Saturday, April 28, 2012

ஆளும் கட்சிக்கு அதீத மெஜாரிட்டி ஆபத்தானதா? எப்படி?

1. அப்துல் கலாமுக்கு இரண்டாவது தடவையாக ஜனாதிபதி மாளிகையின் கதவு திறக்க வாய்ப்பு உள்ளதா? 

 
அப்படி ஒரு சூழ்நிலை வருமா​னால், அதைப் புறக்கணித்து​விடுவதுதான் அப்துல் கலாமுக்கு நல்லது. ஏற்கெனவே அவர் ஒரு முறை சூடுபட்ட பூனை என்பதால், எச்சரிக்​கையுடன் நடந்து கொள்வார். அடக்க ஒடுக்க​மான சிறகுகளைத்தான் ஜனாதிபதி மாளிகையில் பறக்க அனுமதிப்பார்கள். அக்னிச் சிறகு​களை அல்ல!


சி.பி - இவர் ஜனாதிபதி ஆனா குழந்தைங்க சந்தோஷப்படும், ஸ்டூடண்ட்ஸ்க்கு புக் எழுதுவாரு  அவ்ளவ் தான் 


2.  ராகுல் காந்தி தமிழகத்தில் ஒரு வருடம் டேரா போட்டால் காங்கிரஸ் வளருமா? 

சி.பி - ராகுல் காந்திக்கு தொப்பை வளரும். ஏதாவது ஃபிகர் கூட காதல் மலரும் அவ்ளவ் தான்

 
அவரது தாடி வேண்டுமானால் வளரும். ஏற்கெனவே, உ.பி. முடிவுகளால் லேசாகத் தாடி வளர்க்க ஆரம்பித்துள்ள ராகுல், தமிழகத்தில் இருந்தால் பெரும் தாடியில் வலம் வரத் தொடங்கி விடுவார்!



3. தமிழகம் பெருமைப்படும்படியான செய்தி ஏதாவது? 


ஒரு வரிக் கேள்வியில் அதை அடக்கிவிட முடியாது. பன்மொழிப் புலவர் என்று புகழப்பட்ட கா.அப்பாதுரையார் எழுதிய 'தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.


அடிமைத்தனத்தை மட்டும் அல்ல... அறத்துக்குப் புறம்பான அனைத்தையும் எதிர்ப்பதில் எல்லாக் காலத்திலும் தமிழகம் முன்னோடியாக இருந்துள்ளது புரியும். இதுவே, தமிழினத்தின் பெருமை!

சி.பி - நித்யானந்தா மதுரை ஆதீனம் ஆகிட்டாரே.. அது பெருமை இல்லாம ?


4. என்னிடம் பாதுகாவலர்களாக இருந்தவர்களுக்கு, வீட்டுவசதி வாரிய மனைகள், வீடுகள் ஒதுக்கியதில் என்ன தவறு?’ என்று கேட்கிறாரே கருணாநிதி? 

சி.பி - தமிழ் இனத்தலைவர் ஒதுக்குவதில் கில்லாடி, பதுக்குவதில் கேடி ஹி ஹி 


முதலமைச்சரின் பாதுகாவலர்கள் என்ற அடிப்​படையில், வீடோ, மனையோ ஒதுக்கட்டும். ஆனால், 'சமூக சேவகர்கள்’ என்ற ஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்டதை கருணாநிதி எப்படி நியாயப்​படுத்த முடியும்? சர்ட்டிஃபிகேட் கொடுத்த அனைவரும் சமூக சேவகர்களா? அவர்கள் செய்த சமூக சேவை என்ன?


அ.தி.மு.க. ஆட்சியில் யாருக்கு எல்லாம் வீடு கொடுக்கப்பட்டது என்றுதான் கருணாநிதியால் பட்டியல் போட முடிகிறது. செய்தது சரியா என்றால், 'அவரும்தானே இப்படிச் செய்தார்’ என்று பதில் வருகிறது. இது வாதம் அல்ல; விதண்டா​வாதம்!


5. மகாத்மா 'கிழித்த’ கோட்டை கஸ்தூரி பாய் எப்போ​தாவது எதற்காகவாவது தாண்டியது உண்டா? 

 
சுயநலம், குடும்ப நலத்தின் சிறு சுவடுகூட இல்லாமல் காந்தியால் வாழ முடியும். அப்படிப்பட்ட பற்றற்ற வாழ்க்கை கஸ்தூரிக்கு கஷ்டமாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆசிரமத்துக்கு அன்பளிப்பாக வந்த பொருட்களை, தனது பிள்ளைகளுக்காக கஸ்தூரி தனியாக எடுத்து வைத்திருந்தார்.


 இதைக் காந்தி கண்டுபிடித்து விட்டார். விசாரணை நடந்தது. 'இன்றைய சமையல் பாத்திரங்கள், எச்சில் தட்டுக்களை நீதான் கழுவ வேண்டும்’ என்று தண்டனை விதித்தார். அதைஏற்று, பாத்திரங்​களைக் கழுவத் தொடங்கினார் கஸ்தூரி. காந்தியும் உடன் வந்து உதவி செய்தார். 'மனைவிக்கு கிடைக்கும் தண்டனையில் பாதிப் பொறுப்பு கணவனுக்கும்தானே’ என்று விளக்கம் சொன்னார் காந்தி.


அதனால்தான், அவர் மகாத்மா!

