Wednesday, August 24, 2011

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை கைதிகள் 3 பேரின் கடைசி பேட்டி

நானே தூக்கில் ஏறும் கடைசி ஆளாக இருக்கட்டும்!''
ழப் படுகொலைகள் உண்​டாக்கிய துயரமே தமிழக மனங்​களில் ரணமாக வடியும் நிலையில், தூக்குக் கயிறு வடிவில் மீண்டும் துரத்தத் தொடங்கி இருக்கிறது துயரம். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் மரணத்தின் நிழலில் நிற்கிறார்கள். 

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தளர்த்தக்கோரி இவர்கள் அனுப்பிய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூவரை​யும் காப்பாற்றக் கோரி கட்சி வேறு​​பாடுகளைக் கடந்து தமிழகம் முழுக்க உணர்வும் உருக்கமுமான போராட்​டங்கள் நடக்கின்றன. மரணத்தின் துரத்தலில் வாடும் அந்த மூவரின் மனப் போராட்டங்களையும் அறிய முடிவெடுத்​தோம். வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். அதன் தொகுப்பு இங்கே...


முதலில் பேரறிவாளன்...

1. ''எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி எதிர்கொள்​கிறீர்கள்?''

''முதலில் எங்களுக்காகப் போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம். கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் மரண நிழல் எங்களைப் பெரிதாக சூழ்ந்திருக்கிறது. மக்களின் ஒருமித்த கைகோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது.

19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்!''


2. ''தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து?''

''அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனை​வரும் எங்களுக்காகப் போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனிதநேயமும் ஒருசேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. 

பொதுமக்களும் அனைத்துத் தலைவர்களும் ஒரே அணியில் நின்று தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத்தெரியும்!''


3. ''தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?''

''மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல... 20.07.07 அன்றே  உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். 'வழக்கில் சிக்குபவர்களுக்கு வசதி இல்லை என்றால், அவர்களின் தரப்பு நியாயம் அம்பலம் ஏறாமல் போய்விடும். 

அத்தகைய குறைபாடு கொண்ட கட்டமைப்புதான் இன்றைக்கு நிலவுகிறது. என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்... தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்!’ என அந்தக் கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது.மனசாட்சியின் கண்ணீர்க்குரலாகச் சொல்கிறேன்... எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை. சித்திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும் அம்மா!''


4./ ''கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?''

''99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் என்னைப் பார்க்க வந்தார். 'வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டார். 'தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன்’ எனச் சொன்னேன். காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிஷமும் எத்தகையக் கொடூரமானது  என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான்.

வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்​களுக்காகப் போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்பத் தோன்றுகிறது. ஆனால், ஏற்கெனவே பரப்பிய பழிகள் போதாது என 'சாத்தானின் படைகள்’ என்கிற புத்தகத்தை நான் அச்சடித்ததாக சிலர் இப்போது கிளப்பிவிடுகிறார்கள். 

அந்தப் புத்தகத்தை யார் உருவாக்கியது என்பது சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் என்னை இட்டுக்கட்டுவது ஏன்? ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவேளை மரணம் எங்களை வென்றுவிட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது... தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்!''


அடுத்து முருகன்...

1.''தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?''


''மரணத்தைவிட மரணத்தின் நாளுக்காகக் காத்திருப்பது கொடுமையானது. அதை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் இந்த சூழலில், மக்களின் ஆதரவுதான் எங்​களை நம்பிக்கையோடு நிமிர வைக்கிறது! தனித்தனியான போராட்டங்களை முன்னெடுக்​காமல், எங்களுக்காக எல்லோரும் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. 

இதர மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைக்குகூட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத் திரளுகின்றன. எங்களின் கண்ணீர் பிரச்னைக்கும் அதேபோல் அனைத்துக் கட்சிகளும் திரண்டு, முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மூன்று உயிர்களுக்காக மொத்த தமிழகமும் கைகோத்து நின்றதை காலக் கல்வெட்டு தமிழனின் உயர்ந்த உணர்வாகப் பதிவு செய்ய வேண்டும்!''


2.''தமிழக மக்களிடம் ஏதாவது சொல்ல விரும்பு​கிறீர்களா?''


''எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மரணத்துக்குப் பயந்து இந்த வார்த்தை​களைச் சொல்லவில்லை. எங்களின் கவனத்துக்குத் தெரியாமல் நடந்த சம்பவத்துக்கு இத்தனை வருட சிறைவாசமே பெரிய கொடுமை. ஒப்புதல் வாக்குமூலத்தில் நாங்களே பல விஷயங்களை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களே தயாரித்து எங்களை அதில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். 

அதற்காக அவர்கள் செய்த சித்ரவதைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மரணக் கொட்டடியின் நெருக்கடிகள் எங்களுக்குப் பழகிப்போனாலும், என்றைக்காவது ஒருநாள் வெளியே வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. உறவுகளின் உணர்வுகளால் அந்த நம்பிக்கைப் பலப்படுகிறது. ஒரே வார்த்தையில் எங்களின் உணர்வைச் சொல்வதானால்.... நன்றி!''


அடுத்து ம.தி.சாந்தன்...


1.''ராஜீவ் கொலை விசாரணையில் நிறைய குளறு​படிகள் நடந்ததாகச் சொல்கிறார்களே...?''

''கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். இந்த வேதனையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.


கொழும்பு வழியாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதாலேயே நான் இந்தியாவுக்கு வந்தேன்.  இலங்கை அரசு தந்த உண்மையான பாஸ்போர்ட்டுடன் வந்தேன். அதை சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளது. ராஜீவ் போன்ற பெரிய தலைவரைக் கொல்ல வருபவன் தன்னைப் பற்றிய தகவலைச் சொல்லும் உண்மையான பாஸ்போர்ட்டுடன் வருவானா?


நான் சுமக்கும் மரண தண்டனைக்குப் பெயர் குழப்பமும் ஒரு காரணம். இந்த வழக்கில் கைதாகி விடுதலையான இரும்பொறை என்பவரை நான் ராஜீவ் இறப்பதற்கு முன்னர் சந்தித்ததாகவும், 15 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், 'முக்கியமான ஒரு நபரைக் கொல்லப் போகிறோம்’ என்று சொன்னதாகவும் மரண தண்டனையை உறுதி செய்தபோது மாண்புமிகு நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் கூறுகிறார்.  ஆனால், மாண்புமிகு நீதிபதி வாத்வா அவர்கள் அது இறந்துபோன எதிரி திருச்சி சாந்தன் என்கிறார். இன்னொருவர் சொன்னதை நான் சொன்னதாகச் சொல்லி என்னைத் தூக்கில் நிறுத்தப் போகிறார்கள்.


'நானும் சிவராசனும் நளினியை மிரட்டி இந்த​சதிக்கு உடன்பட வைத்தோம்’ என்று நீதிபதி தாமஸ் சொல்கிறார்.  ஆனால், நீதிபதி வாத்வா, 'ராஜீவ் இறந்த அடுத்த நாள்தான்  நளினியை சாந்தன் அறிவார்’  என்கிறார்.


நான் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவில் முக்கியமான ஆள் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக நீதிபதி தாமஸ் தீர்ப்பில் சொல்கிறார். இவை எதற்கும் ஆதாரம் இல்லை. விடுதலையான இரும்பொறையுடன் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றோ, நளினியை மிரட்டினேன் என்றோ சி.பி.ஐ.கூடச் சொல்லவில்லை. ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவரிடம் கூறி அவரது பதிலை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் என் விஷயத்தில் இது செய்யப்படவில்லையே.. எப்படி?


சிவராசனின் பணத்தை முதலில் காந்தன் என்பவர் கையாண்டார். அவரிடம் இருந்து நான் அந்தப் பொறுப்பினை எடுத்துக்கொண்டதாக நீதிபதி வாத்வா அவர்கள்  தீர்ப்பில் கூறுகிறார். சிவராசனின் பணத்தை நான் பாதுகாத்து கொடுத்ததாகவோ கையாண்டதாகவோ விசாரணை நீதிமன்றம் என்னிடம் கேட்டுப் பதிவு செய்யவில்லை.  இப்படி எல்லாம் குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகளே எங்களுக்கான முடிவுப் படிகளாக மாறிவிட்டன!''


