Showing posts with label ஜூவி. Show all posts
Showing posts with label ஜூவி. Show all posts

Wednesday, April 17, 2013

பிரபாகரனை ப.சிதம்பரம் சந்தித்தாரா? - லாயர் அதிரடி பேட்டி

லங்கைத் தமிழர்கள் பிரச்னையில் தங்களுக்கும் ஈடுபாடு உண்டு என்பதைக் காட்டிக் கொள்ள படாதபாடுபடுகிறது காங்கிரஸ். 'கோடம்பாக்கத்தில் இருந்த பிரபா​கரனை நானே கார் ஓட்டிச் சென்று சந்தித்தேன்’ என்று, ப.சிதம்பரம் ஒரு கூட்டத்தில் பேசினார். அந்த நாளில் இருந்து இன்றுவரை இலங்கைப் பிரச்னைகளில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அது​குறித்து விரிவாகப் பதில் அளிக்கிறார். 

''1984-ம் ஆண்டு, கோடம்பாக்கத்தில் தங்கி இருந்த பிரபாகரன், பாலசிங்கத்தை சந்தித்து இலங்கை பிரச்னையில் தீர்வு ஏற்படுத்த முயன்றதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளாரே?''

''பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்ப​வத்தை முன்னிட்டு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், ராகவன், பிளாட் தலைவர் முகுந்தன் ஆகியோர் 1983-ல் கைது​செய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். பிரபாகரனுக்காக மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலையும் நானும் ஆஜராகி பெயில் வாங்கிக் கொடுத்தோம். 

முகுந்தன் சென்னையிலும், பிரபாகரன் மதுரையிலும் தங்கி இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்பிறகு, திருவான்மியூர் காமராஜர் நகரில் சிறிது காலம் பிரபாகரன் தங்கியிருந்தார். பின்னர், அடையாறு இந்திரா நகருக்குக் குடிபெயர்ந்தார்.

1983 இறுதியில் பாலசிங்கம் சென்னை வந்தார். நானும் பேபி சுப்பிரமணியன் என்ற இளங்குமரனும் அவரை இரண்டு வாரங்கள் நியூ உட்லண்ட்ஸ் ஓட்ட​லில் தங்கவைத்தோம். அதன்பிறகு, பெசன்ட்நகர் வேளாங்கன்னி மாதா கோயில் அருகிலுள்ள வீட்டில் பாலசிங்கம் தங்கி இருந்தார். பின் அவர் அடையாறு இந்திரா நகரில் தங்கினார். ஆக, 83-க்குப் பிறகு அவர்கள் கோடம்பாக்கத்தில் தங்கவே இல்லை. 

பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோர் கோடம்பாக்கத்தில் தங்கி இருந்தபோது 1984-ல் சந்தித்து, இலங்கை பிரச்னை குறித்து பேசியதாக நிதி அமைச்சர் சிதம்பரம் கூறுவது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. 80 தொடக்கத்தில் இருந்து பாண்டி பஜார் சம்பவம் வரை மயிலாப்பூர் சாலைத் தெருவில் நெடுமாறனின் பழைய வீட்டில் என்னுடன் பிரபாகரன் தங்கியிருந்தார்.''


''தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்து வீணாகப் பிரச்னையை உருவாக்குவதாக இலங்கைத் தமிழ் மீனவர்கள் புகார் தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசிவருகிறாரே?''

''தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மத்திய அமைச்சர் நாராயணசாமி, இலங்​கைக்கு வக்காலத்து வாங்குவது தமிழக மீனவர்கள் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போன்றது. அவர், இந்திய அமைச்சரா? இலங்கை அமைச்சரா?

1974-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த போது, தலைவர் கலைஞர் அதைக் கடுமையாக எதிர்த்தார். கலைஞர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கலந்துகொண்ட அரங்கநாயகம் அரசுத் தீர்மானத்துக்கு ஆதரவாக இல்லை. பிரதமர் இந்திரா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங்கிடம், கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாது என்றார் கலைஞர். நாடாளுமன்றத்திலும் தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. அதே கோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டன. 

ஆனாலும் கச்சத்தீவை மத்திய காங்கிரஸ் அரசு கொடுத்தது. மீன் வலைகளை உலர்த்தவும் அந்தோணியார் கோயிலுக்குச் செல்ல​வும் மீனவர்கள் ஓய்வு எடுக்கவுமான உரிமை, கலைஞரின் போராட்டத்தால் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. 

ஆனால், 1976-ம் ஆண்டு நெருக்கடி நிலையில் அந்த மூன்று ஷரத்துக்களையும் காங்கிரஸ் அரசு விட்டுக் கொடுத்து விட்டது. அப்போது, தி.மு.க. ஆட்சியில் இல்லை. கச்சத்தீவை இழந்ததால்​தான் தமிழக மீனவர்கள் இப்போது இத்தனை கொடுமைகளை அனுபவிக்கின்றனர். இதையெல்லாம் தெரிந்துகொண்டு அமைச்சர் நாராயணசாமி பேச வேண்டும்.''

''இலங்கை பிரச்னையில் இந்திய ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்று, இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே குற்றம்சாட்டியுள்ளாரே?''

''இந்தியா இல்லை என்றால் இலங்கை இல்லை. சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற பிரதமர் நேரு அமைச்சரவை 1963-ல் ஒப்புதல் அளித்தது. 'சேதுத்திட்டம் நிறைவேறினால் இலங்கையின் பொருளாதாரமே சீர்குலைந்துவிடும்’ என்று, இலங்கை ஆட்சியாளர்கள் மன்றாடினர். 

அண்டை நாடு என்ற ரீதியில் அந்தத் திட்டத்தை நேரு கைவிட்டார். சாஸ்திரி- ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர். அந்த நடவடிக்கையே தவறு என்று கண்டித்தோம். 

ஆனாலும், இலங்கையின் பொருளாதார சிக்கலைத் தவிர்க்க அந்த முடிவை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்திரா காந்தி காலத்தில் இருந்து தொடர்ந்து இன்றளவும் உதவுகிறோம்.
இந்தியாவின் செயல்பாட்டைக் குறை சொல்ல சிங்கள ஆட்சியாளர்களுக்கு அருகதையே கிடையாது.''
- எஸ்.முத்துகிருஷ்ணன்

 நன்றி - ஜூ.வி.

Wednesday, April 10, 2013

தமிழருவி மணியனுக்கு டாக்டர் ராமதாஸின் பதில்

கைசால் நண்பர் தமிழருவிமணியன் அவர்களுக்கு, 

வணக்கம். சென்னையில் கடந்த 02.03.2013 அன்று சர்வோதய அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட அகில இந்திய மது ஒழிப்பு மாநாட்டில், நாம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தோம். மதுவிலக்கு என்ற கோரிக்​கையை வலியுறுத்திப் பாட்டாளி மக்கள் கட்சி எத்தகைய போராட்​டங்களை நடத்தியிருக்கிறது என்பது குறித்த எனது நிலைப்பாட்டை உங்களி​டம் விளக்கினேன். நீங்களும் அந்த முயற்சி​களைப் பாராட்டியதுடன் தங்களது உரையிலும் அதைப்பற்றி குறிப்பிட்​டீர்கள். அந்த வகையில் மதுவிலக்கு கொள்கையில் நமக்குள் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுவிட்டதாகவே உணர்கிறேன்.

அதே நேரத்தில், பிப்ரவரி 27-ம் தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழில் 'காதலை எதிர்ப்பவர்களைத் தூக்கி எறியுங்கள்’ என்ற தலைப்பில் தங்களது தலைமையிலான காந்திய மக்கள் இயக்கத்​தின் சாதி, மத நல்லிணக்க மாநாடு குறித்த செய்தி வெளியாகியிருந்தது. அந்த மாநாட்டில் ''சாதிகள் சாகாத வரை, தமிழ்ச் சாதி மேன்மையுறாது. அதனால், முதலில் சாதியைச் சாகடியுங்கள். காதல் கலப்புத் திருமணங்களை ஆதரியுங்கள். காதலை எதிர்ப்பவர்கள் யாராக இருந்​தாலும் தூக்கி எறியுங்கள். உடற்கூறு மருத்துவரான ராமதாஸ் எப்போது காதலை ஆய்வுசெய்யும் மருத்துவராக மாறினார் எனத் தெரியவில்லை. நாடகக் காதல், அந்தக் காதல், இந்தக் காதல் என்றெல்லாம் ஆய்வறிக்கை வாசிக்கிறார். நான் ஊருக்கு உபதேசிப்பவன் அல்ல. என் வீட்டில் எனது மகன் சாதி கலப்புத் திருமணம் செய்தவர். என் மகள் இன்னும் ஒரு படி மேலே போய் மதக் கலப்புத் திருமணம்செய்தவர்'' என்றெல்லாம் பேசியிருக்கிறீர்கள். இந்த விஷயத்​தில் எங்கள் தரப்பு நியாயத்தை உங்களுக்கு விளக்கி கருத்து ஒற்றுமையை ஏற்படுத்துவதே இந்தக் கடிதத்தின் நோக்கம்.
நாடகக் காதல் திருமணம் தொடர்​பான எங்களின் நிலைப்பாட்டை, என்னை எதிர்ப்பதற்கான வாய்ப்​பாக சிலர் விமர்சிப்பதைப் புரிந்து​கொள்ள முடிகிறது. ஆனால், நீங்களும் எங்கள் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்​ளாததுதான் எங்களுக்கு வியப்பளிக்கிறது. நீங்கள் பேசியதைப் போல காதலை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. சென்னையில் நடைபெற்ற அனைத்து சமுதாயத் தலைவர்கள் கூட்டத்திலும், அதன்பின் மாவட்ட அளவில் நடத்தப்​பட்ட கூட்டங்களிலும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.
'நாகரிக சமுதாயத்தில் காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்புத் திருமணங்களுக்கோ தடை போடுவது சரியானதாக இருக்காது. பள்ளி, கல்லூரி மாணவிகளின் படிப்பைக் கெடுக்காமல் காதல், நாடகம், கட்டப்பஞ்சாயத்து, பணப் பறிப்பு இல்லாமல், சாதி ஒழிப்பு எனும் போலி வேடம் போடாமல் கல்வி, வேலை, வருமானத்துக்கு முன்னுரிமை தந்து, 21 வயதுக்கு மேல் நடக்கும் காதல் திருமணங்களை நாங்கள் எதிர்க்கவில்லை’ என்று அதில் குறிப்பிட்டுள்ளோம். இத்தகைய காதல்களை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. பல காதல் - கலப்புத் திருமணங்களை நானே முன்னின்று நடத்திவைத்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
படித்து முடித்து வேலைக்குச் சென்று பெண்​ணுக்கு 21 வயது முடிவடைந்த பின்னர் நடக்கும் காதல் திருமணங்களை அனுமதிக்கலாம் என்ற எங்களின் நிலைப்பாட்டை பல்வேறு தரப்பி​னரும் வரவேற்கின்றனர். எங்களுக்கு முன்பே 2011-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இதே கருத்து தெரிவிக்​கப்பட்டிருக்கிறது. 18 வயதுகூட நிறைவடையாத பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம்செய்தது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.பக்தவத்சலா, கே.கோவிந்தராஜுலு ஆகியோர் அடங்கிய அமர்வு சொன்ன கருத்தை நான் நினைவு​படுத்துகிறேன். 'மைனருக்கு 21 வயது நிறை​வடையும்போதுதான் அவர் மேஜராகிறாரே தவிர, அதற்கு முன்பாக இல்லை. எனவே, எங்களின் கருத்துப்படி, 21 வயதுக்குட்பட்ட சிறுமிகளால் தாங்கள் காதலிக்கும் ஆண் தங்களுக்கு ஏற்ற துணையா என்பதைப் பகுத்தறிந்து தீர்மானிக்க முடியாது. ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து காதல்வயப்பட்டு, திருமணம் முடித்து, அந்த முடிவுக்காக பின்னர்தான் வருத்தப்படுகிறார்கள் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். எனவே, 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும்போது, அந்தத் திருமணத்துக்கு அவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையைச் சேர்க்கவேண்டும் - இல்லாவிட்டால், அத்தகைய திருமணங்கள் செல்லாதவை அல்லது ரத்துசெய்யத் தகுந்தவை என அறிவிக்கவேண்டும் என்று அரசுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்’ என்று தீர்ப்பு அளித்தனர். இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
உங்கள் குழந்தைகள் சாதி கலப்புக் காதல் திருமணம் மற்றும் மதக் கலப்புக் காதல் திருமணம் செய்துகொண்டதைப் பெருமை​யுடன் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி... நீங்கள் கற்றறிந்தவர். உங்களைப் போலவே உங்கள் குழந்தைகளும் நன்றாகக் கற்றறிந்து இருப்பார்கள். அவர்களைப் போலவே அவர்கள் தேர்வு செய்துகொண்ட துணைகளும் கற்றறிந்து வாழ்க்கையை வெற்றிகரமாக வாழத் தகுதியான நிலையில் இருப்பவர்கள். இத்தகைய திருமணங்களை நீங்களே எதிர்த்திருந்தாலும்கூட நானே செய்துவைத்திருப்பேன். ஆனால், இப்போது நடக்கும் காதல் நாடகத் திருமணங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
'ஒரு லட்சம் சாதி இந்துப் பெண்களின் வயிற்றி​லாவது தலித்துகளின் கரு வளர வேண்டும். அப்படி வளர்ந்தால்தான் சாதி ஒழியும்’ என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேசிவருவது உங்களுக்குத் தெரியுமா? 14 முதல் 18 வயது வரையுள்ள (டீன் ஏஜ்) அப்பாவிப் பெண்களுக்கு காதல் வலை (காம வலை) விரிப்பதையே சிலர் ஒரு தொழிலாக வைத்​திருப்பதும், அவர்களால் ஏராளமான பெண்கள் வாழ்க்கை இழந்ததும் உங்களுக்குத் தெரியுமா? வாழ்க்கை இழந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இளம்பெண்களும், அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும் தற்கொலை செய்துகொண்டது உங்களுக்குத் தெரியுமா? இது தொடர்பான பட்டியல்களை நீங்கள் கோரும்பட்சத்தில், அனுப்பிவைக்கத் தயாராக இருக்கிறேன்.
வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பொரு​ளாதார அடிப்படையில் வசதியாக இருக்கும் குடும்பத்துப் பெண்களுக்கு வலைவிரிப்பது, அவர்கள் காதல் வலையில் விழுந்த பின் கடத்திச் சென்று பெண்ணை ஒப்படைக்க லட்சம், கோடிகளில் பேரம் பேசுவது, ஏழைப் பெண்களாக இருந்​தால் திருமணம் செய்துகொண்ட சில மாதங்களில், வாழாவெட்டியாகப் பெண்ணை தாய் வீட்டுக்குத் திருப்பி அனுப்பிவைப்பது போன்றவை திட்டமிட்டே நடத்தப்படுகின்றன. இவ்வாறு நடப்​பதை காதல் நாடகங்கள் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? இதைச் சொல்ல என்னைப் போன்ற மருத்துவர்களே கூடத் தேவை இல்லை. சாதாரண மனிதர்களே போதும். நீங்கள் சொல்வதைப் போல காதல் ஆய்வு மருத்துவர்தான் வேண்டும் என்று நான் கருதவில்லை. இத்தகைய சூழலில் நீங்கள் பெண்ணைப் பெற்றவராக இருந்தால், இதனால் சாதி ஒழிந்துவிடும் என்ற எண்ணத்தில் திருமணத்துக்கு ஒப்புக்கொள்வீர்களா?

