Monday, August 01, 2011

இண்ட்டர் நேஷனல் ஃபிகர் VS மொக்கை ஃபிகர்

Where are the young and good-looking ministers in India?! ( India's 'Youth' Minister is 47 years old ) Pic : Hina Rabbani Khar, Pakistan’s youngest foreign minister.
 
 

 அ


1.ஒரு மொக்கை ஃபிகர் எல்லா நாட்டையும் சுத்திப்பார்த்தால் அது இண்ட்டர் நேஷனல் ஃபிகர் ஆகுமா? #டவுட்டு

------------------------

2. நான் உன் மீது அன்பு செலுத்தும்போது மென்மை ஆகிறேன்,நீ என் மீது அன்பு செலுத்தும்போது  மேன்மை ஆகிறேன்

-----------------------

3. அடிக்கடி உனக்கு கோபம் வந்துவிடுகிறது,உன்னை சமாதானப்படுத்தும்போது நமக்குள் அந்நியோன்யம் வந்து விடுகிறது.எனவே அடிக்கடி கோபப்படு,

-------------------

4.  அட.. கவிதைல பின்றீங்களே?


அன்பு கொண்ட நெஞ்சத்தின் கூந்தலை அவ்வப்போது பின்னுவதுண்டு, தப்பில்லையே?


-----------------

5. என் அளவிற்கு உன்னால் அன்பு செலுத்த முடியாது என்று நீ வருத்தப்படுவதால் உன் மீது நான் செலுத்தும் அன்பை குறைத்துக்கொண்டேன்

-----------------


White Rose
6. உன் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற அவசியம் எனக்குக்கிடையாது என்று ஆவேசமாக நீ கூறியதை அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்#காதலில் பொறுமை பெரிது

-----------------------

7. பாபா ராம்தேவை திருமணம் செய்ய விருப்பம் -நடிகை ராக்கி சாவந்த் #வேணாம்மா வம்பு, திடீர்னு உன் சுடிதாரை அவர் வாங்கி போட்டுக்குவார்

---------------

8. தேர்த்லில் தோல்வி சகஜம்,சட்டை கிழிவது போல-அன்பழகன்#தோல்வியில் சமாதானங்கள் சகிக்கல,அது ஜாக்கெட் கிழிவது போல

---------------------------

9. தலைவரே!கமிஷ்னர் ஆஃபீஸ் முன்னால் மறியல் பண்ண நம்ம கட்சி ஆளுங்க பயப்படறாங்க.


ஏன்?

ஏற்கனவே நம்மளை போலீஸ் தேடுது,கூண்டோட பிடிச்சுட்டுப்போய்ட்டா?


----------------------

10. மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் # அப்பாடா,இதுல பஞ்ச் டயலாக் பேச மாட்டார்,அடக்கி வாசிப்பார்,தைரியமா படம் பார்க்கலாம்

--------------------------

Scenery

11. எல்லோர் முன்னிலையிலும் நீ என் அடிமை என்றேனே?அவமானமா இல்லை? என்றாய்.அன்புக்கு நான் அடிமை என்பதில் வெகுமானம் தானே?#சமாதானம்

------------------------------

12. முகமே பார்க்காத நீ எப்படி என்னை நம்புகிறாய்? என்றேன்கடவுள்,காற்று,உயிர்,அன்பு நான்கையும் நாம் காணாமலேயே நம்புவதிலையா? என்றாள்

------------------------------

13. அன்புக்கு ஏங்குபவன் போல் நடிக்காதே!என்றாய்.நல்ல நடிகன் என்பவன் நடிப்பதே தெரியாமல் நடிப்பான் என்ற உண்மையை நீ மறந்தாய்

-----------------------


14. ”நான் இறந்து விட்டால் என்ன செய்வீர்கள்?”

“உன்னை வரவேற்க சொர்க்கத்தில் உனக்காக காத்திருப்பேன்”

------------------------

15.  ”சில சமயம் பொய்யாய்,பல சமயம் உண்மையாய் கோபிக்கிறேனே! எப்படி சமாளிக்கிறீர்கள்?”

”ஜஸ்ட் அன்பால்!”

