Monday, August 29, 2011

ஃபிகரு ஒற்றை நாடியா? ரெட்டை நாடியா? எது டாப்?


1.ஒற்றை நாடியா இருந்தா பிடிக்குமா?ரெட்டை நாடியா இருந்தா பிடிக்குமா?எனகேட்டாள்  காதலி.நீ என் உயிர் நாடியா இருந்தா பிடிக்கும்னேன்#காணாத காதல்

-----------------------------

2. ஐ லவ் யூ சொல் 

என்றேன்.

ம்ஹூம், அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் 

என்றாள் காதலி.

அப்போ பேச நேரம் இருக்காது

என்றேன்,முகம் சிவந்தாள்

--------------------------

3. நறுமணக்காதல் என்பது என்ன?மல்லிகைச்சரத்தை கூந்தலில் சூடிய காதலி ஸ்கூட்டி ஓட்ட நீ பின்னால் அமர்ந்து செல்லும்போது நீ அனுபவிப்பது#லவ்வாலஜி

---------------------

4. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் என்றாள் காதலி,கூடா நட்பு கேடா முடியும் என்றேன்,ஓக்கே சொன்னாள் #தாங்க்ஸ் டூ கலைஞர்

--------------------------

5. நான் சேலையில் அழகா? சுடியில் அழகா? என்றாள் காதலி.ரோஜா செடியில் அழகா? கூந்தலில் அழகா? என்றேன்

------------------------


Nayantaras family forces Prabhu Deva


6. பத்திரிகையாளர் வேடத்தில் பூனம் பஜ்வா!#விருந்து,திரைச்சித்ரா மாதிரி மஞ்சள் பத்திரிக்கையா இருக்கப்போகுது, நிறைய பேரு மங்களகரமானதுங்கறாங்க

--------------------------

7, கவர்ச்சிக்கு மாறுகிறார் அனுயா!#என்னமோ வீடு மாறுகிறார்ங்கற ரேஞ்ச்ல நியூஸ் போடறாங்களே?இத்தனை நாளா குணச்சித்திரத்தை கொட்டிமுடிச்சுட்டாங்களா?

-----------------------------------

8. என் கிட்டே உனக்கு பிடிச்ச அம்சம் எது? என்றாள் காதலி.. டோட்டலாகவே நீ அம்சமா இருக்கியே அது தான் என்றேன்#லவ்வாலஜி

--------------------

9. இனி எனக்கு ஒரு SMS கூட அனுப்பாதே என்று கோபமாக SMS  செய்தாள் காதலி. ஓக்கே டன் என்று SMS  ரிப்ளை அனுப்பினேன்#ஊடல்

-----------------------------

10. 25 வயதுக்கு குறைவானவர்கள் "சரக்கு' அடிக்க தடை வரலாம்-செய்தி#நல்ல வேளை,சரக்கு அடிக்கறதுக்கு மட்டும் தடை வருது

A Hamster funny trick...:)
funny_hamster-wallpaper-960x640.jpga

11.மவுன சாமியார் மன்மோகன் சிங் : சத்ருகன் விமர்சனம் # என்னது? சாமியாரா? ச்சே! ச்சே!  “அப்படி” எல்லாம் இருக்காது

------------------------

12. பிரதமருக்கு சம்மன் -ஆ. ராசா வலியுறுத்தல் # கூட்டாளியை காட்டிக்கொடுத்த ஷோக்காளி!!!!

---------------------

13.ஆண்களை எடை போடுவதில் பெண்கள் கில்லடிகள், ஆனால் என்ன பரிதாபம்னா அவங்களும் ஓவரா எடை போட்டுடறாங்க # ஓவர் வெயிட் ஓமனாஸ்

------------------------------

14.  நமக்குப்பிடித்தமானவர்கள் மனதிற்குப்பிடித்தமானவை நமக்கும் பிடித்துப்போவது திண்ணம்

------------------------------

15. 60- ஆம் கல்யாணத்தை ஆர்ப்பாட்டமா கொண்டாடுனா சாதா தலைவன், 60 கல்யாணம் அமுக்கமா பண்ணிக்கிட்டா அவன் தான் சரித்திரத்தலைவன்

---------------16. கண்களால் கிறங்கடித்தால் அது பெண்கள், உதடுகளால் சரக்கடித்தால் அது ஆண்கள்

--------------------------

17. டியர்,உன்னைப்பார்க்கும்போது எனக்கு குதிரை ஞாபகம் தான் வருது, இன்னா ஹைட் நீ?