காதல் - கலப்புத் திருமணங்கள்தான் சாதியை ஒழிக்கும் ஆயுதங்கள் என்று கூறியிருக்கிறீர்கள். சாதிகள் ஒழிய வேண்டும் என்பதில் தமிழகத்தில் உள்ள அனைவரையும்விட அதிக அக்கறை கொண்​டவன் நான். எனது கீழ்க்கண்ட கேள்விகளுக்கு மட்டும் விடையளியுங்கள் (உங்களை சங்கடப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கேள்விகளைக் கேட்கவில்லை. யதார்த்தத்தை உங்களுக்கு உணர்த்த​வேண்டும் என்பதற்காக நட்பின் அடிப்படையில்தான் இதைக் கேட்கிறேன்.)

1. இந்திய விடுதலைக்குப் பிந்தைய 65 ஆண்டுகளில் நடந்த காதல் திருமணங்களால் சாதியற்ற சமுதாயம் எந்த அளவுக்கு உருவாகியிருக்கிறது?

2. காதல் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்​களில் எத்தனை பேர் தங்களின் குழந்தைகளை சாதியற்றவர்களாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்?

3.உங்களது மகனும் மகளும் தங்களின் குழந்தைகளை எத்தகையவர்களாகப் பதிவு​செய்திருக்​கிறார்கள்?

இந்த மூன்று கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்​களே காதல் - கலப்புத் திருமணங்களால் சமுதாயத்​தில் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடவில்லை என்பதை தெளிவுபடுத்தும். அதே நேரத்தில் காதல் நாடகத் திருமணங்கள் சமுதாய நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றன. திருக்குறளில் வலி(மை)யறிதல் அதிகாரத்தை நன்கு கற்றறிந்த நீங்கள், காதல் நாடகத் திருமணங்களால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை அறிந்திருப்பீர்களேயானால், இப்படி ஒரு விமர்சனத்தை முன்வைத்திருக்க மாட்டீர்கள்.

தமிழகத்தில் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதில், யாருக்கும் நான் இரண்டாமவன் அல்ல. அனைத்து சமுதாய நல்லிணக்க மாநாடு, ஒரு தாய் மக்கள் மாநாடு ஆகியவற்றை நான் நடத்தினேன். இதற்கெல்லாம் மேலாக, 1998-ம் ஆண்டில் 14 மாவட்டங்களில் சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினேன். மாநாடுகளில் மதத் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், ஆன்மிகத் தலைவர்கள், காந்தியவாதிகள் ஆகியோரை இந்த மாநாடுகளில் பங்கேற்கச்செய்து சமய, சமுதாய நல்லிணக்கக் கருத்துகளைப் பரப்பச் செய்தேன். தமிழகத்திலேயே அம்பேத்கர் சிலை​களை அதிக அளவில் நான் திறந்து வைத்து இருப்பதையும் அரசியல் அறிந்தவர் என்ற வகையில் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை இவற்றை நீங்கள் அறிந்திராவிட்டால், இவற்றையெல்லாம் அறிய இந்தக் கடிதம் உங்களுக்கு உதவும்.
மாற்றங்கள் ஏற்படுத்தும் மகத்தான எந்திரம் காலம்​தான் என்பதை நான் அறிவேன். காலப்போக்கில் உங்களின் எண்ணத்திலும் மாற்றம் ஏற்பட்டு யதார்த்தத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் அன்புள்ள
மருத்துவர் ச.ராமதாஸ்

நன்றி - ஜூ.வி.

Wednesday, June 27, 2012

ஜூவிக்கு சுளுக்கு, ஜெ கையில் சவுக்கு - பின்னணி என்ன?

http://www.vikatan.com/news/images/23.jpg 

சென்னை: முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் இதழ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,


கடந்த 24 ம் தேதி வெளியான ஜூனியர் விகடன் இதழில் முதல்வருக்கு எதிராக "யாக பூஜையில் போயஸ் கார்டன், அதிகார பயம், பரிகார நிஜம்" என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது. முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உள் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது. எனவே இந்த செய்தியை வெளியிட்ட ஜூனியர் விகடன் ஆசிரியர் கண்ணன், வெளியீட்டாளர் அசோகன், மாதவன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


ஏற்கனவே, முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி நக்கீரன் இதழ் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது ஜூனியர் விகடன் இதழும் சேர்ந்துள்ளது.


http://www.envazhi.com/wp-content/uploads/2011/06/jaya-news.jpg

சர்ச்சைக்கு உள்ளான அந்த கட்டுரை 

மிஸ்டர் கழுகு: யாகப் புகையில் போயஸ் கார்டன்!

கழுகாருக்கு மேளதாளம் வைக்காத குறையாக வரவேற்பு கொடுத்தோம்! 
புரியாதவர் போலவே நம்முடைய அலுவலகத்துக்குள் நுழைந்தார். லட்டைக் கிள்ளி கொஞ்சமாய் வாயில் போட்டுக்​கொண்டவரிடம், ''பிரணாப் பராக்... என்று நீர் சொன்னீர். அதுதான் நடந்தது!'' என்றோம்.


''அதிகாரப் பட்சிகளுக்குள் அடிக்கடி பிரணாப் முகர்ஜி பெயர்​தான் இடம் பெற்றது. அதை வைத்துத்தான் சொன்னேன். பிரணாப்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று, வெள்ளிக்​கிழமை மதியம்தான் சோனியா முடிவு எடுத்தார். இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு எத்தனையோ யோசனைகள். ஆனால், அத்தனையையும் மத்தியப் புலனாய்வுத் துறை கொடுத்த ஒற்றை வரி லாஜிக் அறிக்கை தகர்த்து விட்டதாம்!''


''அது என்ன?''


''ஜனாதிபதி பதவிக்கு யார் தகுதிஆனவர் என்று சோனியா கேட்ட அறிக்கைக்கு, எப்போதோ மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்து விட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை மாலை ஒரு தகவல் தந்தார்களாம். 'பிரணாப் வேட்பாளராக நியமிக்கப்​பட்டால், காங்கிரஸ் வலுவான போட்டியை எதிர்கொள்ளத் தேவை இல்லை. 


அவரை ஆதரிக்க எதிர்க்கூட்டணியிலேயே பல கட்சிகள் தயாராக இருக்கின்றன’ என்றதாம் அறிக்கை. 'வெற்றி பெறுவதற்கான பலம் இருந்தாலும் வேட்பாளர் ஸ்ட்ராங் ஆக இருக்க வேண்டும்’ என்பதில் உறுதியாக இருந்த சோனியா, இறுதியாக பிரணாப் முகர்ஜியை ஓகே செய்தார்.


 இந்தத் தகவல் கிடைத்ததும், 'ஆண்டவனின் ஆசீர்வாதம்’ என்றாராம் பிரணாப்!''


''சோனியாவின் ஆசீர்வாதம் என்றுதானே சொல்ல வேண்டும்?''


''கடந்த மூன்று மாதங்களாக கோயில் கோயிலாக வலம் வந்தார்கள் பிரணாபின் ஆட்கள். 'எதிர்ப்புகளை உடைக்க காளி பூஜை’ என்று உமது டெல்லி நிருபர் எழுதி கடந்த மாதமே ஒரு கட்டுரை நீர் வெளியிட்டு இருந்​தீர்


. 'இப்போது ஜோதிடருடன் சேர்ந்து மகாகாளியையும் நம்பத் தொடங்கி விட்டார் பிரணாப். எதிர்ப்புகளை நசுக்குவதற்காக தன்​னுடைய வீட்டிலேயே காளி பூஜையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. நள்ளிரவில் நடக்கும் இந்தக் காளி பூஜை, எதிர்ப்புகளை எல்லாம் உடைத்துத் தள்ளுமாம்’ என்று உமது நிருபர் எழுதி இருந்தார். அந்த அளவுக்கு பூஜையில் மூழ்கினார் பிரணாப்.

 http://rajkanss.files.wordpress.com/2008/11/pg2a.jpg

கும்பகோணம் வந்து சூரியனார் கோயிலுக்கு ஒன்பது பசு மாடுகளைத் தானம் செய்து, அதற்கான சிறப்பு பூஜைகள் செய்து உள்ளார்கள் பிரணாபின் ஆட்கள். பூரி ஜெகந்நாதர் ஆலயத்திலும் பிரணாபின் வெற்றிக்காக சிறப்பு பூஜை நடந்துள்ளது. அவருடைய குடும்பத்தின் ஆஸ்தான புரோகிதர் என்று சொல்லப்​படும் ராஜேஸ் தைதபதி என்பவர்தான் இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளார். 


மூன்று மாதங்களுக்கு முன்பே அந்த ஆலயத்தில் பூஜை செய்யப்பட்ட வஸ்திரங்கள், பிரணாப் வீட்டு பூஜை அறையையும் அலங்கரித்து உள்ளன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தன்னுடைய நம்பிக்கை​யின் அடிப்படையில் ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக்​கொண்டாராம் பிரணாப்!''


''அடுத்த நிதி அமைச்சர்?''


''பலர் குறி வைக்கிறார்கள். ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. ஊரகத் தொழில் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்ராம் ரமேஷ், பொருளாதாரம் படித்தவர். பிரணாப் முகர்ஜியோடு பணியாற்றி இருக்கிறார். திட்டக் குழு உறுப்பினர்போன்ற தகுதிகள் உண்டு. அதனால் அடுத்த நிதிஅமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்தான் என்பது சோனியாவின் சாய்ஸ்.''


''தி.மு.க-வுக்குப் பிடிக்காத ஆள் ஆச்சே?''


''ஆமாம். 2009-ல் ஜெய்ராம் ரமேஷ் மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, கேரளா புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்கு அனுமதி அளித்தார். இதைக் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். 'ஜெய்ராம் ரமேஷ§க்குக் கண்டனம் தெரிவித்து மதுரையில் நவம்பர் 1-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும்’ என அப்போது தி.மு.க. அறிவித்தது.


 கேரள அணை தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில் அனுப்பாததையும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகாராகத் தெரிவித்தார் கருணாநிதி. ஜெய்ராம் ரமேஷ§க்கு எதிரான போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், போராட்டத்தைக் கைவிட்டார். அப்படிப்பட்டவரை நிதி அமைச்சராக்க தி.மு.க. நிச்சயம் எதிர்க்கும்!''


''ப.சிதம்பரம் நிதிஅமைச்சர் ஆவதை தி.மு.க. விரும்புமே?''


''ஆமாம்! பிரணாப் முகர்ஜியை வேட்​பாளராக அறிவிக்கும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலுவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமா வளவனும் கலந்துகொண்டார்கள். வேட்பாளர் பெயர் அறிவிப்புக்கே பொக்கே, சால்வைகளை சோனியாவுக்கு இவர்கள் வழங்கியதைப் பார்த்து வட இந்தியத் தலைவர்கள் முகம் சுளித்தார்கள். 'பிரணாப் முகர்ஜி நாடாளுமன்ற அவை முன்னவராகவும் இருக்கிறார். காலியாகும் அந்தப் பதவியை சோனியாவுக்கு வழங்க வேண்டும்’ என்று காங்கிரஸ்காரர்களே சொல்லாதபோது, அவர்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக மாறி டி.ஆர். பாலு பேட்டி கொடுத்ததையும் டெல்லிப் பத்திரிகையாளர்கள் மௌனச் சிரிப்புடன் குறித்துக்கொண்டார்கள்!''

http://www.envazhi.com/wp-content/uploads/2012/02/vijayakanth_jayalalitha_59.jpg


'இப்படி பாலு ஐஸ் வைப்பதற்குக் காரணம் கேபினெட் மீது அவருக்கு இருக்கும் கண்தான்.’ என்கிறார்கள்!'' என்றவர், டெல்லிச் செய்திகளில் இருந்து தமிழக அரசியலுக்குள் புகுந்தார்.


''புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே, அ.தி.மு.க-வுக்கு வெற்றி கிடைக்கும். விஜயகாந்த்தும் நிறைய வாக்குகள் வாங்குவார். இது தொடர்பாக தமிழக உளவுத் துறை போலீஸார், முதல்வருக்கு அனுப்பி உள்ள ரிப்போர்ட்டையும் கடந்த இதழில் சொல்லி இருந்தேன். 'நாமதான் ஜெயிப்போம். அப்புறமா எதுக்கு செலவு செய்யணும்?’ என்ற மிதப்பில் பலரும் பணத்தைப் பதுக்கி​ விட்டதையும் சொன்னேன்.


தேர்தல் முடிவு வெளியான வெள்ளிக்கிழமை, அப்செட் ஆனார் முதல்வர். தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் இருந்தவர், அதைப் பாதியில் முடித்துவிட்டு, கார்டன் கிளம்​பினார். வழக்கம்போல அம்மாவை வழி அனுப்ப போர்டிகோவில் காத்திருந்தார்கள் அமைச்சர்கள். சீரியஸான முகத்துடன் அவர்களைப் பார்த்து விட்டுக் கிளம்பினார். மறுநாள் காலை கார்டனில் இருந்து அமைச்சர்களுக்கு அழைப்பு போனது!''


''அனல் பறந்ததா?''


''11.30-க்கு வரச்சொல்லிவிட்டு, 1.30-க்குத்தான் அவர்களைச் சந்தித்தார். மொத்தம் 14 அமைச்சர்கள் போனார்களாம். பத்தே நிமிடங்கள்தான் பேசினாராம் முதல்வர்... அத்தனையும் அனலான வார்த்தைகள். தே.மு.தி.க. டெபாசிட் வாங்கியது எப்படி என்பதுதான் ஜெயலலிதாவின் கேள்வி.


 'ஜெயிச்சிடுவோம்கிற மிதப்பிலேயே இருந்திருக்கீங்க’

 என்றாராம் முதல்வர். '


நகர்ப் புறங்களில் நமக்கு ஓட்டு விழவில்லை. முஸ்லிம் வேட்பாளர் என்பதால் முஸ்லிம் வாக்குகள் அவருக்கு முழுமையாகச் சென்றுவிட்டன’ என்று மந்திரிகள் சில சமாதானங்களைச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் எதையும் முதல்வர் ஏற்கவில்லை!''


''ஆனாலும், 1006 திருமணங்களை சந்தோஷமாகத்​தானே முதல்வர் நடத்தி வைத்தார்?''


'திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நடக்கும் திருமண விழாவை தனது முக்கியமான பரிகாரமாகவே ஜெயலலிதா செய்து முடித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்போது, சிலர் இதற்குத் தடை போடும் காரியத்தையும் பார்த்தார்கள். 