சி.பி - நான் கூட எல்லா பாத்திரங்களையும் டெயிலி விலக்கி கழுவறேன்.. ஹூம். 



6. ஜெயலலிதா தனது பேச்சில் கூறும் குட்டிக் கதைகளை ரசிப்பது உண்டா? 


படிப்பது உண்டு!

ஜெயலலிதா அந்தக் கதைகளை இன்னும் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். இந்தக் காலத்தில் கதைகள் சொல்லிப் பேசும் தலைவர்கள் நிறைய இல்லை. ஜெயலலிதா மட்டுமே இருக்கிறார். இது நல்ல விஷயம்தான்!

சி.பி - பாக்யா புக்ல இருந்து சுட்டு சொல்வார் போல. 



7. 'தி.மு.க-வில் இளைஞர் அணியின் பங்கு மகத்தானது’ என்கிறாரே மு.க.ஸ்டாலின்? 


தான், தி.மு.க-வின் பொருளாளர் என்பதை ஸ்டாலின் முதலில் உணர வேண்டும். இன்னமும் அவர் தன்னை இளைஞர் அணிச் செயலாளராக மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கிறார். தி.மு.க-வில் எப்போதும் 'அடிமட்டத் தொண்டர்​களின் அணி’தான் மகத்தானது!



8. நரசிம்மராவ் - மன்மோகன் சிங் ஒப்பிடுங்கள்! 


ராவ் கண்டுபிடிப்புதானே சிங். தங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள மௌன சாமியார்களாகவே இருப்பதில் இருவரும் ஒரே ரகம்.


ஆனால், ஊறுகாய்க்காரர் ஊழல் முதல் உலக சாமியாரின் வில்லங்கத் தொடர்பு வரை நரசிம்ம ராவ் மீது தனிப்பட்ட முறையில் ஏராளமான களங்கம் உண்டு. அந்த வகையில் சொந்த பைஜா​மாவில் அழுக்கு சேர்க்காதவர் சிங்!


சி.பி - நரசிம்மராவ் - உம்மணாமூஞ்சி மன்மோகன் சிங்க் -பேசா மடந்தை



9. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நேர்மையாக நடக்கும்’ என்று ஜூ.வி எழுதியது. ஆனால், இன்று நேர்மாறாக நடக்கிறதே? 


நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் ஜூ.வி. எப்போதும் எழுதியது இல்லை. நேர்மாறாக நடக்கும் போதெல்லாம் கண்டித்து எழுதியும் வருகிறது. கருணாநிதியை விமர்சிப்பதாலேயே ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள் என்பதோ, ஜெய​லலிதாவைத் திட்டி எழுதுவதால் கருணாநிதிக்கு ஊதுகுழலாக மாறிவிட்டார்கள் என்பதோ... பத்திரிகைகள் மீது அரசியல்வாதிகள் கூறும் வழக்கமான அவதூறு. அதற்கு மற்றவர்கள் பலியாகி​ விடக்கூடாது!



10. சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை மேலும் மேலும் சிறுமைப்படுத்த ஆரம்பித்து விட்டதே ஆளும் கட்சி? 


அதீத மெஜாரிட்டி ஆபத்தானது என்பதற்கு இது ஓர் உதாரணம். 'அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கே.பி.முனுசாமி பதில் சொல்லலாம்’ என்ற அனுமதியை ஜெயலலிதா வழங்கி உள்ளார் என்பது உண்மைதான். அதற்காக எடுத்ததற்கெல்லாம் எழுவதும், எதிர்க்கட்சிகளை எதுவுமே சொல்ல விடாமல் செய்வதும் அமைச்சர் மாற்றிக்கொள்ள வேண்டிய மனோபாவம். 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்...’ என்ற குறளையே சபாநாயகர் தினமும் சொல்லலாம் என்பது என்னுடைய அபிப்ராயம்!

டிஸ்கி  - http://www.hotlinksin.com

திரட்டி குறித்து நேற்றே நாம் எழுதியிருந்தோம். நேற்று ‘மாலைச்சுடர்’ மாலை நாளிதழில் www.hotlinksin.com
திரட்டி குறித்து வெளியாகியிருந்த கட்டுரையில் இந்த திரட்டி பதிவுகளை எழுதும் பதிவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்க உள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. விரைவில் இதற்கான அறிவிப்புகளை www.hotlinksin.com
திரட்டி அறிவிக்க உள்ளது. எனவே பதிவுலக நண்பர்கள் உடனே ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைந்து பரிசுகளை வெல்லத் தயாராகிக் கொள்ளுங்கள்



4 comments:

Shiva sky said...

அண்ணே வணக்கம்..

Shiva sky said...

ராகுல் செத்துபோன பாம்பு விட்டுடுங்க..

அப்புக்குட்டி said...

அனைத்து கிராமங்களுக்கும் சென்று ஏழைகள் வீட்டில் கூழ் வாங்கி வாங்கி குடித்தே "ராகூழ் காந்தி" ஆகிய ராகுலுக்கு ஜிகிடி எல்லாம் தேவையில்ல, மீசை வைத்துக்கொள்ளாத இளைஞர்களே போதும் என்று கூகுளாண்டவர் சொல்றார்...

chinnapiyan said...

சொன்ன ஒவ்வொன்றும் நெத்தியடி. இதில் மறுத்து கருத்து சொள்ளவதற்கு ஏதுமில்லை.அழகாக எடுத்து கொடுத்ததுக்கு நன்றி.