Monday, August 15, 2011

நாளைய இயக்குநர் - மெகா ஃபைனல் - காமெடி கதைகள் - விமர்சனம்

நாளைய இயக்குநர் நிகழ்ச்சில வாரா வாரம் ஆர்டினரியா கதைகள் வர்றப்போ ஹாய் மதன் எப்படி கமெண்ட் தந்தாரோ அதே பாணில தான் இப்போவும் ஃபாலோ பண்றார்.ஷூட்டிங்க் எடுத்தது ஒரே நாளாக இருந்தாலும் ஃபைனல்ல வர்ற 9 கதைகளும் வாரா வாரம் ம் 3 கதைகள் வீதம்  3 வாரம் ஒளிபரப்பாகி 4 வது வாரம் தான் எது பெஸ்ட்னு செலக்‌ஷன் ஆகும். இவர் அந்தந்த வாரத்துல வந்த 3 கதைகள்ல 2 தேறாதுன்னு ஓப்பனா சொல்லிடறாரு.. இதனால எது ஃபர்ஸ்ட் வரப்போகுதுன்னு கெஸ் பண்ணிட முடியும்.


அதே மாதிரி டிரஸ்ஸிங்க் சென்ஸ் 10% கூட இல்லாத மொக்க ஃபிகர் தொகுப்பாளினி படம் எடுத்த ஒவ்வொரு குறும்பட இயக்குநர்ட்டயும் போர் அடிக்கற மாதிரி ஒரே கேள்வியைத்தான் கேட்கறாரு. அது - உங்க படம் எப்படி வந்திருக்கு? வின் பண்ணிடுவீங்கன்னு நம்பிக்கை இருக்கா? இது எப்படி இருக்குன்னா தியேட்டர்ல , இண்ட்டர்வெல்ல ,வெளில ,கேண்ட்டீன்ல தெரிஞ்சவங்க பார்க்கறப்ப என்ன பேசறதுன்னு தெரியாம அப்புறம் தியேட்டருக்கா?  படத்துக்கா?  என அசடு வழிவது போல் தான் இது. பாப்பாவுக்குத்தான் இதெல்லாம் தெரியலைன்னா இயக்குநர் இதை கரெக்ட் பண்ணக்கூடாதா? ( ஐ மீன்  பாப்பாவோட இந்த ஹேபிட்டை. )1. தமிழ் சீனு -  7 1/2  ( ஏழரை )

குடுகுடுப்பைக்காரன் எதேச்சையா ஒரு வீட்ல வந்து “ உங்களுக்கு ஏழரை ஸ்டார்ட் ஆகிடுச்சு, இனி கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் எல்லாம் கோவிந்தாதான்,ஓட்டாண்டி ஆகப்போறீங்கன்னு சொல்றான். அதே மாதிரி சம்பவங்கள் நடக்குது.. வீட்டுக்கு டொனேஷன் கேட்டு வந்தவங்களுக்கு 100 ரூபா குடுக்கறதுக்கு பதிலா அப்பா ஃபோன்ல பேசறப்ப நடந்த மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க் கால்குலேஷன் கான்வெர்சேசனால் ( அடேங்கப்பா. எம்புட்டு நீளமான வாக்கியம் !!) லட்ச ரூபாயை தாரை வார்த்த மகன் பயந்து ஊரை விட்டே ஓடிறாரு.


7 1/2 வருசங்கள் கழிச்சு மகன் ரிட்டர்ன் வர்றப்ப வீட்ல அம்மா தான் இருக்காங்க, அப்பா அவுட் ஆஃப் ஸ்டேஷன். அப்போ ஒரு ஃபோன் வருது. அப்பாவை கடத்தி வெச்சிருக்கோம், 20 லட்சம் கொடுத்தா ஆளை மீட்டுக்கலாம்னு. உடனே ரூ 20 லட்சம் கொண்டு போய் ஸ்மெக்ளிங்க் பார்ட்டிக்கிட்டே கொடுத்தா ஆள் மாறாட்டம், கடத்தப்பட்டது இவரோட அப்பாவே இல்லை. பக்கத்து ஊர் பிரசிடெண்ட். 


அப்பா வந்தா அடிப்பார்னு மகன் இப்பவும் ஆள் எஸ்கேப்.. 

பல லாஜிக் மீறல்களோட கதை இருந்தாலும் ஜாலியா போச்சு.. முதல் பரிசு வாங்க வாய்ப்பில்லை. ஆனா படம் ஓக்கே ரகம் தான்

ரசித்த வசனங்கள்

1. ஹூம், நல்லாருந்த குடும்பத்துல குடுகுடுப்பை நாதஸ்வரம் வாசிச்சுட்டு போய்ட்டானா?