'திருமணம் நடப்பதற்காகக் குறிக்கப்பட்டுள்ள திருமண நாள் முழுஅமாவாசை நாள். எனவே இந்தத் தேதியில் திருமணம் செய்வது கெடுதல்’ என்று சிலர் கடிதம் எழுதி அனுப்பவும் ஆரம்பித்தார்கள். இந்து அறநிலையத் துறையில் இருக்கும் அதிகாரி ஒருவரைக் குறிவைத்து, அவருக்குப் பிடிக்காத கோஷ்டியினர் செய்த வேலைபோல அது இருந்தது. 


19-ம் தேதி செவ்வாய்க்கிழமைதான் அமாவாசை. அதன்படி பார்த்தால் 18-ம் தேதி இரவு 7 மணியில் இருந்துதான் போதாயன அமாவாசை தொடங்கும். ஆனால், முதல்வர் ஏற்பாடு செய்த திருமணங்கள், காலை 9.30-க்கு நடந்து விட்டன. எனவே, கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள பீதி இதற்குப் பொருந்தாது. 6, 9, 15, 18, 24, 27 ஆகிய தேதிகளில்தான் முக்கியமான தனது நடவடிக்கைகளை முதல்வர் வைத்துக்கொள்வார் என்பதால் இந்தத் தேதி குறிக்கப்பட்டதாம்!''


''அப்படியா?''


''19-ம் தேதி அன்று போயஸ் கார்டன் முழுக்க யாகப் புகை வீச இருக்கிறது. அதே நேரத்தில் பையனூரிலும் யாகம் நடக்க இருக்கிறது. சுமார் 11 மணி நேரம் நடக்கு​மாம் இந்த யாகம். 'ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது, உடல் நலமும் சிறப்பாக இருக்க வேண்டும், எதிரிகளின் பலம் குறைய வேண்டும்... என்பதற்காக இந்த யாகம் நடத்தப்பட உள்ளது’ என்கிறார்கள்.

http://www.envazhi.com/wp-content/uploads/2011/12/jaya-sasi-21.jpg


 இதற்கென மாயவரத்தில் இருந்து பிரத்யேகமான புரோகிதர்கள் சென்னை வந்து நான்கைந்து நாட்களாக டேரா போட்டு உள்ளனர். இவை முடிந்த பிறகுதான் கொடநாடு பயணம் குறித்த திட்டங்களை வகுக்க இருக்கிறார்.''


''கொடநாடு பயணம் இருக்காது என்றும் சொன்னார்களே?''


''இறுதி முடிவுக்கு இன்னும் முதல்வர் வரவில்லை. அப்படிச் சென்றால், குறைந்தது இரண்டு மாதங்கள் வரை அவர் அங்கு இருக்கலாம் என்றும் சொல்​கிறார்கள்!''


''சசிகலாவை அழைத்துச் செல்வாரா?''


''கேட்பீர் என்று நினைத்தேன். இவர் செல்லும்போது அவர் செல்ல மாட்டார். அப்புறம் தனியாகப் போகலாம்!''


''ஓ!'' பெங்களூரு கோர்ட் மேட்டரை ஓப்பன் செய்தார் கழுகார்... ''சசிகலாவுக்கு தனி நீதிமன்றம் மீண்டும் கிடுக்கிப்பிடி போட்டு உள்ளது. கடந்த 6-ம் தேதி சசிகலா கோர்ட்டுக்கு வரவில்லை. கண்டித்தார் நீதிபதி. '18-ம் தேதி நிச்சயம் வருவோம்’ என்றார்கள். அன்றும் வராவிட்டால் நீதிபதிக்கு கோபம் பொங்கத்தானே செய்யும்!''


''தைரியம்தான்!''


''18-ம் தேதி காலை 11 மணிக்கு, 'சசிகலாவிடம் மிச்சம் இருக்கும் கேள்விகளுக்குப் பதில்களைப் பிடுங்க வேண்டும்’ என்ற வேகத்தில் வந்தார் நீதிபதி மல்லிகார்ஜுனையா. வந்ததும் குற்றவாளிக் கூண்டை நோட்டமிட்டவருக்கு ஷாக். சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரையும் காணவில்லை


. கடிகாரத்தைப் பார்த்தவர், 'ஒருவேளை தாமதமாக வருவார்கள்’ என்று நினைத்தார். ஆனால், வழக்கம்போல மூவரின் வக்கீல்களும் மனுவை நீட்டினார்கள். 'என்ன இது? கொஞ்சம்கூட சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணம் காட்டி இழுத்தடிக்கிறீர்கள்?’ என்று சீறினார் நீதிபதி.  


முதலில் எழுந்த சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், 16 பக்க அறிக்கையை ஏற்ற இறக்கங்களோடு வாசித்தார். அதில் ஆறு பக்க மருத்துவச் சான்றிதழும் இருந்தது. '63 வயதான சசிகலா சட்டத்தை எப்படி எல்லாம் மதித்து இருக்கிறார். மதிக்கப்போகிறார்’ என்பதை 10 நிமிடங்கள் விலாவாரியாக‌ எடுத்துச் சொன்னவர், '1991-ம் ஆண்டு சசிகலா கார் விபத்தில் சிக்கினார்.அப்போது இருந்து அவரது இடது கண்ணில் பிரச்னை இருக்கிறது. 


http://www.envazhi.com/wp-content/uploads/2012/05/jaya-vkanth.jpg

கடந்த 22 வருடங்களாக கண்ணில் 'குளுக்கோமா’ கோளாறு இருப்பதால் கடும் அவதிப்பட்டு வருகிறார். கண் புரையும் இருக்கிறது. இதைத் தொடர்ந்தே கடந்த மே 26-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள உதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. நீண்ட தூரம் பயணம் செய்யக் கூடாது..


. நீண்ட ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார்’ என்று சொன்னார் வக்கீல். இவர் வாதாடிக்கொண்டு இருக்கும்போது, வக்கீல் செந்திலும் ஜெயலலிதா வக்கீல் பி.குமாரும் அவருக்கு பாயின்ட்ஸ் எடுத்துக் கொடுத்தனர். அதனால் டென்ஷன் ஆன‌ நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா, 'இது கோர்ட்டா? இல்லை மார்க்கெட்டா?’ என்று சத்தம் போட, செந்தில் எழுந்து மன்னிப்பு கோரினார்.


மேலும் டென்ஷனான நீதிபதி மல்லிகார்ஜுனையா, 'தமிழ்நாடு சி.எம். ஆக இருக்கிற ஜெயலலிதாவே கோர்ட்டின் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டார். சசிகலா கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் இழுத்தடிக்கிறார். உலகில் வியாதி இல்லாத மனிதர்க‌ளே இல்லை. அதேபோன்று எல்லா குற்றவாளிகளுக்கும் எதாவது ஒரு வியாதி இருக்கத்தான் செய்கிறது. 


அதற்காக கோர்ட்டில் ஆஜராகாமலா இருக்கிறார்கள்? பிடிவாரன்ட் பிறப்பித்தால் கோர்ட்டைத் தேடி வருவீர்கள்தானே?’ என சீறிவிட்டு, சுதாகரன் வராத காரணத்தைக் கேட்டார். அப்போது எழுந்த வக்கீல் சரவணகுமார், 'சுதாகரனுக்கு கடுமையான முதுகுவலி. அதனால் பயணம் செய்ய முடிய​வில்லை’ என்றார். அதன் பிறகு இளவரசியின் வக்கீல் அசோகன் எழுந்து, 'இளவரசிக்கு சர்க்கரை நோய் அதிகமாக இருக்கிறது. தொடர் வாந்தி வேறு. அதனால் பயணம் செய்ய முடியவில்லை’ எனப் பள்ளிக்கூடத்துக்கு வராத பிள்ளைகள்போல் வரிசையாகக் காரணங்களை அடுக் கினார்கள்!''


''ஓஹோ!''


''நீதிபதி மல்லிகார்ஜுனையா கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். 'அதெப்படி மூன்று பேரும் ஒரே காரணத்தை மாறிமாறிச் சொல்லி கோர்ட்டின் நேரத்தை வீணாக்குகிறீர்கள். ஒவ்​வொரு முறை தேதி கேட்பதும், ஆஜராகாமல் இழுத்தடிப்பதுமே வாடிக்கையாகி விட்டது.


 உலகில் குற்றவாளிகளுக்கு நோய் இருக்கிறது என்பதால், சட்டத்தையும் கோர்ட்டையும் மூடி விட முடியுமா? இவ்வளவு சொன்ன பிறகும் உங்கள் இழுத்தடிப்பு இன்னும் ஓயவில்லையே? இனி சசிகலா ஆஜராகத் தவறினால், சுதாகரனிடமும் இளவரசியிடமும் கேள்விகள் கேட்கப்படும். அதற்குத் தயாராக வந்து விடுங்கள்.


 அடுத்த முறை கட்டாயம் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால், என்னிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்காத ஆர்டர் வரும்’ என்று கடுமை​யாக எச்சரித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றும் வராவிட்டால், வாரன்ட் பிறப்பிக்கப்படுமாம்!''


''இதுவரை ஒழுங்காக ஆஜராகி வந்தாரே சசிகலா?''


''திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி சமாதிக்கு அமாவாசை தோறும் வருவதாக சசிகலா வேண்டி இருக்கிறாராம். இங்கு வந்தால் செவ்வாய்க்கிழமை அங்கு போக முடியாது என்று நினைத்தாராம். அதனால் வரவில்லையாம்!'' என்ற கழுகாரிடம்...


''இன்று சொன்ன பாதி மேட்டர்கள் பூஜை, புனஸ் காரங்களாகவே இருக்கின்றனவே!'' என்று கேட்டோம். பதில் சொல்லாமல் சிரித்தார், பறந்தார்!


    
குண்டாஸ்..!
சேலம், அங்கம்மாள் காலனியில் இருந்த குடிசைகளுக்குத் தீ வைத்த விவகாரத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். அங்கம்மாள் காலனியில் இருந்த ஜெயலலிதா ஃப்ளெக்ஸுக்குத் தீ வைத்தது, கடந்த முறை அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் தி.மு.க-வினர் ஜெயலலிதா போன்று சேலை அணிந்து அசிங்கப்படுத்தியது என ஆறுமுகத்தின் மீது தீராத கோபத்திலேயே இருந்தது மேலிடம்.


 அதனால்தான், சென்னையில் கைது செய்யப்பட்டவரை சேலம், புழல், வேலூர் என்று அலைக்கழித்தது போலீஸ். இன்னும் சில நாட்களில் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நிலையில், இப்போது குண்டர் தடுப்புச் சட்டம்  பாய்ந்திருக்கிறது. இப்போதைக்கு, ஆறுமுகம் வெளியில் வருவது கஷ்டம்தான்! நன்றி - தட்ஸ் தமிழ் , ஜூ வி , தகவல் சொன்ன ட்விட்டர் நண்பர்கள்,தினமணி, கார்ட்டூனிஸ்ட் மதி

Sunday, June 03, 2012

நடிகை காஜல் இணையத்தில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் - ஜூ வி கட்டுரைக்கபூர்வமான காரியங்களைவிட, அழிவுபூர்வ​மான விவகாரங்களுக்குத்தான் இணையதளம் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ? 

சி.பி - ஆவதும் நெட்டாலே, அழிவதும் நெட்டாலே?


ஒரு பெண்ணை எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியும் என்பதற்கு, நடிகை காஜலுக்கு நேர்ந்த கொடுமையே சாட்சி.


'கோ’, 'மௌன குரு’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் காஜல். இவர் சென்னை, போலீஸ் கமிஷனரிடம் கொடுத்திருக்கும் புகாரைக் கண்டு யாரும் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியாது. .


''கடந்த 23-ம் தேதி மாலை 3 மணியில் இருந்து என்னுடைய செல்போனுக்குத் தொடர்ந்து அழைப்பு வந்துகொண்டே இருந்தது. பேசியவர்கள் அனைவரும், 'எங்கே வர்ற? ரேட் எல்லாம் பிரச்னை இல்லை, எந்த ஹோட்டல்ல ரூம் போடலாம்?’ என்ற ரேஞ்சிலேயே பேசினார்கள்.


 திடீரென இப்படிப்பட்ட அழைப்புக்கள் ஏன் வருகிறது என்று புரியவில்லை. ஆபாசமாகப் பேசியவர்களை திட்டித் தீர்த்தேன். அப்படி ஒருவரைத் திட்டியபோது, அவர்தான் நிதானமாக, 'உங்களின் போட்டோவும் மொபைல் நம்பரும் போட்டு ஒரு வெப்சைட்டில் நீங்கள் ஒரு கால் கேர்ள் என்பதுபோல் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. அதனால்தான் உங்களைத் தொடர்பு கொண்டேன்’ என்றார். 


அவரிடம் இருந்து வெப்சைட் அட்ரஸைப் பெற்றேன். இலவசமாக விளம்பரங்கள் தருவதற்குப் பயன்படும் வெளிநாட்டு வெப்சைட்  அது. அதைப் பார்த்து கதறி அழுதேன். உடனே, அந்த வெப்சைட் முகவரிக்கு, 'என்னைப் பற்றி தவறான விளம்பரம் வெளியாகி உள்ளது. அதை உடனே நீக்க வேண்டும். அதை வெளியிட்டவர் யார் என்பதையும் தெரிவிக்க வேண்டும்’ என்று இ-மெயில் அனுப்பினேன்.'உங்களைப்பற்றிய விளம்பரம் 72 மணி நேரத்தில் நீக்கப்படும். விளம்பரத்தை வெளியிட்டவர்பற்றிய தகவலைத் தர முடியாது’ என்று பதில் வந்தது. இதையடுத்தே சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். உடனே நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்தால்தான், எதிர்காலத்தில் மற்ற பெண்களுக்கும் இதுபோன்ற பிரச்னைகள் வராது'' என்றார் கவலையுடன்.


சி.பி - எதுக்கு 72 மணி நேரம்? வெப்சைட் ஓனர் 3 நாள் லீவ்ல இருக்காரா? அதை எடுக்க 3 நிமிஷம் போதாதா? அந்த விளம்பரம் அட்லீஸ்ட் 5 நாளாவது விளம்பரத்தில் இருக்க ஆல்ரெடி ஒப்பந்த அடிப்படைல காசு வாங்கி இருப்பாரு.புகாரை விசாரித்து வரும் சைபர் க்ரைம் கூடுதல் உதவி ஆணையர் சுதாகரிடம் பேசினோம். ''இதுகுறித்து விசாரித்து வருகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க எங்கள் டீம் மீட்டிங் நடக்கிறது. அதன் பிறகுதான் மற்ற விவரங்களைத் தர முடியும்'' என்றார்.


பெண்ணைக் கேவலப்படுத்தும் இதுபோன்ற அற்பத்தனமான ஆயுதங்களைக் கையில் எடுப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டும்.