----------------------------
 
 
 

 
 


16. உங்களுக்கு நாகரீகமே தெரியலை,யார் யார்ட்ட எப்படி நடந்துக்கறதுன்னே புரியல என்றாள்.அன்பு செலுத்துவதுதான் நாகரீகத்தின் உச்சம் என்று அறியாமல்

-----------------------

17. யாரிடம் அன்பு காட்டினாலும் கடைசி வரை அதே அளவு அன்பை யாராலும் காட்டி விட முடிவதில்லை

----------------------

18.கலைஞர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்! # நீங்கள் எனக்கு பாம் வைத்தாலும் நான் ஜண்டுபாமாகத்தான் இருப்பேன்-கலைஞர்@இமேஜினேஷன்

--------------------------------

19. சமச்சீர்கல்வி புத்தகங்களை ஆக.5-க்குள் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு #ஐ ஜாலி, இந்த வருஷம் ஆல் பாஸ் தான்,எவனும் படிக்கவே தேவை இல்லை

---------------------

20. திமுக.கூட்டணிக்கு முழுக்கு ராமதாஸ் அறிவிப்பு#எலக்‌ஷன் முடியும் வரை முழுகாம இருப்பார்,எலக்‌ஷன் முடிஞ்சா முழுக்கு போட்டுட்டு ஜோடி சேஞ்ச்


------------------


-----------------------------

 

21.அன்பு என்பதற்கு உயிர் இல்லை, ஆனால் பலர் உயிர் வாழ்வதற்குக்காரணமே அன்பு தான்

-----------------------------------


22. காதல் தோல்வி அடைந்த ஒரு மொக்கை ஃபிகரின் சக்கை (வலி) வரிகள் - “ இனி செலவுக்கு என்ன பண்ண?” 

----------------------

23.  ” டியர், நீயும், நானும் டூயட் பாடற மாதிரி கனவு கண்டேன்”

”அப்டியா? பட்டு சேலை, நகை எல்லாம் போட்டிருந்தேனா? #எப்பவும் பெண்கள் பெண்கள் தான்.

--------------------------

24. ”உனக்குப்பரிசு அளிக்க வேண்டும், உன்னிடம் இல்லாத ஒரு விலை மதிப்பான பொருள் சொல்”

’நீ!!!”

-----------------------

25. ஆரஞ்சு, ஆப்பிள் - என்ன வித்தியாசம்?

ஆரஞ்சு ஆரஞ்சு  கலர்ல இருக்கும், ஆப்பிள் ஆப்பிள்  கலர்ல இருக்காது # காலைலயேவா?கடி!!

--------------------------26. அய்யா,ஏதாவது இருந்தா பிச்சைபோடுங்கய்யா.

என் டிப்ளமோ சர்ட்டிஃபிகேட் தான் இருக்கு,வேணுமா?

யோவ்,என் கிட்டே டிகிரி சர்ட்டிஃபிகேட்டே இருக்கு .---------------------------

27. மேட்டூர் -ல் தாயுடன் குளிக்கச் சென்ற இரு மகள்கள் மாயம்,#முரசொலில இந்த நியூஸ் எப்டி வரும்? அம்மாவுடன் சென்ற இரு பெண்கள் மாயம்@இமேஜினேஷன்

------------------------

28. தாமதமாக கையெழுத்து போட்டால் எப்படி? : "மாஜி'யிடம் போலீசார் கிடுக்கிப்பிடி# அதானே? ஆட்டோகிராஃபா?லேட்டோகிராஃபா?

------------------------

29. காதலி ஃபோன் பண்ணுனா சாப்டாச்சா?ன்னு அக்கறையா கேப்பா.ஃபிரண்ட் ஃபோன் பண்ணுனா ஏதாவது ஃபிகர் புதுசா சிக்குச்சா?ன்னு கேக்கறான் # நண்பேண்டா

------------------------

30. கடினமான வார்த்தைகள் மென்மையான மனதை தொட முடியாது, ஆனால் மென்மையான  வார்த்தைகள் கடினமான  மனதை தொட்டு விடும்

---------------------------31.  சின்ன வயசுல பால் வேணாம்னு அடம்பிடிச்சேன்,டீன் ஏஜ்ல பிரின்சிபால்னா அய்யய்யோன்னு ஓட்டம் பிடிச்சேன்,இப்போ அமலாபால் மனசில் இடம் பிடிக்க நினைச்சேன்

-------------------------

32.  உனக்கும்,அவளுக்குமான உறவு தங்கமான உறவுன்னு எப்படி சொல்றே? 

