் சொல்லி  தன்னை காப்பாத்த சொல்றாரு . ஹீரோ அவரை எப்படிக்காப்பாத்தறார் என்பதே இந்த மசாலா குப்பையின் கதை . 


 குறும்படமா எடுக்க வேண்டிய இந்த 9 நிமிஷக்கதையை எப்படி 3 மணி நேரம் எடுத்திருப்பாங்கன்னு யாரும் கவலையே பட வேணாம், யோசிக்க வேணாம். படத்துக்கு சம்பந்தமே இல்லாம கிரி படத்துல வடிவேல் காமெடி வருமே அந்த மாதிரி சந்தானம் காமெடி இடைவேளை வரை . அவருக்கு 3 தங்கச்சிங்க .அந்த 3 பேரும் ஹீரோவும் அடிக்கும் லூட்டி  7 ரீல் . அப்புறம் காட்டுக்குள்ளே ஹீரோ ஹீரோயினை க்டத்தி வெச்சிருக்கும்போது மனோபாலா கூட மொக்கை காமெடி 4 ரீல் , மீதி 4 பாட்டு   3 ஃபைட்டு அவ்வளவு தான் படம் க்ளோஸ் .. ஐ மீன் “ முடிஞ்சுது “  



http://superwoods.com/photo-galleries/alexpandian-01/images/alexpandian-0101.jpg


ஹீரோ கார்த்தி . சூர்யாவுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்னா  எத்தனை ஹிட் கொடுத்தாலும் சூர்யா பாடி லேங்குவேஜ்ல ஒரு தாழ்வு மனப்பான்மை , அடக்கி வாசித்தல் , பம்முதல் இருக்கும் , அது அவர் அப்பா சிவகுமார்ட்ட இருந்து வந்திருக்கும். ஆனா இவர்  சிறுத்தை கொடுத்த அதிரி புதிரி வெற்றியால  சீன் பை சீன் தன்னை அடுத்த ரஜினியா மனப்பால் குடிச்சுக்கிட்டு பஞ்ச் டய்லாக் பேசிட்டு படுத்தி எடுக்கறார். ஆனா லக்கி மேன். படத்துல இவருக்கு  5 பேர் கூட லூட்டி அடிக்கும் சான்ஸ். அதுக்கு சம்பளம் வேற . 


ஹீரோயின் அனுஷ்கா . அண்ணனுக்கு எட்டலை , தம்பிக்கு எட்டும் அது என்ன? பழமொழிதான் நினைவு வருது .  இடுப்புல கொஞ்சம் சதை போட்டுடுச்சு . நடுவுல கொஞ்சம் இளமையை காணோம். ( படத்துல கதையை மொத்தமா காணோம் )  ஒரு சீன்ல ஸ்லோமோஷன்ல ஓடி வர்றார். 2 டூயட் பாடறார். இதை விட ஒரு  மசாலாப்படத்துல தமிழ் ஹீரோயின் என்ன பண்ண முடியும்? 


சந்தானம்  - இவர் தான் படத்துல காமெடி போர்ஷனுக்கு இன்சார்ஜ் . பார்க்கும்போது செம சிரிப்பு வருது . அப்புறம் யோசிச்சா எதுக்குடா இப்படி சிரிச்சோம்னு இருக்கு . இவர் வடிவேல்  காமெடியை உல்டா பண்ணும் தேவை ஏனோ? 


 மனோபாலா - படத்தின் பின்பாதி இவர் காமெடி . முடியல . ஆனா குழந்தைங்க எல்லாம் தியேட்டர்ல சிரிக்கறாங்க ( படமே சிரிப்பா சிரிக்கப்போகுதுன்னு சிம்பாலிக்கா சொல்றாங்க போல ) 


 படத்துல இந்த 2 காமெடியன்களும் பண்ண காமெடியை விட   வில்லன்க சுமன், பிரதாப் போத்தன்  பண்ற காமெடி செம சூப்பர் . அவங்க வாங்கும் பல்புகளை  கடைசில பார்ப்போம்