Wednesday, May 16, 2012

ஜெயேந்திரர் ரஞ்சிதாவிடம் பம்முவது ஏன்? கோர்ட் காட்சிகள்

திலும் கருத்துச் சொல்​லாமல் ஒதுங்கிச் செல்​லும் ஜெயேந்திரர், நித்தியானந்​தா விவகாரத்தில் ரஞ்சிதா குறித்துப் பேச... நீதிமன்றத்தில் நிற்கிறது சிக்கல். 
கடந்த 9-ம் தேதி, ஆன்மிகசுற்றுப்​பயணத்தில் இருந்த ஜெயேந்​திரர், கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்​களைச் சந்தித்​தார்.


 சி.பி - சாமியார், ஆதீனம் இந்த மாதிரி துறவிகள் எதுக்கு சுற்றுப்பயணம்கற பேர்ல ஊர் சுத்தறாங்க? மனசுக்குள்ள ஜனாதிபதின்னு நினப்பா? 


 ''மதுரை ஆதீனமாக நித்தியானந்தர் நியமிக்கப்பட்டது சரி​யானது அல்ல. நாங்கள் அதை ஆதரிக்கவும் இல்லை. ஆதீனமாக வருபவர் மொட்டை அடித்து ருத்ராட்சம் அணிந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். ஆனால், நித்தியானந்தர் அப்படிச் செய்யவில்லை. 


சி.பி - இதெல்லாம் ஒரு பிரச்சனையா?  அவர் தான் இந்துக்கள் அனைவர்க்கும் காது குத்தி மொட்டை போட்டுட்டாரே.. போதாதா?


அதோடு, நித்தியானந்​தாவோடு எப்போதும் ரஞ்சிதா என்ற பெண் உடன் இருக்கிறார். இது, ஆன்மிகத்துக்கு எதிரானது. ஆன்மிகவாதிகள் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என்று ஒரு வெடியைக் கொளுத்திப் போட்டார். அதுதான் இப்போது பற்றி எரிகிறது.சி.பி - ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர்.. நித்தி எப்போதும் ஜிஞ்ஜிதா வுடன் தான் இருக்கிறார் என்பதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அவர் பலருடன் இருப்பார். 10 ஓடு 11 தான் அவர் ஹி ஹி 


''10 நாட்களுக்குள் ஜெயேந்திரர் இந்தக் கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்'' என்று, நித்தியானந்தர் எச்சரித்தார். '10 நாட்கள் எதற்குப் பொறுக்க வேண்டும்?’ என்று நீதிமன்றப் படி ஏறிவிட்டார் ரஞ்சிதா. எழும்பூர், தலைமை மாநகரக் குற்றவியல் நீதிமன்றத்​துக்குக் கடந்த 11-ம் தேதி வந்தார் ரஞ்சிதா. போக்குவரத்து நெரிசலில் சிக்கி ரஞ்சிதா வந்து சேருவதற்குத் தாமதமாகிப்போனது. நீதிமன்றத்தில் அழைத்தபோது ரஞ்சிதா வராத காரணத்தால், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மீண்டும் 14-ம் தேதி காலை கோர்ட்டுக்கு வேகமாகவே வந்து சேர்ந்தார். 'என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய ஜெயேந்திரர் மீது, இ.பி.கோ. 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரவீந்திரன், மனு மீதான விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவு போட்டார்.


ரஞ்சிதாவிடம் பேசினோம். ''நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். ஜெயேந்திரர் தேவை இல்லாமல் என்னை வம்புக்கு இழுத்திருக்கிறார். நடிகைதானே... என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டு அமைதியா போயிடுவானு நினைச்​சிட்டார். கண்டிப்பா இந்த விஷயத்தை நான் சும்மா விட மாட்டேன். எப்படி ஊரைக் கூப்பிட்டு என்னைப் பத்தி அவதூறாகப் பேசினாரோ, அதைப் போன்று, 'நான் பேசியது தப்பு’ என்று, அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவரை நான் ஓய மாட்டேன்'' என்றார்.

http://2.bp.blogspot.com/-M98tr8t_cvE/TlsDzGnQAnI/AAAAAAAAC_8/IhqGJPIaeWo/s1600/Actress-Ranjitha-Hot-First-Night-Pictures.jpg


ரஞ்சிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முருகைய்யன்​ பாபு, அப்ரார் அஹமது ஆகியோரிடம் பேசினோம். ''ரஞ்சிதாவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஜெயேந்திரர் பேசி இருக் கிறார். அந்தப் பேச்சு ரஞ்சிதாவின் மனதை ரொம்பவே பாதித்து விட்டது. அதனால் எந்தச் சூழ்நிலையிலும் வழக்கை வாபஸ் வாங்க மாட்டோம்'' என்று அழுத்தமாகச் சொன்னார்கள்.


ஜெயேந்திரரின் கருத்தை அறிய,  காஞ்சி மடத்தைப் பல முறை நாம் தொடர்பு​கொண்​டோம். இது பற்றி அவர் பேச விரும்பவில்லை என்றதும், மடத்துக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.


''ரஞ்சிதாவைப் பற்றி தேவை இல்லாமல் பேசிவிட்டோமோ என்று, ஜெயேந்திரர் இப்போது வருத்தத்தில் இருக்கிறார். மடத்துக்கு வேண்டப்பட்ட டெல்லியைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகர் ஒருவரும் இந்தப் பேச்சை ரசிக்கவில்லை.


 அதனால், ஜெயேந்திரருக்குப் போன் செய்து அந்த முக்கியப் பிரமுகர் கோபத்தோடு பேசி இருக்கிறார். அதில் ஜெயேந்திரர் ரொம்பவே அப்செட். அதனால்தான் யாரையும் சந்திப்பதைத் தவிர்க்கிறார். ஆனால், இந்த விஷயத்தில் ஜெயேந்திரரை முடக்கிவிடலாம் என்று சிலர் திட்டம் போட்டு பல்வேறு காரியங்களைச் செய்கிறார்கள். இந்த சலசலப்புக்கு எல்லாம் காஞ்சி மடம் அஞ்சாது. எல்லாப் பிரச்னைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்'' என்றனர்.


இதற்கிடையில், ரஞ்சிதாவைத் தொடர்புகொண்ட காஞ்சி மடத்து நிர்வாகி ஒருவர், 'பேசியது தவறு என்பதை ஜெயேந்திரர் உணர்ந்து கொண்டார். உங் களிடம் போன்ல வருத்தம் தெரிவிக்கத் தயாராக இருக் கிறார்.அதனால் நீங்க வழக்கை வாபஸ் வாங்கிடுங்க..’ என்று கேட்டுக்கொண்டாராம். ஆனால் ரஞ்சிதாவோ, 'பிரஸ் மீட் வெச்சு என்னை அசிங்கப்படுத்திட்டு, போன்ல மன்னிப்பு கேட்பாரா..? பிரஸ் மீட் நடத்தி மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க, பிறகு பார்க்கலாம்’ என்று போனை கட் செய்து விட்டாராம்.


சி.பி - விடம்மா விடம்மா.. இதெல்லாம் பெரிய மேட்டரா? டைம் லைன்ல ஏடாகூடமா பேசிட்டு டி எம் ல கால்ல விழறது தமிழர்களூக்குபுதுசா என்ன? அட்ஜஸ் பண்ணிக்குங்க..  


http://schlaepfer-beck.ch/wp-content/uploads/2011/08/ranjitha-i0.jpg


மக்கள் கருத்து 


1.ஜெயந்திரர் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்க வேண்டும். மடாதிபதி என்பதால் யாரை வேண்டுமானாலும் நிந்திக்கலாம் என்ற அகங்காரம் இந்த விஷயத்தில் மட்டுமல்ல மற்ற எல்லா விஷயத்திலும் பின்பற்றலாம். இனி "பேச்சுரிமை" என்று அசிங்கமாக (தேர்தல் மேடைகளில் ஜெஜெ-வை திட்டியது ஒரு உதாரணம் - இதில் எல்லா கட்சிகளும் அடக்கம், ஜெஜெ ஒரு உதாரணமே), ஆபாசமாக, பூடகமாக பேசுவது குறைந்தால் மக்கள் குறைகளை, தேவைகளை பற்றி பேசுவார்களோ என்னமோ?

காஞ்சி மடாதிபதி என்றால் என்ன? இன்னமும் எச்சரிக்கையுடன் அல்லவா இருக்க வேண்டும் ஏனெனில் தெரிந்தோ தெரியாமலோ இந்த மனிதரை தங்கள் தலைவராக அல்லவா ஒரு கூட்டமே (அல்லது சமுதாயமே) ஏற்று கொண்டிருக்கிறது. அவர்கள் எல்லோரும் இது போல கீழ்தரமாக பேசுபவர்கள் என்ற எண்ணத்தை அல்லவா இது தோற்றுவிக்கிறது.

பகிங்கரமாக மன்னிப்பு கேட்டால் இவரின் மதிப்பு கூடுமே தவிர குறையாது (குறைவது போல தோன்றினாலும்). தன் தவறை உணர்ந்து அதற்காக தைரியமாக மன்னிப்பு கேட்கும் அளவிற்கு தெளிவானவர் என்று. இதனை மூடி மறைத்தால் அது இவருக்குதான் இன்னமும் அசிங்கம் - ஏற்கனவே கொலை வழக்கில் சிக்கி அவமானப்பட்டவர்..


2.Cavitha3
ரஞ்சிதா இந்தியாவின் பலம் மிக்க பெண்களில் ஒருவர் ஆகிவிடுவார் போல இருக்கிறதே. ஒரு பெண்ணின் உடலுக்கு இவ்வளவு சக்தியா
3. Senthilnathan3
இந்த சாமியார்கள் சண்டை மாமியார்கள் சண்டைய மிஞ்சிடும் போலிருக்கே!
4.
Thiyagarajan4 Hours ago
எதற்காக ஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் ! நித்தி மொட்டையா போட்டுக் கொண்டு ஆதீனகர்த்தா ஆகியுள்ளார்? ரஞ்சிதா நித்தி கூடவே இல்லையா? உண்மையைத்தானே கூறியுள்ளார் ! உண்மை சுடும் ! சுடட்டுமே !
5. Suresh6 Hours ago
ஒரு பிராடிற்கு உன்னொரு பிராடு மேல் இருக்கும் வயிற்றெரிச்சல். வேறென்ன சொல்ல. 
1.சச்சின் டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா’ பட்டம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் நீதிபதியும் இப்போதைய 'பிரஸ் கவுன்சில்’ தலைவருமான மார்கண்டேய கட்ஜு, பாரதிக்கு அந்த விருது தரப்பட வேண்டும் என்கிறாரே?
  பாரதி அதைவிடப் பெரிய விருது பெற்றவன். 'மக்கள் கவிஞன்’ என்ற மகத்தான விருதுக்குப் பிறகு மற்றது எதற்கு?


பாப்லோ நெருடா சொன்னது பாரதிக்கும் பொருந்தும். ''நான் கத்தையாக இலக்கியப் பரிசு​களை அள்ளிக் குவித்திருக்கிறேன். வண்ணத்துப் பூச்சிகளைப் போல அற்பாயுசுப் பரிசுகள் அவை. ஆனால், நானே ஈட்டிய பரிசுகள் மகத்​தானவை. பலர் அதைக் குறை கூறினாலும் எவருக்கும் எட்டாத ஒன்று. கலோபாசனையாலும், சுய தேடலாலும் எழுத்துக் கோர்வைகளால் மாய்மாலம் செய்வதற்கு மாறாக, நான் மக்கள் கவிஞனானேன். அதுதான் எனக்குக் கிடைத்த மகத்தான விருது'' என்றான் நெருடா. இது, மகா கவி பாரதிக்கும் பொருந்தும்.


'பாரத ரத்னா’ பட்டத்தைவிட பாரதிக்கு அவசரமாய்ச் செய்ய வேண்டிய ஒன்று உண்டு. புதுச்சேரியில் அவர் வாழ்ந்த வீட்டை மராமத்து செய்கிறோம் என்று, இரண்டு ஆண்டு​களாக அந்த வீட்டைப் பூட்டி வைத்து இருக்கிறது ரங்கசாமியின் அரசு. அந்தப் பூட்டை உடைக்க பாரதி பக்தர்கள் புறப்படட்டும். புண்ணியம் வாய்க்கும்!2. நாடாளுமன்றம் 60 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதே? கடந்த 10-ம் தேதி, மாநிலங்கள் அவையில் காலை 11 மணிக்கு ஒரு எம்.பி. எழுந்தாராம். ''ஏதோ நாற்றம் வீசுகிறது'' என்றாராம். சபைத் தலைவராக துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி இருந்துள்ளார். அவர் உடனே, அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி இருக்கிறார். அப்போது, அதே அவையில்தான் பிரதமரும் இருந்துள்ளார். அனைவருமே அந்த கெட்ட நாற்றத்தை உணர்ந்துள்ளார்கள். சபை, அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. ஏ.சி. இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு கேஸ் கசிந்ததால் ஏற்பட்ட நாற்றம் என்று கண்டுபிடித்துச் சரிசெய்துள்ளார்கள்.நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் 'ஊழல்’ என்ற துர்நாற்றம், அதிகமாக விவாதப் பொருளாகி வீசுகிறது. இதைக் கட்டுப்படுத்துவது பற்றி நம்முடைய தலைவர்கள் யோசிக்க வேண்டும். ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனால், நாம் அந்த ஓர் ஆண்டில் எவ்வளவு பக்குவப்பட்டுள்ளோம் என்பதே மரியாதையைத் தரும்!

3. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆ.ராசா ஜாமீன் கேட்டு விட்டாரே? 


இப்படி ஒரு ஆள் உள்ளே இருக்கிறார் என்பதே தி.மு.க. தலைமைக்கு மறக்க ஆரம்பித்து விட்டது. எனவே, அவர் வெளியே வந்துதானே ஆக வேண்டும். கடந்த மே 10-ம் தேதி, தனது 49-வது பிறந்த நாளை ஆ.ராசா, திஹாரில் கொண்டாடினார். பொன்விழா நேரத்திலாவது வெளியில் இருக்க அவர் நினைக் கலாம்தானே? ஆனால், 'நான் நிரபராதி என்று தீர்ப்பு பெற்ற பிறகுதான் வெளியில் வருவேன்’ என்று, அவர் செய்த அறிவிப்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது!
4. புதுக்கோட்டையில் பரபரப்பையே காணோமே? 


காற்றில் கத்தியைச் சுழற்றினால் எப்படிச் சத்தம் வரும்? எதிரிகளே இல்லாத களம், ஆளும் கட்சிக்குத்தான் அவமானம்!5.   2ஜி விவகாரத்தில் 122 உரிமங்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதை, மறுஆய்வு செய்ய வேண்டும் என்று முதலில் மனு போட்ட மத்திய அரசு, திடீரென வாபஸ் வாங்கிக் கொண்டது ஏன்? உச்சி மண்டையில் மீண்டும் உச்ச நீதிமன்றம் கொட்டிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் மறுஆய்வு மனுவை வாபஸ் பெற வைத்துள்ளது.