சாரி. உன்னைப்பார்க்கறப்ப எனக்கு கழுதை ஞாபகம் தான் வருது

----------------------------------

18. வீட்ல இருந்த லேண்ட் லைன் ஃபோன் கனெக்‌ஷனை ஏன் கட் பண்ணிட்டீங்க தலைவரே?

நில மோசடி வழக்கு பாய்ஞ்சிட்டா?

------------------

19.  மெல்லத்திறந்த கதவு பட பாடலான தேடும் கண் பார்வை  தவிக்க தமிழின் சிறந்த கஜல் பாடல் #  SPB பேட்டி  IN  குமுதம்

---------------------------

20.  யோவ் பி ஏ, லிவ்விங்க் டுகெதர்னா என்னய்யா?

தலைவரே! மகளிர் அணித்தலைவி கூட இருக்கீங்களே? அதுதான்

-----------------------


 
 

21 தலைல அடிச்சுக்கிட்டே ஆடியன்ஸ் படம் பார்க்கறப்ப பல்லை கடிச்சுக்கிட்டே வசனம் பேசுறவரு எங்க கேப்டன் #CaptainBirthday


--------------------------

22. முதல் முறையா பேக் ஷாட் அறிமுகப்படுத்துனவரே எங்க கேப்டன் தான் ( ஃபைட் சீன்ல )

---------------------------


23. வாதாடும் உன் உதடுகளை அடைக்க எனக்கு வாதிடும் சாமார்த்தியம் இல்லாததால்  குறுக்கு வழியை  தேர்ந்தெடுத்தேன் # கிஸ்ஸாலஜி

---------------------------

24. ஃபிகரைப்பார்த்துட்டு இருந்தா லைஃப் போயிடும் , ஃபிகரைப்பார்க்காம விட்டா  ஃபிகர் போயிடும், ஃபிகரா? லைஃபா?

------------------------

25.  வெற்றி ஒரு போதும் உன்னைத்தேடி வராது, நீ தான் அதை தேடி செல்ல வேண்டும்

----------------------------26  மற்றவர்கள் மனதைத்தொடும்படி உன் பேச்சு இருக்க வேண்டும் எனில் உன் பேச்சு உன் உள்ளத்திலிருந்து வர வேண்டும், உதட்டிலிருந்து அல்ல!

-------------------------

27. அன்னா முன்னேற்றக்கழகம் ஒன்று உருவானால் பல கழகங்கள் வாழ்வில் கலவரங்கள் நிகழ்வது திண்ணம்

-----------------------------


28. இலவசங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதே எனது லட்சியம்: 100-வது நாளையொட்டி பேரவையில் ஜெயலலிதா # அப்போ கொடுத்த வாக்கு எல்லாம் ஊ ஊ ஊ வா?

--------------


29. டியர், நான் கணக்குல வீக் என்பதால் என்னை ரிஜக்ட் பண்ணிட்டியா? ஏன்?

டேய், லூசு, கணக்கே சரியா வர்லை, நீ எப்படி ஒருஃபிகரை கணக்கு பண்ணப்போறே?

--------------------------

30.  பசங்க கலர் கலரா பேனா எடுத்துட்டு போறதுக்கு காரணம் அவங்க வசம் ஏகப்பட்ட கலருங்க இருக்குன்னு காட்டிக்கறதுக்காக்கூடா இருக்கலாம்

--------------------------

 
 


31. எந்த ஊழலும் நடைபெறவில்லை, எல்லாம் முறைப்படிதான் நடந்துள்ளது - ஆ ராசா # முறைப்படின்னா சமமா பிரிச்சுக்கிட்டீங்களா?