2.''கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரிந்த உடன் என்ன நினைத்தீர்கள்?''


''என் தந்தை ஆறுமுகம் தில்லையம்பலம் அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு இப்போது 70 வயது. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதற்கு முன்னர் அங்கு விவசாயம் செய்துகொண்டு இருந்தார். அவர் எப்படி இருக்கிறார் என்கிற கவலை என்னைப் பெரிதாக வருத்துகிறது. பெற்ற தகப்பன் இருக்கிறாரா இல்லையா என்பதை நினைத்து அழுவதா? நான் இருப்பேனா மாட்டேனா என்பதை நினைத்து அழுவதா? இந்த அப்பனும் மகனும் விதியெனும் கையில் சிக்கிய விளையாட்டுப் பொம்மைகளாய் அல்லாடுகிறோம்!''

thanx - vikatan

43 comments:

நாய் நக்ஸ் said...

வடை

நாய் நக்ஸ் said...

படித்துவிட்டு வருகிறேன்

நாய் நக்ஸ் said...

ஆனால் சி.பி...க்கு
கமெண்ட் இனிமேல்தான் உருவாக்கணும்

வைகை said...

சட்டம் தன் கடமையை மட்டும் செய்யாமல் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளின் கடமையும் சேர்த்து செய்யும்போல? வேற என்ன சொல்றது? :((

Unknown said...

வாங்கிய உயிர்பலிகள் போதாதா இன்னும் வாங்கிக்கொண்டே இருக்குமா...தடை செய்ய வேண்டிய விஷயம் இந்த மரண தண்டனை!..பகிர்வுக்கு நன்றி!

Shiva sky said...

6 மணிக்கே போய் விகடனை வாங்கிடுவிகளோ.

T.V.ராதாகிருஷ்ணன் said...

படித்துவிட்டு வருகிறேன்

கோகுல் said...

19 வயதிலே சிறை சென்று!
21 வரடம் தூக்கை விட கொடுமையை அனுபவித்துவிட்டார்.வாழ்க்கையிலேயே வசந்த காலம் இளமைப்பருவம்தான்.எல்லாவற்றையும் சிறையில் தொலைத்தவர்களுக்கு எதுக்கையா தூக்கு?
காத்திருக்கும் கயிறு நிச்சயம்அறுத்துஎறியப்பட வேண்டும்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

தூக்கு தண்டனை யோசனை பண்ண வேண்டிய விஷயம் தாங்க

உணவு உலகம் said...

ம் ம்.

rajamelaiyur said...

கொடூர கொலைகாரர்களுக்கு என்ன தண்டனை குடுப்பது ?

rajamelaiyur said...

அன்புள்ள நண்பர்களே

இன்று என் வலையில்

தங்கபாலுவின் சித்தப்பாவா காமராஜர்? நள்ளிரவில் குழப்பம்!

rajamelaiyur said...

மரணத்தை விட கொடியது அதற்காக காத்திருப்பது

rajamelaiyur said...

தமிழ்மணம் 8

Unknown said...

கனமான பதிவு அண்ணா

மனம் இப்போது கனம்...

சசிகுமார் said...

இன்னுமா முடியல???

Mohamed Faaique said...

மரண தண்டனை தடை செய்யப் பட வேண்டிய ஒன்றல்ல. ஆனால் இவர்கள் அதற்கு தகுதியானவர்களா என்பது கட்டாயம் நிரூபிக்கப் பட வேண்டியவையே!!!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

நானே தூக்கில் ஏறும் கடைசி ஆளாக இருக்கட்டும்!'//

வணக்கம் பாஸ்.
மனதை வலிக்கச் செய்யும் விடயத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

இருங்க படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்!'//

அவர்களின் சிறை வாழ்க்கையினை நினைக்கவே மனசிற்கு ரொம்ப கஸ்டமாக இருக்கு.

நிரூபன் said...

முக்கியமான ஒரு நபரைக் கொல்லப் போகிறோம்’ என்று சொன்னதாகவும் மரண தண்டனையை உறுதி செய்தபோது மாண்புமிகு நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் கூறுகிறார். ஆனால், மாண்புமிகு நீதிபதி வாத்வா அவர்கள் அது இறந்துபோன எதிரி திருச்சி சாந்தன் என்கிறார். இன்னொருவர் சொன்னதை நான் சொன்னதாகச் சொல்லி என்னைத் தூக்கில் நிறுத்தப் போகிறார்கள்//

சே...பகுத்தறிவே இல்லையா...இந்த நீதிபதிக்கு..

