Thursday, June 07, 2012

என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதாபோல ஏன் முயற்சிக்கலை?-சந்தானம் பேட்டி @ விகடன்

http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Celebreties-Gallery/Santhanam/Santhanam-0011.jpg 

1''உங்களால்தான் வடிவேலுவுக்கு மார்க்கெட் போய்விட்டது என்ற கருத்து உண்மையா?'' 

 
 ''ஏங்க... அவர் என்ன கொத்தவால் சாவடி மார்க்கெட்டா... இல்லை நான்என்ன கோயம்பேடு மார்க்கெட்டா? யாராலயும் யார் மார்க்கெட்டும் போகாதுங்க. சினிமா வுல யாரும் யாரையும் தீர்மானிக்க முடியாது. இப்ப நான் ஹிட்டடிச்சா அதுக்கு யாரெல் லாம், எதெல்லாம் காரணமோ... அதுவேதான் நான் சொதப்பினதுக்கு ஒரு வகையில கார ணமா இருக்கும். புல்லரம்பாக்கம் பிரதர், ஆமா... அவருக்கு எங்கே மார்க்கெட் போச்சு? அவர் இப்பவும் ஸ்க்ரீன்ல வந்தா... ஆடியன்ஸ் அலறுவாங்களே!''



2. ''வாயைத் திறந்தாலே உங்களுக்கு 'பீர்... பீர்...’ என அடிக்கடி வருகிறதே... உங்க பிராண்ட் என்ன நைனா?'' 


'' 'ஓகே... ஓகே’ படத்துல ஊர்  உலகமே கேட்கிற மாதிரி சொல்லிட்டேனே... 'எந்த ஒயின்ஷாப்லயும் உங்க பிராண்ட் சில்லுனு கிடைக்குறதில்லை’னு. அதே பிராண்ட்தான் தோணி!''



3. ''பொதுவாக, தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்களை 'லூஸுப் பெண்’களாகவே காட்டுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் எப்படி? அசின் முதல் ஹன்சிகா வரை உடன் நடித்த அனுபவம் இருக்கிறதே உங்களுக்கு. ஒவ்வொருவரின் ப்ளஸ் பாயின்ட்ஸ் சொல்லுங்களேன்?'

'
''ஹன்சிகா, தமன்னா எல்லாருமே செம க்யூட். அவங்க ஸ்பாட்ல என்ன வார்த்தை சொன்னாலும் நான் அதைரிப்பீட் அடிச் சுட்டே இருப்பேன். இப்படியே கலாய்ச்சுட்டே இருக்கும்போது கோபம் வந்து கண்டபடி திட்டுவாங்க. அதுல இருந்து நாலு வார்த்தை யைப் பிடிச்சு, படத்துல அந்த வார்த்தையை வெச்சு அவங்களையே கலாய்ப்போம். எப்படி நம்ம தொழில் ரகசியம்?


அவங்களுக்கு டயலாக் வருதோ இல்லையோ, ஆனா ஃபேஸ் எக்ஸ்பிரஷன் பயங்கரமா இருக்கும். 'அவர் வீட்ல இல்லை. வெளியே போயிருக்கார்’. இதுதான் டயலாக். ஆனா, 'அங்கே வீடே இல்லை. பல வருஷமா அங்க ஆள் நடமாட்டமே இல்லை’ங்கிற அளவுக்கு அதுக்கு எக்ஸ்பிரஷன் கொடுப்பாங்க. நாம புரிஞ்சு நடிக்கிறதைவிட, அவங்க புரியாம நடிக்கிறதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். அதுதான் எல்லாருக்கும் ப்ளஸ் பாயின்ட்!''



3. ''இன்னமும் சின்னத் திரை நண்பர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்களா?'