 பாடல்கள் , இசை எதுவும் சொல்லிக்கற மாதிரி இல்லை . 3 பாட்டு சுமாரா இருக்கு 


http://kollywood.myindianmovie.com/galleryimages/Movie/Karthis-Alex-Pandiyan-Movie-Latest-Stills/alex_pandiyan_movie_stills_karthi_anushka_444f56c.jpg




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  



1. கார்த்தி அறிமுகம் ஆன பருத்தி வீரன்ல இருந்து அவருக்கு அட்டர்ஃபிளாப் படமே இதுவரை அமையலை , சகுனி கூட சுமார் வெற்றி தான் . இப்படி தொடர்ந்து வெற்றியே வந்துட்டு இருந்தா ஒரு ஹீரோவுக்கு ஹெட் வெயிட் ஏறுதோ இல்லையோ சம்பளம் கிடு கிடுன்னு ஏறிடும்  . ஹீரோ டாமினேஷன் அதிகமாகும் இது ஆரோக்யமான தமிழ் சினிமா வளர்ச்சிக்கு நல்லதல்ல . அதை உணர்ந்து திட்டம் போட்டு கார்த்தி கிட்டே கால்ஷீட் வாங்கி கவுத்தது  .


2. படம் போட்டு  முதல் ஒரு மணி நேரம் கதையே சொல்ல ஆரம்பிக்காம சந்தானம் காமெடியையே காமிச்சு ஒப்பேத்துனது 



3. பொங்கலுக்கு 3 நாள் முன்னாடியே ரிலீஸ் பண்ணி எப்படியும்  மினிமம் 3 நாள் வசூலையாவது பார்த்துடலாம்னு ஐடியா பண்ணது , விஸ்வரூபம் ரிலீஸ் ஆகாதது இவருக்கு சாதகம் 


4. ராவணன் படத்தில் ஐஸ்வர்யா காட்டில் குளிக்கும் காட்சி ,  க்ளிஃப் ஹேங்கர்  படத்தில் ஹீரோ ஹீரோயினை காப்பாற்றும் காட்சி ,காதலன் படத்தில் கவர்னர் பெண்ணை ஹீரோ கரெக்ட் பண்ணும் காட்சி ,  குணா படத்தில் தன்னை கடத்தியவனிடமே ஹீரோயின் மனதைப்பறி கொடுக்கும் காட்சி ,  செந்தூரப்பூவே படத்தில் க்ளைமாக்ஸ் ரயில் ஃபைட் சீன் , படிக்காதவன் படத்தில் விவேக் காமெடி காட்சி , கிரி படத்தில் வடிவேல் காமெடி காட்சி என  ஒரே படத்தில் பல படக்காட்சிகளை சாமார்த்தியமாக நுழைத்த  விதம்  அருமை (!!!!!!) 


 http://www.idlebrain.com/movie/photogallery/anushka19/images/anushka0022.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. ஓப்பனிங்க் ஷாட்ல 120 கிமீ வேகத்துல ரயில் போய்ட்டு இருக்கு , ஹீரோ 23 பேரை  12 நிமிஷத்துல அடிச்சுட்டு 130 கி மீ வேகத்துல ஓடி ரயிலை பிடிப்பது எபப்டி? அது கூட தேவலை . பாலத்துல 10 மீட்டர் உயரத்துல இருந்து ஹீரோ மின்னல் வேகத்தில் ஓடி வரும் ரயிலில் குதித்து அசால்ட்டா எந்திரிக்கறாரே, செம சீன் . முடியல 
2. அண்ணனுக்கு பெயில் கிடைக்கனும், அதுக்காக அப்பாவிகள் 3 பேருக்கு வில்லன்க மொட்டை போடுவதும் அந்த 3 பேருல ஒருவரா ஹீரோ இருப்பதும் படத்துக்கு சமப்ந்தம் இல்லாம ஃபைட்  காட்சி , கதைக்கும் அந்த ஃபைட்டுக்கும் என்ன சம்பந்தம்?