ஒரு டைம் மீட் பண்ணுனா ரூ 18,000 செலவு ஆகிடுது# ஜோஸ்ஆலுக்காஸ் காதல்

----------------------------

33. அவளுக்குப்பால் வடியும் முகம் என்பதை நிரூபித்தாள், என் காதல் கனவுக்குப்பால் ஊற்றி

------------------------

34. ஆளுங்கட்சி வாத்தியார்னா அ ஃபார் அம்மா என சொல்லித்தருவார்,எதிர்க்கட்சி வாத்தியார்னா அ ஃபார்  அல்வா என சொல்லித்தருவாரா? #டவுட்டு

------------------

35. யுவர் ஆனர், என் கணவர்ட்ட இருந்து டைவர்ஸ் வேணும். 

ஏம்மா? அவரு கபடி பிளேயர் ஆச்சே? 

அதான் பிரச்சனை,நான் அவரை டச் பண்ணுனா அவுட் ஆகிடறார்.

------------------------


36. சென்னையில் தங்க வீடு தேடுகிறார் காஜல் அகர்வால்! #மேடம்,யார் கூட தங்க?

--------------------

37. எனக்கு ஞாபக மறதி நோய் இல்லை : கல்மாடி பேட்டி# ஆமா அவரு கஜினி இல்ல, ரஜினி மாதிரி, சீக்கிரம் சிங்கப்பூர் போகப்போறாரு

-----------------------

38.  சேமிக்கப்படாத நினைவுகள் , இருட்டறையில் இதயம் இரண்டும் ஒன்றே!எல்லா இதயங்களிலும் பகிரப்படாத ரகசியம் ஒளிந்திருக்கும்

------------------------

39. YOU NEVER GET A 2ND CHANCE TO MAKE A FIRST IMPRESSION

-------------------

40. உன் பிரிவினால் வரும் கண்ணீருக்குக்கூட தனி மரியாதை உண்டு

-----------------------


41. இமயமலை சென்று வந்தேன்.-  டி ஆர்# நயன் தாராவுக்கு மேரேஜ்னா சிம்பு தானே இமய மலை போகனும், நீங்க எதுக்கு போனீங்க அண்ணே?

--------------------------

42 தயாரிப்பாளரை ஏமாற்றிய மீரா ஜாஸ்மீனுக்கு சம்மன்! #வழக்கமா புருஷனைத்தானே ஏமாத்துவாங்க? ஒரு வேளை வருங்காலக்கணவரோ?


34 comments:

முத்தரசு said...

துண்டு - வரேன்

முத்தரசு said...

ரோஜாவும் மயிலும் சிறப்பான படங்கள் - மிக சிறப்பு முதல் படம் அழகு...அழகு.....!!!!

உணவு உலகம் said...

நல்லா படம் காட்றீங்கோ!

கோகுல் said...

புலியுடன் பதுமை அருமை.
ஆப்பிள் ஆரஞ்சு கலக்கல்.

உணவு உலகம் said...

இண்ட்லி இரண்டாவது ஓட்டு.

உணவு உலகம் said...

தமிழ்மணம் என்னாச்சு?

உணவு உலகம் said...

வாரம் தவறாமல் அமலாபால்!

முத்தரசு said...

எல்லாமே அருமை....கலக்கல்

உணவு உலகம் said...

என்றைக்கும் எட்டு மணிக்குப் பதிவிடும் பிராபல பதிவர், இன்று 8.45 வரை பதிவுலகம் வரவில்லை. நடந்தது என்ன?

கூடல் பாலா said...

அண்ணே முதல் ட்வீட் எங்க ஆளு ஹினாவை கிண்டல் பண்ற மாதிரி இருக்கு ...இதை"இன்டர் நேஷனல் ஃபிகர்" ரசிகர் மன்றம் சார்பாக வன்மையா கண்டிக்கிறேன் !

கூடல் பாலா said...

தமிழ் மணத்தில் சேர்த்து உட்டன் ..

கூடல் பாலா said...

\\\சென்னையில் "தங்க வீடு" தேடுகிறார் காஜல் அகர்வால் \\\ அவ்வளவு வசதியான பார்ட்டியா ?

J.P Josephine Baba said...

:-)

Anonymous said...

42...too much...c p...

தமிழ்வாசி பிரகாஷ் said...

பிகர்ஸ் ட்விட் சூப்பருங்கோ... மயில் படங்கள் நச்.