கொஞ்சமாவது General Knowledge வேணாம்?

நிரூபன் said...

ஒன்றை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்,

குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் புலிகள் அமைப்பினரைச் சார்ந்தவர்களாக இருந்தால்,
21 வருடங்கள் கடந்த பின்னரும், தாம் குற்றம் செய்திருக்கா விடினும்
‘மரண தண்டனைக்கோ, அல்லது சாவிற்கோ அஞ்சியிருக்க மாட்டார்கள்.

இச் சம்பவத்தோடு ஆதாரமற்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருப்போர் புலிகளாக இருந்தால் அவர்கள் இறுதி வரை மரண தண்டனைக்குப் பயப்படாது, மரணத்தினை வரவேற்றிருப்பார்கள்.

பாவம்....
குற்றஞ்சாட்டப்பட்டிருப்போர் அப்பாவிகள்.

இந்த லாஜிக் கூடத் தெரியாத நீதிபதிகளை நாம் என்ன மனிதர்கள் என்று சொல்வது?

நிரூபன் said...

புலிகள் அமைப்பினருக்கோ, அல்லது புலிகளுக்கோ ஓர் பண்பிருக்கிறது,
அது மரணத்தினைக் கண்டு அஞ்சாத பண்பு,

மரணமானது தம்மை நெருங்கும் வேளையிலும் சிரித்துக் கொண்டு அதனை வரவேற்றுப் பலர் வீரமரணம் எய்திருக்கிறார்கள் பலர்.

ராஜீவ் கொலையோடு நெருங்கிய தொடர்பிருப்பவர்களாக இங்கே கூறப்படும் குற்றவாளிகள் புலிகளோடு தொடர்புடையவர்களாகவோ அல்லது குற்றம் செய்தவர்களாகவோ இருப்பின், மரணத்தினை வரவேற்றிருப்பார்களே அன்றி,
கருணை மனுக் கோரியிருக்க மாட்டார்கள்.

நிரூபன் said...

இன்னோர் விடயம்,

ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய வேண்டும் எனும் நோக்கில் வந்திருப்பின், அவர்கள்- தாம் தற்கொலைக் குண்டுத் தாக்குதலாளிகளாக இறப்பது நிச்சயம் எனும் முடிவோடு தான் வந்திருப்பார்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் விடுத்து, இங்கே கருணைமனுக்கோருவோர் யார்?
அப்பாவிகள்.

ராஜீவ் காந்தியினை அவர்கள் கொலை செய்திருப்பின் சந்தோசமாக மரண தண்டனையினை அல்லவா எதிர் கொண்டிருப்பார்கள்.

சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகளைப் பார்த்தோருக்குப் புரியும்,

சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்படும் வேளையிலும், முகத்தில் மரண பயமற்று, சாவினை வரவேற்றுப் புன்னகை புரிந்தபடி இறந்திருக்கிறார்கள் புலிகள்...

இது கூட இவர்களின் கண்களுக்குத் தெரியலையா?

குற்றஞ்சாட்டப்பட்டிருப்போர் உண்மையில் இந்த விடயத்தோடு தொடர்பிருப்பின்..

என் அனுபவ அறிவினைப் பொறுத்தவரை அவர்கள் கருணை மனுக்கோரிச், சாவினைக் கண்டு அஞ்சமாட்டார்கள்!

செங்கோவி said...

பரிதாபம் தான்.

ம.தி.சுதா said...

எதுவும் தமிழ் நாட்டு உறவுகள் கையில் தான் இருக்கிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்

ம.தி.சுதா said...

ஃஃஃஃசசிகுமார் said...
இன்னுமா முடியல???ஃஃஃஃ

உண்மையில் இது டெம்ளெட் கொமண்டா அல்லது எதையாவது எதிர் பார்க்கிறிர்களா சகோதரம்...

