Friday, September 14, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 14.9.2012 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.ithayakkani.com/ITHAYAKKANI/OpenFile?r1=speeches&r2=/doc_Aug_27_2012_0_24_2_AM1.jpg1.சுந்தரபாண்டியன் - சசிகுமார் தயாரித்து நடித்து வரும் திரைப்படம் சுந்தரபாண்டியன். படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். பிரபாகரன் இயக்குகிறார். இவர் சசிகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். சூரி, விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம்  14ம் தேதி திரைக்கு வருகிறது.



 இதனிடையே சுந்தரபாண்டியன் திரைப்படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பபட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் சசிகுமார் மிகவும் திருப்தி அடைந்துள்ளார். மேலும் ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை செய்யப்படும் என்ற விதிமுறையை கண்டு தான் கவலையடையவில்லை எனவும் கூறினார். 



இந்தப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும்போது, ஒரு பெண்ணைக் காதலிப்பதற்காகத் துரத்துகிறார் சசிகுமார்.


 ஒரு கட்டத்தில் அப்பெண் காதலுக்குச் சம்மதம் சொல்லிவிடுகிறாள்.அதன்பின் காதலர்களாகக் கொஞ்ச நேரம் அப்புறம் அந்தக் காதலுக்குச் சிக்கல்.அதிலிருந்து மீண்டு காதலியைக் கைப்பிடிக்க அவர் எவ்வாறு போராடுகிறார்?என்பது தெரிகிறது. இதில் என்ன புதிதாக இருந்துவிடப் போகிறது என்று நினைப்பவர்களுக்காக ஒரு புதிய விசயத்தை வைத்திருக்கிறார்களாம்.


அந்த விசயம்? காதலுக்குச் சிக்கல் எங்கிருந்து வருகிறது என்பதில் தான் புதுமை இருக்கிறதாம். காதலுக்குச் சிக்கல் நண்பர்கள் மூலமே வருகிறதாம். தொடக்கத்திலிருந்தே கூடவே இருக்கும் நண்பர்கள் துரோகம் செய்வதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குமுறி நண்பர்களைப் போட்டுத் தள்ளிவிடுகிறாராம் சசிகுமார்.அந்தளவுக்கு நண்பர்கள் என்ன செய்து விடுகிறார்கள்? என்பதுதான் படத்தைப் பார்க்கத் தூண்டுகிற விசயம் என்பதால் அதைப்பற்றி இங்கு சொல்லவில்லை.



 இயக்குகிற படமாக இருந்தாலும் சரி, நடிக்கிற படமாக இருந்தாலும் சரி நண்பர்கள் பற்றியே படமெடுத்துக்கொண்டிருக்கிறார் சசிகுமார். நிஜத்தில் அவர் எந்த நண்பரால் பாதிக்கப்பட்டாரோ தெரியவில்லை.

http://www.adrasaka.com/2012/09/blog-post_9799.html
சுந்தரபாண்டியன் - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க


ஈரோடு ராயல் ,ஆனூரில் ரிலீஸ் 

http://www.tamilnow.com/movies/gallery/nellai-santhippu/tamil-movie-nellai-santhippu-photos-1969.jpg


2.  நெல்லை சந்திப்பு -இயக்குனர் திருமலை தனது டி.கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் இரண்டாவது படம் நெல்லை சந்திப்பு. இன்றைய நடைமுறையில் உள்ள யதார்த்த பின்னணியில் படம்‌ தயாராகிறது. நெல்லை சந்திப்பில் செந்தில் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். 



இன்னொரு ஹீரோ கோவை பாபு. ஹீரோயின்களாக மேகா நாயர், வால்மீகி தேவிகா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கியமான வேடத்தில் போஸ் வெங்கட் நடிக்கிறார். நெல்லை சந்திப்பில் நடிக்கும் இன்னொரு வி.ஐ.பி. தயாரிப்பாளர் தேனப்பன். பஞ்சதந்திரம் உள்பட ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார்.நெல்லை சந்திப்பில் காவல்துறை அதிகாரியாக தேனப்பன் நடிக்கிறார். நடிகராக இது அவரது முதல் அனுபவம். உச்சகட்டம் படத்தை இயக்கியிருக்கும் நவீன் நெல்லை சந்திப்பு படத்தை இயக்குகிறார். 