122 உரிமங்கள் முறையாகத்தான் வழங்கப்பட்டன என்று வாதிடத் துப்பு இருக்குமானால், ஏன் மனுவை வாபஸ் பெற வேண்டும்? இதில், தன்பலம் இல்லாததால், குடியரசுத் தலைவர் மூலமாக நெருக்கடி கொடுக்கும் காரியத்தையும் காங்கிரஸ் அரசு பார்த்தது. மொத்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதையே அப்பட்டமாக உணர்த்து​கின்றன இந்தக் காட்சிகள்!6.மூவருக்கும் ஜாமீன் கிடைத்து விட்டதே? 


உள்ளே ஒழுங்காக இருந்தார்கள். வெளியில்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொம்பு சீவி விடுபவர்கள், கொள்ளை நோக்கம் கொண்டவர்கள், கொடுக்கல் - வாங்கல் பேர்வழிகள் ஆகிய மூன்று தரப்பிடம் இருந்தும் இவர்கள் விலகி இருந்தால் எதிர்காலமாவது நிம்மதியாய் அமையும்!7. கூடங்குளம், இடிந்தகரையில் மீண்டும் போராட்டம் தொடங்கி விட்டதே?


அணுஉலை குறித்த அச்சம் அந்தப் பகுதி மக்களுக்கு அப்படியே இருக்கிறது. இந்த அச்சத்தை நீக்க வேண்டிய பொறுப்பு, தமிழக முதல்வருக்கு இருக்கிறது. கூடங்குளம், இடிந்தகரை பகுதிக்குச் சென்று அந்த மக்களிடம் முதல்வர் நேரடியாகப் பேசினால் மட்டுமே, அரசு எதிர்பார்க்கும் முடிவை எட்ட முடியும்!அந்தப் பகுதி மக்களின் உண்மையான எதிர்பார்ப்புகளை, முதல்வரிடம் அதி காரிகள் சொல்லவில்லை. பத்து மாதங்களைக் கடந்து நடக்கும் ஒரு போராட்டப் பகுதிக்கு ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி.-யுமே இதுவரை போகவில்லை என்பது நிர்வாகக் கோளாறு. அக்கறை இன்மையின் வெளிப்பாடு!8. ஜெயேந்திரருக்கு இது தேவையில்லாத வேலை’ என்கிறாரே மதுரை ஆதீனம்? 


தேவையில்லாத 'வேலைகள்’ பார்ப்பது​தானே பல மடாதிபதிகளின் முழு நேர வேலையாக ஆகிவிட்டது.


'என்றும், எப்போதும் தூங்காத கண் ஒன்று நமது இதயங்களைப் படித்துக்கொண்டு இருக்கிறது. நமது எண்ணங்களைப் பதிவு செய்துகொண்டு இருக்கிறது’ என்பார்கள். இதை, சாமான்ய மக்கள் உணர்ந்து திருந்தி வருகிறார்கள். ஆனால், சில மடாதிபதிகள் உணரத் தவறுகிறார்கள்!9. லோக் பால் மசோதா அவ்வளவுதானா? 


இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேறுவதற்கு சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டத் தொடர் முடிவதற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. கிடப்பில் போட்டு​விடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

Wednesday, May 02, 2012

நித்தியானந்தா மதுரை ஆதீனம் ஆனதன் மர்மம் என்ன? ஜு வி கட்டுரை
'இடத்தைக் கொடுத்தால், மடத்தைப் பிடிப்பார்கள்’ என்ற பழமொழிக்கு புதிய உதாரணமாக ஆகி விட்டார் நித்தியானந்தா!சி.பி - மடத்தை மட்டும் பிடிச்சா தேவலை.. மக்களை மடையர்கள் ஆக்குன மாதிரி மடாதிபதிகளை மூடாதிபதிகளாகவும், அங்கே வரும் பெண்களை மூடாத பத்னிகளாகவும் ஆக்கப்போறார். அவ்வ்வ்வ்வ்


  ஏப்ரல் 11-ம் தேதி, நடிகை ரஞ்சிதா சகிதம் மதுரை ஆதீன மடத்துக்கு விசிட் அடித்துவிட்டுப் போனார் நித்தியானந்தா. அப்போதே பலரும் சங்கடப்பட்டார்கள். 'புனிதமான மதுரை ஆதீனத்துக்குள், சர்ச்சையில் சிக்கிய ஒருவர் நடிகையுடன் வரலாமா?’ என்று கேள்வி எழுப்பினார்கள். அன்று விருந்தாளியாக வந்தவரே... இன்று மதுரை ஆதீனமாக மாறிவிட்டார்.


சி.பி -அப்பவும் நடிகை வந்ததுதான் கேவலம்.. அந்தாள் வந்தது கேவலம் இல்லை அடங்கோ 


சம்பந்தம் இல்லாவிட்டாலும் தானே போய் சர்ச்சையில் சிக்கிக்​கொள்பவர் மதுரை ஆதீனம். கடந்த 2004-ம் ஆண்டு தன் அத்தை மகளின் மகனான சுவாமிநாதனை ஆதீனத்தின் இளவரசராக கோலாகல விழா நடத்திப் பட்டம் சூட்டினார். மிகக்குறுகிய காலத்துக்குள், 'ஆதீன விதிகளுக்கு விரோதமாகச் செயல்படுவதாக’ குற்றச்சாட்டுகளை அடுக்கி, சுவாமிநாதனை மடத்தை விட்டு விலக்கியும் வைத்தார்.


சி.பி - சுவாமிநாதனை விலக்கி வெச்சவங்க சுவாமியையே விலக்கியும் வைப்பாங்க.. யார் கேட்கறாங்க.. எப்படியோ நாத்திக வாதிகளூக்கு கொண்டாட்டம்.. சும்மாவே அவலை மெல்லுவாங்க.. அவள் , அவாள் எல்லாம்  சிக்கினா பக்கோடாவே சாப்பிட்ருவாங்க.. 


இந்த வில்லங்கமே இன்னமும் முழுமையாகத் தீராத நிலையில், நித்தியானந்தாவை அவசர கதியில் அடுத்த குரு மகா சந்நிதானமாகத் தேர்வு செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் ஆதீனம்.

தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் தலைவர் கணபதி சந்தானத்திடம் இதுகுறித்துப் பேசினோம். ''திருஞானசம்​பந்தரால் உருவாக்கப்பட்டது மதுரை ஆதீன மடம். சிறந்த முறையில் சைவத் தொண்டாற்றி மக்களைப் பண்புள்ள மனிதர்களாக உருவாக்கிய ஒரு பாரம்​பரியமான மடத்துக்கு, செக்ஸ் வழக்கில் சிறை சென்று வந்த ஒருவரை, இன்னும் வழக்கில் இருந்து விடுபடாத ஒருவரை, அடுத்த மடாதிபதியாக ஆதீனகர்த்தர் நியமித்து இருப்பது கண்டிக்​கத்தக்கது. வருந்தத்தக்கது.


சைவப் பாரம்​பரியத்தில் வந்தவர்​களுக்கும் ஆன்மிகத்​துக்கு சிறந்த தொண்டாற்றி பல்வேறு அறிஞர்களை உருவாக்கிய சைவ சமயத்தாருக்கும் இது மாபெரும் இழுக்கு. இந்தச் செயலை சைவப் பாரம்பரியத்தில் வந்த எவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.


 சி.பி - நித்தி சாப்பாட்டு விஷயத்துல சைவம் தான்.. ஆனா கில்மா விஷயத்துல அசைவம்

எனவே, ஆதீனகர்த்தர் அவர்கள் தனது அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற்று, சைவ சமயத்துக்கு உண்மையாகத் தொண்டாற்றும் ஒருவரை நியமிக்க வேண்டும். சைவ வேளாளர் பிரிவில் உள்ள 13 சாதிக்காரர்கள்தான் மதுரை ஆதீனமாக வர முடியும். ஆனால், மரபுகளை மீறி, முதலியார் சாதியைச் சேர்ந்த நித்யானந்தாவை அடுத்த வாரிசாக அறிவித்திருக்கிறார் ஆதீனம். ஆதீனத்தின் செயல்பாடுகள் எல்லாமே முரண்பாடாகவே இருக்கிறது.தருமபுரம், திருப்பனந்தாள் ஆதீனங்கள், கல்லூரி​களைத் தொடங்கித் தமிழை வளர்க்கிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் பழைய தமிழ் நூல்களை எல்லாம் புதுப்பித்து வெளியிட்டு சேவை செய்கிறார்கள். மதுரை ஆதீனம் இதுவரை தமிழுக்காக என்ன செய்திருக்கிறார்? நித்தியானந்தா ஒரு கோடி கொடுத்தால், மடத்தை விக்கிறதுக்கு இது என்ன மாநகராட்சி டெண்டரா? அப்படியானால் நாளைக்கு இன்னொருவர் இரண்டு கோடி கொடுத்தால், அவருக்குப் பட்டம் சூட்டுவாரா?


 சி.பி  - பேசாம ஏலம் போட்டுடலாம்/.. சொல்ல முடியாது.. கலைஞர் குடும்பத்துல இருந்து கூட யாராவது ஆதீனம் ஆக சான்ஸ் இருக்கு..


ஆதீனம் தன் இஷ்டத்துக்குச் செயல்படுவதற்கு மடம் ஒண்ணும் அவங்க பாட்டன் சொத்து இல்லை. நித்யானந்தா சைவ வேளாளரே அல்ல. அவருக்குப் பட்டம் சூட்டியது செல்லாது என்று கோர்ட்டுக்குப் போகப்போகிறோம். அரசாங்​கமும் இந்த விஷயத்தைக் கவனிக்க வேண்டும்'' என்றார்.

பெங்களூருவில் இருந்த மதுரை ஆதீனத்தைத் தொடர்புகொண்டு பேசி​னோம். ''எங்களைப் போல அனைத்துத் திறமைகளும் தகுதிகளும்கொண்ட ஒரு துணிச்சலான மாவீரனைத் தேடிக்கொண்டு இருந்தோம். பார்வதி தேவியும் சிவபெருமானும் நித்தியானந்தாவை அடையாளம் காட்டினார்கள். அவர்களது உத்தரவை ஸ்டே பண்ணி வைக்கக் கூடாது. அதனால், அவசர அவசரமாக நித்தியானந்தாவுக்குப் பட்டம் சூட்டிவிட்டோம்'' என்றார்.

 சி.பி - கலைஞர் தான் இதுக்கெல்லாம் முன்னோடி.. அவர் தான் கனவுல அண்ணா வந்தார்.. பெரியார் வந்தார்னு கலர் கலரா ரீல் விடுவார்.. இப்போ ஆன்மீகவாதிகளூமா? அதென்ன உங்களூக்கு மட்டும் வர்றாங்க.. மக்கள்ல 10 பேருக்கு கனவுல வரச்சொல்லுங்க பார்ப்போம்ம்.. கால் டைவர்ட் பண்ற மாதிரி கனவு டைவர்ட் பண்ணுங்க.. ..

1. மடம் மதுரையில் இருக்க, மகுடத்தை பெங்களூருவில் வைத்து சூட்டி இருக்கிறீர்களே?''


சி.பி - மதுரை வெய்யிலா இருக்காம்.. பெங்களூர் குளு குளுன்னு இருக்காம்.. அதான் லொக்கேஷன் சேஞ்ச் போல..  
''நித்தியானந்தாவுக்குப் பட்டம் சூட்டும் விழாவில் பிடதியில் உள்ள அவரது சிஷ்யர்களும் வெளி​நாடுகளில் இருப்பவர்களும் கலந்துக்கப் பிரியப்பட்டாங்க. அவ்வளவு பேரையும் மதுரைக்கு கூட்டிட்டுப்போறது முடியாதுங்​கிறதால நாங்களே இங்கு வந்து விட்டோம்.''

2. ''சைவ வேளாளர் அமர வேண்டிய ஆதீனகர்த்தரின் இருக்கையில் முதலியாரான நித்தியானந்தாவை வைத்து உள்ளீர்களே?''''அதெல்லாம் இல்லை. நித்தியானந்​தாவும் சைவ வேளாளர்தான். மதுரை ஆதீனகர்த்தராக அமர்வதற்கான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு இருக்கு. இப்படிப்பட்ட ஆற்றல்மிக்க ஒரு தம்பி​ரானைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்காக, நாங்கள் இறைவனுக்கு நன்றி சொல்கிறோம். இதை நாங்கள் செய்த தவத்தின் புண்ணியமாகக் கருதுகிறோம் நித்தியானந்தாவின் வருகை ஆதீனத்துக்குப் பெருமை''
3. ''ஒரு கோடிக்கும் தங்க சிம்மாச​னத்துக்கும் உங்களது சுயநலத்​துக்​காகவும் மதுரை ஆதீனத்தை நித்தி​யானந்தாவிடம் அடகு வைத்து​விட்ட​தாகச் சொல்கிறார்களே...''


சி.பி - பேக்கரி உனக்கு , தங்கச்சி எனக்கு ஹி ஹி  
இந்தக் கேள்விக்கு அருகில் இருந்த நித்தியானந்தாவே பதில் சொன்னார். ''நானும், நித்தியானந்தர் பீடத்தின் சீடர்களும் பீடத்தின் அசையும் அசையா சொத்துக்களும் குரு மகா சந்நிதானத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். இனி நாங்கள் வேறு, அவர்கள் வேறு அல்ல. எங்களது அன்பின் அடையாளமாகத்தான் சந்நிதானம் அவர்களின் சமுதாயப் பணிகளுக்காக இந்தச் சிறிய தொகையை பாத காணிக்கையாகத் தந்திருக்கிறோம். வேறு எதுவும் சொல்லி இதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். இந்தத் தொகையை இப்போது ஐந்து கோடியாகக் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.


தொடர்ந்து, மதுரை ஆதீனத்திடம் பேசினோம்

4.''நித்தியானந்தா, மதுரை ஆதீனத்தை வீழ்த்தி​விட்டாரா?''


''ஆதீனத்தை யாரும் வீழ்த்த முடியாது. அவருக்கு ஏராளமாய் சொத்துக்கள் இருக்கு. அதனால் எங்களை வீழ்த்த வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. சிவபெருமான் - பார்வதி தேவியின் அஸ்திரம்கொண்டு நாங்கள்தான் அவரை வீழ்த்தி இருக்கிறோம்.''