3. இடைவேளை விடும்போது வில்லன் 18 பேர் கூட ஹீரோவை முற்றுகை இடுகிறார். வில்லனை ஹீரோ அடிச்ச பின் அந்த 18 பேரும் அப்பதான் என்னாச்சுன்னு  கேட்பது செம காமெடி 



4. வில்லன் கோஷ்டி 8 மஹேந்திரா & மஹெந்திரா ஜீப்ல தலா 6 பேர் 48 பேரும் ரவுண்ட் கட்டி  துப்பாக்கியால சுடறாங்க  ஹீரோவுக்கு 1 மே ஆகலை 





5.  பிரதாப் போத்தன் கேரக்டர் வில்லத்தனம் செய்யப்போகுதுன்னு முதல் சீன்லயே தெரியுது  அதுல என்ன சஸ்பென்ஸ் வேண்டிக்கிடக்கு? 


http://img.bollywoodsargam.com/albumsbolly/Anushka/Anushka_BollywoodSargam_hot_824960.jpg



6. பணயக்கைதியா சி எம் மகள் வில்லன் கிட்டே ,  ஃபைல்ல கையெழுத்துப்போட சி எம் ஒத்துக்கறார்/ ஃபைல் வந்ததும் நான் ஃபைலை படிச்சுப்பார்க்கனும், ஒரு மணி நேரம் டைம் வேணும்னு கேட்கறார் , அது என்ன சாண்டில்யன் எழுதுன கடல் புறாவா? படிச்சுப்பார்க்க டைம் கேட்க . உனக்கே வழி இல்லை , வேற கதி இல்லை , சைன் பண்ணித்தானே ஆகனும்?னு வில்லன்க யாரும் கேட்கலை . கேனம் மாதிரி சரிங்கறாங்க 



7. ஒரு சி எம் மக பல பார்ட்டிக்கு போறா , ஜாலியா இருக்கா./ ஆனா அவ ஆம்பளைங்களையே பார்க்காதவ மாதிரி  ஹீரோ கிட்டே காட்டுக்குள்ளே கெக்கே பிக்கேன்னு இளிச்சுட்டு இருக்கு .கிட்நாப் பண்ணவனையே லவ்வுது , கண்றாவி 



8. க்ளைமாக்ஸ் சீன் செம காமெடி , ஹீரோவை வில்லன்க கட்டி வெச்சு உதைக்கறாங்க. சாகும் நிலைக்கு போகும்வரை வேடிக்கை பார்த்துட்டு ஹீரோயின் சொல்லுது “ நீங்க ஆம்பளையா இருந்தா கடை அவுத்து விடுங்க பார்க்கலாம்.உடனே அந்த கேன வில்லன்க அவுத்து விடறாங்க , மீதி இருக்கும் 45 பேரையும் ஹீரோ காலி பண்றார் . 



9. சி எம் மகளை கடத்த ஜஸ்ட் 10 லட்சம் தான் செலவு ஆகுமா? சுத்தம்  சி எம் மகளை என்னமோ பொட்டிக்கடை சரசு பொண்ணை கடத்துவது போல் காட்டி இருப்பது படு சொதப்பல் 


10 . ஃபாரீன் வில்லன் விஜயகாந்த் பட பாகிஸ் தான் தீவிரவாதியை விட பிரமாதமா தமிழ் பேசுவது எபப்டி? 


http://moviegalleri.net/wp-content/gallery/alex-pandian-new-stills/alex_pandian_new_stills_karthi_anushka_2069b7d.jpg




மனம் கவர்ந்த வசனங்கள்  


1. நாளைக்கு எங்கண்ணன் ஜெயில்ல இருந்து 10 மணிக்கு வந்ததும் முத வேலை உன்னை வெட்றதுதான். சந்தானம் - 10,30 மணிக்கு மறுபடி ஜெயிலுக்கு போய்டுவாரே 



2. சந்தானம் - பொண்ணு ,பொரி உருண்டை 2 ம் 1 தான்.காத்து பட்டாலே கெட்டுடும் .கலிகாலம்



 3. சந்தானம் - எல்லா மாடும் ம்மா னு கத்தும்போது என் மாடு மட்டும் மாமா னு கத்துது.என் தொழில் அதுக்கும் தெரிஞ்சிடுச்சா? 