நெல்லை சந்திப்பு என்ற பெயரைக் கேட்டதும் காதல் கதை போலத் தோன்றும். ஆனால் அப்படியொரு எதிர்பார்ப்புடன் போனால் ஏமாந்தீர்கள். படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து நாம் தெ‌ரிந்து கொண்டது இது. கே.பி.பி.நவீன் படத்தை இயக்கியிருக்கிறார். சேவிலோ ராஜஒளிப்பதிவு. மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் வாசுதேவன் இசையமைத்துள்ளார். இரண்டுப் பாடல்களை திரையிட்டனர். அப்பா பெயரை பிள்ளை காப்பாற்றுவார் என்று உறுதி செய்தன இரண்டு பாடல்களும். படத்திற்கு கவிஞரும், பத்தி‌ரிகையாளருமான எம்.‌ஜி.கன்னியப்பன் வசனம் எழுதியுள்ளார். படத்தில் ஒரு பாடலையும் இவர் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.



இசைத்தட்டை நெல்லை தொகுதி எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு வெளியிட நடிகர் ஷாம், தயா‌ரிப்பாளர் பி.எல்.தேனப்பன், இயக்குனர்கள் வி.இசட்.துரை, சசி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். 


நடிகர் விக்ரம‌ன், இந்தப் படம் எங்கு நிகழ்வதாக காட்டப்பட்டிருக்கிறதோ அதே நெல்லை சந்திப்புப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். இந்த ஒரே விஷயத்துக்காகதான் ஆர்வமாக வந்தேன் என்றவர் தான் தம் அடித்த கதையையும், ஊர் சுற்றிய ச‌ரித்திரத்தையும் நினைவுகூர்ந்து விழாவுக்கு கலகலப்பூட்டினார். ஆர்.சுந்தர்ராஜன், சரவண சுப்பையா உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

தி நகர், அகம் புறம் படங்களை இயக்கிய திருமலை தான் படம் பண்ணாமல் தனது தயா‌ரிப்பில் இன்னொருவரை இயக்குனராக்கியிருக்கிறார். ஒரு அப்பாவி இளைஞன் ஒரு தப்பான என்கவுண்‌ட்டர் என்ற படத்தின் ஒருவ‌ரி அவரை இம்ப்ரஸ் செய்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம். 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKzm5z8HLulUqLbXo6tkEpWvTz9djRN-c_g7kVf_VuyOQnBoG59KTErb2rJs61B4ccMUavzAMSLe7lVVftkxc3gzJQ52u4Cayd3qjhaqXmn17OOZplyNxs4ttVKqFDb4MwH57uk2pO2s0/s1600/0.jpg

3. துள்ளி எழுந்தது காதல்-
தமிழில் "பத்ரி", "ரோஜாகூட்டம்" உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த நடிகை பூமிகா, தெலுங்கில் தயாரித்து சூப்பர் ஹிட்டான படம் "தகிட தகிட". தமிழில் இப்படம் "துள்ளி எழுந்தது காதல்" என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. இப்படத்தை பிரபல இயக்குநர் கிருஷ்ண வம்சியிடம் உதவியாளராக இருந்த ஸ்ரீஹரி நானு இப்படத்தை இயக்குகிறார். படத்தின் நாயகனாக ராஜாவும், நாயகியாக ஹரிபிரியாவும் நடிக்க, இவர்களுடன் 40 புதுமுகங்கள் நடிக்கவுள்ளனர். கூடவே முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூமிகாவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர்.


