Monday, August 08, 2011

ஒரு பெண்ணின் உச்ச பட்ச அழகு பொங்கி வழிவது எப்போது?1. நகையில் பெண்களுக்கு ஆர்வம் அதிகம் என்பதால்தான் ஆண்களின் காதல் தோல்வியை எள்ளி “நகை”யாடுகிறார்களோ, என்னவோ?

-------------------------
2. ”உங்க காதலை நான் நிராகரிச்சும் நீங்க சோகமயம் ஆகலை, எப்டி? 

“ என் அன்பை உணர முடியாத உனக்கு என் வலியை மட்டும் உணர முடியுமா?

------------------------


3. நீ தந்த நிராகரிப்பின் வலிகளை நான் உள் வாங்கிக்கொண்டேன்,சுத்தீகரிக்கப்பட்ட அந்த வலிகள் உன் மீது அன்பாகப்பொழிகின்றன

-------------------------


4. திமுகவை யாராலும் அழிக்க முடியாது - கலைஞர் # தலைவரே! உங்க கட்சி என்ன எய்ட்ஸ் நோயா?

--------------------

5. துணிகளை துவைக்கும் முன் சோப்பு நீரில் அவைகளை ஊற வைப்பது மாதிரி உன்னைப்பிரியும் முன் உன் நினைவுகளை கொஞ்சம் ஊற வைத்துக்கொள்கிறேன் சில கவிதைகளில்

----------------------------
6. கற்பனை என்பது நாலெட்ஜை விட சக்தி வாய்ந்தது, ஏன்னா நாலெட்ஜ் லிமிட்டெட், கற்பனை அன்லிமிட்டட்.

------------------------

7. எப்போது நீ ஃபோன் செஞ்சாலும் முதல் ரிங்கில் நான் எடுத்துடுவேன், கடைசி ரிங்க் வரை  காக்க வைத்து வேண்டும் என்றே லேட் பண்ணி நீ எடுப்பாய்

------------------------------

8. தம்பதிகளுக்கு நடுவே படுத்திருக்கும் குழந்தையை தட்டிக்கொடுக்கும் இரண்டு கைகள் தொட்டுக்கொள்வது கூடலுக்கான அழைப்பின் சமிக்ஞை

--------------------

9. உலகத்தில் 10% ஆண்கள் நல்லவர்கள், மீதி 90% ஆண்கள் நல்லவர்களாய் வெளியே காட்டிக்கொள்ள முக மூடியுடன் சுற்றுகிறார்கள்


--------------

10. ஐ லவ் யூ சொல்றப்ப பொண்ணுங்க கண் கலங்கறாங்களே? ஏன்? வசமா மாட்டிக்கிட்டானே பையன்னு ஒரு இரக்கம் தான்

---------------
11. டியர்,நாம 2 பேரும் சேர்ந்தா பாரம்பரியம் மிக்க கட்சி ஆகிடுவோம்.

என்னடி உளர்றே?

நீங்க கறுப்பு, நான் சிவப்பு # கலாட்டா கடலை

-------------------------------


12. டியர், உன தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவ வேணாம், நல்லேண்ணெய் தடவு.

ஏன் டார்லிங்க்?

அப்பவாவது உனக்கு நல்ல எண்ணம் வருதா?ன்னு பார்ப்போம்.

------------------------------

13. ஊர்ல 1008 ஃபிகர்ங்க இருந்தும் ஏன் என் கிட்டே மட்டும் ஐ லவ் யூ சொல்றீங்க?

மீதி 1007 பேரும் டேலண்ட் கேர்ள்ஸ், நீ மட்டும் தான் பேக்கு # கலாட்டா கடலை

-----------------------------

14. டியர்,எதுக்காக பர்ஃபியூம் 500 மிலி  பாட்டில் கிஃப்ட்டா தர்றே?

செண்ட் ஆஃப் பார்ட்டின்னு சொன்னியே?

------------------------

15. டியர்,உங்களுக்காக இங்கிலீஷ்ல ஒரு கவிதை எழுதி இருக்கேன்.

நாசமா போச்சு,  நீ எழுதுன தமிழ்க்கவிதையே எனக்கு புரியாது, கோனார் நோட்ஸ் வேணும்

-----------------------16. டியர்,நீங்க என் நிழல் மாதிரி.