சி.பி - யார் யாரை வீழ்த்தினீங்களோ, மொத்தத்துல இந்து மதத்தை  தாழ்த்திட்டீங்க..5.''செக்ஸ் புகாரில் சிக்கிய ஒருவர்தான் அடுத்த மதுரை ஆதீனமாக வர வேண்டுமா, வேறு நல்ல சைவத் தொண்டர்கள் கிடைக்கவில்லையா?''  ''செக்ஸ் புகாருக்கும் நித்தியானந்தாவுக்கும் சம்பந்தம் இல்லை. அவர், அதுபோன்ற காரியங்களில் ஈடுபடவும் இல்லை. அவரையும் ரஞ்சிதாவையும் இணைத்து பரப்பப்பட்ட செய்திகள் அனைத்துமே அப்சல்யூட்லி ராங்.இது ஒரு பெரிய பிரச்னையா? செக்ஸ் குற்றச்சாட்டு யார் மீதுதான் இல்லை. புகார் கொடுக்கணும்னா, திருமணமாகி பிள்ளை பெற்ற அத்தனை பேர் மீதும் செக்ஸ் புகார் குடுக்கலாம். ஒரு பொம்பளைப் பிள்ளைகிட்டப் பேசுறது தப்பா? நாமெல்லாம் பெண்ணில் இருந்துதானே வந்தோம். மதுரை ஆதீனத்திலும், 'வைஷ்ணவி, கஸ்தூரி, மாதவி, கோபிகா’னு நிறையவே பெண்கள் பணிவிடை செய்கிறார்கள்.


 சி..பி - ஹா ஹா ஹா நீங்க சொன்ன 4 பேருமே நடிகைகள் பேரா இருக்கே? கவுண்டமணி பண்ணைக்கு ஆள் எடுத்த மாதிரி எடுத்தீங்களோ?

 அதற்காக எங்கள் மீதும் ஏதாவது பழி போடுவதா? மதுரையை ஆண்ட கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசிதானே திருஞானசம்பந்தரை அழைத்து வந்து மதுரை ஆதீன மடத்தையே தொடங்கினார். பெண்களின் சிறப்புகளை மதித்து அவர்களின் மாண்புகளைக் காக்கிற மடம், மதுரை ஆதீன மடம். அதே நிலைப்​பாட்டில்தான் நித்தியானந்தர் பீடமும் இருக்​கிறது. சைவ வேளாளர் சங்கத்தினர் ஆதீனம் எடுத்திருக்கும் இந்த முடிவைப் பாராட்டி வரவேற்காமல், பழி போடுவது வேதனையாக இருக்கிறது'' என்று மதுரை ஆதீனம் கூறினார்.அடுத்து நித்தியானந்தாவிடம் பேசினோம் ''ஸ்வாமி அவர்கள் என்னை மதுரை ஆதீனத்தின் அடுத்த குருமகா சந்நிதானமாக அறிவித்​திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் தயக்கமாக இருந்தாலும், இப்போது தைரியம் வந்துவிட்டது. இந்த வாய்ப்பை முழுமையாக ஏற்று இன்னும் மூன்று ஆண்டுகளில் மதுரை ஆதீனத்தை அகில உலக ஆன்மிக இயக்கமாக மாற்றிக்​காட்டுவோம்.

 சி.பி - அகிலா உலக பெண்மீக இயக்கமாவா? ஆமா.. எனக்கு ஒரு டவுட்.. அகிலம்னாலும் , உலகம்னாலும் ஒண்ணுதானே... அது என்ன அகில உலக..?

நித்தியானந்தர் தியான பீடத்துக்கு 151 நாடுகளில் மையமும் 40 நாடுகளில் கிளைகளும் இருக்கின்றன. உலகம் முழுவதும் 1.20 கோடி சீடர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு நாங்கள் நினைத்ததை முடிப்போம். பிடதி ஆசிரமப் பணிகள் இருப்பதால், மதுரை ஆதீனத்தில் என்னால் முழுமையாகத் தங்கி இருக்க முடியாது என்றாலும், அடிக்கடி மதுரைக்கு வருவேன்'' என்கிறார் பூரிப்புடன்.

பிடதியில்...

 கடந்த 27-ம் தேதி, கர்நாடக மாநிலத்​தின் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் ஆட்டம் பாட்டம்,  எக்கச்சக்கக் கூட்டம் என்று கல்யாண வீட்டுக் கலகலப்பு.


தங்கமுலாம் பூசப்பட்ட மூன்று  ஆசனங்கள் மேடையில் போடப்பட்டு இருந்தன. அதில், ஆனந்த சிரிப்போடு நிஜ நித்தியானந்தாவும், அடுத்த ஆசனத்தில் ஃபைபரில் ட‌ம்மி நித்தியானந்தா சிலையும், மூன்றாவது ஆசனத்தில் மதுரை ஆதீனமான அருணகிரியும் காட்சி தந்தார்கள்.


சரியாக 9.05 மணிக்கு மதுரை ஆதீனமான அருணகிரி, நித்தியானந்தாவை மதுரையின் 293-வது ஆதீனமாக அறிவித்தார். கூடவே வெள்ளைப் பேப்பரில் மேடையில் வைத்து கையெழுத்து போடப்பட்டது. இதனால் அகம் மகிழ்ந்துபோன நித்தி, ஒரு கோடி ரூபாய்க்கான செக்கை மதுரை ஆதீனத்திடம் வழங்கினார். கூடவே, ஆறு அடி உயர தங்கச் செங்கோல் வழங்கி, தங்கக் கிரீடத்தையும் அணிவித்தார்.


 மதுரை ஆதீனமும் நித்தியானந்தாவுக்குத் தங்கக்கிரீடம் அணிவித்தார். நித்தியானந்தா மற்றும் மதுரை ஆதீனத்தின் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்ட பக்தர்கள், சத்தமாக ஒலித்த சினிமா பாடலுக்கு ஏற்ப ஆட்டம் போட ஆரம்பித்தனர். மதுரை ஆதீனமும் ஆடலுக்கு ஏற்ப தலையை ஆட்டி ரசித்தபடி, ஆடுபவர்களை உற்சாகப்படுத்தினார். இதை, முன்வரிசையில் இருந்து பார்த்த ரஞ்சிதா, அமைதியான சிரிப்போடு ரசித்தார்.


விழாவில் பேசிய மதுரை ஆதீனம், ''திருஞான சம்பந்தரால் 1,500 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தை, எனக்குப் பிறகு யார் கண்ணியமாகக் கண்காணிக்கப் போகிறார்கள் என்ற கவலையில் பல நாட்கள் தூக்கமின்றித் தவித்தேன். அப்படி சிந்தனையுடன் ஒரு நாள் இரவு தூங்கியபோது, சிவபெருமான் என் கனவில் தோன்றி, 'நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு’ என்று சொன்னார்.


 அதன்பிற‌கு, பெங்களூரு ஆசிரமத்துக்கு வந்து நித்தியானந்தாவோடு பழகிப்பார்த்தேன். அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவருடைய ஆசிரமத்தில் ஆண்கள், பெண்கள் அனைவரும் தங்களை மறந்து ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். நானும் நேற்று அவர்களோடு சேர்ந்து ஆடினேன்.அப்போது பல பெண்கள், 'அடடா... ஆதீனமே ஆடுது’ என ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். இப்படித்தான் எல்லோரும் ஜாலியாக இருக்க வேண்டும். நித்தியானந்தாவின் இந்த அணுகுமுறையை நான் ரொம்ப லைக் பண்றேன். நித்தியானந்தா மிகவும் இளமையாக இருக்கிறார். அதனால் என்னைவிட அவரால் நன்றாக ஆன்மிகப் பணியில் ஈடுபட முடியும். இந்து மதத்தை அவரால் மட்டுமே சரியான திசையில் வளர்க்க முடியும். கூடவே,  ஆதீனத்தின் கொள்கையான சைவ சித்தாந்தத்தில் நித்தியானந்தாவும் ஆழமாக இருப்பதால், எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது. நித்தியானந்தா மாதிரி புனிதமானவரைப் பார்க்கவே முடியாது.


எனவே, மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களையும், 1250 ஏக்கர் நிலத்தையும், கோயில்களையும் நித்தியானந்தாவே நிர்வகிப்பார். எனவே நீங்கள் அனைவரும் 293-வது மதுரை ஆதீனமான நித்தியானந்தாவை, 'ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரஹம்ச நித்தியானந்த ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்’ என்று பயபக்தியோடு அழைக்க வேண்டும்'' என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசி முடித்தார்.அடுத்து உற்சாக மிகுதியில் பேசிய நித்தியானந்தா, ''மதுரை ஆதீனமான ஸ்ரீஸ்ரீ அருணகிரி சுவாமிகளின் ஆன்மீக சேவை செய்த ஆண்டுகள்கூட என் வயது இல்லை. மதுரை ஆதீனத்தின் புகழை சர்வதேச அளவுக்கு உயர்த்துவேன். அதேபோன்று மதுரை ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களும் கைப்பற்றப்பட்டு, புனரமைக்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.


ஏற்கெனவே மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமாக இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மீண்டும் ஆதீனத்தின் ஆளுகைக்கே கொண்டு வருவேன். இதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவேன். ஆதீனம் சார்பாக மதுரையில் மருத்துவக் கல்லூரியும், 24 மணி நேர அன்னதானச் சேவையும் உடனே தொடங்கப்படும். அதேபோன்று, ஜூன் மாதம் மதுரையில் நடைபெற இருக்கும் குரு பூஜையில், மதுரை ஆதீனமான அருணகிரி சுவாமிகளுக்கு தங்க சிம்மாசனம், தங்க செங்கோல், தங்கக் கிரீடம் வழங்கப்படும்'' என்று பட்டியல் வாசித்தார்.


அதுசரி, எப்படி மதுரையைப் பிடித்தார் நித்தியானந்தா? சில கதைகளைச் சொல்கிறார்கள்.


கதை ஒன்று:


சி.டி. மேட்டரில் சிக்கியதில் இருந்தே, நித்தியானந்தாவின் இமேஜ் ஈடு செய்ய முடியாத அளவுக்கு டேமேஜ் ஆகியிருந்தது. அதை எப்படியாவது மீட்டுக்கொள்ளத் துடித்தார். கர்நாடகத்தில் எந்த மடாதிபதியும் இவரை அருகில் சேர்க்கவே இல்லை. அதனால், தமிழகத்தில் தன்னுடைய செல்வந்த பக்தர்கள் மூலமாக காய் நகர்த்த ஆரம்பித்தார்.மதுரையில் இருக்கும் பிரபல பிசினஸ் புள்ளிஒருவர் ஹீலிங் டச் மூலமாக நித்தியானந்தாவால் கடந்த ஆண்டு குணப்படுத்தப்பட்டார். அவர் மூலமாக ஆதீனத்​துக்கு அறிமுகமாகி, அவரை பெங்களூருவுக்கு லவட்டிக் கொண்டு​வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகத் தன் சேவையில் ஆதீனத்தை வைத்துப் பராமரித்தாராம். ஆதீனத்​தை ஹாங்காங் கூட்டிச் சென்றும் ஆன்மீக சேவையை அரங்கேற்றி​னாராம் நித்தி. அங்கே நடந்தவை குறித்தும் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன!


கதை இரண்டு:


மதுரை ஆதீனத்துக்குப் பணச் சிக்கல் இருந்தது. நித்தியிடம்  எக்கச்சக்கமாகப் பணம் இருந்தது, ஆனால், போதிய மதிப்பு இல்லை. அதனால், இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி தேவைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை.


கதை மூன்று:


ஆதீனத்துக்கும் நித்தியானந்தாவுக்கும் நீண்ட காலமாகவே நல்ல தொடர்பும் உறவும் உண்டு. இருவரும் பல்​வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் ஒன்றாகவே போய் வந்திருக்கிறார்கள். அந்த நேரங்களில் மதுரை ஆதீனத்தின் ஆர்வங்களை மிகத்தெளிவாக அறிந்துகொண்ட நித்தியானந்தா, சரியான நேரத்தில் காரியத்தைச் சாதித்துக்கொண்டார். மதுரையில் வைத்து பதவியேற்பு விழாவை நடத்தினால் பிரச்னை வரும் என்றுதான் பெங்களூருவில் நடத்தினார்.


ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள், ஆதினமூலமும் அப்படித்தானோ?
 மதுரையில்...


 பட்டத்து இளவரசரை அழைத்துக்கொண்டு கடந்த 29-ம் தேதி காலையில் மதுரை வந்து இறங்கினார் மதுரை ஆதீனம். அதிகாலையிலேயே விழாக்கோலம் சூடிக்கொண்டது ஆதீன மடம். நித்தியின் சீடர்களால் ரொம்பிக்கிடந்த ஆதீன மடத்தில் ஆளாளுக்கு லேப்டாப்களைத் தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்​கொண்டு இருந்​தார்கள்.


சரியாக காலை 9.35 மணிக்கு கிழக்கு வாசல் திறக்க, ஆதீனங்கள் இருவரும் புன்னகைத்தபடி பிரசன்னமானார்கள். வழக்கமான காவியை விடுத்து, மதுரை ஆதீனத்தின் டிரேட் மார்க் காவிக்கு மாறி இருந்த நித்தியானந்தா, முடி இறக்கம் செய்யாமலே தலையில் ருத்ராட்சம் கட்டி இருந்தார். ஒருவருக்கொருவர் தங்கக் கிரீடங்களை அணிவித்துக்கொண்டு, பத்திரிகையாளர்களிடம் பேசினார்கள்.


முதலில் பேசிய ஆதீனம், ''நம்முடைய குருமகா சந்நிதானம் திருஞான சம்பந்தர் பெருமான் தீராத வியாதிகளை எல்லாம் தீர்த்து வைத்தார். அதேபோன்ற வல்லமை நித்தியானந்தருக்கு இருக்கு. இவர் இங்கிருந்து பிரார்த்தனை செய்தால், வெளிநாட்டில் இருந்து தங்கமும் வைரமும் வருகிறது.


எனக்கு இருந்த சுவாசக் கோளாறையே குறைத்து விட்டார். அதனால், உங்களில் யாருக்காவது நோய் வந்தால், நம்முடைய 293-வது குருமகா சந்நிதானத்தை அணுகுங்கள்'' என்று கலாய்த்த ஆதீனம், ''உலகத்திலேயே இப்படிப்பட்ட முதலமைச்சரை நான் பார்த்தது இல்லை. புரட்சித் தலைவி என்றால், புரட்சித் தலைவிதான். தமிழ் மக்களை, தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்காக உழைக்கும் புரட்சித் தலைவி அவர்களின் ஆட்சியைப் பாராட்டி ஆசீர்வதிக்கின்றோம்'' என்று அம்மாவுக்கு திடீர்ப் புகழாராம் சூட்டினார்


  அடுத்துப் பேசிய நித்தியானந்தா, ''பிடதி ஆசிரமத்தில் நடக்கும் அத்தனை பணிகளும் மதுரை ஆதீனத்துக்கும் விரிவுபடுத்தப்படும். இதை நான் ஏற்கெனவே சொல்லி இருந்தா, 'அத்தனை பணிகளுமா?’ன்னு நீங்க ஏடாகூடமாக் கேள்வி கேப்பீங்க.