'
''பெருசு, சிறுசுங்கிறது எல்லாம் ஸ்க்ரீன் அளவுல மட்டும்தான். மத்தபடி ஃப்ரெண்ட்ஷிப் எப்பவும் டபுள் எக்செல் சைஸ்தான். 'லொள்ளு சபா டீம்’ எப்பவும் என்கூடத்தான் இருப்பாங்க. இருக்காங்க! சுவாமிநாதன், மனோகர்னு லொள்ளு சபா டீம்ல பலரும் என்கூட சினிமால நடிச்சுட்டுத்தான் இருக்காங்க. அடிக்கடி சந்திச்சு மாத்தி மாத்திக் கலாய்ச்சுக்குவோம். ஜீவா இப்ப 'மாப்பிள்ளை விநாயகர்’ங்கிற படத்துல ஹீரோ. அதுல ஒரு கெஸ்ட் ரோல் பண்ணித் தா மச்சான்னு கேட்டான். அதுல நடிக்கிறேன். பாலாஜி அண்ணன், மாறன் அண்ணன்னு எங்க டீம் எல்லாருமே அடிக்கடி சந்திச்சுப்போம். பார்ட்டி, ஃபங்ஷன்னு வெளியே போனா, இவங்களோட போய் மொத்தமா கலாய்ச்சுக் கழுவிக் கழுவி ஊத்திட்டு வந்துருவேன்!''  




4  ''உங்க ப்ளஸ், மைனஸ் என்ன?''   


''ரெண்டுமே என் வாய்தான்!

சில நேரம் டைமிங்காப் பேசி ஸ்கோர் பண்ணிடுவேன். சில நேரம் ஓவராப் பேசி கோட்டை விட்டுருவேன். ஒரு டைரக்டர் நம்மகிட்ட வந்து, 'புதுமுகங்களை வெச்சுப் படம் பண்றோம். நீங்க நடிச்சா பப்ளிசிட்டிக்கு உதவியா இருக்கும்’னு என் கேரக்டர்பத்திச் சொன்னார். 'நல்ல விஷயமா இருக்கே... பண்ணிக் கொடுக்கலாம்’னு சம்மதிச்சேன்.

 சம்பளம் பேச தயாரிப்பாளர் வந்தார். லோ பட்ஜெட் படம், புதுமுகங்கள் எல்லாத்தையும் மனசுல வெச்சுக்கிட்டு என் வழக்கமான சம்பளத்தைவிட ரொம்பக் குறைச்சு சொன் னேன். அவர் அதுக்கே டென்ஷனாகி, 'என்ன சார் இவ்வளவு சம்பளம் கேட்கிறீங்க? சின்னப் படம் சார் இது’னு கொதிக்க ஆரம்பிச்சுட்டார். 'சின்னப் படம்னா எவ்ளோ... அரை மணி நேரம்தான் எடுக்குறீங்களா?’னு கலாய்ச்சுவிட்டுட்டேன். அவர் டென்ஷன் ஆகிக் கிளம்பிட்டார். இப்படித்தான் நம்ம வாய் எல்லாத்துக்கும் கவுன்டர் அடிக்கும்!''




5. ''உண்மையைச் சொல்லுங்க சந்தானம்... உங்களுக்குப் பிடிச்ச தேன்ன்ன் அடை, ஜாங்கிரி, ஜிலேபி... யாரு?'' 


''பேர் மட்டும் சொல்ல மாட்டேன் பரவாயில்லையா?


இப்படி நான் சொல்லிட்டா, இதுதான் நீங்க என்கிட்ட கேட்ட முதல் கேள்வியா இருக்கும். ஆனா, நான் கொடுக்கிற கடை சிப் பதிலா இருக்கும். அதோட என் வீட்டுல என்னை ஃபினிஷ் பண்ணிரு வாங்க!''



6. ''காதல்ல பல்பு வாங்கிய அனுபவம்?''   


''பாலிடெக்னிக் படிக்கும்போது ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் எழுதி, சாக் லேட் பின் பண்ணிக் கொடுத்தேன். அவ சாக்லேட்டை மட்டும் பிரிச்சுச் சாப்பிட்டுட்டு லெட்டரைத் திரும்பக் கொடுத்துட்டுப் போய்ட்டா. சரியான தீனிப் பண்டாரமா இருப்பா போலனு நெக்ஸ்ட் டைம் வெறும் லெட்டர் மட்டும் கொடுத்தேன். அதைப் படிச்சுட்டு இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொடுத்துட்டுப் போய்ட்டா.