உயிருக்கு உயிராய் காதலிக்கும் ஒரு ஜோடி, இன்னொரு காதல் ‌ஜோடிக்கு நேர்ந்த தோல்வியை கண்டு தங்களது பாதையை மாற்றி பயணத்தை திசை மாற்றிக்கொள்கிறது. கடைசியில் அவர்களின் முடிவு என்ன என்பதே கதை. காதல் தோல்வியாலும் அதனால் ஏற்படும் விளைவுகளுமே படத்தின் கதை.


சென்னை, கடற்கரை, ஓ.எம்.ஆர்.சாலை, கோல்கொண்டா கோட்டையில் மட்டுமல்ல இமயமலை வரை போய் பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளனர். சபேஷ் முரளியின் மகன் போபோ சசி இசையமைக்கிறார், கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை ஃபிலிம் ஸ்கூல் நிறுவனம் சார்பில் அஜிதா வேல்முருகன், ராஜகிருஷ்ணகுமார் தயாரிக்கின்றனர்.ஈரோடு ஸ்ரீ லட்சுமியில்  ரிலீஸ்

http://mutantville.com/blog/wp-content/uploads/2011/08/shark-night-3d-poster.jpg


4. Shark Night 3D (2011)-When 7 college friends pack their swim suits for a weekend of fun-in-the-sun activities at their friend Sara's lake house, they think it will be the perfect vacation. But the tables immediately turn when the lead football star, Malik, gets his arm ripped off during a water skiing accident. While the friends are to believe his wound was a freak accident, they soon come to discover that there was a primal attack involving a shark.


 Now while they think that one shark is no problem, they soon come to the realization that 15 species of sharks are lurking in the water, and with no form of boat or transportation, and no signals for phone's, the group of seven now face a fate they would never imagine.ஈரோடு வி எஸ் பி ரிலிஸ்

 http://www.latestandhra.com/gallery/lib-wallpapers91346935104.jpg

5. LIFE IS BEAUTIFUL -Life Is Beautiful is the seventh film by director Sekhar Kammula, who has won Nandi award for every single film he did till date. This films plot is set in a gated residential colony and revolves round the incidents happening in the life of six youngsters. 



Amala Akkineni is coming in front of audiences after a gap of 19 years. Music given by Mickey J Meyer has become very popular in youth from the time its audio got released. The lead actors for the movie are selected by conducting a star hunt. LIB film was sold out for a whopping 18 crores, which reveals that film has potential. 

 http://www.apnatimepass.com/barfi-movie-wallpaper-14.jpg
6.  BARFI -He is cute. He's shrewd. The girls love him. The cops hate him. He can't speak but is always talked about. His naughty antics will make you scream, but he will never listen. Cos he can't!



Barfi is more than ably handled by Anurag Basu. He remarkably immerses you in his world of sounds and verbose silences, recreating Chaplin's antics, stripping two superstars down to basics and sensitively spinning a magical world of unconditional love
http://niaje.com/wp-content/uploads/2012/09/resident-evil-retribution-poster.jpg

7. .resident evil retributionஹாலிவுட்டில் ஒரு படம் "ஹிட்டானால், அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்கள்,தயாராகும். அந்த வகையில், உலக சினிமாவையே கலக்கிய "ரெசிடெண்ட் ஈவில்  படத்தின், ஐந்தாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. அறிவியல் தொழில் நுட்பமும்,அதிரடி ஆக்ஷனும் கலந்த, இந்த படத்தில், மில்லா ஜாவோவிச், ஜோஹன் அரீப், ஜான் ராபர்ட்ஸ், கெவின் டுராண்ட் ஆகியோர் நடித்துள்ளனர்.

.