2. மணி எவ்ளவ்ம்மா?       7 1/2 


என்னது? எட்டரை  ஆகிடுச்சு?

சாரி, வாட்ச் நின்னுடுச்சு போல.. 

3. ம்க்கும், ஏழரை லட்சம் கடன் பாக்கி , இந்த லட்சணத்துல அவர் கைல துப்பாக்கி.. விளங்கிடும். 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. 20 லட்சம் பணயப்பணம் கேட்ட அடுத்த நொடியே வீட்டின் பீரோவில் இருந்து அவ்வளவு பணமும் ரெடி பண்ணிடறாங்க. எப்படி? இந்த காலத்துல ஆ ராசா வீட்ல கூட அவ்வளவு பணம் கேஷா இருக்காதே? பேங்க்ல தானே இருக்கும்?

2. பொதுவா பணயப்பணம் கை மாறும்போது கடத்தப்பட்ட ஆள் இருக்காரா அங்கேன்னு செக் பண்ணுவாங்க.. அது பண்ணலை.. ஏன்?

3. அப்பாவை கடத்திட்டாங்கன்னுதுமே   அவர் செல் நெம்பருக்கு ஃபோன் போட்டு கிராஸ் செக் பண்ணவே இல்லையே?


இதுல அப்பா கேரக்டர்ல  ஸ்டண்ட் நடிகர் அழகு நடிச்சிருந்தார்.. இந்தப்படத்துக்கு பிரில்லியண்ட் காமெடின்னு பிரதாப்போத்தன் பாராட்னார்.ஹாய் மதன் படம் ஓக்கே, ஆனா இன்னும் காமெடி நல்லா ட்ரை பண்ணி இருந்திருக்கலாம்னு கமெண்ட் பண்ணாரு.2. ராகேஷ் - ஹீரோ 

சின்ன வயசுல   இருந்து ஸ்பைடர்மேன், சூப்பர்மேன்னு காமிக்ஸ் கதைகள் படிச்சு வளர்ற ஒரு பையன் ஒரு கட்டத்துல பூமியை  வேற்றுக்கிரக வாசிகள் ஆக்ரமிச்சுட்டாங்க என்றதும் ஒரு உயரமான கட்டிடத்துல இருந்து தொப்னு குதிக்கறாரு. அவர் சூப்பர் மேன் ஆனாரா? சுடுகாட்டுப்பொணம் ஆனாரா? என்பது சஸ்பென்ஸ்.
ஃபேண்டசி வகையறா படம் என்றாலும் காதில் பூ சுற்றும் கதை தான். காமிரா ஆங்கிள்கள், ஹீரோவின் பாடி லேங்குவேஜ் எல்லாம் கந்த சாமி விக்ரம் நினைவுபடுத்தியது.


நினைவில் நின்ற வசனங்கள்


1. மரணம் தான் எல்லா விஷயங்களுக்கும் முடிவு என்றால் அது என் விஷயத்தில் தொடக்கமா? முடிவா?ன்னு தெரியலை. 

2. எப்போதெல்லாம் உலகை இருள் சூழ்கிறதோ அப்போதெல்லாம் ஒரு ஒளிக்கீற்று வந்து பூமியை காப்பாற்றும் அரிய சக்தியை உருவாக்கும்..

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. சூப்பர்மேன் ஆனதா கற்பனை பண்ணிக்கும் ஹீரோ எடுத்ததும் 30 மாடிக்கட்டிடத்துல இருந்து குதிச்சுப்பார்த்து ஏன் ரிஸ்க் எடுக்கனும்? 10 அடி தூரத்துல இருந்து முதல்ல குதிச்சிருக்கலாமே?

2. வேற்றுக்கிரகவாசிகள் பூமியை சூழ்ந்துட்டாங்க என்றதும் மக்களின் பதட்டம் + போலீஸ் ஆக்‌ஷன் சரியா காட்டலையே?


இதுக்கு கமெண்ட் சொன்ன ஹாய் மதன் ஒரே ஷாட் அடிக்கடி ரிப்பீட் ஆகுதுன்னார். நோ கிளாரிட்டி அப்டின்னு பிரதாப் சொன்னார். இந்தப்படமும் முதல்ல வராது. 3. கல்யாண் - புதியவன் 

இது செம கலக்கலான கதை. ஒருத்தன் பைக்ல போறான், வழில ஒரு ஆள் லிஃப்ட் கேட்கறான். அவனும் இவனை ஏத்திக்கறான், வழி நெடுக லிஃப்ட் கேட்டவன் தொண தொணன்னு பேசிட்டே வர்றான்.. லிஃப்ட் கொடுத்தவனுக்கும் சரி , படம் பார்க்கறவங்களூக்கும் சரி செம கடுப்பா இருக்கு. 