 ரொம்ப அவமானமாயிருச்சு. முக்கா முக்கா மூணாவது டைமா தைரி யத்தை வரவெச்சு நேரடியாவே போய்சொல் லிட்டேன். என்னைப் பார்த்தா அவளுக்கு ரொம்பக் கேவலாமத் தோணியிருக்கணும் போல. பகபகனு சிரிச்சுட்டுப் போய்ட்டா. அப்படியே அவளை மறந்துட்டு, அடுத்த பொண்ணு மேல கான்சன்ட்ரேஷன் பண்ண ஆரம்பிச்சிட்டேன்!''



7. ''சந்தானம்... சிறு குறிப்பு வரைக?'' 


''சந்தானம் ஜாலியான பையன். எல் லாரையும் கலாய்ப்பேன். ரொம்ப சென்டி மென்ட் பார்ப்பேன். இருந்தாலும் நடுவில் எவ்வளவு விட்டுக்கொடுத்துப் போக முடியுமோ, அவ்வளவு விட்டுக்கொடுத்துப் போவேன். எவ்வளவு விட்டுக்கொடுத்தாலும் பிரச்னை தீரலை... ஒண்ணுமே பண்ண முடியாத சூழ்நிலைன்னா, வேற வழியே இல்லாம திரும்பவும் விட்டுக்கொடுத்திருவேன்.
நான் ஆறாவது படிச்சுட்டு இருக்கும்போது 'வாழ்க வளமுடன்’கிற அமைப்புல அப்பா என்னைச் சேர்த்துவிட்டுட்டார்.


 அதுல இருந்தே ஆன்மிக ஈடுபாடு அதிகமாயிருச்சு. கோயி லுக்கு ரொம்பப் போக மாட்டேன். ஆனா, சிவனைத் தினம் கும்பிடுவேன். இலவச இணைப்புகள்ல வர்ற ஆன்மிகப் புத்தகங் களை நீங்கள்லாம் புரட்டிக்கூடப் பார்க்க மாட்டீங்க. ஆனா, அதை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். ரமண மகரிஷி, புத்தர், வள்ளலார், பாபாஜினு பெரிய கலெக்ஷனே வெச்சிருக்கேன். ஆன்மிகப் புத்தகங்கள்ல படிக்கிறதையே நான் வேற மாதிரி படத்துல பயன்படுத்தியிருக்கேன்.


'ஆன்மாங்கிற பால், உடலுங்கிறது தண்ணீர். ஜீவாத்மாவோடு, இந்த பரமாத்மா எப்போ ஒண்ணுசேருதோ, அப்போ இந்த உடலை தண்ணீரைப் போலப் பிரிச்சு எடுக் கணும்’னு சொல்வாங்க. அதைத்தான் 'ஓகே ஓகே’ படத்துல குவார்ட்டர், தண்ணீர் பாக் கெட், யூஸ் அண்ட் த்ரோ கிளாஸ்வெச்சு, 'இது மீரா... இது நீ... இது நானு’ன்னு சொல் லிக் காமெடி பண்ணினேன்.


ஓவர் ஆலா... சந்தானம் ரொம்ப நல்லவன்ங்க!''



8. ''இயக்குநராகும் எண்ணம் இருக்கி றதா? அப்படி இயக்கினால் யார் உங்கள் ஹீரோ?'' 


''அப்படி ஒரு ஆசை இருக்குங்க. கால் ஷீட் கமிட்மென்ட் எல்லாம் முடிச்சிட்டு அதைப் பத்தி யோசிக்கணும். அப்போ யாருக்கு என் கதை பிடிக்குதோ, யார் கால்ஷீட் கொடுக்குறாங்களோ, அவங்களைவெச்சுப் படம் பண்ணுவேன். வெறுமனே சிரிச்சுட்டு மட்டும் போகாம, படம் முடிஞ்சதும் யோசிக்கிற மாதிரி காமெடி - சென்டிமென்ட் கலந்த ஒரு கதை வெச்சிருக்கேன். நான் படிச்ச ஆன்மிக விஷயங்களை காமெடி கோட்டிங்ல சொல்லுவேன்.