4. ரவுடி சார்.நீங்க ஜெயில்ல இருந்து வர்றீங்ளா? சரவணபவன் சமையல்கட்ல இருந்து வர்றீங்ளா? மூஞ்சி எல்லாம் கரிச்சட்டி மாதிரி இருக்கு?




5. நாளை முதல் பெட்ரோல் விலை உயரப்போகுது 

 அப்போ இப்பவே உன்னை எரிச்சுடறேன் 



6.  நீ எப்போ வந்தே?


 இப்போத்தான் 


 எப்போ போவே 

 தெரில 

 அடேய் , வந்தமா போனமான்னு இருங்கடா, இப்படி மஞ்சக்காமாலை மாதிரி தங்கிட்டா? 




7.  கூட்டுப்பொரியலை எடுத்து வை 

 ஆல்ரெடி வெச்சாச்சே?

 நான் உள்ளே எடுத்து வைக்கச்சொன்னேன் 



8.  எப்படி இருந்துச்சு? 

 3ம் சூப்பர் 


 நீ எதைச்சொல்றே?


 கூட்டை 

 நல்ல வேளை என் தங்கச்சிகளைச்சொன்னியோன்னு நினைச்சேன் 




9.  என்னது? இன்னைக்கு 2 மணிக்கே சங்கு ஊதிட்டாங்க? 


 நான் தான் ஏப்பம் விட்டேன் 


10. அவனுக்கு ஏன் துடைச்சு விடறீங்க? இல்லைன்னா துரு பிடிச்சுடுமா? 


http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataT/tamilshots/images/restricted/23-10-2008/9.jpg

11. எங்கப்பன் என்ன மூடுல இதுங்களைப்பெத்தானோ  மூணும் இப்படி முறை கெட்டு அலையுதுங்க 



12. தங்கச்சின்னு 1 பிறந்துட்டா அண்ணன் காரன் ஆந்தை மாதிரி காவ காக்கனும் 



 13.  இன்னைக்கு எனக்கு ஃபர்ஸ்ட் ந்நைட் 


 வாட்? 

 உங்க வீட்ல நான் தங்கற ஃபர்ஸ்ட் ந்நைட் னு சொல்ல வந்தேன் 



14. சிம்ப்பிளா செய்ய வேண்டிய விஷயத்தை ஏன் சில்மிஷத்தோட செய்யறீங்க?


15. அண்ணே, நீங்க 4 மணி நேரம் என்னை கட்டிப்பிடிச்சு தூங்கி இருக்கீங்க. 400 ரூபா குடுங்க 


 எதுக்கு?

 மாட்டுக்கு புண்ணாக்கு வாங்கனும் 

 அப்படித்தெளிவாச்சொல்டா 




16. அண்ணே , உன் தங்கச்சி 3 பேரையும் ரவுண்ட் கட்டி அடிச்சுட்டு இருக்கான் 

 வாட்?

 கேரம் விளையடறான்



17. டீயா? காபியா? என்ன வேணும்?

 பால்


 ஆவின் பாலா? ஆரோக்யா பாலா?

 அமலா பால் (   எல் சேவுக பாண்டியன் ஜோக் @ குமுதம் 2012 ) 



18. இந்த கேம்ல நான் ஜெயிச்சா?

 முத பஸ்சை பிடிச்சு ஊருக்குப்போயிடு 


 நீ ஜெயிச்சா?

   முத ட்ரெயினை  பிடிச்சு ஊருக்குப்போயிடு



19. கேரம் காயின்க்கு தமிழ்ல காய் தானே? 


 அதுக்காக காய் அடிச்சேன்னு சொல்றதா? 



20 , டேய் , குத்து விளக்கு மாதிரி இருக்கும் தங்கச்சியை குனிய வெச்சு என்னடா பண்ணிட்டு இருக்கே? 