இப்ப நீங்களே கேட்டதால், இதைச் சொல்கிறேன். குருமகா சந்நிதானம் அவர்கள் ஒரு ஆல விருட்சம். நாங்களெல்லாம் முந்தா நாள் பெய்த மழையில் நேத்து முளைத்த காளான்கள். ஆலமரத்தின் நிழலில் காளான்கள் இருப்பது இயற்கைதானே. மதுரை ஆதீனம் என்பது மிகப் பெரிய கடல். நாங்கள் சிறு துளி. கடலில் கலப்பதை துளி விரும்புவதைப் போல எனக்குக் கொடுத்த வாய்ப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு இருக்கிறேன்'' என்றார். பேட்டியை முடித்துக்கொண்டு இருவரும் பூரண கும்பங்கள் சகிதம் மீனாட்சி அம்மனைத் தரிசிக்க ஊர்வலமாய்க் கிளம்பினார்கள்.

இன்று, 'இந்திய சினிமாவின் அடையாளம்' சத்யஜித் ரே-வின் பிறந்த தினம்! 


டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 
 

Monday, April 23, 2012

ஸ்டாலின் - அழகிரி - மதுரை - என்ன பிரச்சனை? ஜூ வி கட்டுரை

துரையில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளைப் புறக்கணித்த மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள் 17 பேருக்கு அதிரடியாக ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பி, அழகிரியின் அஸ்திவாரத்தில் கை வைத்து இருக்கிறது தி.மு.க. தலைமை! 'தங்கள் மாவட்டத்தில் கடந்த 15.4.2012 காலை, கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இளைஞர் அணிக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடத்தியபோது, தாங்கள் அந்தக் கூட்டத்திலும், அன்று மாலை தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட கண்டனப் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளாததோடு, தங்கள் பகுதியில் இருந்து விண்ணப்பித்து இருந்த இளைஞர்களையும் நேர்காணலில் கலந்துகொள்ளச் செய்யாதது கழகக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகவும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உரியதாகவும் தலைமைக் கழகம் கருதுகிறது.


 தங்களின் இச்செயலுக்கு உரிய காரணத்தையும் விளக்கத்தையும் இக்கடிதம் கண்ட ஒரு வார காலத்துக்குள் தலைமைக் கழகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். தவறினால், தலைமைக் கழகம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்’ என்று, தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், கூரியரில் அனுப்பிய நோட்டீஸ் 17-ம் தேதி, மதுரை தி.மு.க-வினர் வீட்டுக் கதவைத் தட்டி உள்ளே விழுந்தது.  


முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன், பொன்முத்துராமலிங்கத்தின் மகன் சேதுராமலிங்கம், ரவீந்திரன், முபாரக் மந்திரி, ஒச்சுபாலு உள்ளிட்ட எட்டு பகுதிச் செயலாளர்கள், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் மிசா பாண்டியன், துணைச் செயலாளர்கள் சிவக்குமார், சின்னம்மாள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வி.கே.குருசாமி, தர்மலிங்கம் உள்ளிட்டவர்கள்தான் ஷோ-காஸ் நோட்டீஸ் வாங்கிய பாக்கியவான்கள்.


 இதற்கிடையே, ஸ்டாலினின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாநகரச் செயலாளர் தளபதி, அழகிரிக்கு பயந்து ஏற்கெனவே தனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு ஃபேக்ஸில் அனுப்பி விட்டாராம்.


கடந்த 17-ம் தேதி காலையில் அறிவாலயத்தில் ஆற்காட்டார் முன்னிலையில் கருணாநிதியிடம் வருத்தப்பட்டு பேசிய ஸ்டாலின், 'கழகத்தில் சேலமும் மதுரையும் மட்டும் தனித்தீவாக இருக்கிறது. என்னை நோகடிக்கும் விதமாகவே தொடர் சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். தலைவரின் நிகழ்ச்சியை நிர்வாகிகள் புறக்கணித்தால் அவர் என்ன மனவேதனையில் இருப்பாரோ, அத்தகைய வேதனையில்தான் இப்போது நான் இருக்கிறேன். என்னைப் புறக்கணித்த அத்தனை பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுங்க’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.

இதையடுத்து, 'மதுரையில் என்னதான் நடந்தது?’ என்று அழகிரி வட்டத்து சீனியர்கள் சிலருக்குப் போன் போட்டு விசாரித்தாராம் டி.கே.எஸ்.இளங்கோவன். அவரிடம் பேசிய பொறுப்பாளர் ஒருவர், 'கடந்த 10 வருஷமா அண்ணன் - தம்பி சர்ச்சைக்குள்ள சிக்கிக்கிட்டு நாங்க படாதபாடு படுறோம். போனா இவருக்கு வருத்தம்;


போகாவிட்டால் அவருக்குக் குத்தம். நாங்க என்னதான் பண்றது? கட்டுக்கோப்பான இயக்கத்தில் தலைவரோட பிள்ளைகளே ஆளுக்கு ஒரு நிலைப்பாட்டுல இருந்தாங்கன்னா... நாளைக்கு வீரபாண்டியார் மகன் ஒரு தப்புச் செஞ்சா தலைவரால் எப்படித் தட்டிக்கேட்க முடியும்?’ என்று வேதனையைக் கொட்டினாராம்.

நம்மிடம் பேசிய மதுரை தி.மு.க-வின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர், ''1982-ல் இருந்து அழகிரியால் மாவட்டச் செயலாளர்கள் ஆக்கப்பட்ட சிம்மக்கல் தாவூத், காவேரிமணியம், வேலுச்சாமி போன்றவர்கள் பிறகு, அவராலேயே ஓரம் கட்டப்பட்டார்கள். அந்த வரிசையில் இப்போது தளபதியும் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார். 'எனக்குப் பதவியே வேண்டாம்; பொழப்பைப் பாக்கவிடுங்க’ன்னு கடந்த நாலு மாசமாவே சொல்லிட்டு இருந்தாரு தளபதி.

 ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்காக, யாருகிட்டயும் கை ஏந்தாம 10 லட்ச ரூபாய் வரை செலவு செஞ்சிருக்கார். அதுதான் தப்பாப்போச்சு. கட்சி சொன்ன வேலையை செய்யலைங்கிறதுக்காக நடவடிக்கை எடுத்தா, அது சரி. ஆனா, கட்சி சொன்ன வேலையை செஞ்சதே தப்புங்கிற மாதிரி தளபதியை ராஜினாமா பண்ண வெச்சது நியாயம்தானா?'' என்று வருத்தப்​பட்டார்.

தி.மு.க. சட்டப்புள்ளி ஒருவரோ, ''ஸ்டாலின் மதுரைக்கு வந்தார். அன்று 'எங்களைப் போக வேண்டாம்’னு சொன்னது உண்மைதான். அதை மீறி நாங்கள் வந்திருந்தால், அதனால் வரும் பாதிப்புகளில் இருந்து ஸ்டாலின் எங்களைக் காப்பாற்றி இருப்பாரா? ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்கு எங்​களைப் போகவிடமால் தடுத்தது யார் என்பது உங்களுக்குத் தெரியும்​தானே... அப்படியானால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பும் தைரியம் தலைமைக்கு இருக்கிறதா?’  என்று சீறினார்.

ஷோ-காஸ் நோட்டீஸ் பற்றி அவைத்தலைவர் இசக்கி​முத்துவிடம் பேசினோம். ''விளக்கம் கேட்டிருக்காங்க. அழகிரி அண்ணன் வந்ததும் அவருகிட்ட கேட்டுட்டு முடிவெடுக்கலாம்னு இருக்கேன்'' என்றார்.

பொருளாளர் மிசா பாண்டி​யனிடம் கேட்டதற்கு, ''வழக்கமா பொதுச்செயலாளர்தான் நோட்டீஸ் அனுப்​புவார். ஆனா, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்​கோவன் அனுப்பி இருக்கார். இது உண்மையான நோட்டீஸ்தானா இல்லை, யாராச்சும் டுபாக்கூரா அனுப்பி​ இருக்​காங்களான்னு செக் பண்ணணும்'' என்று கலகலப்பாக ஆரம்பித்தவர்,


 ''இளைஞர் அணி நேர்காணல் கூட்டங்களுக்கு கட்சிப் பொறுப்பாளர்கள் போகணும்னு கட்டாயம் இல்லை. அதனால் போகலை. கண்டனக் கூட்டத்துக்கு நாங்க போகலைன்னு யாரு சொன்னது? அந்தக் கூட்டமும் முறையாவா நடந்துச்சு? கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளரான அழகிரி அண்ணனின் பெயரை போஸ்டர்களில் போடலை. அவருக்கே இந்த நிலை என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்னு யோசிச்சோம்.


அதனால, மேடைக்குப் போகாம இருந்துட்டோம். மீறி மேடைக்குப் போயிருந்தாலும் ஏதாவது குழப்பத்தை விளைவித்து, 'இவங்களாலதான் நடந்துச்சு’னு எங்க மேல பழிபோடவும் தயங்க மாட்டாங்க. அப்படித்தானே பரமக்குடியில ரித்தீஷ் மேல பழி சுமத்தினாங்க?

துணைச் செயலாளர் சின்னம்மாளின் சொந்த அண்ணன் 13-ம் தேதி கடலூரில் விபத்தில் இறந்து விட்டார். துக்கத்தில் இருந்த அவருக்கும் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். எங்களுக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரி அண்ணன் இருக்கிறார். 20-ம் தேதி அவர் மதுரை வந்ததும், இதற்கு என்ன பதில் கொடுக்கிறதுன்னு கேட்டு முடிவெடுப்போம்.


மதுரை நிர்வாகிகள் அனைவரையும் தலைமைக் கழகம் சென்னைக்கு அழைத்து, எங்கள் மீது கூறப்பட்ட அவதூறுக் குற்றச்சாட்டுக்கு, எங்களிடமும் விளக்கம் கேட்கணும். நாங்கள் 17 பேரும் பொறுப்பில் இருந்து விலகத் தயார். ஆனால், எங்களுக்கு பதிலாக வரும் 17 பேருக்காவது இனிமேல் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற விதியை கழகத் தலைமை வகுத்துக் கொடுக்க வேண்டும்'' என்றார். 

''கட்சிப் பொறுப்பாளர்களை ஸ்டாலின் கூட்டத்துக்கு போக​விடாமல் நீங்கள்தான் கஸ்டடியில் வைத்திருந் ததாக சொல்கிறார்களே'' என்று கேட்டதற்கு,


''கஸ்ட​டின்னு சொன் னாங்களா... அடைச்சி ​வெச்​சிருந்தேன்னு சொன்​னாங்களா? என்னோட காம்ப்ளக்ஸ் வாசல்ல நான் இருக்கும்போது கட்சிக்​காரங்க என்னைப் பார்க்க வர்றாங்க. உங்களைப் போலநண்பர்​​களும் வர்றாங்க. அவங்கள உட்கார​வெச்சுப் பேசிக்கிட்டு இருந்தா, அடைச்சி​வெச்சிருக்கேன்னு சொல்றதாக்கும்'' என்று சிரித்தார் மிசா பாண்டியன்.

அழகிரி படம் இல்லாமல் போஸ்டர் அடித்தது குறித்து இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராம் தரப்பிடம் பேசினோம். 'உங்க படத்தை போஸ்டர்ல போடலாமா?’ என்று அழகிரியிடம் ஜெயராம் கேட்டதாகவும்,  'எம் பேரைப் போட்டா கண்டிச்சு அறிக்கை விடுவேன்’ என்று அழகிரி சொல்லி விட்டதாகவும் சொல்கிறார்கள். 

ஷோ-காஸ் நோட்டீஸ் விவகாரத்தைக் கேள்விப்பட்ட அழகிரி, 'உங்களுக்கு எதுக்கு அனுப்புறாங்க? தைரியம் இருந்தா எனக்கு அனுப்பட்டும்’ என்று சீறியதாகச் சொல்கிறார்கள். ''நோட்டீஸுக்கு பதில் கொடுக்க வேண்டாம். எல்லாரும் ராஜினாமா பண்ணிருங் கன்னுதான் அண்ணன் சொல்லப்போறார்'' என்று சொல்லும் அழகிரி விசுவாசிகள், அழகிரியின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

இதனிடையே, கடந்த 16-ம் தேதி மதுரையில் ஸ்டாலினை சந்தித்த தென்மாவட்டச் செயலாளர்கள் சிலர், 'இனிமே நீங்க அடிக்கடி மதுரைப் பக்கம் வரணும். எங்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்தால், உங்கள் பின்னால் நிற்கத் தயார்’ என்று தெம்பு கொடுத்தார்களாம். 'எனக்கென்ன தயக்கம்? நீங்கள் அழைத்தால் கட்டாயம் வருவேன்’ என்று சொன்ன ஸ்டாலின், 'மே தினப் பொதுக் கூட்டத்தைக்கூட மதுரையில் நடத்தலாம்னு யோசிக்கிறேன்’ என்று சொன்னாராம்.

மதுரை மண்ணில் இன்னும் என்னென்ன களேபரங்கள் அரங்கேறப் போகின்றனவோ..?

டெயில் பீஸ்: 19-ம் தேதி இரவு ஷோ-காஸ் நோட்டீஸ் பெற்ற 17 பேரும் மதுரையில் ஹோட்டல் ஒன்றில் ரகசியமாகக் கூடிப் பேசினார்களாம். 'போஸ்டர்களில் அண்ணன் அழகிரியின் பெயர் போடாதது குறித்து மாநகரச் செயலாளர் தளபதியிடம் விளக்கம் கேட்டோம். அவர் சரியான பதிலை சொல்லாததால், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை’ என ஒரே மாதிரியானப் பதிலை அழகிரியிடம் காட்டிவிட்டு அனுப்ப அனைவரும் முடிவு செய்திருக் கிறார்களாம்.

-


 காமராஜர் - கண்ணதாசன் நட்பு எப்படிப்பட்டது? 


ஒரு கள்ளமும் இல்லாத தகப்பனுக்கும் எதிர்பார்ப்பு இல்லாத பிள்ளைக்குமான நட்பு அது. கண்ணதாசன் தி.மு.க.வில் இருக்கும்போது, காமராஜரை பொதுமேடைகளில் விமர்சித்தாலும் தனிப்பட்ட முறையில் அன்பு பாராட்டியவர். 'அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’ என்று பாட்டு எழுதி, காமராஜருடன் ஐக்கியம் ஆனவர். 'காட்டுக்கு ராஜா சிங்கம், பாட்டுக்கு ராஜா கண்ணதாசன்’ என்று பெருந்தலைவரே பாராட்டினார். 'ராஜாவோ இல்லையோ... நான் அடிபணியும், சக்கரவர்த்தி எனக்குச் சூட்டிய மகுடம் இது’ என்றார் கண்ணதாசன்.


கவிஞரிடம் தலைவருக்குப் பிடிக்காதது... மதுவின் மீதான மயக்கம். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக ஒருவர் நியமிக்கப் படும்போது... மது பெர்மிட் இருந்தால் அதனை சரண்டர் செய்துவிட வேண்டும் என்பது அந்தக் காலத்து விதி. கண்ணதாசனுக்கு டெல்லியில் இருந்து நோட்டீஸ் வந்தது. 'சரண்டர் பண்ணிடப்போறேன்’ என்று காமராஜரிடம் கவிஞர் சொன்னார். 'எதை?’ என்றார் தலைவர். 'அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கார்டைத்தான்’ என்று கவிஞர் சொன்னதும் காமராஜர் சிரித்த சிரிப்பில் இருக்கிறது அவர்களின் நட்பு.