 நாமெல்லாம் வெளிநாட்டை ஆச்சர்யமாப் பார்க்கிறோம். ஆனா, நம்ம நாட்டுலயே எல்லா விஷயங்களும் இருக்குது. அங்கெல்லாம் 'எப்படி இருக்கீங்க?’னு கேட்டா, 'ஐ யம் ஃபைன்’னு சொல்வாங்க. அவங்க உடம்பையும் மனசையும் பிரிச்சுப் பார்க்க மாட்டாங்க. ஆனா, இங்கேதான் சோகமா இருந்தா 'மனசு சரியில்லை’னு சொல்லுவோம். டல்லா இருந்தா, 'உடம்புசரி இல்லை’னு சொல்லுவோம். இந்த மாதிரி யான தத்துவங்கள்லாம் நம்ம நாட்டுல மட்டும்தான் உண்டு. இப்படி நம்ம நாட்டுப் பெருமைகளை ஹைலைட் பண்ணி கதை சொல்லணும்!''



9. ''அதென்ன... நீங்கள் சொல்வதைக் கேட்கும், உங்களுக்கு செட் ஆகும்இயக்கு நர்களிடம் மட்டும்தான் நடிப்பேன் என்று ஏதேனும் பாலிசி வைத்திருக்கிறீர்களா?'' 


''டைரக்டர்-ஆர்ட்டிஸ்ட்டுங்கிற காம்பி னேஷன், சரக்கும் சோடாவும் மாதிரி. மிக்ஸிங் கரெக்டா இருக்கணும். இல்லாட்டி, வேற மாதிரி ஹேங் ஓவராகிடும். எனக்கு யாரெல்லாம் மிக்ஸிங் சரியா இருக்காங் களோ, அவங்களோட சேர்ந்து நிறைய படம் பண்றேன். அப்புறம் பெரிய இயக்குநர்கள் படங்கள்லயும் நடிச்சிட்டுதான் இருக்கேன். ஷங்கர் சார் படம் 'எந்திரன்’ பண்ணினேன். இப்ப அவர் விக்ரம் சாரை வெச்சுப் பண்ற  படத்துலயும் பண்றேன். கௌதம் மேனன் சாரின் 'நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் நடிக்கிறேன். நீங்க சொல்றதுலாம் இவங்க படங்கள்ல செட் ஆகாது


 .
10. ''சமூக விஷயங்களையும் நகைச்சுவையில் கலந்து தந்த என்.எஸ்.கிருஷ்ணன்,  எம்.ஆர்.ராதாபோல நீங்க ஏன் முயற்சிக்கலை?'' 


 ''அதுதான் அவங்க பண்ணிட்டாங்களே நண்பா! நாம ஏதாவது புதுசா பண்ணுவோம்னுதான் வேற மாதிரி ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்!''




11. ''லொள்ளு சபாவுக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம்?''   


''ரெண்டுமே லொள்ளுதான். என் சினிமா காமெடிகளை சேனல்ல பார்த்து ரசிக்கிறாங்கன்னா, லொள்ளு சபா காமெடிகளை இன்னமும் யூ-டியூப்ல பார்த்து ரசிக்கிறாங்க. மத்தபடி ரெண்டுக்கும் வேற பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனா, சினிமாங்கிறது எவர் க்ரீன். எதிர்கால ஜெனரேஷன் பார்த்து ரசிக்கிறது. 'டேய் என்னடா இது... அந்தக் காலத்துல சந்தானம் இவ்வளவு மொக்க போட்ருக்கான்’னு எதிர்காலத்துல யாரும் சொல்லிடக்கூடாதுங்கிறதால சினிமாவுக்காக நிறைய ஹோம் வொர்க் பண்றேன்!''



டிஸ்கி - 1 


- சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html


சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html