பாதி வழிலயே இறக்கி விடறான்.. அப்புறம் இவன் சாரி கேட்டு இனி எதும் பேசலை அப்டின்னு பிராமிஸ் பண்ணிட்டு  மறுபடியும் பைக்ல தொத்திக்கறான். இப்போ டிராஃபிக் போலீஸ் வண்டியை நிறுத்தி லைசன்ஸ், ஆர் சி புக் கேட்குது. 

பைக் ஓட்டிட்டு வந்தவன் பம்பறான். லிஃப்ட் கேட்டவன்  அப்போதான் பைக்கோட ஒரிஜினல் டாக்குமெண்ட்ஸை போலீஸ்ட்ட தர்றான். அப்போதான் தெரியுது.. லிஃப்ட் கொடுத்தவன் தான் பைக்கை திருடுனவன், லிஃப்ட் கேட்டவன் பைக் ஓனர்.. நல்ல ட்விஸ்ட்.. 

திருடனை மன்னிச்சு விட்டுடறான். 

கலக்கலான காமெடி வசனங்கள்

1. எங்கே போறீங்க?

இண்ட்டர்வியூக்கு.

இது உங்களுக்கு எத்தனாவது இண்டர்வியூ?

30 வது இண்ட்டர்வியூ

 கேட்கறேனேன்னு கோவிச்சுக்காதீங்க.. இண்ட்டர்வியூ போறதுதான் உங்க குலத்தொழிலா?

2. மார்க்கெட்டிங்க் தொழில்ல மட்டும் கஸ்டமர் எவ்வளவு கோபப்பட்டாலும் நாம் ரிலாக்ஸா இருக்கனும்.

3. சார். நீங்க இண்ட்டர்வியூவுக்கா வந்திருக்கீங்க? 

இல்லீங்க, பால் வாங்க வந்திருக்கேன்.  கேட்கறான் பாரு கேள்வி.

இந்தப்படத்துல ஹீரோவா நடிச்சவர் செம யதார்த்தம்.. பைக்ல போறப்ப நடக்கற சம்பாஷணகள் ஆரம்பத்துல தேவை அற்றதா தோன்றினாலும் சஸ்பென்ஸை மெயிண்ட்டெயின் பண்ன அந்த எஸ்டாபிளிஸ்மெண்ட் தேவைப்படுது.


இந்த வாரத்தில் வந்த 3 படங்கள்ல மேக்கிங்க் ஸ்டைல், கதை , திரைக்கதை ,வசனம்  உட்பட எல்லாத்துலயும் இதுதான் பெஸ்ட், அதுவும் இல்லாம போனவாரம் வந்த 3 கதைகளை விட இதான் பெஸ்ட். சோ இந்த படத்துக்கு முதல் அல்லது 2 வது பரிசு சான்ஸ் உண்டு..

17 comments:

Mohamed Faaique said...

muthal ticket

KANA VARO said...

நான் 2ஆவதா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நாளைய இயக்குனர்கள் மிரமிக்க வைக்கிறார்கள்..

விமர்சனமும் அழகு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நேரத்திற்க்கு ஏற்றார் போல் தாங்கள் பயன்படுத்தியுள்ள படங்கள் அசத்துகிறது...


சுதந்திரதின வாழ்த்துக்கள்...

Unknown said...

விமர்சனம் அருமை நன்றி!

செங்கோவி said...

எங்கள் அஜால்குஜால் சுதந்திரப் பதிவருக்கு... சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

Unknown said...

படங்கள் அனைத்தும் நல்லாயிருக்குங்க.. (பதிவில்..)

Unknown said...

இணையத்தில் கிடைக்கும் குறும்படங்களை விமர்சனத்துடன் பகிரலாமே... (குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு பதிவு?)

”தளிர் சுரேஷ்” said...

அட்டகாசம் இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் .

Anonymous said...

கலக்கல்...என் சுதந்திர தின வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் அழகு...

சுதா SJ said...

குப்பை நிகழ்ச்சிகளில் மிக தரமான நிகழ்ச்சி
குட் விமர்சனம்

உணவு உலகம் said...

வாழ்த்துக்கள் நண்பரே.

RAMA RAVI (RAMVI) said...

நல்ல விமர்சனம். அழகான படங்களுக்கு நன்றி.

Unknown said...

அழகு படங்கள்
அழகு விமர்சனம்

ராஜி said...

சரியா காம்பியரிங்க் பண்ணாத தொகுப்பாளினிக்கே விமர்சனத்துல ஒரு பத்தி ஃபுல்லா ஒதுக்கியிருக்கீங்கன்னா, சரியா காம்பியரிங்க் பண்ணியிருந்தால் தனியா ஒரு பதிவு போட்டிருப்பீங்களோ?!