Kalla Parunthu Tamil Movie Spicy Stills


. 8. கள்ளப்பருந்து - போன வாரமே சென்னையில் ரிலீஸ், கொங்கு மண்டலத்தில் இன்னைக்குத்தான் ரிலீஸ் . பொன்முடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள படம் கள்ளப்பருந்து. இதயன் என்பவர் இயக்கி உள்ளார். அம்சவேல், மஞ்சுதீத், சோனு என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்துக்கு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் இசை அமைத்து இருப்பதாகவும், முக்கிய வேடத்தில் அவர் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள தணிக்கை குழு படத்தைப் பார்த்து விட்டு இது படு ஆபாசமாக இருக்கிறது. இதை திரையிடவே அனுமதிக்க முடியாது என்று சொல்லி சான்றிதழ் தர மறுத்துவிட்டது. மறு ஆய்வுகுழுவிடம் மனுபோட்டடார் தயாரிப்பாளர். மறு ஆய்வுகுழுவும் பார்த்துவிட்டு அலறி அடித்து இது சமூகத்துக்கு ஆகாத படம் குப்பை என்று சொல்லிவிட்டது, உடனே தயாரிப்பாளர் டில்லியில் உள்ள டிரிபியூனலுக்கு போனார்.


அவர்கள் படத்தை பார்த்துவிட்டு ஒரு சில காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு ஏ சான்றிதழ் கொடுத்து படத்தை திரையிட அனுமதி வழங்கிவிட்டனர். அதோடு மட்டுமல்ல இது சமூகத்துக்கு தேவையான கருத்தைக் கொண்டது என்ற சான்றும் வழங்கிவிட்டதாம்.

இது இங்குள்ள தணிக்கை குழுவுக்கும், ம-றுஆய்வு குழுவுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தணிக்கை குழு வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல் இது. "ஒரு பணக்காரருக்கு மூன்று பெண் குழந்தைகள் அவர்களை கடுமையான கட்டுப்பாடுகளுடன் வளர்க்கிறார். வெளியே விட்டால் கெட்டுப்போய்விடுவார்கள் என்று வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து வளர்க்கிறார்.


 மனைவியையும் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை. அந்த வீட்டுக்கு புதிதாக ஒரு டிரைவர் வேலைக்கு வருகிறார். அவர் வீட்டின் நிலையை புரிந்து கொண்டு ஒவ்வொரு பெண்ணாக மயக்கி தன் ஆசைக்க இணங்க வைக்கிறார். கடைசியில் பணக்காரரின் மனைவியையும் தன் ஆசைக்கு இணங்க வைக்கிறாராம். இதை ஒரு நாள் கண்டுபிடிக்கும் பணக்காரர். அனைவரையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார். இதுதான் படத்தோட கதை. இந்தக் கதைக்குள் எத்தனை ஆபாச சீன் இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.



இதை எப்படி அனுமதிக்க முடியும். ஆனால் தாங்கள் அனுமதிக்காத படத்தை டெல்லிக்குச் சென்று அனுமதி வாங்கி வந்துவிடுகிறார்கள். டெல்லியில் என்ன நடக்கிறது என்றே எங்களுக்குத் தெரியவில்லை" என்றார் ஒரு தணிக்கை குழு உறுப்பினர்.ஈரோட்டில் ரிலீஸ் இல்லை, அதனால எத்தனை பேர் தீக்குளிக்கப்போறாங்களோ தெரியலை




டான்மேடி இசையமைக்க,பால்.டபிள்யூ. எஸ்.ஆண்டர்சன் இயக்கியுள்ளார். அம்பரல்லா கார்ப்பரேஷன் என்ற அமைப்பு, பல மர்மங்கள் நிறைந்தது. இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயலுகிறாள் ஆலீஸ். அப்போது, அவளைப் பற்றிய மர்மமான தகவல்களும் வெளியாகின்றன. அம்ப்ரல்லா கார்ப்பரேஷனுக்கும், ஆலிசுக்கும் என்ன தொடர்பு என்பதை, திகிலோடு சொல்கிறது, இந்த படம். "3டி தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ள இந்த ஹாலிவுட்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, போன்ற இந்திய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.ஈரோடு அன்னபூரணி, ஸ்டாரில் ரிலீஸ்

1 comments:

Unknown said...

which time can I expect sundara opandian review?

Thanks
Senthil, Doha