----------------------

32. நான் என்ன சுகர் பேஷண்ட்டா? ஏன் முத்தம் தர மறுக்கிறாய்? பை ஃபிகர் பேஷண்ட் (ஃபிகரால் பேஷண்ட் ஆனோர் சங்கம்)

--------------------------

33. டியர், நீங்க ராணி, தேவி இந்த  2 புக்ஸ் மட்டும் படிக்க வேணாம்.

ஏன்?

அதுல லேடீஸ் பேரு இருக்கே?

-------------------------

34.  பழையவற்றை, வேண்டாதவற்றை எரிப்பது போகிப்பண்டிகை,மெய் ஆசைகளை, தீண்டாதவற்றை எரிப்பது போகப்பண்டிகை

--------------------------

35.  எடியூரப்பா,ஷீலாதீட்சித் -வித்தியாசம்? எடியூரப்பா தன் ஃபேமிலி வெல்த் மட்டும் பார்த்துக்கிட்டாரு, ஷீலாதீட்சித் காமன்வெல்த்தை கவனிச்சாரு

---------------------


 
 

36. தலைவரே!காமன்வெல்த் ஊழல் பற்றி ஏன் கருத்து தெரிவிக்கலை?

காமன் என்பது காமக்கடவுள்,ஆன்மீகத்தில் தலையிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திடும்.

----------------------------

37. அதிமுக ஆட்சி குறித்து ஒரு வருடம் கழித்தே கருத்து தெரிவிப்பேன்- விஜயகாந்த் #  அதாவது உள்ளாட்சித்தேர்தல் எல்லாம் முடிஞ்ச பிறகு?

-------------------------

38.  காதலிப்பவர்களுக்கு மட்டுமே காதல் புனிதம், காதலிக்காதவர்களுக்கும் , காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கும் அது பைத்தியகாரத்தனம்

----------------------

39.  கடவுளைக்கண்டவரை கண்டவர் யாரும் இலர், ஆனால் காதலை கண்டவர், உண்டவர் பலர் நம்முடன் இருப்பதால் கடவுளை விட காதல்-ல்  நம்பகத்தன்மை அதிகம்

---------------------

40. வடிவேலு மீதான நிலமோசடி - திடீர் திருப்பம் : சம்பந்தப்பட்ட நபரிடமே நிலத்தை ஒப்படைத்தார்!!  #  ஈரோடு NKKP ராஜா வகையறாக்கள் கவனிக்க

48 comments:

கோவை நேரம் said...

முதல் வடை

கோவை நேரம் said...

கின்னஸ் சாதனை ...நான் முதல் இடம் பிடிச்சிட்டேன்

கோவை நேரம் said...

இனி பொறுமையா படிப்போம்ல ...

கோவை நேரம் said...

ஆமா..எலி, பூனை , ஆமை இப்படி படம் போட்டுவிட்டு எதுக்கு சம்பந்தம் இல்லாமல் நம்ம நயன் போட்டோ ..?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எல்லாம் நல்ல இருக்கு மெதுவா மாலையில் கமெண்ட் போட்டுக்கிறேன்
இப்போதைக்கு, சைட் அடிக்க கூடிய சீக்கிரம் தடா வரப் போகுதாம் . இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க

சசிகுமார் said...

என்னப்பா காலையிலேயே இப்படி கிச்சுகிச்சு மூட்டுற

Unknown said...

ஏன்யா உன் டாபிக்கெல்லாமே அதிகமா பிகரோன்னு இருக்கே...ஜொள்ளு விட முடியாதவங்க இப்படித்தான் நினைப்பாங்க போல ஹிஹி!

RAMA RAVI (RAMVI) said...

பூனை,ஆமை படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு...

கோகுல் said...

எதெதுதுக்கேல்லாம் கலைஞர இழுக்குரிங்க!பாவம்!

மூணு பதிவுக்கான மேட்டர் ஒரே பதிவில கலக்குங்க!