 பாண்டி விளையாடறேன் 

 தூண்டி விளையாடுவே , சீண்டி விளையாடுவே . நான் வேடிக்கை பார்க்கனுமா?


http://haisay.com/file/pic/photo/2011/10/images-anushka-new-hot-look-images-jpg_1024.jpg



21. குத்துப்பட்ட இடத்துல பத்துப்போடனும், இப்படி பஞ்ச் டயலாக் பேசிட்டு இருக்கப்படாது 



22. கட்சியை வெச்சிருக்கறவன் கூட தப்பிச்சுடுவான் தங்கச்சியை வெச்சிருக்கறவன்..... ம்ஹூம் 



23.  வில்லன் - நான் யாருன்னு தெரியாம என் கிட்டே  விளையாடறே


 விளையாட  அது எல்லாம் தேவை இல்லை ( ஹீரோ பஞ்ச் ) 





24. நைட் நரி கத்துச்சு? 

 இனி கத்தாது , நீ சாப்பிட்டுட்டு இருக்கியே அது கறி இல்லை , நரி 

 உவ்வே 



 25. ஹீரோவின் பஞ்ச் - தீப்பெட்டிக்கு 2 பக்கம் உரசுனாத்தான் பத்திக்கும், ஆனா இந்த அலெக்ஸ் பாண்டிக்கு எந்தப்பக்கம் உரசுனாலும் பத்தும் 



26. உன் கிட்டே சிக்ஸ் பேக் இல்லைன்னாலும் நல்ல ஃபிளாஸ் பேக் வெச்சிருக்கே.. 



27.  தேனி கொட்டிடுத்து


 டேய். தேனி கொட்டிட்டு தேனி ( ஊர் ) தாண்டிப்போயிடுச்சு , அவ்ளை விட்டு எந்திரிடா


28.  நாங்க எல்லாம் ஆணி குத்துனாலே அசால்ட்டா புடுங்கிப்போடுவோம் , தேனி கொட்டினா..


 அடடா,, ஆணி , தேனி பின்றானே எதுகை மோனைல




29.  உண்டி வில் தெரியாதா? அது தான் ஏழைகளின்  ஏ கே 47



30. என்னை போலீஸ் தேடுது , ரவுடிங்க தேடறாங்க



 ஏண்டா, எப்போ பாரு என் தங்கச்சி பின்னாலயே சுத்திட்டு இருக்கியே , உன்னை உன் வீட்ல தேட மாட்டாங்களா?


http://www.breezemasti.com/gallery/data/media/22/anushka_shetty_latest_hot_stills_08.jpg




31.  எனக்கு எல்லா லேங்குவேஜ்லயும் பிடிச்ச ஒரே வார்த்தை பனம் , மால் டப்பு



32.  எனக்கு சுகர் இருக்கு , பி பி இருக்கு , எல்லா வியாதியும் இருக்கு , சீக்காளியா இருக்கும் என்னை கொன்னு கொலையாளியா மாறிடாதே



33.  எனக்கு சரக்கு வாங்கிக்குடுத்து பெத்த தாய் மாதிரி பாத்துக்கிட்டீங்க  நாய் மாதிரி உங்களை அடிச்சுட்டேனே



34.  ஹேப்பி பர்த்டே


 எனக்கு  பர்த்டே வே இல்லையே?

 எனக்கு  பர்த்டே

 ஓ , எனக்குத்தெரியாது

 எனக்கு அமிதாப் பச்சனையே தெரியும்

 எனக்கு தங்கர் பச்சானைக்கூட தெரியாது





35.  யோவ், 6 மாசமா ரீ சார்ஜே பண்ணலை , எப்படிய்யா அவுட் கோயிங்க் போகும்?



36. இப்போ பாரு , நோக்கு வர்மம் மூலம் அவனை நான் ஒரு வழி பண்றேன்



 பார்த்தா பேக்கு மாதிரி இருக்கே



 37.  என் மூஞ்சியைப்பார்த்தா டம்மிப்பீஸ் மாதிரியா இருக்கு?


 ட்டோட்டல் பாடியே டம்மிதான்



38.  நான் இதுவரை 40 புலி , 39 சிங்கம்

 அடடே, சுட்டிருக்கியா?