''உங்கள் பெயரை 'காமதாசன்’ என்று மாற்றலாமா?'' என்று ஒருவர் கேட்டார். ''நல்லது 'ராஜ’ என்று நடுவில் சேர்த்து 'காமராஜதாசன்’ என்று வையுங்கள்'' என்று சொன்ன பதிலில் நட்பு மட்டும் அல்ல, பக்தியே தெரிகிறது!திருச்சியில் நடந்த காங்கிரஸ் முப்பெரும் விழாவினால் திருப்பம் உண்டா? 


இளங்கோவன் இருந்த பக்கம் ப.சிதம்பரம் திரும்ப மாட்டார். தங்கபாலு பக்கம் இளங்கோவன் திரும்ப மாட்டார். இந்தத் திருப்பத்தையா கேட்கிறீர்கள்?
 எஸ்.ஏ.காதர், விழுப்புரம்.


'ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது’ என்கிறாரே ஜெயலலிதா?


'யாருடைய சட்டத்தின் ஆட்சி’ என்பதையும் ஜெயலலிதா விளக்கிச் சொல்லி இருக்க வேண்டும். நாளிதழ்களில் நித்தமும் தெறிக்கிறதே ரத்தம். அது யாருடைய சட்டத்தின் ஆட்சி?


'கொலவெறி’ பாடல் இருந்தும் '3’ படம் குப்புறக் கவிழ என்ன காரணம்? 


அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு இருந்தால்... சினிமா மட்டுமல்ல, எதுவுமே கவிழத்தான் செய்யும்!


தம்மைச் சந்திக்க வந்த பா.ஜ.க. முக்கியத் தலைவர் அருண் ஜெட்லியிடம் தமது கட்சிக்கு துணை ஜனாதிபதி பதவியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த ஜெயலலிதாவின் ஆசை நிறைவேறுமா? 


ஆசை நிறைவேறுமா என்பது அப்புறம். ஜெயலலிதா, இப்படி ஒரு கோரிக்கை வைத்தாரா என்பதே சந்தேகம். துணை ஜனாதிபதி என்றால் யாருக்கு? தனக்கா? இல்லை கட்சியில் இன்னொரு வருக்கா? புரோட்டோகால்படி தன்னைவிட உயர்வான ஒரு பதவியை இன்னொருவருக்கு வாங்கித் தருவாரா ஜெயலலிதா? லாஜிக் இடிக்கிறதே!


இலங்கை செல்லும் குழுவில் கனிமொழி, திருமாவளவன் ஆகிய இருவரும் இடம்பெற்றிருக்க வேண்டாமா? 


போன முறை போய் 'பெயர் கெட்டது’தான் மிச்சம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்!
கொஞ்சம்கூட எதிர்பார்க்காத நிகழ்ச்சி ஏதாவது சமீபத்தில் நடந்ததா? 


இலங்கை செல்லும் குழுவில் தி.மு.க. இடம்பெறாது என்ற கருணாநிதியின் அறிவிப்பு!
காங்கிரஸையும் மன்மோகன்சிங்கையும் சோனியாவையும் விட்டுக் கொடுக்க மாட்டார் கருணாநிதி என்பதே இது வரையிலான நிலைமையாக இருக்க... அவரது இந்த முடிவு எதிர்பாராததுதான்.


தமிழக வாக்காளர்கள் ஏமாறுகிறார்களா? ஏமாற்றப் படுகிறார்களா? 


ஏமாறுகிறார்கள்! ஏமாறத் தயாராகவும்  இருக் கிறார்கள்.. எத்தனை முறை வேண்டுமானாலும்!!மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளராக மூன்றாவது முறை பிரகாஷ் காரத் தேர்வானது குறித்து? 


பிரகாஷ் காரத் மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டதைவிட முக்கியமானது, மார்க்சிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு மாநாட்டில் போடப்பட்டுள்ள தத்துவார்த்த தீர்மானம். 'அனைத்து வகையான கேடான போக்குகளுக்கு எதிராக நெறிப்படுத்தும் இயக்கத்தை நடத்துவோம்’ என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

'பொருளாதாரச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமே இந்தியாவைப் பொறுத்தவரை, வர்க்கப் போராட்டமாக அமையும்’ என்று, சீத்தாராம் யெச்சூரி பேசி இருக்கிறார். மூன்றாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரகாஷ் காரத் இதற்கு என்ன முயற்சிகள் செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்தே அவரை அளவிட முடியும்!


மூன்றாவது அணி அமைப்பதால் எல்லாம் அவர்களது தத்துவார்த்த தீர்மானத்தை நிறைவேற்றிவிட முடியாது!  தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் என்ன ஆகும்? 


கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், கஞ்சா கருப்பு, கருணாஸ் எல்லாரும் சேர்ந்து நடிக்கும் படம் எப்படி இருக்கும்? சகிக்காது அல்லவா? அப்படி இருக்கும் அந்தத் தொகுதி!


Wednesday, March 21, 2012

தெய்வீக கள்ளக்காதல் விவகார வழக்கு-போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பஞ்சாயத்து -

'எஸ்.எம்.எஸ். அனுப்பிய டீச்சர்... எகிறி ஓடிய மாணவன்...’ என்ற தலைப்பில் சென்னை சௌகார்பேட்டை பள்ளி ஆசிரியை குமுதுவுக்கும், மாணவனுக்கும் இடையிலான காதல் விவகாரம் பற்றி கட்டுரை ஆல்ரெடி வந்தது..  வீட்டை விட்டு ஓடிப்போன இருவரும் போலீஸில் பிடிபட்ட பிறகும் விவகாரம் தீர்ந்தபாடில்லை. ஆசிரியை குமுதுவும் மாணவனும் தங்களின் பொருந்தாக் காதலை கைவிட மறுத்து அடம் பிடிக்கிறார்கள்.


சி.பி - டீச்சர் .. டீச்சர்.. ஓ மை டீச்சர்.. உன்னை கண்டாலே ஆனந்தமே.... அப்டினு பாடி இருப்பானே?


இதனால் குமுது, அவரது கணவர் மற்றும் மாண வனின் பெற்றோர்களுக்கு இடையே மும்முனை சட்டப் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த விவகாரத்துக்குள் போகும்முன், குமுதுவையும் மாணவனையும் டெல்லியில் போலீஸார் வளைத்துப் பிடித்தது பற்றி பூக்கடை போலீஸார் சொல்வதைக் கேட்போம்.

சி.பி - மேட்டர் வெளீல தெரிஞ்சதும் குமுதுவின் வீட்டுக்காரர் கும்மு கும்முனு குமுறலையா?

''கடந்த 4-ம் தேதி தன் வீட்டில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணமும் 3 சவரன் நகை யையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார் குமுது. தனது தோழி சந்தோஷி வீட்டுக்கு மாணவனுடன் சென்று தங்கி உள்ளார். பின்னர், அங்கிருந்து ரயில் மூலம் காஷ்மீருக்குச் சென்றனர். அங்கு இரண்டு நாட்கள் தங்கியுள்ளனர். அவ்வப்போது தனது சகோதரி வந்தனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நிலைமையை விசாரித்து இருக்கிறார் குமுது.


சி.பி - குமுதம் போல் வந்த குமரியே.. உன் கூட ஒரு தங்கச்சி இல்லையே..!!

கடந்த 15-ம் தேதி வந்தனாவை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, அவரது செல்போனுக்குப் பேசினார் குமுது. தான் டெல்லியில் இருப்பதாகவும், அங்கு தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்து தரும்படியும் வந்தனாவைக் கேட்டார். உடனே வந்தனாவை அழைத்துக்கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் வடிவாம் பிகையும், செல்வராஜ், பிரபாகர் என்ற இரு காவலர்களும் டெல்லிக்கு விமானத்தில் பறந்தனர்.

சி.பி -தீவிரவாதிகளைக்கூட ஈசியாப்பிடிச்சடலாம் போல இருக்கு,, கள்ளக்காதல் தீவிரவாதிகளை பிடிக்கவே முடியலையாம்..


 குமுதுவையும் மாணவரையும் பிடித்து, அன்றிரவே மீண்டும் விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வந்தனர்.

 சி.பி - 2 பேரையும் தனித்தனி சீட்ல தானே கொண்டு வந்தீங்க? இல்லீன்னா அவங்க 2 பேரும் “ வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா?”அப்டினு டூயட் பாடி இருக்கப்போறாங்க.. 
இருவரையும் விசாரித்தபோது, அவர்கள் செய்தது தவறு என்று உணராதவர்களாகவே இருந்தனர். இனி வீட்டுக்குச் செல்ல மாட்டோம். ஒன்றாக சேர்ந்து வாழப்போகிறோம்’ என்றே திரும்ப திரும்பச் சொன்னார்கள்'' என்று சொன்னார்கள்.


சி.பி - திரும்ப திரும்ப  பேசறே நீ?  திரும்ப திரும்ப  பேசறே நீ?

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியை குமுதுவை 15 நாள் காவலில் வைக்கவும், மாணவனை ராயபுரம் காப்பகத்தில் வைத்து மருத்துவப் பரிசோதனை செய்யவும் மாஜிஸ்திரேட் அலெக்சாண்டர் உத்தரவிட்டார்.


சி.பி - ஹா ஹா அலெக்சாண்ட்ரா படம் ஞாபகம்வந்துடுச்சு.. அந்த கில்மா படத்துல .. சரி விடுங்க.. இது கண்ணியமான பிளாக்.. ஹி ஹி 

ஆசிரியையுடன் வாழவேண்டும் என்று தன் மகன் உறுதியாக இருப்பதால், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் துணையை மாணவனின் தந்தை சரவண்குமார் நாடியுள்ளார். அவருடைய வழக்குரைஞர் அழகேஸ்வரன், ''தனது வீட்டுக்குத் திரும்பிச் செல்லமாட்டேன் என்பதில் மாணவன் உறுதியாக உள்ளான். ஆசிரியை குமுதுவுடன்தான் வாழ்வேன் என்றும், அதற்கான வயதை எட்டும்வரை வேறு எங்காவது தங்குகிறேன் என்றும் பிடிவாதமாகக் கூறுகிறான்.

சி.பி - டேய்.. ந்கொய்யால .. உனக்கு வயசு 21  ஆகறப்ப டீச்சருக்கு 41 ஆகிடும்டா.. 40 ல நாய்க்குணம்.. கடிச்சு வெச்சுடும்.. சும்மா அடம் பிடிக்காத.. வேற இளசான டீச்சரா பார்க்கலாம்.. நைசா கழட்டி விட்டுட்டு வா.. 


அவன் தகுந்த மனமாற்றம் பெறுவதற்கு கவுன்சிலிங் தேவை. எனவேதான், அவனை இன்னும் ஆறு மாதங்கள் காப்பகத்திலேயே வைக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு செய்துள்ளோம்.


சி.பி - காப்பகத்துல ஏதாவது டீச்சர் இருக்காங்களா?ன்னு செக் பண்ணிக்குங்க.. அண்ணன் அதையும் 6 மாசத்துல செட் பண்ணி அதை 3 மாசம் ஆக்கிடப்போறான்..

 
அதேபோல், ஆசிரியை குமுதுவுக்கு ஜாமீன் தரக்கூடாது என்று கோரி ஆட்சேபனை மனுவும் தாக்கல் செய்துள்ளோம். தற்போது மாணவன் இருக்கும் மனநிலையில், ஆசிரியை குமுதுவை சந்திக்க நேரிட்டாலோ, அல்லது செல்போனில் தொடர்பு கொண்டாலோ, மீண்டும் அவர்களைப் பிரிப்பது இயலாத காரியமாகிவிடும்'' என்றார்.


சி.பி -  ஆமா.. பெரிய அம்பிகாவதி அமராவதி காதலா? எல்லாம் நயன் தாரா - பிரபு தேவா காதல் தானே.. ஆயுசு 6 மாசம் தான் புட்டுக்கும் பாருங்க.. பச்சை குத்துனவங்களே அப்பீட் ஆகறாங்க.. ஆசிரியை குமுதுவின் தந்தை நாராயண பாண்டே, தனது மகளை ஜாமீனில் வெளியில் கொண்டுவர தீவிர முயற்சி செய்து வருகிறார். ஆசிரியை குமுதுவின் கணவர் ராஜீவ் சுக்லாவைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் சார்பில் பேசிய வழக்கறிஞர் சுரேஷ்குமார், ''ராஜீவ் சுக்லா, தனியார் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த ஏழு மாதங்களாகவே குமுதுவின் நடவடிக்கையில் நிறைய மாற்றங் கள் தென்பட்டன.


சி.பி - சுக்லாம்பரதம் சுக்லாம்பரதம்..ஹி ஹி ஹி 


 இரவு ஒரு மணி வரை அந்த மாணவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதும் செல்போனில் பேசுவதுமாக இருந்திருக்கிறார். இதைக் கண்டித்தும் அவர் திருந்துவதாக இல்லை. இதனால், குமுதுவின் பெற்றோர்களிடம் விஷயத்தைக் கொண்டுசென்றார்.


சி.பி -  பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவின்ன்னு ஒரு கில்மா மலையாளப்படம்.. அதுல வர்ற மாதிரி போல.. மிட் நைட் 1 மணிக்கு அனுப்பினா அது எஸ்எம் எஸ் அல்ல.. கிஸ் செஸ்
ஆனால், 'மாணவனுடன் ஆசிரியை பேசுவது இயல்பு. இதற்கெல்லாம் சந்தேகப்படக்கூடாது’ என்று ராஜீவுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்

சி.பி - கல்வி பற்றி பேசுனா பரவாயில்லை.. கலவியை பற்றி எல்லாம்  பேசி இருக்காங்க?


இதனால், வெறுத்துப்போனவர், கடந்த மூன்று மாதங்களாக ராயபுரத்தில் தனிவீடு எடுத்து, தனது மகனுடன் தங்கி உள்ளார். இந்த விவகாரத்துக்குப் பிறகு ஆசிரியை குமுதுவிடம் இருந்து விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் ராஜீவ்'' என்றார்.

பெற்ற மகனின் எதிர்காலத்தைக் மீட்க வேண்டி மாணவனின் தந்தை சரவண்குமார் தாக்கல் செய்துள்ள வழக்கும், தனது 11 வயது மகனோடு மீதமுள்ள காலத்தைக் கழிப்பதற்காக குமுதுவின் கணவர் ராஜீவ் தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கும், குமுதுவைக் காப்பாற்ற வேண்டிய கடமைக்காக குமுதுவின் தந்தை நாராயண பாண்டே தாக்கல் செய்துள்ள மனுவும், உயர் நீதிமன்றத்தில் உள்ளன.விசித்திர வழக்குக்கு விரைவில் விடை தெரியட்டும்!


சி.பி - இது விசித்திர வழக்கு இல்லீங்கோவ்.. விசித்த்ரா வழக்குங்கோவ்.........