ஹைய்யா, எப்பவும் கூடவே இருக்கனும்னு நினைக்கறியா?

இல்ல ,பகல்ல மட்டும் என் பக்கத்துல  நைட் ஆனா கிளம்பிடனும்.


------------------------

17.  சென்னை யில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் ஜெ # அப்போ சாரு நிவேதிதா எங்கே குடி போவாரு?


-------------------------

18. என் காதலை வெளிப்படுத்திய போது ஏன் அழுதீங்க?

உன் அன்புக்கு இணையாக கண்ணீரைத்தவிர வேறு என்ன பரிசை நான் தந்து விட முடியும்? # காதல் கடலை

------------------------

19. தன் அழகுக்கு எல்லா ஆண்களும் அடிமையாக இருக்க வேண்டும் என சுமாரான அழகுள்ள பெண்களும் நினைக்கிறார்கள் #லேடீஸாலஜி


------------------------

20. ஒப்பனை இல்லாமலும் ஆண் போல பெண்ணாலும் மிளிர முடியும், ஆனால் ரிஸ்க் எடுக்க  பெண்கள் விரும்புவதில்லை

----------------------


21. ச்சீய்.போங்க என வெட்கப்படும்போதுதான் ஒரு பெண்ணின் உச்ச பட்ச அழகு முகத்தில் பொங்கி வழிகிறது

-------------------------

22. உலகின் கொடுமையான  வலி நிராகரிப்பு

-------------------


23. ஆணின் இதயம் காதலில் ஊறித்திளைத்திருக்கும், பெண்ணின் இதயம் துரோகத்தில் முளைத்திருக்கும்

-----------------------

24. சோனியா இல்லாததால் காங்கிரஸ் தவிப்பு : அடுத்தடுத்த குழப்பங்களுக்கு தீர்வு என்ன?#யோவ்,மெயின் குழப்பமே சோனியாதான்

-----------------------


25. முறைகேட்டுக்கு பிரதமர் அலுவலகம் பொறுப்பேற்க முடியாது' #சிங்க் எதுக்குத்தான் பொறுப்பேத்துக்கிட்டாரு? இதுக்கு மட்டும் ஏத்துக்க?

-------------------------
Odete Caixa do Bradesco de Aracoiaba - CE


38 comments:

Napoo Sounthar said...

ஆஹா....!

Anonymous said...

கலக்கல்...சி பி..

ராஜி said...

”உங்க காதலை நான் நிராகரிச்சும் நீங்க சோகமயம் ஆகலை, எப்டி?

“ என் அன்பை உணர முடியாத உனக்கு என் வலியை மட்டும் உணர முடியுமா?
ரொம்ப கரெக்டா சொல்லீட்டீங்க

ராஜி said...

எப்போது நீ ஃபோன் செஞ்சாலும் முதல் ரிங்கில் நான் எடுத்துடுவேன், கடைசி ரிங்க் வரை காக்க வைத்து வேண்டும் என்றே லேட் பண்ணி நீ எடுப்பாய்
உங்களுக்கு வேலை வெட்டி எதுவும் இல்லாம இருக்கும்போல. ஆனால், அவங்க அப்படியா?

ராஜி said...

துணிகளை துவைக்கும் முன் சோப்பு நீரில் அவைகளை ஊற வைப்பது மாதிரி உன்னைப்பிரியும் முன் உன் நினைவுகளை கொஞ்சம் ஊற வைத்துக்கொள்கிறேன் சில கவிதைகளில்
வீட்டுல துணி துவைக்கும் டிப்பார்ட்மெண்ட் உங்களோடதா?
----------------------------

ராஜி said...

ஐ லவ் யூ சொல்றப்ப பொண்ணுங்க கண் கலங்கறாங்களே? ஏன்? வசமா மாட்டிக்கிட்டானே பையன்னு ஒரு இரக்கம் தான்
இவங்கிட்டப் போயி மாட்டிக்கிட்டோமேனு இருக்குமோ?!
---------------

ராஜி said...

டியர், உன தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவ வேணாம், நல்லேண்ணெய் தடவு.

ஏன் டார்லிங்க்?