நோ , பார்த்திருக்கேன்


எங்கே? காட்டிலா?

 வண்டலூர் ஜூ ல

 தூ

 தாங்க்ஸ்



39,  புலி தப்பிச்சுடுச்சா?

 புலி கிட்டே இருந்து நீ தான் தப்பி இருக்கே/




40.  ஆம்பளை ,மாதிரி  பேண்ட் போடுவீங்க , கட்டிங்க் பண்ணிக்குவீங்க, தம் அடிப்பீங்க, சரக்கு கூட அடிப்பீங்க , ஆனா ஆம்பளை சட்டையை மட்டும் போட மாட்டீங்களா? என்னம்மா நியாயம் இது? 


http://2.bp.blogspot.com/_ZBjWGkMwvZI/TUTzbmjy5MI/AAAAAAAAALM/iEZnL8wEvuw/s1600/Actress_Anushka_Shetty_Cute_Glamour_Hot_Photos_07.jpg



41.  பொண்ணு வீரமா இருக்கலாம், ஈரமா தான் இருக்கக்கூடாது



42. ஜெயிலுக்குப்போறதெல்லாம்  நான் ஸ்கூலுக்குப்போற மாதிரி



43.  நாயா? நரியா?

 நரி

ஏன் கத்துது?

 வெறி




44.  இந்த காட்டை விட்டு தப்பிச்சுப்போகலாம்னு மட்டும் நினைக்காதே  வெளில  சிங்கம் , புலி , சிறுத்தை எல்லாம் இருக்கு


 என்ன ? சினிமா டைட்டிலா சொல்லி பயமுறுத்துறே ? இதை எல்லாம் நான் டிஸ்கவரி சேனல்ல பார்த்தாச்சு


45. எத்தனை பேர் வந்தாலும் பயப்பட மாட்டேன் , டப் டப்பு டப்புன்னு


  சுட்டுடுவியா?


 கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுடுவேன்



46. டேய் , ரவுடிங்களை எல்லாம்  ஏன் ரேக்கிங்க் பண்ணிட்டு இருக்கே?



47. உன் கிட்டே இருந்து என் தங்கச்சிகளை காப்பாத்த உனக்கு ஷாக் வெச்சேன் , அதை சாக்கா வெச்சு அவங்களையே கரெக்ட் பண்ணிடுவே போல இருக்கே?



48.  என்ன பண்ணிட்டு இருக்கே?


 ஷாக் அடிச்சு விழுந்துட்டாரு, அவர் வாய்ல உதட்டை வெச்சு ஊதறேன்


 அவன்  வாய் என்ன பலூனா?




 49.  இந்த சுவிட்ச்ல மட்டும் கையை வெச்சுடாதே

 வெச்சா என்ன ஆகும்? இதோ வெச்சுட்டேன்// ஆஆஆஆஆ




50 .  வலியைக்கூட தாங்கிக்கலாம் , ஆனா இவனோட ஓவர் ரிஆக்‌ஷனை தாங்க முடியலை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1XOyowQ3bgbaOBzD2OF5Rq7c4m3AK3fDDj-jM5_kHfTs_GTZsDDyA5ErMqVaOuisxVpXUo7ZuWQNmDUdqNn3fpYEQ7WXS_tTROnmfbxx0yzL22R-Gu6dBeDAa-x2oH9awMLn8jnK81jSU/s1600/Anushka-Hot-Photos-CF-01.jpg



 51  என்னை ஆயான்னு கூப்பிட பேரக்குழந்தைகள் வேணும்


 உன்னை ஆயான்னு கூப்பிடனும் அவ்வளவுதானே? அந்த ஸ்கூல்ல போய் மத்தியானம் சோறாக்கிப்போடு , எல்லாக்குழந்தைகளும் ஆயான்னு கூப்பிடும்



52.  வயசுப்பொண்ணு வாந்தி எடுப்படும் , மஞ்சக்காமாலைக்காரன் வாந்தி எடுப்பதும் ஒண்ணுதான் 2ம் டேஞ்சர்



53. டேய் என்னடா பண்ணிட்டு இருக்கே?