Barath said...

all are good

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அத்தனையும் அசத்தல்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றைய படங்கள் பட்டைய கிளப்புகிறது..

Riyas said...

படங்கள் சூப்பர்

காங்கேயம் P.நந்தகுமார் said...

21, 22, 28 சூப்பர். 28 ல் யார் கையேந்துவது? நீங்க நடத்த போற மோசடி நாடகத்திற்கு மக்களை கையேந்த வச்சுட்டு. இப்ப என்னடான்ன? ஒரு வேளை தலைல பலமா அடிபட்டிருக்குமோன்னு டவுட்டு வந்துட்டுது.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
M (Real Santhanam Fanz) said...

செம காமெடி அண்ணே.. மெயில் கெடசுச்சா?
உங்க பாணில ஒரு பதிவு போட்டு இருக்கோம்(உங்களுக்கு நன்றி சொல்லிக்கிட்டு)
நீங்களும் அப்புறம் உங்க ஆக்களும் அங்கயும் வந்து உங்க ஆதரவ தருவீங்கன்னு நம்புறோம்!!
சந்தானம் பேட்டி: அவரையே கலாய்க்கிறோம்!! பகுதி -1

Unknown said...

சூப்பர் தம்பி! நயனை பிராணிகளின் வரிசையில் சேர்த்துட்டீங்களா? :-)

சென்னை பித்தன் said...

நம்பர் 1.numero uno!

கூடல் பாலா said...

அடேங்கப்பா !

rajamelaiyur said...

Kalakkal twits

Yoga.s.FR said...

ஆண்களை எடை போடுவதில்.................................................................................../சூப்பர்!!!!!

Yoga.s.FR said...

கோவை நேரம் said...

கின்னஸ் சாதனை ...நான் முதல் இடம் பிடிச்சிட்டேன்.////வச்சுக்குங்க!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ட்விட்ஸ் சூப்பரு... பதிவு ரொம்ப சின்னதா இருக்கு.. இன்னும் ஒரு நாப்பது ட்விட்ஸ் சேர்த்திருக்கலாம்.

Yoga.s.FR said...

தமிழ்வாசி - Prakash said...

ட்விட்ஸ் சூப்பரு... பதிவு ரொம்ப சின்னதா இருக்கு.. இன்னும் ஒரு நாப்பது ட்விட்ஸ் சேர்த்திருக்கலாம்.////எங்க சார் போயிட்டீங்க?நேத்துப் பூரா தேடினமே?

sathishsangkavi.blogspot.com said...

ஒற்றை நாடியா ரெட்டை நாடியா அப்படின்னா என்னய்யா...

Mohamed Faaique said...

36வது`ல லொல்லு ஜாஸ்தி

சக்தி கல்வி மையம் said...

படங்கள் அருமையோ அருமை..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

படங்கள் அருமை .

Unknown said...

17,18,31, 35,40 இதெல்லாம் சூப்பருங்க..

செங்கோவி said...

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் - உயிர்நாடி சூப்பர்!

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
உங்களுக்கு முன் கூட்டியே எவற்றையும் அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறதா?

நிரூபன் said...

நறுக்குகள் சூப்பர் பாஸ்,.

நிரூபன் said...

வாதாடும் உன் உதடுகளை அடைக்க எனக்கு வாதிடும் சாமார்த்தியம் இல்லாததால் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தேன் # கிஸ்ஸாலஜி//

ஆகா...இப்படியெல்லாம் யோசிப்பீங்களா?

நிரூபன் said...

25. வெற்றி ஒரு போதும் உன்னைத்தேடி வராது, நீ தான் அதை தேடி செல்ல வேண்டும்//

தத்துவம் கலக்கல் பாஸ்,

நிரூபன் said...

நம்ம பாஸும் கிசு கிசு சொல்ல கிளம்பிட்டாரா.

காட்டான் said...

மாப்பிள உனக்கு இப்ப கொஞ்சம் குளிர் விட்டுப்போச்சு இன்னும் அம்மாவுக்கு மாற்றா வேற கட்சி இல்லையப்பு திமுகவை தவிர.. ஹி ஹி ஹி

கடம்பவன குயில் said...