அப்பவாவது உனக்கு நல்ல எண்ணம் வருதா?ன்னு பார்ப்போம்.
நல்ல எண்ணெய் தடவுனா நல்ல எண்ணம் வருமா? ஈரோடுல நல்ல எண்ணெய் பிஸினெஸ் அமோகமா நடக்குமே!

ராஜி said...

டியர்,எதுக்காக பர்ஃபியூம் 500 மிலி பாட்டில் கிஃப்ட்டா தர்றே?

செண்ட் ஆஃப் பார்ட்டின்னு சொன்னியே?
>>
அப்போ ஃபேர்வெல் பார்ட்டிக்கு கூப்பிட்டால் ஃபேர் அன்ட் லவ்லி வாங்கி தருவாரோ?

ராஜி said...

என் காதலை வெளிப்படுத்திய போது ஏன் அழுதீங்க?

உன் அன்புக்கு இணையாக கண்ணீரைத்தவிர வேறு என்ன பரிசை நான் தந்து விட முடியும்? # காதல் கடலை
>>>

உங்க கஞ்சத் தனத்துக்கு இப்படியொரு சமாளிஃபிகேஷனா?
------------------------

ராஜி said...

ஒப்பனை இல்லாமலும் ஆண் போல பெண்ணாலும் மிளிர முடியும், ஆனால் ரிஸ்க் எடுக்க பெண்கள் விரும்புவதில்லை
>>
நாங்க ரிஸ்க் எடுத்தா உங்க கண்ணுலாம் அவிஞ்சுப் போகுமே பரவாயில்லியா?

ராஜி said...

. டியர்,உங்களுக்காக இங்கிலீஷ்ல ஒரு கவிதை எழுதி இருக்கேன்.

நாசமா போச்சு, நீ எழுதுன தமிழ்க்கவிதையே எனக்கு புரியாது, கோனார் நோட்ஸ் வேணும்
இங்கிலிஷ் எழுதப் படிக்க தெரியாததை கூட ட்வீட்டாக்கிட்டீங்களா? அவ்வ்வ்

ராஜி said...

ஆணின் இதயம் காதலில் ஊறித்திளைத்திருக்கும், பெண்ணின் இதயம் துரோகத்தில் முளைத்திருக்கும்
>>

அடி பலமோ?!

இராஜராஜேஸ்வரி said...

அனிமேஷன் படங்கள் அற்புதம்.

கலக்கலான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

தினேஷ்குமார் said...

பாஸ் கருப்பு பூனை சூப்பர் ....

உலக சினிமா ரசிகன் said...

சிபி.. படங்களின் அனிமேசன் சூப்பர்.
இந்தப்பெண் படத்தில் அனிமேசன் இருக்குமென்று காத்திருந்தேன்.
ஏமாற்றிவிட்டீர்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கடைசி போட்டோவுல முகத்துக்கும் உடம்புக்கும் சம்பந்தமே இல்லியே ஏன்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த வேன் நம்ம சின்ன டாகுடர்தானே ஓட்டிக்கிட்டு போறாரு?

சாந்தி மாரியப்பன் said...

எல்லாமே ரொம்ப நல்லாருக்கு.. அசத்தல்.

Menaga Sathia said...

எல்லாமே அசத்தல்..கூடவே அனிமேஷன் படங்களும்...

காங்கேயம் P.நந்தகுமார் said...

எய்ட்ஸ் என்பது கொடிய நோய் தான். அதை அழிக்க நினைத்து அருகில் நெருங்குபவர் நிலைமை என்னவாகும். திமுக வின் வெற்றி நாளை மாணவர்களின் எதிர்காலம். பிள்ளைகள் அழுத நிலை மாறும் நாளை முதல் பிள்ளைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்லும். அதை பார்த்து அம்மா கண்ணீர் வடிப்பார். அது ஆனந்த கண்ணீரா? இல்லை ஆணவ கண்ணீரா? ஊடகங்களின் மனநிலையை பொறுத்து. னைத்து அருகில் நெருங்குபவர் நிலைமை என்னவாகும். திமுக வின் வெற்றி நாளை மாணவர்களின் எதிர்காலம். பிள்ளைகள் அழுத நிலை மாறும் நாளை முதல் பிள்ளைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்லும். அதை பார்த்து அம்மா கண்ணீர் வடிப்பார். அது ஆனந்த கண்ணீரா? இல்லை ஆணவ கண்ணீரா? ஊடகங்களின் மனநிலையை பொறுத்து.