 ஜஸ்ட் கேம்ணே

 ஒர்ஸ்ட் கேம்


 54. அதென்னடா, பொம்பளைன்னா பொறுப்பா இருக்கே, ஆம்பளைன்னா வெறுப்பா ஆகிடறே ?



55.  என்னாங்கடி இது கும்கி யானையை குளிப்பாட்டுற மாதிரி குளிப்பாட்டிட்டு இருக்கீங்க ?



56. என்ன பண்றே?

 கூல் பண்றேன்

 என்னை ஃபூல் பண்ணாம விட மாட்டே போல



57.  என் 3 தங்கச்சிகளை கரையேத்தனும்


 நானும் ஏத்தவா?


 நீ எதை ஏத்துவேன்னு தெரியும், தள்ளி நில்டா




58 . உன் பெரிய தங்கச்சி தூங்கி இருக்குமா?


 எதுக்கு கேட்கறே?


  நாடி ஜோசியம் பார்க்கனும்னு சொல்லுச்சு


 விட்டா  சேடி ஜோசியம் கூடப்பார்ப்பியே?




59. அண்ணே , இவர் புது விளையாட்டு சொல்லிக்குடுத்தாரு


 என்ன விளையாட்டு ?

 மாமா மாமிக்கு மாம்பழம் கொடுக்கற விளையாட்டு

 கிழிஞ்சுது போ



60 . குட்டிக்கதை சொல்றேன்  குட்டிக்கதை சொல்றேன்னு சொல்லிட்டு ஜட்டிக்கதை எல்லாம் சொல்லிட்டு இருக்கியேடா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicHiZMyWg54nmVJqpveeWzXc24eOMTXrhrnCjidGezAqFMyQbQsrZZ51cHqRqf1dQg2g30-amPXnVzLueLWvgDR94X2GKb4N0zWq6oIm3RXqbkF8OJHHtmo7uN_RMJ8NzZNXh9Z2i1r656/s0/Anushka%2520Spicy%2520hot%2520sexy%2520photos%2520Anushka%2520new%2520telugu%2520actress%2520unseen%2520spicy%2520photos%2520%25286%2529.JPG




61.  வெளில பனி இருக்கு


நீ  உள்ளே  படுத்தா எனக்கு  சனி



62.  ஏண்ணே ,மாடுக்ளைக்கூட்டிக்குடுக்கறியே , வெட்கமா இல்லை?

 டேய் நாயே, நீ என் கிட்டே அசிஸ்டென்ட்டா இருந்துட்டு என்னையே நக்கல் பண்றியா?


63. எப்போ பாரு பிச்சைக்காரன் மாதிரி  அம்மான்னு ஏன் கூப்பிடறே?  மம்மின்னு கூப்பிடு

 மம்மி , ஜிம்மின்னு கூப்பிட்டு மத்தவங்க முன்னால கும்மி அடிக்க முடியாது



64. டேய் , டீக்கடைல என்னடா பண்ணிட்டு இருக்கிங்க?

 டீ குடிச்சுட்டு இருக்கோம்

 வீட்லயே போட்டு எடுத்துட்டு வந்த டீ மாதிரி இருக்கு , என் தங்கச்சியை சைட் அடிக்கத்தானே வந்தீங்க ?



65. ஒரு வயசுப்பொண்ணு ஆசைப்பட்டு கேட்குது , ஜல்லிக்கட்டு காட்டுனா என்ன?

 புல்லுகட்டு வேணா காட்டலாம்


66. சந்தானம் - வில்லன்களின் அடியாள்களிடம் -  ஏன்டா!! டீசல் விக்கிற விலைக்கு இவ்ளோ வண்டி எடுத்துட்டு துரத்திட்டு இருக்கானுங்க? இவனுகளுக்கு உள்ள உட்கார இடம் இல்லையா? எப்ப பார்த்தாலும் வெளியவே தொங்கிட்டு வரானுங்க?