'பரிவை' சே.குமார் said...

எல்லாமே அருமை....கலக்கல்.
மயில் படங்கள் நச்.

ராஜி said...

என் அளவிற்கு உன்னால் அன்பு செலுத்த முடியாது என்று நீ வருத்தப்படுவதால் உன் மீது நான் செலுத்தும் அன்பை குறைத்துக்கொண்டேன்
>>>
சமாளிஃபிகேஷனா?

செங்கோவி said...

அண்ணன் இன்னும் அம்மணியை கவனிக்கலியேன்னு நினைச்சேன்..கவனிச்சிட்டீங்க!

Unknown said...

அண்ணே நல்லா இருக்குன்னே....அருமையா இருக்குன்னே....பய புள்ள 10 இருவதுன்னு போட்டுட்டு இருந்துது....யாரு சொன்னாங்கன்னு இப்படி நாப்பது இரண்டு விஷயங்கள போடுறாருன்னு தெரியல!...கொய்யால அந்த ஆளு மட்டும் கையில கெடச்சா கைமாதான்...ஹிஹி...உங்கள சொல்லலன்னே!

ராஜி said...

.ஒரு மொக்கை ஃபிகர் எல்லா நாட்டையும் சுத்திப்பார்த்தால் அது இண்ட்டர் நேஷனல் ஃபிகர் ஆகுமா? #டவுட்டு
>>>
யார் சார் அந்த இண்ட்டர் நேஷனல் ஃபிகர்? அவங்களா?

Arvind said...

1

இந்திரா said...

மென்மை.. மேன்மை..
வரிகள் அழகோ அழகு.

சென்னை பித்தன் said...

கலக்கல்!கற்கண்டு.

சசிகுமார் said...

இவுங்களை மினிஸ்ட்டரா போட்டாதால பாகிஸ்தான் அமைச்சரவையில் வராதவன் கூட இப்ப கரக்டா வந்துடரானாம்...இந்த டெக்னிக் நல்லா இருக்கே

சக்தி கல்வி மையம் said...

சசி நீயுமா?

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே என்னதான் உன் பதிவு இன்ட்ரெஸ்டா இருந்தாலும், தண்டவாளம் போட்டு ரயில்ல உக்காந்து படிக்கும் அளவுக்கு நீளம் தேவையா'டா மூதேவி ராஸ்கல் ம்ஹும்...???

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
அண்ணே நல்லா இருக்குன்னே....அருமையா இருக்குன்னே....பய புள்ள 10 இருவதுன்னு போட்டுட்டு இருந்துது....யாரு சொன்னாங்கன்னு இப்படி நாப்பது இரண்டு விஷயங்கள போடுறாருன்னு தெரியல!...கொய்யால அந்த ஆளு மட்டும் கையில கெடச்சா கைமாதான்...ஹிஹி...உங்கள சொல்லலன்னே!//

இந்த ராஸ்கல் மட்டும் என் கையில கெடச்சாம்னா இப்பவே இவனை நான் கைமா என்னா கைமா, உப்மாவே கிண்டிபுடுவேன் கொய்யால....


[[ஹி ஹி இருந்தாலும் நல்லாத்தேன் இருக்கு]]

maruthamooran said...

சூப்பர் பாஸ்...!

அதுவும் 15வது நிறையவே பிடித்திருக்கிறது.

காட்டான் said...

நல்லாதான்யா இருக்கு....
ஏனையா உங்களுக்கு டிஆர் மீது கடுப்பு இருக்கு...?

காட்டான் குழ போட்டான்....

Lali said...

கலக்கிடீங்க! ஒவ்வொன்னும் அருமை, நிறைய வரிகள் படிச்ச பின்னாடியும் மனசுல ஓடிட்டே இருக்கு.. :)

Lali
http://karadipommai.blogspot.com/

Napoo Sounthar said...

சூப்பர்..

நிரூபன் said...

47 வயது பாரின் மினிஸ்டரையா பிகர் என்று சொல்லுறீங்க.

ஸப்பா.

நிரூபன் said...

காதல், அரசியல், சினிமா என எல்லாவற்றிலுமிருந்து நச்சென்று ஒட்டிக் கொள்ளும் டுவிட்ஸ்களைத் தொகுத்துத் தந்திருக்கிறீங்க.

நிரூபன் said...

என் உளம் நிறைந்த இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் பாஸ்.