காங்கேயம் P.நந்தகுமார் said...

எய்ட்ஸ் என்பது கொடிய நோய் தான். அதை அழிக்க நினைத்து அருகில் நெருங்குபவர் நிலைமை என்னவாகும். திமுக வின் வெற்றி நாளை மாணவர்களின் எதிர்காலம். பிள்ளைகள் அழுத நிலை மாறும் நாளை முதல் பிள்ளைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்லும். அதை பார்த்து அம்மா கண்ணீர் வடிப்பார். அது ஆனந்த கண்ணீரா? இல்லை ஆணவ கண்ணீரா? ஊடகங்களின் மனநிலையை பொறுத்து.

காங்கேயம் P.நந்தகுமார் said...

எய்ட்ஸ் என்பது கொடிய நோய் தான். அதை அழிக்க நினைத்து அருகில் நெருங்குபவர் நிலைமை என்னவாகும். திமுக வின் வெற்றி நாளை மாணவர்களின் எதிர்காலம். பிள்ளைகள் அழுத நிலை மாறும் நாளை முதல் பிள்ளைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்லும். அதை பார்த்து அம்மா கண்ணீர் வடிப்பார். அது ஆனந்த கண்ணீரா? இல்லை ஆணவ கண்ணீரா? ஊடகங்களின் மனநிலையை பொறுத்து.

நாய் நக்ஸ் said...

ஹி..ஹி ...(தலைப்பு)-----எல்லாம் அப்பதாங்க ....

செங்கோவி said...

படத்துல ஒன்னும் பொங்கி வழியக்காணோமே..

ஹேமா said...

நிராகரிப்பின் வேதனை அவரவர்கள் பட்டால் மட்டுமே தெரியும்.படங்கள் ரசிப்பு !

uDanz said...

யுடான் ஓட்டுப்பட்டையை நிறுவி ஆதரவு தாரீர்.

KANA VARO said...

அனுபவங்கள் சூப்பர் தல. அந்த ஆண்டி யாரு

Anonymous said...

முதல் படம் சூப்பர். கடைசி படம் சூப்ப்ப்பர்!!

கும்மாச்சி said...

நீ எனக்கு நிழல் மாதிரி ------------------------------------நைட் ஆனா கிளம்பிடனும். லொள்ளுதான்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

6

MANO நாஞ்சில் மனோ said...

படம் ஒன்னுமே கண்ணுக்கு தெரியலைடா டுபுக்கு...

MANO நாஞ்சில் மனோ said...

எங்கேடா பொங்கி வழியுற படம்....???
ராஸ்கல் மைனஸ் ஓட்டு போட்டுருவேன் ஜாக்கிரதை....

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தினம் இந்த பதிவின் 'GOOD MORNING' பார்த்திட்டு அலுவலகம் போறதுன்னு முடிவு பண்ணிட்டேன். அவ்வளவு அழகு.
ரெண்டாவது படம் குறும்பு பிடிச்ச குரங்கு.
கருப்பு பூனை பார்க்கவே பயம்மா இருக்கு. சிவப்பு ரோஜாக்கள் பாதிப்பு.
16 ஐ படிச்சிட்டு இப்படி சிரிக்கிறது சரியில்ல puzz shut up !
better half பிரிஞ்சு போனது கூட தெரியாம எங்கே இப்படி ஓடிக் கொண்டிருக்கிறார் இன்றைய தலைமுறை போல
கடைசி படம் ம்ம்ம் அது இல்லாம சிபி பதிவா?

நிரூபன் said...

இம் முறை டுவிட்ஸ்களை வித்தியாசமாகத் தொகுத்திருக்கிறீங்க.

ரசித்தேன் பாஸ்.
அத்தனையும் கலக்கலான காதல் ரசம் கனிந்துருகும் முத்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

பதிவு ஓக்கே ரகம்தான் ஆனாகூட படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு.

aotspr said...

இதையெல்லாம் நாங்க நம்பனுமா? கொஞ்சம் ஓவரா தெரியுது. 
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

ரா: அரசகுமாரன் said...

அனைத்தையும் ரசித்தேன், "புகை"படங்களையும் சேர்த்து....
http://tamilpadaipugal.blogspot.com

Geetha6 said...

super animations!!