67. கெஸ்ட்னா காய்ச்சல் மாதிரி அன்னிக்கே போயிடனும். ஜான்டிஸ் மாதிரி மாசக்கணக்கா இருக்ககூடாது




http://moviegalleri.net/wp-content/gallery/damarukam-new-stills/damarukam_new_stills_nagarjuna_anushka_hot_stills_6885055.jpg




எதிர்பார்க்கும் விகடன் மார்க் -39


 எதிர்பார்க்கும் குமுதம் ரேட்டிங்க் -  சுமார் 


 ரேட்டிங்க்  5 / 10




BY CPS THROUGH VIDEO - ALEXPANDIAN FILM REVIEW -





 சி.பி கமெண்ட் - மாறுபட்ட நல்ல சினிமாவை விரும்பும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - அலெக்ஸ் பாண்டியன் - அட்டர்பிளாப் -ஆனா டி வி ல போட்டா பார்க்கலாம் , காமெடி கிளிப்பிங்க் பார்க்கலாம்.  200 ரூபா பிளாக்ல ஈரோடு அபிராமி தியேட்டர் வாசல்ல  யாராவது வித்தா அவன் கிட்டே தம்பி இந்தபப்டம் 50 ரூபாய்க்கே ஒர்த் இல்லைன்னு நக்கலா சொல்லிட்டு போய்ட்டே இருங்க


http://onfunn.com/wp-content/uploads/2012/10/anushka-hot-14.jpg

14 comments:

Unknown said...

கலக்ஸ் பாண்டியன் !

Shiva sky said...

comedy pdam navey..odidum thala..

Anonymous said...

நீங்க தெய்வம்னா

Unknown said...

அவுங்க தான் பழைய படத்தை உருவினாங்கன்னா...நீங்களும் பழைய அனுஷ்கா படத்தையே போடனுமா, தெலுங்கு பட ஸ்டில் புதுசு எத்தனையோ இருக்கு..
- உங்க விமர்சனம் ஹிட்ஸ்ல நம்பர்1 "சகுனி" தான் 17000 ஹிட்ஸ்
- கொங்கு மண்டலம் தான் அதிகமா ஹிட்ஸ் கொடுத்திருக்கும்...

தமிழ்மகன் said...

விண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ்

http://mytamilpeople.blogspot.in/2013/01/windows-8-tips.html

தமிழ் பையன் said...

எப்படிங்கண்ணா அதுக்குள்ளே விமர்சனம்? சென்சார் போர்டுல வேலை செய்றீங்களா?

rajamelaiyur said...

நீங்க ரொம்ப பாஸ்ட் தல

rajamelaiyur said...

இன்று
FACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தையும் எளிதில் DOWNLOAD செய்ய வேண்டுமா ?

temporary said...

Kadal Trailer kamichagula ?athavathu wortha?

Hari

princely said...

எழுதுறது தான் எழுதுறீங்க, ஒரு 15 நிமிஷத்துக்கு முன்னாடி எழுதி இருக்கக்கூடாதா ?? டிக்கெட் எடுத்து உள்ள போய் உட்காந்ததுக்கு அப்புறம் தான் இத படிச்சேன்... ஒரே குஷ்டம்..

john said...

transporter 3 mathiri?

காரிகன் said...

இந்த படத்தின் கதையை படிக்கும் போது ஹாலிவுடில் வந்த ஜேசன் ஸ்ட்ராடம் நடித்த transporter 3 படத்தைதான் உல்ட்டா பண்ணி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதிலும் இதே போல அமில கழிவுகளை தனது நாட்டில் கொட்ட அனுமதி மறுக்கும் ஒரு மந்திரியின் மகளை கடத்தி வைத்துக்கொண்டு அவரை பிளாக் மெயில் செய்வார்கள்.ஜேசன் ஸ்டராடம் அந்த பெண்ணை கடத்திக்கொண்டு உண்மை தெரிந்து அவளை காப்பாற்றுவார்.

தமிழ் காமெடி உலகம் said...

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....படம் பார்க்கணுமா வேண்டாமா என்று இதிலிருந்தே முடிவு செய்திடலாம்....முடிவு பண்ணிட்டேன்....!!

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

altruist said...

Thanks for saving rs.200