ஃஃஃஃ Mohamed Faaique said...
மரண தண்டனை தடை செய்யப் பட வேண்டிய ஒன்றல்ல.ஃஃஃஃ

நீங்கள் எங்கேயோ மத்திய கிழக்கில் வாழ்கிறிர்கள் என நினைக்கிறேன்... உண்மை தானே... இதை அல்லா ஏற்றுக் கொண்டிருக்கிறாரா ?

Anonymous said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை ,செய்யாத தப்புக்கு இருபது வருடங்கள் சிறை என்பதே மரண தண்டனையையும் விட கொடியதெல்லவா! இருபத்தி ஒரு வருடங்கள் அவர்கள் நாலு சிவற்ருக்கு மத்தியில் பட்ட துன்பங்கள் எவ்வளவு கடுமையானதாக இருந்திருக்கும்!!

முக்கியமாக இந்த கொலையுடன் சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள். அப்படி இருந்து யாருக்காக இந்த பழி வாங்கல்கள். இதன் மூலம் யார் திருப்தியடயப்போகிறார்கள்!!! ஒன்ரும்மே புரியவில்லை(

Anonymous said...

////Mohamed Faaique said...

மரண தண்டனை தடை செய்யப் பட வேண்டிய ஒன்றல்ல. ஆனால் இவர்கள் அதற்கு தகுதியானவர்களா என்பது கட்டாயம் நிரூபிக்கப் பட வேண்டியவையே!!!///// நண்பரே இது உங்கள் தமிழர் மீதான வன்மத்தை மட்டும் தான் காட்டுகிறது..

Sathish Murugan . said...

@Mohamed Faaiqueஎப்படி நண்பா நிரூபிப்பது,

ஒரு விரலைக்காட்டி இரண்டில் ஒன்றை தொட சொல்லியா?
மல்லிகையின் விசாரணை முறையை பற்றி தெரிந்தால் இவர்களுக்கு வழங்கப்பட்ட நீதியின் தன்மை தெரியும்.
இல்லாத சட்டத்தின்(தடா) படி கொடுக்கப்பட்ட நீதியை மறுபரிசீலனை செய்வது அவசியம் தானே?

Anonymous said...

இந்த பதிவுக்கு வந்த "வடை"களை பார்க்க வேதனையாக இருக்கு !


அவர்கள் வார்த்தைகளில் கொட்டிய வேதனைகள் உங்கள் மனதை கனக்க வைக்கவில்லையா? உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.

சக்தி கல்வி மையம் said...

மாப்ள ரைட்டு..

சுதா SJ said...

மனதை பிசையும் பதிவு
என்ன சொல்வது என்றே தெரியவில்லை

Unknown said...

1,50,000 தமிழின மக்களை அழிக்க துணை போனது போதாதா?செத்தொழிந்த அவர்களின் சாபம் உங்களை சும்மா விடாது.

RAMA RAVI (RAMVI) said...

capital punishment எனப்படும் மரண தண்டனை,தடை செய்யப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால் தவறு செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் அவர்கள் திருந்தும் விதமாகவும் அதை கண்டு மற்றவர்கள் தவறு செய்யாமலுமலிருக்கும் விதமாகவும் இருக்க வேண்டும்.

சென்னை பித்தன் said...

ரைட்டு,லெஃப்டு,சென்டர்!

காட்டான் said...

நான் கருத்து போடல ஏன்னா நிரூபன்,மதி சுதா,கந்தசாமி போன்றோரின் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.. ஓட்டு மட்டும் போடுறேன் மாப்பிள...

Jaganathan Kandasamy said...

எந்த வார்த்தையும் இல்லை

raja said...

மிக்க நன்றி.

palapavanam said...

நீருபனதும் மதி சுதாவின் கருத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் செந்தில் .

J.P Josephine Baba said...

இது மாபெரும் துயரே. மனிதம் இல்லா உலகம்!

ஆமினா said...

மரணத்தை விட மரணநாட்களை என்ணிகொண்டிருப்பது மிக துயரமான விஷயம் :-(

சாமக்கோடங்கி said...

மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் அந்த நண்பர்களுக்காக மனம் வருந்துகிறேன்.. இது மிகக் கொடுமையானது..

மதி சுதா அவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை..

இந்த நாட்டில் நியாயம் செத்து விட்டது..