//பிகரைப்பார்த்தால் லைப்போயிடும். பிகரை பார்க்காமல் விட்டால் பிகர் போயிடும். பிகரா லைஃபா??//

இந்த பிகர் போயிடுச்சுன்னா அடுத்தத கரக்ட் பண்ணலாம். இந்த லைப் போயிடுச்சுன்னா ?..........

கடம்பவன குயில் said...

23. கிஸ்ஸாலஜி . இதுதான் சுத்தமான சிபி ட்விட்ஸ்ட். எங்கே ட்ரேட்மார்க் காணோமேன்னு நினைச்சேன்..

ஆனாலும் இரண்டுபதிவை இணைத்து ஒரே பதிவாய் போட்டதுபோல் ட்விட்ஸ்ட் அதிகம்தான்.

கடம்பவன குயில் said...

திடீரென்று டிரண்ட் மாறி தத்துவ முத்துக்களை வேறு ஆங்காங்கே சிதறவிட்டிருக்கிறீர்கள்.

ஆகமொத்தம் உங்க சைவ அசைவ நண்பர்களுக்கு அறுசுவை உணவால் விருந்து கொடுத்திருக்கிறீர்கள் போலுள்ளது.

கடம்பவன குயில் said...

படங்களைப்பற்றி சொல்லாது போனால் படங்களில் உள்ள உயிரினங்கள் என்னை மன்னிக்காது. அனைவரையும் ரசிக்கச் செய்தது அருமையான பிராணிகளின் படங்கள்.

Nirosh said...

ம்ம்ம் என்னத்த சொல்லுறது வழமைபோல அடி தூள...! அத்தனையும் கலக்கல்..!

சுதா SJ said...

ஐயோ அண்ணே , நயன்தாரா சூப்பர் அண்ணே,
தாடிக்காரர் ரெம்ப லக்கி
எனக்கு பொறாமை பொறாமையா வருது அண்ணே
அவ்வவ்

Anonymous said...

துஷி...அடுத்தவர் மனைவி மேல் ஆசைப்படுவது தவறு...-:)

Periya Venghayam said...

வர வர உங்கள் பதிவுகளில் ஒரு சுவாரஸ்யமே இல்லாமல் இருக்கிறது. முன்பெல்லாம் நீங்கள் எழுதும் அந்த இரண்டு வரிகளுக்காகவே ஒன்றுக்கு பலமுறை படிப்பேன். ஆனால் அந்த ஆர்வம் இப்போதெல்லாம் இல்லை.

ராஜி said...

என் கிட்டே உனக்கு பிடிச்ச அம்சம் எது? என்றாள் காதலி.. டோட்டலாகவே நீ அம்சமா இருக்கியே அது தான் என்றேன்#லவ்வாலஜி
காய்ஞ்ச மாடு

ராஜி said...

இனி எனக்கு ஒரு SMS கூட அனுப்பாதே என்று கோபமாக SMS செய்தாள் காதலி. ஓக்கே டன் என்று SMS ரிப்ளை அனுப்பினேன்#ஊடல்
ஆக மொத்தம் செல்போன் கம்பெனிக்கரனுக்கு வருமானம்தான் போங்க.

ராஜி said...

நான் என்ன சுகர் பேஷண்ட்டா? ஏன் முத்தம் தர மறுக்கிறாய்? பை ஃபிகர் பேஷண்ட் (ஃபிகரால் பேஷண்ட் ஆனோர் சங்கம்)
..
நீங்க அதுல உறுப்பினர் ஆகிட்டிங்களா?

ராஜி said...

டியர், நீங்க ராணி, தேவி இந்த 2 புக்ஸ் மட்டும் படிக்க வேணாம்.

ஏன்?

அதுல லேடீஸ் பேரு இருக்கே?

>>
இந்த வரிசையில இன்னும் நிறைய புக்ஸ் இருக்கு. அதையும் சேர்த்துக்கோங்க.